Special Category > சமையல் கலசம்

ஓட்ஸ் தோசை

(1/1)

ஸ்ருதி:
தேவையான பொருட்கள்

ஓட்ஸ் - 1 கோப்பை (250 கிராம்)
அரிசி மாவு - 1/2 கோப்பை (100 கிராம்)
கோதுமை மாவு - 1/2 கோப்பை (100 கிராம்)
ரவை - 1 மேஜைக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
மிளகுத்தூள் - 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லித்தழை - 1 கைப்பிடி
கறிவேப்பிலை - 1 கொத்து
எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை

1. முதலில் ஓட்ஸை லேசாக வறுத்து தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.

2. பிறகு ஓட்ஸை கழுவி மிக்ஸியில் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

3. அரைத்து எடுத்த ஓட்ஸுடன் அரிசி மாவு, கோதுமை மாவு, ரவை, உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, கட்டியில்லாமல் தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.

4. இதனுடன் சீரகம், மிளகுத்தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை சேர்த்து கலந்து, 10 நிமிடம் மூடி வைக்கவும்.

5. அடுப்பில் தோசைக்கல்லை வைத்து எண்ணெய் தடவி, பின்னர் ஓட்ஸ் தோசை மாவை நன்கு கலக்கி ஒரு கரண்டி எடுத்து தோசைக்கல்லில் ஊற்றி தோசையாக வார்த்து எடுக்கவும்.

குறிப்பு

1. கோதுமை மாவுக்கு பதிலாக மைதா மாவும் சேர்த்துச் செய்யலாம்.

2. தோசையில் புளிப்பு சுவை வேண்டுவோர், மாவுடன் ஒரு கரண்டி புளித்த மோர் அல்லது புளித்த இட்லி மாவை சேர்த்துக் கொள்ளலாம்.

3. மிகவும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து செய்தால் தோசை மேலும் சுவையாக இருக்கும்.

4. ஓட்ஸ் தோசைக்கு தக்காளி சட்னி தொட்டுக் கொள்வதற்கு சுவையாக இருக்கும்.

Navigation

[0] Message Index

Go to full version