Special Category > சமையல் கலசம்

பனீர் பிரியாணி

(1/1)

kanmani:
பனீர் பிரியாணி

    பாசுமதி அரிசி - அரை கிலோ
    பனீர் - ஒரு பாக்கெட்
    பெரிய வெங்காயம் - 4
    பெங்களூர் தக்காளி - 3
    இஞ்சி - 1
    பூண்டு - 6 பல்
    முந்திரி - 5
    கொத்தமல்லி - தேவைக்கு ஏற்ப
    புதினா - தேவைக்கு ஏற்ப
    மிளகாய் தூள் - 3 ஸ்பூன்
    தனியாத்தூள் - 1 ஸ்பூன்
    கரம் மசாலா - 1 ஸ்பூன்
    மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
    பச்சை மிளகாய் - 4
    சோம்பு - ஒரு ஸ்பூன்
    எண்ணெய் - தேவையான அளவு
    நெய் - 2 ஸ்பூன்
    தயிர் - கால் கப்
    உப்பு - தேவையான அளவு



    முதலில் வெங்காயம் தக்காளியை நீளவாக்கில் அரிந்துக் கொள்ளவும்... இஞ்சி பூண்டை விழுதாக்கிக் கொள்ளவும். முந்திரியையும் விழுதாக்கிக் கொள்ளவும்.
    புதினா கொத்தமல்லி ஆய்ந்துக் கொள்ளவும்.
    அரிசியை ஒரு 10 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
    தயிர் மஞ்சள் தூள் கரம் மசாலா தூள் இந்த மூன்றையும் நன்கு கலந்து பனீர் போட்டு அதை ஊற வைக்கவும்.
    குக்கரில் எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும் சோம்பு போட்டு தாளிக்கவும். பின் வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும். வதங்கியவுடன் தக்காளிப்போட்டு வதக்கவும். தக்காளி நன்கு குழைந்தவுடன். பச்சைமிளகாய் இஞ்சி பூண்டு போஸ்ட் போட்டு நன்கு வதக்கவும்.
    நன்கு வதங்கியவுடன் முந்திரி மசாலாவை கொட்டி கிளறிவிடவும்.
    நன்கு வெந்தவுடன் பின் அரிசியை கொட்டி தேவையான அளவு தண்ணீர் விட்டு அதில் தேவைக்கு ஏற் மிளகாய் தூள் தனியாத்தூள் உப்பு சேர்த்து கொஞ்சம் நெய்விட்டு குக்கரை மூடி வைக்கவும்.
    இரண்டு விசில் வந்ததும் குக்கரை அணைத்து. பிரசர் இறங்கியவுடன் சூடாக பரிமாறவும்.
    இப்பொழுது சூடான பனீர் பிரியாணி ரெடி.

Note:

காரம் தேவையென்றால் பிரிஞ்சி அல்லது பிரியாணி மசாலா சேர்த்துக் கொண்டால் வாசனையாகவும் சுவையாகவும் இருக்கும்.

Navigation

[0] Message Index

Go to full version