தமிழ்ப் பூங்கா > அகராதி

இலக்கணம் - நேமிநாதம்

<< < (2/3) > >>

Maran:


 2.4. விளி மரபு


ஈறு திரிதலும் ஈற்றயல் நீடலும்
வேறு வருதலும் மெய்யில்புங் - கூறும்
இரண்டீற்று மூவகைப்பேர் முன்னிைக்கண் ணென்றுந்
திரண்டுவிளி யேற்குந் திறம்.   23

இகரம் ஈகாரமாம் ஐஆயாம் ஏயாம்
உகரவோ கார வுயிர்கள் - பகர்விளிகள்
அண்மை யிடத்தும் அளபெடைப் பேர்க்கண்ணும்
உண்மை யியல்பா யுறும்.   24

அன்னிறுதி யாவாகும் அண்மைக் ககரமாம்
மின்னு முறைப்பெயரே லேயாகு - முன்னியல்பாம்
ஆனும் அளபெடையும் ஆனீற்று பண்புதொழின்
மான்விழி யாயாய் வரும்.   25

ஈராகும் அர்ஆர் இதன்மேலும் ஏகாரம்
ஒரோ விடத்துளதாம் ஓங்களபாம் - பேர்கள்
இயல்பாம் விளியேலா வெவ்வீற்றுப் பேரும்
புயல்போலுங் கூந்தலாய் போற்று.   26

ஈற்றயல் நீடும் லளக்கள்தாம் ஏகாரந்
தோற்றும் முறைப்பெயர்கள் துன்னுங்கால் - ஆற்ற
அயல்நெடிதாம் பேரும் அளபெடையாம் பேரும்
இயல்பாம் விளிக்கு மிடத்து.   27

விரவுப்பே ரெல்லாம் விளிக்குங்கான் முன்னை
மரபிற்றாம் அஃறிணைபேர் வந்தான் - மரபிற்
கொளவரும் ஏகாரமுங் கூவிங்காற் சேய்மைக்கு
அளவிறப்ப நீளும் அவை.   28

Maran:


 2.5. பெயர் மரபு


பெயர்ச்சொல் வினைச்சொல் இடைச்சொல் உரிச்சொல்
இயற்சொன் முதனான்கு மெய்தும் - பெயர்ச்சொல்
உயர்திணைப்பேர் அஃறிணைப்பேர் ஒண்விரவுப்
பெயரு மெனவுரைப்ப ரீங்கு.   29

சுட்டே வினாவொப்பே பண்பே தொகுனளர
வொட்டுப்பேர் எண்ணியற்பேர் ஒண்ணிலப்பேர் - இட்டிடையாய்
கூடியற்பெர் காலங் குலந்தொழிலின் போமகடூஉ
ஆடூஉ உயர்திணைப்பே ராம்.   30

பகரு முறைசினைப் பல்லோர்நம் மூர்ந்த
இகரஐ கார இறுதி - இகரமிறுஞ்
சாதிப்பெண் பேர்மாந்தர் மக்களுந் தன்மையுடன்
ஆதி யுயர்திணைப்பே ராம்.   31

ஆதியினிற் சுட்டாம் உகரஐ காரப்பேர்
ஓதியவெண் ணின்பேர் உவமைப்பேர் - தீதிலாச்
சாதிப்பேர் சார்ந்த வினாவுறுப்பின் பேர்தலத்தோர்
ஓதிய அஃறிணைக்கா முற்று.   32

இயற்பேர் சினைப்பேர் சினைமுதற்பேர் என்று
மயக்கிலா மூன்றனையும் வைத்துக் - கயற்கண்ணாய்
பெண்ணாணே பன்மை யெருமையொடு பேர்த்துறழ
நண்ணும் விரவுப்பேர் நன்கு.   33

தந்தைதாய் என்பனவுஞ் சார்ந்த முறைமையால்
வந்த மகன்மகளோ டாங்கவையு - முந்திய
தாந்தானும் நீநீயிர் என்பனவுந் தாழ்குழலாய்
ஆய்ந்த விரவுப்பே ராம்.   34

பேராம் பெயர்பெயர்த்துப் பேர்த்தாம் ஒடுவோடா
நீராகு நீயிர் எவனென்ப - தோருங்கால்
என்னென்னை யென்றாகும் யாமுதற்பே ராமுதலாம்
அன்ன பொழுதுபோ தாம்.   35

பாங்கார் பெயர்வினை கொண்டன்றிப் பாறோன்றா
வாங்கு விரவுப்பேர் அஃறிணைப்பேர் - ஓங்கிய
கள்ளொடு வந்தால் இருதிணைக்கும் பன்மைப்பால்
ஒள்ளிழையாய் தோன்றலு முண்டு.   36

ஆய்ந்த வுயர்திணைபேர் ஆவோவாஞ் செய்யுளிடை
ஏய்ந்தநிகழ் காலத் தியல்வினையால் - வாய்ந்த
உயர்திணைப் பாலொருமை தோன்றும்விர வுப்பேர்
இயலும் வழக்கி னிடத்து.   37

Maran:

 2.6. வினை மரபு


இறப்பு நிகழ்வெதிர்வாங் காலங்க ளேற்றுங்
குறிப்பும் உருபேற்றல் கூடாத் - திறத்தவுமாய்
முற்றெச்சம் என்றிரண்டாய் மூவகைத்தாய் மூன்றிடத்து
நிற்கும் வினைச்சொற்கள் நேர்ந்து.   38

அம்மாமெம் மேமுங் கடதறமேல் ஆங்கணைந்த
உம்மும் உளப்பாட்டுத் தன்மையாந் - தம்மொடு
புல்லுங் குடுதுறவும் என்னேனும் பொற்றொடியாய்
அல்லுந் தனித்தன்மை யாம்.   39

ஆங்குரைத்த அன்னானும் அள்ளாலும் அர்ஆர்ப
பாங்குடைய முப்பாற் படர்கையாந் - தேங்குழலாய்
யாரேனுஞ்சொன் முப்பாற்கு மெய்தும் ஒருவரென்ப
தோரு மிருபாற் குறித்து.   40

சொன்னஅ ஆவத் துடுறுவும் அஃறிணையின்
பன்மை பெருமைப் படர்க்கையாம் - பின்னை
யெவென்ன வினாவவ் விருபாற் பொருட்குஞ்
சிவணுதலாந் தொன்னூல் தௌிவு.   41

மின்னும்இர் ஈரும் விளம்பும் இருதிணையின்
முன்னிலை பன்மைக்காம் மொய்குழலாய் - சொன்ன
ஒருமைக்கண் முன்னிலையாம் இஐஆய் உண்சேர்
பொருவென் பனவும் புகல்.   42

செய்து செயச்செய்யாச் செய்யிய செய்தெனச்
செய்பு செயின்செயற் கென்பனவும்- மொய்குழலாய்
பின்முன்பான் பாக்கும் பிறவும் வினையெச்சச்
சொன்முன் வகுத்தோர் துணிவு.   43

ஆறன்மேற் செல்லும் பெயரெச்சம் அன்றல்ல
வேறில்லை யுண்டு வியங்கோளுந் தேறும்
இடமூன்றோ டெய்தி யிருதிணையைம் பாலும்
உடனொன்றிச் சேறலு முண்டு.
   44

சாற்றும் பெயர்வினை யெச்சங்கள் தாமடுக்கித்
தேற்றல் எதிர்மறுத்துச் சொன்னாலும் - ஏற்றபொருள்
குன்றாச் சிலசொல் லிடைவந்து கூடியுடன்
இன்றாதன் மெய்ந்நூ னெறி.   45

நெடியன் உடையன் நிலத்தன் இளைஞன்
கடியன் மதத்தன் கரியன் - தொடியனென
ஒண்ணுதலாய் மற்றையவும் எண்ணியுயிர் திணையின்
நண்ணும் வினைக்குறிப்பு நாட்டு.   46

கரிதரிது தீது கடிது நெடிது
பெரிதுடைத்து வெய்து பிறிது - பரிதென்ப
ஆயிழாய் பன்மையினுஞ் செல்ல அஃறிணையின்
மேய வினைகுறிப்பா மிக்கு.   47

சென்று முதலோடு சேருஞ் சினைவினையும்
அன்றியா வோவாகி யாயோயாய் - நின்றனவும்
மொய்குழலாய் முன்னிலைமுன் ஈஏயும் எண்டொகையும்
மெய்தும் கடப்பாட் டின.   48

இசைநிறை நான்கு வரம்பாம் விரைசொல்
வசையிலா மூன்று வரம்பாம் - அசைநிலை
ஆய்ந்த வொருசொல் லடுக்கிரண்டாந் தாம்பிரியா
வேந்திரட்டைச் சொற்க ளிரட்டு.   49

Maran:

 2. 7. இடைச்சொல் மரபு


சாரியையா யொன்றல் உருபாதல் தங்குறிப்பி
னேரும் பொருளாத னின்றசையாய்ப் - பேர்தல்
வினைச்சொற்கு ஈறாதல் இசைநிறைத்து மேவல்
அனைத்தே இடைச்சொ லளவு.   50

தெரிநிலை யாக்கஞ் சிறப்பெச்சம் முற்றெண்
ணரிதா மெதிர்மறையே யையந் - தருமும்மை
தேற்றம் வின்வெண் ணெதிர்மறையுந் தேமொழியாய்
ஈற்றசையும் ஏகார மென்.   51

காண்டகுமன் னுாக்கங் கழிவே யொழியிசைகொன்
னாண்டறிகா லம்பெருமை யச்சமே - நீண்ட
பயநின்மை தில்லை பருவம் விழைவு
நயனில் ஒழியிசைபு நாட்டு.   52

வினைபெயரும் எண்ணும் இசைகுறிப்பும் பண்பும்
எனவென் றிரண்டு மியலும் - நினையுங்கான்
மன்றவெனுஞ் சொற்றேற்றந் தஞ்சம் எளிமையாம்
என்றா எனாவிரண்டு மெண்.   53

சிறப்பும் வினாவுந் தெரிநிலையும் எண்ணும்
உருப்பி னெதிர்மறையி னோடும் - வெறுத்த
வொழியிசையும் ஈற்றசையும் ஓகாரஞ் சொல்லா
வொழிபொருளுஞ் சார்த்தி யுணர்.   54

Maran:

 2.8. உரிச்சொல் மரபு.


ஒண்பேர் வினையொடுந் தோன்றி யுரிச்சொலிசை
பண்பு குறிப்பாற் பரந்தியலும் - எண்சேர்
பலசொல் லொருபொருட் கேற்றுமொரு சொற்றான்
பலபொருட் கேற்றவும் பட்டு.   55

கம்பலை சும்மை கலியழுங்கல் ஆர்ப்பரவம்
நம்பொடு மேவு நசையாகும் - வம்பு
நிலையின்மை பொன்மை னிறம்பசலை என்ப
விலைநொடை வாளொளியாம் வேறு.   56

விரைவு விளக்கம் மிகுதி சிறப்பு
வரைவு புதுமையுடன் கூர்மை - புரைதீர்
கரிப்பையங் காப்பச்சந் தேற்றமீ ராருந்
தெரிக்கிற் கடிசொற் றிறம்.   57

வெம்மை விருப்பாம் வியலகல மாகுமரி
யைம்மையெய் யாமை யறியாமை - கொம்மை
யிளமை நளிசெறிவாம் ஏயேற்றம் மல்லல்
வளமை வயம்வலியாம் வந்து.   58

புரையுயர் பாகும் புனிறீன் றணிமை
விரைவாங் கதழ்வுந் துனைவுங் - குரையொலியாஞ்
சொல்லுங் கமமுந் துவன்று நிறைவாகும்
எல்லும் விளக்க மெனல்.   59

Navigation

[0] Message Index

[#] Next page

[*] Previous page

Go to full version