138 எங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன கொண்டு வருகிறாய், உங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன தருவாய் ?
139 எங்கே புகையுண்டோ அங்கே நெருப்பு உண்டு.
140 எச்சிற் கையால் காக்கை ஓட்டாதவன் பிச்சை கொடுப்பானா?
141 எடுக்கிறது பிச்சை ஏறுகிறது பல்லாக்கு.
142 எட்டி பழுத்தென்ன, ஈயார் வாழ்த்தென்ன?
143 எண் இல்லாதவர் கண் இல்லாதவர்,
144 எண்சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம்.
145 எண்ணிச் செய்கிறவன் செட்டி, எண்ணாமல் செய்கிறவன் மட்டி.
146 எண்ணிச்செய்வது செட்டு, எண்ணாமல் செய்வது வேளாண்மை.
147 எண்ணை முந்துதோ திரி முந்துதோ?
148 எதார்த்தவாதி வெகுசன விரோதி.
149 எதிர்த்தவன் ஏழை என்றால் கோபம் சண்டாளம்.
150 எதை அடக்காவிட்டாலும் நாக்கை அடக்கவேண்டும்.