Special Category > சமையல் கலசம்

ஈஸியான கேரட் அல்வா!!!

(1/1)

RemO:
கேரட், கண்களுக்கு மிகவும் சிறந்தது. இதில் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது. படிக்கும் குழந்தைகள் இதை அதிகம் சாப்பிட்டால் நல்லது. மேலும் இதை குழந்தைகளுக்குப் பிடித்தவாறு கேரட்டை அல்வா போல் ஈவினிங் செய்து தரலாம்.

தேவையான பொருட்கள்

கேரட் - 1/4 கிலோ
பால் - அரை லிட்டர்
சர்க்கரை - 200 கிராம்
நெய் - 3 டேபிள் ஸ்பூன்
முந்திரி பருப்பு - 10
கிஸ்மிஸ் - 2 டீஸ்பூன்
ஏலக்காய்ப்பொடி, குங்குமப்பூ - சிறிது

செய்முறை

முதலில் கேரட்டை தோல் சீவி பூப்போல துருவிக்கொள்ளவும். பின்னர் வாணலியில் சிறிது நெய்யை விட்டு துருவிய கேரட்டை பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அதே போல் முந்திரியையும் நெய் விட்டு வறுக்கவும்.

பின் ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்கு சுண்டக் காய்ச்சவும். பிறகு வதக்கிய கேரட்டில் பாலை ஊற்றி கிளறவும். பால் வற்றியதும் அதில் சர்க்கரை சேர்த்துக் கிளறவும்.

நன்கு அல்வா மாதிரி திரண்டு வந்ததும், நெய்யை விட்டு முந்திரி, கிஸ்மிஸ் ஆகியவற்றைப் போட்டு இறக்கவும்.

இப்போது சுவையான கேரட் அல்வா ரெடி!

Navigation

[0] Message Index

Go to full version