Friends Tamil Chat FM > இசை தென்றல்

இசை தென்றல் - உங்களின் இசை ரசனைக்கான ஒரு நிகழ்ச்சி

(1/3) > >>

Global Angel:
நண்பர்களே ...இசை பிரியர்களே .. உங்களின் இசை ரசனையை வெளிபடுத்தும் பொருட்டு FTC FM இல் பிரதி புதன்கிழமை தோறும் இந்திய நேரம் இரவு 10:30 மணிக்கு (GMT 06:00 PM)   "இசை தென்றல்"எனும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இருக்கிறோம். இந்த நிகழ்ச்சியில் நீங்களும் பங்குபெற வேண்டுமா?

இந்நிகழ்ச்சியில் இசையால் வெற்றி பெற்ற (Musically Hit) திரைப்படத்தை குறிப்பிட்டு அதை பற்றிய குறிப்புகள் மற்றும் மேலதிக செய்திகளையும் சுருக்கமாக கொடுக்கலாம். எந்த வகையில் இந்த திரைப்படம் இசையால் வெற்றிப்படமாக ஆகி இருக்கிறது என்றும் குறிப்பிடலாம். அதன் பின் நீங்களே ஒரு குறிப்பிட்ட பாடலை அந்த திரைப்படத்திலிருந்து விரும்பி கேக்கலாம்.இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு இசை ரசனை மிக்க பாடல்களை கொண்ட திரைப்படங்களை மட்டுமே தெரிவு செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.

முதலில் இடம் பெரும் 8 பதிவுகள் மட்டுமே இசை தென்றல் நிகழ்ச்சியாக FTC வானொலியில் புதன்கிழமை அன்று RJ  அவர்களால் தொகுத்து வழங்கப்படும்.

இந்நிகழ்ச்சிக்கான சில விதிமுறைகள்/குறிப்புகள்.
1.உங்கள் பதிவுகளை நிறைவு செய்ய கடைசி நாள் - வெள்ளிக்கிழமை (இந்தியநேரம் இரவு 12:00 மணி.)

மேற்குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாக நிறைவு செய்யபடாத பதிவுகள் நிகழ்ச்சிக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.  அதற்கடுத்ததாக  முழுமை செய்யப்பட்ட பதிவுகள்  நிகழ்ச்சிக்கு எடுத்துகொள்ளப்படும்.

2. முதலாவதாக வந்த 8 பதிவுகளில் ஏதேனும் விதிமுறைகள் மீறப்பட்டு இருப்பின் அந்த பதிவு பரிசீலனையில் எடுக்கபடாமல் 9 ஆவது பதிவு நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

3.இந்த பகுதியில் ஒருவர் ஒரு பதிவு மட்டுமே செய்ய இயலும்.

4.ஒருவர் மற்றவர் பெயரில்  இடம் பிடிக்க கூடாது.அவரவர் பெயரிலேயே பதிவுகள் இடம்பெற வேண்டும்.

5. நிகழ்ச்சிக்கான பதிவுகளில் அடிக்கடி மாற்றம் செய்வதை தவிர்க்கவும்.

6. நீங்கள் தேர்வு செய்யும் திரைப்படம் ‘திரையில் வெளிவந்த’ திரைப்படமாக இருத்தல் அவசியம் .

7.சிறந்த இசையமைப்பில் எல்லாருடைய கருத்தையு கவர்ந்த, பெரும் வரவேற்பை பெற்ற பாடல்களை கொண்ட திரைப்படங்கள் இசையால் வெற்றிபெற்ற திரைப்படமாக கருதப்படும்.

8. நிகழ்ச்சியின் ரசனை கருதி, ஒரே ஒரு பாடல் கொண்ட திரைப்படங்களை தேர்வு செய்வதை தவிர்க்கவும்.இசை ரசனை மிக்க பாடல்கள் அதிகம் கொண்ட திரைப்படத்தை தேர்வு செய்வது இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமைய உதவும்.

9.உங்களின்  தேர்வுகள் ரசனை/சுவாரசியம் கொண்டதாக அமையவில்லை என்று (நண்பர்கள் பண்பலை குழுமம்) கருதும் பட்சத்தில், நிகழ்ச்சியின் சிறப்பு கருதி உங்கள் பதிவு பண்பலை நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.



சாக்ரடீஸ்:
வணக்கம் RJs & DJs,

இந்த முறை நான் விரும்பும் பாடல் இடம் பெற்ற திரைப்படம்
"காற்று வெளியிடை"





நடிகர்கள்: கார்த்தி, அதிதி ராவ் ஹிதாரி
இயக்கம்: மணிரத்னம்
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்

இப்படத்தில் இடம் பெற்றிருக்கும் அணைத்து பாடல்களுமே அருமை.
அதில் என்னுடைய விருப்ப பாடலாக நான் தேர்வு செய்வது
 
"நல்லை அல்லை" பாடல்

வரிகள்: வைரமுத்து
குரல்:  சத்ய பிரகாஷ், சின்மயி

பிடித்த வரிகள்:

ஒலிகளின் தேடல் என்பதெல்லாம்
மௌனத்தில் முடிகின்றதே
மௌனத்தின் தேடல் என்பதெல்லாம்
ஞானத்தில் முடிகின்றதே
நான் உனைத் தேடும் வேளையிலே நீ
மேகம் சூடி ஓடிவிட்டாய்

இந்த பாடலை இசை ரசிகர்கள் அனைவருக்கும் டெடிக்கேட் பண்றேன்.

நன்றி.

Ninja:
வணக்கம் RJ,
எல்லா வாரமும் இசைத்தென்றல் நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கும் RJ, DJவிற்கு அன்பு மற்றும் நன்றிகள்💜 இந்த வாரம் நான் கேட்க விரும்பும் பாடல் 'தென்றலே என்னைத் தொடு
திரைப்படத்திலிருந்து 'புதிய பூவிது பூத்தது' பாடல்

திரைப்படம்: தென்றலே என்னைத் தொடு
பாடல்: புதிய பூவிது
பாடகர்கள்: SPB, S.ஜானகி
இசையமைப்பாளர்: இசைஞானி இளையராஜா
பாடலாசிரியர்: வாலி


ப்பா 80s மற்றும் 90s இசையின் பொற்காலம்னு சும்மாவா சொல்றாங்க. என்ன மாதிரியான தரமான, தெளிவான, இரைச்சல் இல்லாத பாடல்கள். படத்தின் மொத்த பாடல் தொகுப்புமே மனதை மயக்கும் விதமாய் அமைந்திருக்கிறது ஆச்சரியமே இல்ல. 'தென்றல் வந்து என்னை தொடும்' பாடலாகட்டும் 'கண்மணி நீ வர காத்திருந்தேன் பாடலாகட்டும், கேட்கும்போதே மனதிற்கு இனிமையை கொடுக்க கூடிய பாடல்கள்.

அதுவும் கண்மணி நீ வர காத்திருந்தேன் பாடல்ல வர உமா ரமணனுடைய குரல் very very unique and mesmerizing voice. இது இப்படின்னா 'கவிதை பாடு குயிலே குயிலே பாடல்ல instrumentation அமைஞ்சிருக்க விதம், Beats, Clarinet இசை நம்மளை தாளம் போட வைக்கும்.

அந்த காலத்துல எல்லாம் என்னா மாதிரி ய்யா பாட்டா போட்டாய்ங்க.. இப்ப என்ன பாட்டா போடுறாங்க, கொலவெறி புடிச்சில்ல அலையிறாங்க என என்னை மாதிரியே Feel செய்யும் boomer 80s 90s kidsக்கு இந்த பாடலை dedicate பண்றேன்

Lakshya:
Hi RJ/DJ,

Indha week na choose paniruka movie -  "Meendum oru kadhal kadhai"...Indha movie release ana year 2016...G.V Prakash oda music la Mithran Jawahar direction la release Achu indha movie...Idhula na choose paniruka song - "Yedhedho penne"...enoda mostttttttt fav song nu solalam and underrated song um kuda.. indha song la enaku pudicha lyrics...

" ❤️Anbe en nyabagam theendi un thookam tholaindhadha
       Ange en yosanai vandhe un yekkam alaindhadha ”
     "  Un idhayam en vasathil , en idhayam un thadathil❤️ ”

 

ThookuDurai:
Movie Name - Sivappathigaram
Song Name - Mannarkudi Kalakalakka
Year -2006
Actors - Vishal, Mamta

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version