Author Topic: அடகு வைக்கப்பட்ட நகை, நிலப்பத்திரத்தை எந்த நேரத்தில் திருப்பினால் மீண்டும் அடகு  (Read 2925 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்

ஜோதிடத்தைப் பொறுத்தவரை கிருத்திகை, கேட்டை, பூராடம் ஆகிய நட்சத்திரம் உள்ள நாட்களில் கடன் பைசல் செய்வது பலனளிக்கும் எனப் பொதுப்படையாகக் கூறப்பட்டுள்ளது.

இதுபோன்ற நட்சத்திரங்கள் வரும் தினத்தில் கடனை அடைத்தாலும், அடகு வைத்த பொருட்களை மீட்டாலும் மீண்டும் கடன் பெறும்/அடகு வைக்கும் சூழல் ஏற்படாது என நம்பப்படுகிறது.

ஒரு பொருளை அடகு வைப்பதற்கு முன்பாக அவற்றை ஜென்ம நட்சத்திரத்திற்கு தகுந்த மாதிரியான நாட்களாக அமைத்துக் கொள்வது நல்லது. ஜாதகரின் தாராப்பலன் நன்றாக இருக்கும் நாட்களிலும் பொருட்களை அடகு வைக்கலாம்.

குறிப்பாக ஒரு பொருள் அல்லது வீட்டுப் பத்திரத்தை சனி ஓரையில் அடகு வைத்தால் அதனை மீட்பதில் கடும் சிக்கல் ஏற்படும். எனவே, சனி ஓரையில் அடகு வைப்பதைத் தவிர்த்து விடுவது நல்லது.

ஆண்டு அனுபவித்த பொருட்கள், வீட்டு பத்திரங்களை செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அடகு வைக்காமல் இருப்பது நல்லது.