Special Category > சமையல் கலசம்

இனிப்பான வாழைப்பழ போண்டா...

(1/1)

RemO:
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வாழைப்பழம் உடலுக்கு மிகச் சிறந்தது. அந்த வாழைப்பழத்தை கொஞ்சம் வித்தியாசமா நம்ம செல்லங்களுக்கு செஞ்சு கொடுப்போமா!!!

தேவையான பொருட்கள் :

பாதி கனிந்த வாழைப்பழம் - 2
துருவிய தேங்காய் - 1/2 கப்
சர்க்கரை - 1/2 கப்
ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்
முந்திரி, திராட்சை, நெய், உப்பு - தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் - பொரிக்க

செய்முறை :

முதலில் வாழைப்பழத்தை பு‌ட்டு வேக வை‌ப்பது போல தோலுடன் ஆவியில் வேக வைக்கவும். பின்னர் அதன் தோலை உரித்து, அதிலுள்ள விதைகளை நீ‌க்‌கி, தண்ணீர் சேர்க்காமல் அதைப் பிசைந்து கொள்ளவும்.

சர்க்கரையைச் சிறிதளவு தண்ணீரில் சேர்த்து, சர்க்கரைப்பாகு செய்து கொள்ளவும். பிறகு அந்த பாகுவில் துருவிய தேங்காயை, உப்பு, நெய், ஏலக்காய் பொடி, முந்திரி, திராட்சை சேர்ந்து பூரணமாக கலந்து வைத்துக் கொள்ளவும்.

பின்னர் வேக வைத்த வாழைப்பழத்தை சிறு சிறு உருண்டைகளாக்கி, அதன் நடுவே பூரணத்தை வைத்து, பிறகு தேங்காய் எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

இதோ இனிப்பான வாழைப்பழ போண்டா ரெடி!!!

Navigation

[0] Message Index

Go to full version