Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 287  (Read 1774 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 287

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


Offline அனோத்

  • FTC Team
  • Full Member
  • ***
  • Posts: 246
  • Total likes: 724
  • Karma: +0/-0
  • Gender: Male
  • இனியதோர் விதி செய்வோம் !

ஹ்ஹ  :) ! உச்சி மீது நின்று
உன் உச்சிதனை நுகர்கிறேன்.....
பேச்சு ஏதுமின்றி... உன் மூச்சில்
நான் தொலைகிறேன்.......

வட்டவொளி மதிதனில்....
விட்டெரியும் வெளிச்சமோ
உன் பொட்டுயர பரந்து தான்
எனைத்  தொட்டுணரச்  சொல்லுதே !

உனைத்  தொட்டுணரும் போது தான்
என் இணையாகிறாய்.......
ஏன் எனை?
என்ற போதுதான்
உன் முகம் மலர்ந்தோர்
நாணம் காண்கிறாய்......

நான் தான் ஏனோ ?
உணர்ச்சி பொங்கலானோ ?
போதும் போதும் என்றோர் 
சாட்சி தடுக்குதடி
அது மனசாட்சி என்றுதான்
காலம் உணர்த்துமடி.......

ஆம்.....! மீண்டும் அதே கனவு....
என் தூக்கங்களை கெடுத்தவள்
ஏக்கங்களை விட்டுத்தான்
கலைந்தே போகிறாள்....

உன்  தாக்கங்கள் கொடுத்த
காதல் ஒன்று தான்
ஒவ்வோர் இரவும்
உன் வருகைகைக்காய்
காத்திருக்குறது....

கனவில் தோன்றிய
மங்கையே  நீ யாரோ ?
« Last Edit: December 21, 2021, 04:06:32 AM by அனோத் »

Offline MoGiNi

இருளை கிழித்து
ஒளியை
உமிழ்ந்து கொண்டிருந்தது நிலவு ..
என் பார்வை வட்டத்துள்
பதியும் அனைத்து காட்சிகளிலும்
அலையாக உன் முகம்
அடிகடி தோன்றி
என் நிகழ்வுகளை
இருட்டடிப்பு செய்த வண்ணம் ..

உன் வரவுக்காய்
காத்திருந்த மனதுள்
அமாவாசையின் ஆக்கிரமிப்பு
அரங்கேறிகொண்டிருந்தது ...
சமுத்திரம் சடுதியாய்
கண்களில் குடி புகுந்தது ..
உடைந்து சிதறும்
நீர் திவலைகளிலும்
உன் முகத்தை
செதுக்கிச் சென்றது
இரக்கமில்லாத உன் நினைவலைகள் ...
 
உன்னை காண துடிக்கும் இதயம்
கவிழ்ந்து படுத்து
கண்ணீர் விடுகிறது
கட்டி அணைக்க நீ இன்றி ...
ஒரு வேளை உணவுக்காய்
யாசகம் கேட்கும் பிச்சை காரியாய்
ஒரு முறை உன் முக தரிசனத்துக்காய்
முணு முணுக்கிறது மனது ...

எங்கே சென்றாய் ...?
என் பௌர்ணமியை
அமாவாசையாக்கி ...
என்று வருவாய் ..?
ஸ்ஸ்ஸ் .....
காலடிச்சத்தம்...
என் கனவுகளை சுருட்டி வைத்து
நிகழ்வுக்காக காத்திருக்கும் கண்கள் ...
ஏக்கத்துடன் மனது ...
ஏமாற்றத்தையும் எதிர்பார்த்து
காத்திருகிறது உனக்காய்...

Offline Dear COMRADE

  • Newbie
  • *
  • Posts: 22
  • Total likes: 174
  • Karma: +0/-0
  • Gender: Male
  • என் இனிய தனிமையே✍️
காதல் வயப்பட்ட கணம் முதல்
கண்ணே உன்னை
காணா நொடிகளில் - அந்தத்
திங்கள் வரையும்
ஓவிய நிழலினிலே - நாம்
கரம் பற்றி நின்ற
காட்சிகளை கற்பனை வடிவிலே
கண்டு அகம் ஆறுதல் கொண்டேன்...

தொலைதூர பயணத்தின் பால்
உனை பிரிந்த நாள் இன்று
வேலைப்பளு விரக்தியில்
கண்ணயர்ந்து நான்
உறங்கும் வேளை- திடிரென்று
விழித்தெழுந்தேன் உன் நினைவால்....
படபடத்தது மனது
என்னவளுக்கு என்னானது என்று...
தென்றலின் வருடலில்
சாளரத்தின் திரைச் சீலை நகர்வில்
முழு நிலா என் தேகம் தீண்டி
சேதி கொண்டு வந்தேன்
செவிமடுப்பாயோ என்றது....

"உன் அவள் தூதாக
அனுப்பினாள் எனை அழைத்து
என்னவன் ஏங்குகின்றான் அங்கு
கவலையொன்றும் வேண்டாம்
உன் கன்னியவள்
நலமாக உள்ளாள் இங்கு என்று..."
நன்றி பயத்தேன்
அந்த செம்மதிக்கு - என்
இல்லாளின் இனிய செய்தி
இடரின்றி கொண்டு வந்ததற்கு....
"உன் செய்தியும் நான்
கொண்டு போகின்றேனே
உன்னவள் இன்னும்
உறங்கவில்லை - என்
வருகைக்காய்" என்று
விடை பெற்று மெல்ல
நகர்ந்தது அந்த வெண்ணிலவு....

பதறிய மனம் நிறைந்தது
பரவசச் சாரல் மழை பொழிந்தது
நகரும் நிலவோடு
மலரும் நினைவுகளாய் -நம்
காதல் தடங்களின் விம்பங்கள்
மீண்டும் என் கண் முன்னே....
« Last Edit: December 21, 2021, 08:22:27 PM by Dear COMRADE »

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
உனக்கும் தெரியாமல்
எனக்கும் தெரியாமல்
நம் இருவர் மனதில்
வேர்விட்ட காதல் இன்று
பெரும் விருட்சமாய்
வளர்ந்து விட்டது அன்பே..

சிறகு முளைத்த நேசமொன்று
நம் இருவரையும் கட்டி இழுத்துச்
செல்கின்றது வானை நோக்கி...
காதலை நோக்கி....

நீ முதலில் சொல்வாய் என்று
நானும்
நான் முதலில் எடுத்து வைப்பேன் என்று நீயும்
காத்திருந்த நேரங்கள் யாவும்
வெறும் பொழுதுதுகள் அல்ல
அவை ஏக்கம் நிறைந்த கணங்கள்...

தூரத்தில் இருந்தாலும் தவிக்க
வைக்கிறாய்...
அருகில் இருந்தாலும் ஏங்க
வைக்கிறாய்....
உன் பிள்ளைச் சிரிப்பில் என்
ஆயுள்ரேகை கூடுதே...
உன் கள்ளப் பார்வையில் என்
வாழ்நாளும் கரைகிறதே...

வான் நிலவின் முன் சாட்சியாய் சொல்கிறேன் என் உலகமே நீ தான் பெண்ணே...
எப்படியும் நீ என்னை
ஏற்றுக் கொள்வாய் என்ற ஆவலுடன் உன் முகம் பார்க்கும் நான்...
« Last Edit: December 21, 2021, 04:44:51 PM by எஸ்கே »



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline AgNi

  • Full Member
  • *
  • Posts: 141
  • Total likes: 655
  • Karma: +0/-0
  • பெண்மை வெல்க !



பால்நிலா நோக்கிய  எண்ண
பாதைகள் யாவையும் ....இன்று
வேல்விழியாள் உன் 
நெஞ்சம் நோக்கி...மற்றும்
சேல்ஆடும் குளக்கரையில் நீரில்
கால் ஆட்டும்  நின் தாமரைமுகம் காணத்தானோ?

சிறகில்லா பறவையாய்..
உரம் இல்லா உள்ளத்தில் ...
சிறையெடுக்க தவிக்கிறதோ?
திறம் பெற்ற காதல் சுவடுகளோ...
கரம் பிடிக்க வலுவின்றி தவமின்றி
வரம் பெற‌ துடிக்கின்றதோ?

வேறு எதுவும் வேண்டாம்
கொளுத்திப் புகையும்...
கோடைக்கால வெம்மையில்
எங்கிருந்தோ வரும் மென்தென்றலாய் வீசி வரும்
உன் வருகை போதும்...

கண்ணுக்கு எட்டும் தூரம்வரை
கவிந்த கானலில்..‌..
சிறுமர கிளைகள் தரும்
குறு நிழல்குளுமையாய்
உன் இருப்பு போதும்...

வறண்டு வெடித்த பாலைநிலத்தில்
எங்கிருந்தோ தவழ்ந்து வந்த
மேகத்துண்டுகள் தூவும்
சில்லென்ற பன்னீர் தூரலாய்
சிந்தி குளிர‌வைக்கும் உன் மென்நகை போதும்...

காத்திருப்புகளை கானமாய்
மென்சோக குரலில் பாடும்
குயிலின் வருகைக்கும்
கார்கால மழைக்கும் ஏங்கும்
சோலைத்தோப்பில் பாடி‌ மகிழ்விக்கும்  வானம்பாடியாய் சிலிர்க்க வைக்கும் குரல்மொழி அரிதாய் கூட கேட்டல் போதும்...

என்னை சுற்றி அலையும்
உன் நினைவின் வாசனை...
இப்புனைவின் வழி நிஜம் காண
தடம் பதித்து தூது விட
துடிக்கும் என் பௌணர்னமிகள்!


Offline PreaM

கண்டேன் அவளைக் கனவினிலே
மார்கழி மாதப் பனியினிலே
இரவில் நிலவின் ஒளியினிலே
என் தேவதை என்னுடன் அருகினிலே...

உயர்ந்த மலைச் சிகரத்திலே
உன் விரல் பிடிக்கச் சொர்க்கமடி
ஒருவருக்கு ஒருவர் துணையாக
இந்த உலகினில் வாழ்வோம் இணையாக...

பனிக்காற்று மேனியைத் தீண்டுதடி
என்னுள்ளம் பற்றி எரியத் தூண்டுதடி
நம் இடைவெளியை மனசு வெறுக்கிறது- பெண்னே
நாம் இருவரும் இணையத் துடிக்கிறது...

இரு ஜோடி விழிகளின் இமைகள்
விழி மூடாமல் ரசிக்கிறது
நிச்சயமா நான் சொல்லுறேன்டி
நீ தான் என் வாழ்க்கையடி...


உன் கையை பிடிச்சாச்சு
என் உள்ளம் நிறைந்தவளே
என் உயிரில் கலந்தவளே
உன்னை உசுரா நினைக்குறேனே.

கண்டேன் அவளைக் கனவினிலே
என் கனவே நீண்டுவிட
இந்த காலம் உறைந்துவிட
தொடர்ந்தது என் காதல் கனவு....
« Last Edit: December 22, 2021, 11:49:01 PM by PreaM »

Offline Sun FloweR

  • Full Member
  • *
  • Posts: 127
  • Total likes: 761
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum

கண்முன்னே காண்கின்றேன்
நான்கு நிலாக்கள்...
என்னவளே உன் முகமெனும் ஒரு நிலா..
ஒளிசிந்தும் விழிகளெனும்  இரு நிலா
நம் அன்பின் சாட்சியாய்
வானில் வீற்றிருக்கும் முழுநிலா...

எத்தனை நாள் கனவு
எத்தனைநாள் ஏக்கம்
இப்படி ஒரு இடத்தில்
இப்படி ஒரு பொழுதில் உன்னுடன்
தனித்திருக்க வேண்டும் என்று..

கண்முன் கசிந்து கொண்டிருக்கும்
இரவின் அழகினை ரசித்திடவா?
எங்கும் சூழ்ந்திருக்கும்
மௌனத்தின் சப்தத்தை ரசித்திடவா?
பொங்கும் பாலாய் திசையெங்கும்
பரவி கிடக்கும்
நிலவின் ஒளியை ரசித்திடவா?

சமுத்திரத்தின் பேரிரைச்சலும்
பறவைக்கூட்டங்களின் பேரொலியும்
உலக பூக்களின் நறுமணமும் மொத்தமாய்
கிளர்ந்து எழுகிறதே என்னுள்...
இன்னதென்று சொல்லமுடியாத
உணர்வுப் பிரவாகம் மேனியெங்கும்
சடுகுடு ஆடுகின்றதே...

இரவின் சாட்சியாய் நிலவின் சாட்சியாய்
மலையின் சாட்சியாய் மௌனத்தின் சாட்சியாய் - அனைத்தின் சாட்சியுமாய்
சொல்கிறேன் பெண்ணே,
இது போதும் இந்த நொடி போதும்...
இனி ஏதுமில்லை என் வாழ்வின் பரிபூரணத்திற்கு.

Offline Mirror

  • Newbie
  • *
  • Posts: 14
  • Total likes: 46
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
எதை ரசிப்பதென தெரியவில்லை
 என்னவளே தூரம் நிற்கும் அவளையா
இல்லை துணையாய் நிற்கும் உன்னையா...

பால் வழி தேசத்தில்
 பால் நிலா ஒன்றென்பது உண்மையல்ல ..
நான் தேடி கிடைத்த தேன் நிலா நீயென இனைத்து ஈராகும்...

பால் நிலா வெளிச்சம் வெண்ணிறமே
ஆனால்.. அது உச்சம் பெறுவது உண்ணை கடக்கும் போதே ..
எந்தன் பிரகாசத்தின் காரணம் இப்போது நீ அறிந்திருப்பாய்...

நிலவொளியின் சாறல் நீராக
 உன்னில் பாயும் போது.. உயிரற்ற ஒர் அணுவும் உற்சாகமாய் மின்னும் நொடி
 கண் கூசும் காட்சியாய் நெஞ்சில் நிறையுதடி...

எதைப்பார்த்து வியக்க..
 கார் மேக காரிருளிள் வெண் மேக வெண்ணிலாவா!
 இல்லை.. கருங்கூந்தள் காற்றசைவில் பெரும் மோக என்னிளாவா!...

அழகின் உச்சமே...
 பதில் அறியா கேள்வி
மனதில் தோன்றும் போது வாழ்க்கை சுவாரஸ்யமாகிறது..
 என் சுவாரசியத்தின் ஆரம்பமே..
 உன்னில் விடையை தேடுகின்றேன்..
 பதில் கிடைத்ததோ இல்லையோ..
 பாவை உன் பருவ சிரிப்பில் பைத்தியம் ஆகிறேனடி...

பிரம்மனின் அறிவுகெட்டா அதிசயமே..
 உன் அழகின் ஊற்று பெருக்கெடுத்து ஓடும் நொடி
 உருளையாக மாறி..இடப்பற்றாகுறையாள்
 வானில் நிலவாக மிதக்கின்றதோ என்ற சந்தேகமடி...

நடுநிசை நிலவொளி கண் கூச அயர்த்தாலும். அதை மிஞ்சும் பேரொளியை உன்னில் கண்டும்
எளிதில் கடக்கிறேனடி ..!
உன் கைப்பற்றல் காதல் சக்தியாள்...

என்னவளே... நிலவின் மகளே..
 அழகின் ஆரம்பம் மட்டுமல்ல..! எல்லையும் நீயே!
 நிலவொளியில் பூத்த என் புண்ணகையே!
 மங்கையின் மறு பதிப்பு!..
கடவுளின் மதியில் அல்ல ..
கார் மேக மதி யினால்..!
 என அறிந்தேன் ftc ஓவியத்தாள்...
 
« Last Edit: December 22, 2021, 07:04:06 PM by Mirror »