தமிழ்ப் பூங்கா > அகராதி

வழக்குச் சொல் அகராதி

(1/26) > >>

Global Angel:
வழக்குச் சொல் அகராதி


அகடவிகடம் _ கோமாளிச் செயல் : சிரிப்பு வரவழைக்கும் சொல்.
அகம்பாவம் _ திமிர் : திமிரானசெயல் : பேச்சு.
அகலக்கால் வைத்தல் _ சிந்தனையின்றி இறங்குதல்.
அகஸ்மாத்தாக _ தற்செயலாக : எதிர்பாராதவாறு.
அக்கக்காக _ பகுதி பகுதியாக.


அக்கடா _ ஓய்வைக் குறிக்கும் வியப்புச் சொல்.
அக்கடா என்று _ ஓய்வாக.
அக்கப்போர் _ புரளி.
அக்கம் பக்கம் _ சுற்றியிருக்கும் பகுதி.
அக்கிரமம் _ முறையற்றது.


அக்குவேறு ஆணிவேறு _ பல கூறாக.
அங்கலாய்ப்பு _ மனதிற் குறைபட்டு வருந்துதல்.
அங்கவஸ்திரம் _ அடுக்கடுக்காக மடிப்பு கொண்டு ஆண்கள்தரிக்கும் மேல் துண்டு.
அங்குமிங்குமாக _ பரவலாகயிருத்தல்.
அங்கங்கே _ முன்னும் பின்னுமாய்.


அசகாய சூரன் _ திறமையுள்ளவன்.
அசடுவழிதல் _ முட்டாள் தனம்.
அசட்டை _ மதியாமை.
அசத்துதல் _ திணரச் செய்தல்.
அசந்தர்ப்பம் _ பொருத்த மற்ற நிலை.


அசந்து பேசுதல் _ திகைத்தல் : அதிர்ச்சியடைதல்.
அசம்பாவிதம் _ களவு முதலான தீயச்செயல்.
அசமந்தம் _ சுறுசுறுப்பற்றது.
அசிங்கம் _ தரக்குறைவு.
அசிரத்தை _ அக்கறையின்மை.


அசைபோடுதல் _ பழைய நினைவுகளில் ஆழ்தல்.
அசைவம் _ உணவில் மீன் : இறைச்சி முதலின கொள்ளுதல்.
அசெளகரியம் _ வசதி குறைவு.
அட _ வியப்புச் சொல்.
அடே _ விளிச்சொல்.


அடக்கி வாசி _ அடக்கத்தோடு நடந்து கொள்.
அடங்காப் பிடாரி _ கட்டுக்கு அடங்காத நபர்.
அடடா _ வருத்தம்,வியப்பு குறிப்பது.
அடம் _ பிடிவாதம் செய்வது.
அடாப்பழி _ வீண்பழி.


அடாவடி _ முரட்டுத்தனம்.
அடிசக்கை _ வியந்து பாராட்டும் குறிப்பு.
அடிக்கடி, அடுத்தடுத்து _ எப்போதும்.
அடிதடி _ கைகலப்பு.
அடிபடுதல் _ பேசப்படுதல் : அனுபவம் பெறுதல்.


அடிபோடுதல் _ முனைதல் : முயற்சித்தல்.
அடிமட்டம் _ கீழ் மட்டம்.
அடிமுட்டாள் _ மூடன்.
அடியோடு _ முற்றிலும்.
அடிவருடி _ தன்மானம் இழந்து பிழைப்பவர்.


அடேயப்பா _ வியப்பின் வெளிப்பாடு.
அட்டக்கரி _ மிகுந்த கறுப்பு நிறம்.
அட்டகாசம் _ அட்டூழியம் : பலாத்காரம்.
அட்டி _ தடை : மறுப்பு.
அட்டூழியம் _ கொடிய செயல்.

அண்டப்புளுகு _ முழுப்பொய்.
அதட்டல் _ உரத்த குரலில் செய்யும் கண்டிப்பு.
அதலபாதாளம் _ ஆழம் அதிகமாக உள்ளது.
அதிக பட்சம் _ பெரும்பாலும்.
அதிகப் பிரசங்கி _ தேவையற்றதை இங்கிதமின்றிப் பேசும் நபர்.


அதிர்ஷ்டக்கட்டை _ நற்பேறு இல்லாதவன்.
அதிர்ஷ்ட வசம் _ தற்செயலாக வாய்க்கும் நன்மை.
அதோகதி _ கைவிடப்பட்ட நிலை.
அத்தாட்சி _ நிரூபிக்கும் சான்று.
அத்தியாவசியம் _ தேவை.



அத்துப்படி _ கைவந்தது : எல்லாம் அறிந்தது.
அநாமதேயம் _ பலரால் அறியப்படாதது : கேட்பாரற்ற நிலை.
அந்தஸ்து _ தகுதி : செல்வாக்கு.
அபசகுனம் _ தீய நிமித்தம்.
அபாரம் _ மிகச்சிறப்புடையது.



அபிப்பிராயம் _ சொந்தக் கருத்து.
அபிமானம் _ விருப்பம்.
அபிலாஷை _ விருப்பம்.
அபிவிருத்தி _ முன்னேற்றம்.
அபூர்வம் _ எப்போதாவது நிகழ்வது.


அபேஸ் _ திருடிக்கொண்டு போதல் : கவர்தல்.
அப்சரஸ் _ அழகி.
அப்பட்டம் _ தெளிவாகத் தெரிதல்.
அப்பப்பா _ மிகுதியை வெளிப்படுத்தும் உணர்ச்சி.
அப்பாடா _ நிம்மதி குறிப்பது.


அப்பாவி _ பிறரால் எளிதில் ஏமாற்றப்படுபவன்.
அமரிக்கை _ சாதுவான.
அமர்க்களம் _ விமரிசை.
அமளி _ கூச்சல் குழப்பம்.
அமுக்கு _ பலமாக நெருக்கு.



அமோகம் _ ஏராளம்.
அம்பேல் _ விளையாட்டில் பிள்ளைகள் தடை நிகழ்த்தக் கூறும் சொல்.
அம்போ என்று _ ஆதரவு அற்ற நிலை.
அம்மாஞ்சி _ தாய் மாமன் மகன்.
அரக்கப்பரக்க _ அவசரமாக.


அரசல் புரசலாக _ அரை குறை நிலையில்.
அரட்டை _ பொழுதைப் போக்கப் பேசும் பேச்சு.
அரணாக்கயிறு _ அரைஞாண்.
அரைவேக்காடு _ அரைகுறையாகத் தெரிந்தவர்.
அர்த்த ராத்திரி _ நள்ளிரவு.


அலக்கழி _ தொந்தரவு கொடுத்தல்.
அலக்காக _ அப்படியே முழுவதுமாக.
அலட்டு _ சிறியதைப் பெரியதாக்கிக் கவலை கொள்ளுதல்.
அலாதி _ சிறப்பானது.
அலுப்பு _ சலிப்பு : அயர்ச்சி: தளர்ச்சி.



அல்லாட்டம் _ திண்டாட்டம்.
அல்லோலகல்லோலம் _ பரபரப்பு : பெருங்குழப்பம்.
அனுதாபி _ ஆதரவு தருபவர்.
அஷ்டமத்துச்சனி _ வேண்டாத தொல்லை : துன்பம்.

Global Angel:



ஆகக்கூடி _மொத்தமாகச் சேர்ந்து.
ஆக்கிரோஷம் _ வெறி : ஆவேசம்.
ஆடிப்போதல் _ நிலை குலைதல்.
ஆட்டம் கொடுத்தல் _ நிலை தளர்தல்.
ஆதியோடந்தமாக _ ஆரம்பம் முதல் முடிவுவரை.


ஆத்திரம் _ வெறி : மனக்கொதிப்பு.
ஆத்மார்த்தம் _ மனம் பொருந்திய தன்மை.
ஆப்பு வைத்தல் _ கோள் சொல்லுதல்.
ஆயாசம் _ களைப்பு.
ஆரவாரம் _ பலரும் சேர்ந்து ஒலி எழுப்புதல்.


ஆர்ப்பாட்டம் _ பலர் கூடி எழுப்பும் பேரொலி.
ஆர்ஜிதம் _ ஒருவர் நிலத்தை அரசு தன்வயம் எடுத்துக் கொண்டு பொது நலனுக்கு ஆக்குதல்.
ஆவன செய்தல் _ தேவையானதைச் செய்தல்.
ஆவேசம் _ உணர்ச்சிப் பெருக்கு.
ஆழம் பார்த்தல் _ ஒருவருடைய உள்ளக் கருத்தை அறிந்து செயல்படுதல்.


ஆளாக்குதல் _ ஒருவனின் வாழ்க்கையில் வளம் காணச் செய்து முன்னேற்றுதல்.
ஆற அமர _ உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு நிதானமாகச் செயல் படுதல்.
ஆறப்போடுதல் _ பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காணாது தள்ளிப்போடுதல்.
ஆனானப்பட்டவர் _ திறமும் செல்வமும் மிக்கவர்.
ஆஷாட பூதி _ வெளித் தோற்றத்திற்குப் பொருத்த மில்லாது செயல் புரிபவர்.

Global Angel:




இக்கட்டு _ தீர்வுகாண இயலாத நிலை.
இங்காலே _ இந்தப்பக்கம்.
இங்கிதம் _ சூழ்நிலைக்கேற்ப.
இசகுபிசகாக _ எதிர் பாராத இடத்தில்.
இடக்கரடக்கல் _ ஒரு பொருளை அல்லது குற்றத்தை நேரிடையாகக் கூறாது மறைமுகமாக நாகரீகமான சொற்களைக் கொண்டு உரைத்தல்.



இடம் போடுதல் _ பேருந்து வண்டியில் கூட்டம் அதிகமாக இருக்கும் போது தனக்கென்று ஒரு இடத்தைத் துண்டு போட்டு கைப்பற்றுதல்.
இட்டுக்கட்டு _ இல்லாததை இருப்பதாகப் புனைந்துரைத்தல்.
இட்டு நிரப்பு _ வேறு ஒன்று கொண்டு ஈடு செய்தல்.
இதோபதேசம் _ நல்லுரை புகலுதல்.
இத்யாதி _ இதைப் போன்று இன்னும் பிற.


இரட்டைக் கிளவி _ இணையாக வருவதும் பிரித்தால் பொருள் தராததுமான சொல். எடுத்துக்காட்டு : கலகல : தொள தொள : கமகம : படபட.
இரண்டகம் _ நம்பிக்கைத் துரோகம்.
இரண்டுக்குப் போதல் _ மலம் கழித்தல்.
இருட்டடிப்பு _ ஒரு செய்தி பரவாதபடி மறைத்தல்.
இருமுடி _ சபரி மலையாத்திரை செல்பவர் பூஜைக்குரிய பொருள்களை வைத்திருக்கும் இரு பை கொண்ட துணி.


இல்லாவிட்டால் _ இல்லையெனில்.
இழுக்காதே _ ஒருவனை இனிமையாகப் பேசித் தீய வழியில் செல்லவைக்காதே.
இழுபறி _ முடிவு எவ்வாறு இருக்கும் என்று அறியமுடியாத நிச்சயமற்ற தன்மை.
இளக்காரம் _ ஒரு பொருட்டாக மதியாமை.
இளிச்சவாயன் _ எளிதில் ஏமாறக் கூடியவன்.


இனாம் _ அன்பளிப்பு.
இன்னோரன்ன _ இது போன்ற.

Global Angel:


உக்கிரம் _தீவிரம்.
உசத்தி _ உயர்வு : மேலானது.
உச்சாடணம் _ மந்திரம் ஓதுதல்.
உச்சாணி _ உச்சக்கிளை : மரக்கிளையின் உச்சி.
உடைப்பில் போடு _தூக்கி எறிதல் : தேவையற்ற தென்று ஒதுக்குதல்.



உண்டாய் இருத்தல் _ கருவுற்றிருத்தல்.
உதாரகுணம் _ பிறர்க்கு உதவும் நற்குணம்.
உத்தரகிரியை _ இறந்தவர்க்காகப் பதினாறாம் நாள் செய்யும் சடங்கு : கருமாதி : காரியம்.
உத்தரீயம் _ மேலாடை.
உத்தியோகம் _ பதவி.


உத்தேசம் _ மனத்தில் உண்டான எண்ணம்.
உபத்திரவம் _ இடைஞ்சல்.
உபாசனை _ வழிபாடு.
உபாத்தியார் _ கல்வி கற்பிக்கும் ஆசிரியர்.
உப்புசம் _ வீக்கம் : புழுக்கம்.( கோவை வழக்குச் சொல் )



உயில் _ சொத்துக்களைத் தன் காலத்திற்குப் பின் பிறர் பகிர்ந்து கொள்ள எழுதி வைக்கும் சட்ட பூர்வமான பத்திரம்.
உரக்க _ குரல் அதிகமாக.
உரத்த சிந்தனை _ மனத்தில் தோன்றும் எண்ணத்தை அப்படியே வெளிப்படுத்துதல்.
உருட்டல் மிரட்டல் _ கடமை தோன்ற அச்சுறுத்தல்.
உருட்டுப் புரட்டு _ முறையற்ற செய்கை.


உருத்திராட்சப் பூனை _ சாதுபோல தோற்றம் கொண்ட தீயவன்.
உருப்படியான ஆக்கபூர்வமான.
உலக்கைக் கொழுந்து _ அறிவற்றவன் : மூடன்.
உஷார் _ விழிப்புணர்வு.

Global Angel:



ஊசிக்காது _சிறு ஒலியும் கேட்கும் காது.
ஊசித் தொண்டை _ சிறிது சிறிதாக விழுங்கும் தொண்டை.
ஊதாரி _ வீண் செலவு செய்பவன்.
ஊர்க்கதை _ வெளிவிவகாரம்.
ஊர்ப்பட்ட _ ஏராளமான.
ஊர் மேய்தல் _ பல இடங்களிலும் தேவையின்றித் திரிதல்.

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version