FTC Forum

தமிழ்ப் பூங்கா => அகராதி => Topic started by: Global Angel on January 05, 2012, 08:41:12 PM

Title: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 05, 2012, 08:41:12 PM
வழக்குச் சொல் அகராதி



அகடவிகடம் _ கோமாளிச் செயல் : சிரிப்பு வரவழைக்கும் சொல்.
அகம்பாவம் _ திமிர் : திமிரானசெயல் : பேச்சு.
அகலக்கால் வைத்தல் _ சிந்தனையின்றி இறங்குதல்.
அகஸ்மாத்தாக _ தற்செயலாக : எதிர்பாராதவாறு.
அக்கக்காக _ பகுதி பகுதியாக.


அக்கடா _ ஓய்வைக் குறிக்கும் வியப்புச் சொல்.
அக்கடா என்று _ ஓய்வாக.
அக்கப்போர் _ புரளி.
அக்கம் பக்கம் _ சுற்றியிருக்கும் பகுதி.
அக்கிரமம் _ முறையற்றது.


அக்குவேறு ஆணிவேறு _ பல கூறாக.
அங்கலாய்ப்பு _ மனதிற் குறைபட்டு வருந்துதல்.
அங்கவஸ்திரம் _ அடுக்கடுக்காக மடிப்பு கொண்டு ஆண்கள்தரிக்கும் மேல் துண்டு.
அங்குமிங்குமாக _ பரவலாகயிருத்தல்.
அங்கங்கே _ முன்னும் பின்னுமாய்.


அசகாய சூரன் _ திறமையுள்ளவன்.
அசடுவழிதல் _ முட்டாள் தனம்.
அசட்டை _ மதியாமை.
அசத்துதல் _ திணரச் செய்தல்.
அசந்தர்ப்பம் _ பொருத்த மற்ற நிலை.


அசந்து பேசுதல் _ திகைத்தல் : அதிர்ச்சியடைதல்.
அசம்பாவிதம் _ களவு முதலான தீயச்செயல்.
அசமந்தம் _ சுறுசுறுப்பற்றது.
அசிங்கம் _ தரக்குறைவு.
அசிரத்தை _ அக்கறையின்மை.


அசைபோடுதல் _ பழைய நினைவுகளில் ஆழ்தல்.
அசைவம் _ உணவில் மீன் : இறைச்சி முதலின கொள்ளுதல்.
அசெளகரியம் _ வசதி குறைவு.
அட _ வியப்புச் சொல்.
அடே _ விளிச்சொல்.


அடக்கி வாசி _ அடக்கத்தோடு நடந்து கொள்.
அடங்காப் பிடாரி _ கட்டுக்கு அடங்காத நபர்.
அடடா _ வருத்தம்,வியப்பு குறிப்பது.
அடம் _ பிடிவாதம் செய்வது.
அடாப்பழி _ வீண்பழி.


அடாவடி _ முரட்டுத்தனம்.
அடிசக்கை _ வியந்து பாராட்டும் குறிப்பு.
அடிக்கடி, அடுத்தடுத்து _ எப்போதும்.
அடிதடி _ கைகலப்பு.
அடிபடுதல் _ பேசப்படுதல் : அனுபவம் பெறுதல்.


அடிபோடுதல் _ முனைதல் : முயற்சித்தல்.
அடிமட்டம் _ கீழ் மட்டம்.
அடிமுட்டாள் _ மூடன்.
அடியோடு _ முற்றிலும்.
அடிவருடி _ தன்மானம் இழந்து பிழைப்பவர்.


அடேயப்பா _ வியப்பின் வெளிப்பாடு.
அட்டக்கரி _ மிகுந்த கறுப்பு நிறம்.
அட்டகாசம் _ அட்டூழியம் : பலாத்காரம்.
அட்டி _ தடை : மறுப்பு.
அட்டூழியம் _ கொடிய செயல்.

அண்டப்புளுகு _ முழுப்பொய்.
அதட்டல் _ உரத்த குரலில் செய்யும் கண்டிப்பு.
அதலபாதாளம் _ ஆழம் அதிகமாக உள்ளது.
அதிக பட்சம் _ பெரும்பாலும்.
அதிகப் பிரசங்கி _ தேவையற்றதை இங்கிதமின்றிப் பேசும் நபர்.


அதிர்ஷ்டக்கட்டை _ நற்பேறு இல்லாதவன்.
அதிர்ஷ்ட வசம் _ தற்செயலாக வாய்க்கும் நன்மை.
அதோகதி _ கைவிடப்பட்ட நிலை.
அத்தாட்சி _ நிரூபிக்கும் சான்று.
அத்தியாவசியம் _ தேவை.



அத்துப்படி _ கைவந்தது : எல்லாம் அறிந்தது.
அநாமதேயம் _ பலரால் அறியப்படாதது : கேட்பாரற்ற நிலை.
அந்தஸ்து _ தகுதி : செல்வாக்கு.
அபசகுனம் _ தீய நிமித்தம்.
அபாரம் _ மிகச்சிறப்புடையது.



அபிப்பிராயம் _ சொந்தக் கருத்து.
அபிமானம் _ விருப்பம்.
அபிலாஷை _ விருப்பம்.
அபிவிருத்தி _ முன்னேற்றம்.
அபூர்வம் _ எப்போதாவது நிகழ்வது.


அபேஸ் _ திருடிக்கொண்டு போதல் : கவர்தல்.
அப்சரஸ் _ அழகி.
அப்பட்டம் _ தெளிவாகத் தெரிதல்.
அப்பப்பா _ மிகுதியை வெளிப்படுத்தும் உணர்ச்சி.
அப்பாடா _ நிம்மதி குறிப்பது.


அப்பாவி _ பிறரால் எளிதில் ஏமாற்றப்படுபவன்.
அமரிக்கை _ சாதுவான.
அமர்க்களம் _ விமரிசை.
அமளி _ கூச்சல் குழப்பம்.
அமுக்கு _ பலமாக நெருக்கு.



அமோகம் _ ஏராளம்.
அம்பேல் _ விளையாட்டில் பிள்ளைகள் தடை நிகழ்த்தக் கூறும் சொல்.
அம்போ என்று _ ஆதரவு அற்ற நிலை.
அம்மாஞ்சி _ தாய் மாமன் மகன்.
அரக்கப்பரக்க _ அவசரமாக.


அரசல் புரசலாக _ அரை குறை நிலையில்.
அரட்டை _ பொழுதைப் போக்கப் பேசும் பேச்சு.
அரணாக்கயிறு _ அரைஞாண்.
அரைவேக்காடு _ அரைகுறையாகத் தெரிந்தவர்.
அர்த்த ராத்திரி _ நள்ளிரவு.


அலக்கழி _ தொந்தரவு கொடுத்தல்.
அலக்காக _ அப்படியே முழுவதுமாக.
அலட்டு _ சிறியதைப் பெரியதாக்கிக் கவலை கொள்ளுதல்.
அலாதி _ சிறப்பானது.
அலுப்பு _ சலிப்பு : அயர்ச்சி: தளர்ச்சி.



அல்லாட்டம் _ திண்டாட்டம்.
அல்லோலகல்லோலம் _ பரபரப்பு : பெருங்குழப்பம்.
அனுதாபி _ ஆதரவு தருபவர்.
அஷ்டமத்துச்சனி _ வேண்டாத தொல்லை : துன்பம்.

Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 05, 2012, 08:47:05 PM



ஆகக்கூடி _மொத்தமாகச் சேர்ந்து.
ஆக்கிரோஷம் _ வெறி : ஆவேசம்.
ஆடிப்போதல் _ நிலை குலைதல்.
ஆட்டம் கொடுத்தல் _ நிலை தளர்தல்.
ஆதியோடந்தமாக _ ஆரம்பம் முதல் முடிவுவரை.


ஆத்திரம் _ வெறி : மனக்கொதிப்பு.
ஆத்மார்த்தம் _ மனம் பொருந்திய தன்மை.
ஆப்பு வைத்தல் _ கோள் சொல்லுதல்.
ஆயாசம் _ களைப்பு.
ஆரவாரம் _ பலரும் சேர்ந்து ஒலி எழுப்புதல்.


ஆர்ப்பாட்டம் _ பலர் கூடி எழுப்பும் பேரொலி.
ஆர்ஜிதம் _ ஒருவர் நிலத்தை அரசு தன்வயம் எடுத்துக் கொண்டு பொது நலனுக்கு ஆக்குதல்.
ஆவன செய்தல் _ தேவையானதைச் செய்தல்.
ஆவேசம் _ உணர்ச்சிப் பெருக்கு.
ஆழம் பார்த்தல் _ ஒருவருடைய உள்ளக் கருத்தை அறிந்து செயல்படுதல்.


ஆளாக்குதல் _ ஒருவனின் வாழ்க்கையில் வளம் காணச் செய்து முன்னேற்றுதல்.
ஆற அமர _ உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு நிதானமாகச் செயல் படுதல்.
ஆறப்போடுதல் _ பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காணாது தள்ளிப்போடுதல்.
ஆனானப்பட்டவர் _ திறமும் செல்வமும் மிக்கவர்.
ஆஷாட பூதி _ வெளித் தோற்றத்திற்குப் பொருத்த மில்லாது செயல் புரிபவர்.

Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 05, 2012, 08:48:28 PM




இக்கட்டு _ தீர்வுகாண இயலாத நிலை.
இங்காலே _ இந்தப்பக்கம்.
இங்கிதம் _ சூழ்நிலைக்கேற்ப.
இசகுபிசகாக _ எதிர் பாராத இடத்தில்.
இடக்கரடக்கல் _ ஒரு பொருளை அல்லது குற்றத்தை நேரிடையாகக் கூறாது மறைமுகமாக நாகரீகமான சொற்களைக் கொண்டு உரைத்தல்.



இடம் போடுதல் _ பேருந்து வண்டியில் கூட்டம் அதிகமாக இருக்கும் போது தனக்கென்று ஒரு இடத்தைத் துண்டு போட்டு கைப்பற்றுதல்.
இட்டுக்கட்டு _ இல்லாததை இருப்பதாகப் புனைந்துரைத்தல்.
இட்டு நிரப்பு _ வேறு ஒன்று கொண்டு ஈடு செய்தல்.
இதோபதேசம் _ நல்லுரை புகலுதல்.
இத்யாதி _ இதைப் போன்று இன்னும் பிற.


இரட்டைக் கிளவி _ இணையாக வருவதும் பிரித்தால் பொருள் தராததுமான சொல். எடுத்துக்காட்டு : கலகல : தொள தொள : கமகம : படபட.
இரண்டகம் _ நம்பிக்கைத் துரோகம்.
இரண்டுக்குப் போதல் _ மலம் கழித்தல்.
இருட்டடிப்பு _ ஒரு செய்தி பரவாதபடி மறைத்தல்.
இருமுடி _ சபரி மலையாத்திரை செல்பவர் பூஜைக்குரிய பொருள்களை வைத்திருக்கும் இரு பை கொண்ட துணி.


இல்லாவிட்டால் _ இல்லையெனில்.
இழுக்காதே _ ஒருவனை இனிமையாகப் பேசித் தீய வழியில் செல்லவைக்காதே.
இழுபறி _ முடிவு எவ்வாறு இருக்கும் என்று அறியமுடியாத நிச்சயமற்ற தன்மை.
இளக்காரம் _ ஒரு பொருட்டாக மதியாமை.
இளிச்சவாயன் _ எளிதில் ஏமாறக் கூடியவன்.


இனாம் _ அன்பளிப்பு.
இன்னோரன்ன _ இது போன்ற.
Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 05, 2012, 08:50:11 PM


உக்கிரம் _தீவிரம்.
உசத்தி _ உயர்வு : மேலானது.
உச்சாடணம் _ மந்திரம் ஓதுதல்.
உச்சாணி _ உச்சக்கிளை : மரக்கிளையின் உச்சி.
உடைப்பில் போடு _தூக்கி எறிதல் : தேவையற்ற தென்று ஒதுக்குதல்.



உண்டாய் இருத்தல் _ கருவுற்றிருத்தல்.
உதாரகுணம் _ பிறர்க்கு உதவும் நற்குணம்.
உத்தரகிரியை _ இறந்தவர்க்காகப் பதினாறாம் நாள் செய்யும் சடங்கு : கருமாதி : காரியம்.
உத்தரீயம் _ மேலாடை.
உத்தியோகம் _ பதவி.


உத்தேசம் _ மனத்தில் உண்டான எண்ணம்.
உபத்திரவம் _ இடைஞ்சல்.
உபாசனை _ வழிபாடு.
உபாத்தியார் _ கல்வி கற்பிக்கும் ஆசிரியர்.
உப்புசம் _ வீக்கம் : புழுக்கம்.( கோவை வழக்குச் சொல் )



உயில் _ சொத்துக்களைத் தன் காலத்திற்குப் பின் பிறர் பகிர்ந்து கொள்ள எழுதி வைக்கும் சட்ட பூர்வமான பத்திரம்.
உரக்க _ குரல் அதிகமாக.
உரத்த சிந்தனை _ மனத்தில் தோன்றும் எண்ணத்தை அப்படியே வெளிப்படுத்துதல்.
உருட்டல் மிரட்டல் _ கடமை தோன்ற அச்சுறுத்தல்.
உருட்டுப் புரட்டு _ முறையற்ற செய்கை.


உருத்திராட்சப் பூனை _ சாதுபோல தோற்றம் கொண்ட தீயவன்.
உருப்படியான ஆக்கபூர்வமான.
உலக்கைக் கொழுந்து _ அறிவற்றவன் : மூடன்.
உஷார் _ விழிப்புணர்வு.

Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 05, 2012, 08:52:35 PM



ஊசிக்காது _சிறு ஒலியும் கேட்கும் காது.
ஊசித் தொண்டை _ சிறிது சிறிதாக விழுங்கும் தொண்டை.
ஊதாரி _ வீண் செலவு செய்பவன்.
ஊர்க்கதை _ வெளிவிவகாரம்.
ஊர்ப்பட்ட _ ஏராளமான.
ஊர் மேய்தல் _ பல இடங்களிலும் தேவையின்றித் திரிதல்.
Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 05, 2012, 08:55:17 PM



எகத்தாளம் _ எள்ளல் தன்மை.
எக்கச்சக்கம் _ மிக அதிகம்.
எக்கச்சக்கமாக _ தப்பிக்க முடியாதபடி.
எக்களிக்க _ மகிழ்ச்சி மிக.
எக்களிப்பு _ வெற்றி மகிழ்ச்சி.


எடுத்த எடு்ப்பில் _ ஆரம்பத்தில்.
எடுத்ததெற்கெல்லாம் _ தேவையற்ற போது.
எடுத்தெறிந்து _ அலட்சியமாக.
எடுப்பார்கைப்பிள்ளை _ எளிதாகப் பிறரால் வசப்படுத்தக்கூடியவர்.
எண்பி _ நிரூபணம் செய்.


எதார்த்தம் _ வெளிப்படை.
எதிரும் புதிருமாக _ நேருக்கு நேராக.
எதிர் நீச்சல் _ தடை முதலானவற்றை எதிர்த்துப் போராடுதல்.
எதேச்சை _ தன்னுடைய விருப்பப்படி.
எதேச்சையாக _ தற்செயலாக : எதிர்பாராமல்.


எதேஷ்டம் _ தேவைக்கு அதிகம்.
எமகண்டன் _ திறமைசாலி.
எமகாதகன் _ எந்தச் செயலையும் முடிக்கும் ஆற்றல் உள்ளவன்.
எம்பிக்குதி _ மேலே உந்தி எழும்பு.
எரிந்து விழு _ சினந்து பேசு : கடுமையாகப்பேசு.


எள்ளுதான் _ கொடுத்த பணம் திரும்பி வராது.
என்னவோ _ ஒருவர் சொல்வதை முழுமையாக ஏற்காது ஐயம் காட்டுதல்
.
Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 05, 2012, 08:56:39 PM



ஏகதேசம் _உத்தேசம்.
ஏகப்பட்ட _ ஏராளமான : மிகுதியான.
ஏகபோகம் _ யாவும் ஓரிடத்தேயுள்ள ஆதிக்கம் : ஆதிக்க உரிமை.
ஏகவசனம் _ மரியாதையின்றி உரைத்தல்.
ஏகாங்கி _ குடும்பப் பொறுப்பில்லாத தனிமையானவன்.


ஏடாகூடம் _ முறைதவறிய செயல்.
ஏட்டிக்குப் போட்டி _ எதிர் மறுப்பு.
ஏப்பம் விடுதல் _ பொருளை அபகரித்தல்.
ஏமாளி _ எளிதில் ஏமாறக்கூடியவர்.
ஏழாம் பொருத்தம் _ இருவரிடையே காணப்படும் இணக்கமற்ற தன்மை : ஒருவர் மற்றவரோடு ஒத்துப்போகாத நிலை.


ஏழை பாழை _ ஏழை எளியவர்.
ஏறுக்குமாறு _ முன்னொன்றும் பின்னொன்றுமாகப் பேசுதல்.
ஏற்ற இறக்கம் _ உயர்த்துதலும் இறக்குதலும் : தொனி வேறுபாடு.
ஏனோதானோ _ உரிய கவனம் அல்லது பொறுப்பு இல்லாமை.
Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 05, 2012, 08:58:15 PM


ஐந்தாம படை _எதிரிகளுக்கு உதவும் துரோகக் கும்பல்.
ஐவேஜு _ சொத்து
Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 07, 2012, 10:10:15 PM



ஒட்ட _ முற்றிலும்.
ஒட்டிக்கிரட்டி _ ஒன்றுக்கு இரண்டாக : அதிகமாக.
ஒட்டுக் குடித்தனம் _ தனித்தனியாகத் தடுக்கப்பட்ட வீட்டின் சிறு பகுதியில் வாடகைக்கு இருக்கும் குடும்பம்.
ஒட்டுக் கேள் _ மற்றவர் பேசுவதை மறைந்து இருந்து கேட்டல்.
ஒட்டுத்திண்ணை _ வீட்டின் முன் வாசலை ஒட்டி அமைக்கப்படும் சிறிய திண்ணை.


ஒட்டு மொத்தம் _தனித்தனியாக உள்ளவற்றைக் கேட்டு ஒன்று சேர்ப்பது : யாவற்றையும் சேர்த்து ஒருங்குபடுத்துதல்.
ஒப்புக்குச்சப்பாணி _குழுவில் ஒப்புக்காகச் சேர்த்துக் கொள்ளப்படும் செயல்படாத நபர்.
ஒப்பேற்று _இருப்பதைக் கொண்டு சரிக்கட்டு.
ஒய்யாரம் _பெண்களின் நளினம்.
ஒய்யாரி _ கவர்ச்சியுடைய பெண்.


ஒருக்களித்து _ பக்கவாட்டாகச் சாய்ந்திருப்பது.
ஒருகாலும் _எந்தக் காலத்திலும்.
ஒரு மாதிரி _ இயல்புக்கு மாறானது.
ஒரேயடியாக _ மிகவும் முழுமையாக.
ஒற்றைக்காலில் நில் _ பிடிவாதமாக இரு.


ஒன்றுக்கிரு _ஒன்றுக்குப் போ : சிறுநீர் கழித்தல்.
ஒன்று விடாமல் _எதையும் விடாது.
Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 07, 2012, 10:11:22 PM



ஓட்டம் பிடி _தப்பிச் சென்று விடு.
ஓட்டாண்டி _நல்ல நிலையிலிருந்து கெட்டழிந்து : வறிஞன் ஆனவன்.
ஓட்டைக்கை _எளிதாக செலவு செய்யும் தன்மை.
ஓட்டையுடைச்சல் _பயன் படுத்த முடியாத வீட்டுச் சாமான்கள்.


ஓட்டை வாய் _ எல்லாவற்றையும் பிறரிடம் கூறும் தன்மை: இரகசியத்தைக் கட்டிக் காத்தவன்.
ஓரம் கட்டு _ விலக்கு.
ஓரளவு _சிறிது : கொஞ்சம்.
ஓரிரு _மிகவும் குறைவான : சில
Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 07, 2012, 10:13:20 PM



கக்கூஸ் _கழிப்பிடம்.
கக்கூஸ் படை _ தொடைப்பகுதியில் தோன்றும் படை நோய் வகை.
கங்கணம் கட்டு _ உறுதி கொள்.
கங்காஸ் நானம் _ தீபாவளியன்று விடியற்காலம் எண்ணெய் தேய்த்து நீராடுதல்.
கசக்கிப்பிழி _ கடுமையாகத் துன்புறுத்து.


கசமுச என்று _ வெளிப்படையில்லாது.
கசாப்புக் கடை _ இறைச்சி விற்கும் கடை : கொலைத் தன்மையுடைய இடம்.
கச்சடா _ மட்டமானது : கீழ்த்தரம்.
கச்சிதம் _ சரியான அளவு.
கச்சை கட்டு _ உறுதி கொள்ளுதல்.


கஞ்சத்தனம் _ ஈயாத உலோபத் தன்மை.
கஞ்சி காய்ச்சி _ பலரும் சேர்ந்து ஒருவனை எள்ளும் வகையில் செய்தல்.
கடகடவென்று _ தடங்கலின்றி : விரைவாக.
கடாட்சம் _ அனுக்கிரகம்.
கடமுடா என்று _ பெருத்த ஒலியோடு.


கடுகடு _ கடுமையை வெளிப்படுத்துதல்.
கடுகடுப்பு _ சினத்தால் வெளியாகும் கடுமை.
கடுங்காப்பி _ பால் சேர்க்கப்படாத காபிபானம்.
கடுதாசி _ காகிதம்.
கடுப்பு _தெறிக்கும் வலி.


கடும் _ அளவுக்கு அதிகமான.
கடூரம் _ மிகுந்த கடுமை.
கடைந்தெடுத்த _ முற்றிலும் : தேர்ந்தெடுத்த.
கடையடைப்பு _ வியாபாரம் நடக்காதபடி கடை மூடுதல்.
கடையைக்கட்டு _ பணியைமுடி.


கட்சி கட்டு _ தன்தரப்பினராக ஒன்று சேர்த்து விவகாரத்தைக் கைக்கொள்.
கட்டவிழ்த்துவிடு _ அழிவு சத்திகளை ஏவி எதிரிகளைத் துன்புறுத்து.
கட்டுக்காவல் _ பலத்த காவல்.
கட்டுக் கோப்பு _ ஒற்றுமை.
கட்டுச் சோறு _ பொட்டலமாகக் கட்டப்பட்ட சோறு.


கட்டுப் பட்டி _ பண்டைய பழக்க வழக்கம் உடையவர்.
கட்டு மஸ்து _ உடல் வலிமை.
கண்கட்டு வித்தை _ ஜால வித்தை.
கண்டபடி _ ஒழுங்கின்றி.
கண்ட மேனிக்கு _ தாறுமாறாக.


கண்ணடி _ சாடை காட்டுதல்.
கண்டும் காணாமல் _ பொருட்படுத்தாமல்.
கண்ணாக இரு _ கருத்துடன் செயல்படு.
கண்ணாடி அறை _ எச்சரிக்கையாக நடந்து கொள்வதைக் குறிப்பது.
கண்ணும் கருத்துமாக _ மிகவும் பொறுப்பாக.


கண்ணைக் கசக்குதல் _ வருத்தம் மிகுதல்.
கண்ணை மூடிக்கொண்டு _ சிந்தனை ஏதுமில்லாமல்.
கண்துடைப்பு _ போலியாக.
கண்மண் தெரியாது _ கட்டுப்பாடு இல்லாது.
கண்மூடித்தனம் _ ஆராயாது செய்தல்.


கண்றாவி _ வெறுக்கத்தக்கது.
கணக்காக _ சரியாக குறியாக.
கணக்கு வழக்கு _ வரவு செலவு வகை.
கணகண _ உடற் காய்ச்சலைக் குறிப்பது : மணியோசையைக் குறித்தல்.
கணீர் என்று _ உரத்த : தெளிவான குரல்.
Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 07, 2012, 10:17:56 PM
கா


காக்காய்க்கடி _ சிறுவர்கள் எச்சில் படாமல் தின்பண்டம் போன்றவற்றைத் துணியால் மூடிக்கடிக்கும் வகை.
காக்காய்க்குளியல் _ உடலை நனைத்துக் கொள்ளாது தண்ணீரை அள்ளித் தலையில் தெளித்துக் கொள்ளுதல்.
காக்காய்ப்பொன் _ சிவந்த பொன்னிறத்தில் இருக்கும் ஒரு வகைத்தகடு.
காக்காய்ப்பிடித்தல் _ தன் நன்மை கருதி ஒருவருக்கு வேண்டியவை செய்து மகிழ்வித்தல்.
காக்கி _ ஒருவகைப் பழுப்பு நிற ஆடை.


காசியாத்திரை _திருமணத்தில் தாலி கட்டுமுன் செய்யப்படும் சடங்குமுறை.
காடா _முரட்டுத் துணி.
காடா விளக்கு _தடித்த திரியிட்ட விளக்கு.
காடி _புளித்த நீர்.
காடி பானை _ இழிந்த இடம்.


காட்டான் _ முரட்டுத் தனமானவன்.
காட்டிக்கொடு _ஒருவனைத் தண்டிக்கும் வகையில் வஞ்சகமாகச் சூழ்ச்சி செய்.
காட்டிக் கொள் _ தன்னை நல்லவன் போன்று பாவனை செய்.
காட்டு தர்பார் _ வரைமுறையின்றித் தன்னிச்சையாக நடத்தல்.
காட்டுத்தனம் _ அநாகரிகம்.


காட்டுமிராண்டி _காட்டில் வசிப்பவன் : அநாகரிகமானவன்.
காண்பி _ காட்டு.
காதில் போட்டுவை _கவனத்தில் வைத்துக்கொள்.
காதில் வாங்கு _ கவனமாகக் கேட்டுக்கொள்.
காது குத்து _ காது மடலில் சிறுவர்களுக்குத் துளையிடுதல் : ஒருவர்க்குத் தெரியாது என்று எண்ணி மாறான செய்தியுரைத்தல்.


காதுகொடுத்துக் கேள் _ கவனமாகக் கேள்.
காதைக்கடி _செய்தியை இரகசியமாகச் சொல்லு.
காபந்து _காவல் : பாதுகாப்பு.
காப்பியடி _ ஒன்றைப் பார்த்து அதேபோன்று செய்.
காமாசோமா _ திருத்தமாக அமையாத : ஒழுங்கின்றி.


காரியமாகுதல் _ நிரந்தரமாக அமைதல்.
காய்விடுதல் _ நட்பு முறிதல்.
காரசாரம் _ தீவிரமான விவாதம்.
காரியக்காரன் _தன்னுடைய வளமையில் கருத்தாய் இருப்பவன்.
காரியக்காரி _தன்னுடைய செயலில் கருத்தாய் இருந்து நன்மையடைபவள்.


காரியவாதி _சுய நலத்தோடு செயல்படுபவன்.
காலடியில் _ ஒருவனது பிடிக்குள்.
காலட்சேபம் _ பிழைப்பு : வாழ்க்கை நடத்துதல்.
காலம்காலமாக _ தொன்று தொட்டு.
காலம் தள்ளு _ வசதியற்ற நிலையில் வாழ்க்கை நடத்துதல்.


காலாகாலத்தில் _அது அதற்கு உரிய காலத்தில்.
காலாவதியாதல் _ கெடுமுடிவுற்று அழிதல்.
காலி _ ஒன்றுமில்லாத நிலை.
காலி _ ஒன்றுமில்லாத நிலை.
காலி செய் _ வெளியேறு.


காலிப்பயல் _ அடாவடித்தனம் செய்பவன், பிறரைத் துன்புறுத்தி வதைப்பவன்.
காலூன்றுதல் _ நிலைபெறுதல்: இடம் பெறுதல்.
காலைக்கடன் _ மலசலம் கழித்தல், நீராடல் முதலான செயல்கள்.
காலைப்பிடித்தல் _ கெஞ்சுதல் : பணிதல்.
காலைவாருதல் _ ஏமாற்றுதல் : துரோகம் செய்தல்.


கால் கட்டு _ ஆணுக்குத் திருமணம் செய்து உண்டாக்கும் கட்டுப்பாடு.
கால்கடுதாசி _ உடனடியான ராஜினாமாக் கடிதம்.
கால்கழுவு _ நீரால் மலசலம் முதலியவற்றைப் போக்கித் தூய்மை செய்தல்.
கால் நடையாக _ நடந்து செல்லும் தன்மை.
கால் மாடு _ஒருவன் படுத்த நிலையில் அவனது கால் உள்ள பக்கம்
Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 07, 2012, 10:21:09 PM

கி

கிசுகிசு _ காதில் மெதுவாகச் சொல்லுதல் : இரகசியம் பேசுதல்.
கிசுகிசுப்பு _ ஒருவரின் தனிப்பட்ட குணக்கேடுகளைப் பிறர் கேட்காதபடி மறைவாகச் சொல்லுதல்.
கிச்சுக்கிச்சுக் காட்டுதல் _ ஒருவர் அக்குள் விலாப்புறம் முதலிய இடங்களை வருடிக் கூச்சம், சிரிப்பு உண்டாக்குதல்.
கிஞ்சித்துவம் _ சிறிதளவும்.
கிடப்பில் போடுதல் _ காலம் தாழ்த்துதல் : செயல்படாதிருக்கச் செய்தல்.


கிடுக்கிப் பிடி _ விடுபடாதபடி.
கிடுகிடு என்று _ மிகவும் துரிதமாக.
கிடுகு _ கீற்று.
கிடை _ ஆடுமாடுகள் வயல்களில் மறித்து வைக்கப்படும் தன்மை.
கிடையவேகிடையாது _ உறுதியாக மறுத்தல்.


கிடைமட்டம் _ தரைமட்டத்திற்கு இணையானது.
கிட்ட _ அருகில் : பக்கம்.
கிட்டத்தட்ட _ ஏறக்குறைய : ஓரளவு.
கிட்டிப்புள் _ சிறுமரத்துண்டை வைத்துச் சிறுவர் ஆடும் விளையாட்டு.
கிட்டுதல் _ அடைதல் : நெருங்குதல்.


கிட்டே _அண்மையில் : பக்கத்தில்.
கிணற்றுத்தவளை _ பரந்த அநுபவம் இல்லாதவர்.
கிம்பளம் _ இலஞ்சப்பணம்.
கிரகிப்பு _ மனத்தில் இருத்திக் கொள்ளும் தன்மை.
கிரமம் _ முறை : ஒழுங்கு.


கிரயம் _ விலை.
கிராக்கி _ தேவைக்கு ஏற்றவாறு பண்டம் கிடைக்காத நிலைப்பாடு.
கிராக்கிப்படி _ அகவிலைப்படி.
கிராதகம் _ கொடுமை.
கிராதகன் _ கொடுமைக்காரன்.


கிராதகி _ கொடுமைக்காரி.
கிராப்பு _ தலைமுடி அலங்கார ஒப்பனை.
கிராமிய _ நாட்டுப்புறம் சார்ந்த.
கிருதா _ ஆடவர் காதின் அருகில் கன்னப் பகுதியில் அடர்த்தியாகவும் நீளமாகவும் விளங்கும் தலைமுடியின் தொடர்ச்சி.
கிருபை _ அருள் : கருணை.


கிலி _ பீதி : மனக்கலக்கம்.
கிலுகிலுப்பை _ சிறுவர் விளையாட்டுப் பொருள்.
கிலேசம் _ சஞ்சலம் : மனவருத்தம்.
கில்லாடி _ மிகுந்த சாமர்த்தியசாலி : திறமையுடையவன்.
கிழக்கோட்டான் _ வயது மூத்தோரை அவமதிப்பாகக் குறித்தல்.


கிழடு _ முதுமையுடையவர்.
கிழடு கட்டை, கிழம் _ முதுமை உடையவர்.
கிழிப்பவன் _ திறமையற்றவனின் செயற்பாடு குறித்து வெறுப்புடன் குறித்தல்.
கிளப்பு _ நகரச் செய் : பரவச் செய் : பொய்ச் செய்தியைக் கிளப்பி விடு : உணவு விடுதி.
கிளுகிளுப்பு _மனக்கிளர்ச்சியான உணர்வு.


கிள்ளியெறி _ நீக்கு.
கிள்ளுக்கீரை _ அற்பமான ஒன்று.
கிறுக்கல் _எழுத்தைப் படிக்க முடியாதவாறு எழுதுதல்.
கிறுக்கன் _ அறிவுகலங்கியவன் : பைத்தியக்காரன்.
கிறுக்கு _ படிக்க முடியாதபடி எழுது : மனக்கோணல்.


கிறுகிறுப்பு _ தலைச் சுற்றல்.
கிஸ்தி _ நிலவரி.
கிஸ்மிஸ் பழம் _ உலர்ந்த திராட்சை.
Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 07, 2012, 10:32:00 PM
கீ

கீச்சுக்குரல் _காதைத் துளைக்கும் ஒலி.
கீழ்ப்பாய்ச்சிக் கட்டுதல் _ வேட்டியை மடித்துவைத்துக் கட்டும் வகை
.
Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 07, 2012, 10:34:38 PM
கு


குசலம் விசாரிப்பு _நலன் விசாரித்தல்.
குசினி _ சமையல் அறை.
குசு _ நாற்றமடிக்கும் வாயு.
குசுகுசு _ காதில் இரகசியம் பேசுதல்.
குசும்பு _ குறும்புச் செயல்.
 
குச்சு _ஓலையால் வேயப்பட்ட சிறு குடிசை.
குச்சு மட்டை _வெள்ளையடிக்கப் பயன் படுத்தும் மட்டை.
குடலைப்பிடுங்கி _பசியால் வருத்தும் வயிற்று நோய்.
குடிகாரன் _ மதுபானம் அதிகமாகக் குடிப்பவன்.
குடிகேடன் _ குடும்பப் பெருமையைக் கெடுப்பவன்.
 

குடிபோதை, குடிவெறி _மது மயக்கம்.
குடுகுடுப்பை _ உடுக்கை வடிவில் அமைந்து ஒலியெழுப்பு கருவி.
குடும்பஸ்தன் _மனைவி மக்களோடு வாழ்பவன்.
குடும்பி _பெரிய குடும்பத்தையுடையவன்.
குட்டிச்சாத்தான் _ குறும்பு செய்யும் குழந்தைகளைச் செல்லமாக அழைத்தல்.
 

குட்டிச்சுவர் _ சீரழிவு : பயனற்றது.
குட்டிப் போட்ட பூனை _ வீட்டையே சுற்றி வந்து வேலையின்றி ஒருவரை அடுத்து வாழ்பவன்.
குட்டையைக் குழப்புதல் _குழப்பம் விளைவித்தல் : கலகம் செய்தல்.
குணாதிசயம் _ மேலான குணநலன்.
குண்டு கட்டாக _ கட்டாயப் படுத்தித்தூக்கிச் செல்லுதல்.
 

குண்டுச் சட்டி _ ஒரே இடத்திற்குள் இருந்து அலைவது.
குண்டைத் தூக்கிப்போடு _அதிர்ச்சி தரும் செய்திணைக் கூறுதல்.
குதர்க்கம் _ நியாமற்ற வகையில் செய்யும் வாதம்.
குதிரைக்கொம்பு _ அரியது.
குத்துக்கல் _உருப்படியாக நிலைத்திருத்தல்.
 

குத்துமதிப்பு _ தோராய மதிப்பு.
குத்து வெட்டு _ அடிக்கடி சண்டை நிகழ்வது.
குபீரென்று _திடீரென்று.
குபுகுபு என்று _ வேகமாக.
குப்பை கொட்டு _பயனற்ற வேலை செய்.
 

குமாஸ்தா _அலவலகப் பணிசெய்பவர்.
கும்பல் _ பெருங்கூட்டம்.
கும்மாளம் _மகிழ்ச்சி ஆரவாரம்.
கும்மிருட்டு _ அடர்ந்த இருள்.
குயுக்தி _இடக்கானது : நேர்மையற்ற சிந்தை.


குய்யோமுறையோ என்று _உரத்த குரலிட்டுத் துன்பத்தைக் கூறுதல்.
குரங்குப்புத்தி _ தடுமாறும் மனம் : அலைபாயும் தன்மை.
குரல்கொடு _கருத்துக்கூறு : பதில் சொல்.
குருட்டாம் போக்கு _ முன்யோசனையின்றி.
குருட்டுப்பாடம் _பொருள் புரியாது செய்த மனப்பாடம்.


குருவிக்காரன் _குருவி பிடிப்பவன் : ஒரு வர்க்கத்தினர்.
குல்லாப்போடு _ஒருவரை மகிழ்வித்துச் செயலில் வெற்றிகொள்.
குழந்தை குட்டி _மக்கட் செல்வம்.
குழிபறி _ சதிசெய்.
குழையடி _ ஒருவனை முகத்துதி செய்.


குளுகுளு என்று _இதமாக : இனிதாக.
குள்ளநரி _ தந்திக்காரன்.
குஷி _மகிழ்ச்சி
Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 07, 2012, 10:41:14 PM
கூ


கூடக்குறைய _அதிகமாக வேறுபாடு இன்மை.
கூடமாட _உடனிருந்து துணையாக.
கூடிய மட்டும் , கூடுமான வரை _ இயன்ற அளவு.
கூட்டாஞ் சோறு _ அரிசி, பருப்பு, காய் கறி முதலியன சேர்த்து வேகவைத்துத் தயாரிக்கும் உணவு : உல்லாசப் பயணத்தின் போது அனைவரும் கூடியிருந்து கொள்ளும் உணவு.
கூட்டாளி _உடனிருந்து உரிமையோடு தொழில் செய்பவன்.


கூட்டிக்கொடு _சுயலாபத்தக்காக ஒரு பெண்ணைப் பயன் படுத்தும் வகை.
கூண்டோடு _ இனம், உறவு முதலான யாவும்.
கூத்தடித்தல் _ தகாத முறையில் வாழ்க்கையில் இன்பம் துய்த்தல்.
கூப்பாடு _ ஒன்றைக் கூறும் வகையில் உரத்துக் குரல் எழுப்புதல்.
கூலிக்கு மாரடி _ பொறுப்புணர்ச்சியின்றி வேலை செய்.


கூலிப்பட்டாளம் _கிளர்ச்சியை அடக்கு முறை கொண்டு கட்டுப்படுத்த கூலியாட்களைப் பணம் கொடுத்து அமர்த்தும் வகை.
கூனு _ வளைந்த உடலமைப்பு.
கூஜா _ சிறு சேவைகள் செய்து அடங்கி நடப்பவன்.
 
Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 07, 2012, 10:42:27 PM
கெ


கெடுபிடி _கடுமையாக ஆணையிடுதல்.
கெட்டிமேளம் _ திருமணத்தில் தாலி , கங்கணம் முதலிய கட்டும் போது எல்லா வாத்தியமும் கூட்டாகக் கொட்டப்படும் மேளம்.
கெலித்தல் _போட்டியில் வெற்றியடைதல்.
Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 07, 2012, 10:47:45 PM
கே


கேடுகாலம் _ தீங்கு வரும் காலம்.
கேடுகெட்ட _ சிறப்பில்லாத.
கேட்பாரற்று _ கவனிப்பதற்கு ஆள் இன்றி.


கேலிக்கூத்து _பிறர் நகைக்குமாறு சிறுமையுடையது.
கேவலம் _ இழிவானது.
கேள்விக்குறி _ ஐயப்பாடு.

Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 07, 2012, 10:50:02 PM

கை


கைகண்ட _ சிறந்த : பலன் தரத்தக்க.
கைகழுவு _ ஒதுங்கிக் கொள் : கைவிடு.
கைகொடு _உதவி செய்.
கைக்குழந்தை _ சிறு குழந்தை.
கைக்குள் போடு _ ஒருவரைத் தன்வயமாக்கிக் கொள்.


கைக்கூலி _ தன்னுடைய நலனை எண்ணிப் பிறர் சொற்படி கேட்பவன்.
கைதூக்கிவிடு _ பிறரை உயர்த்தி விடு.
கைநாட்டு _ எழுதப் படிக்கத் தெரியாதவன்.
கைபிசகாக _ தவறுதலாக.
கையாலாகாத்தனம் _ செயல்பட இயலாமை.


கையும் களவுமாக _ திருட்டுத் தன்மை தெளிவாகத் தெரியுமாறு.
கையைக் கடிப்பது _ செலவு அதிகமாகி இழப்பு உண்டாவது.
கையைப் பிசைதல் _திகைத்த படி, செயல் எவ்வாறு செய்வது என்று கலங்குதல்.
கைராசி _ நன்மை தரும் பேறு.
கைவைத்தியம் _ மருத்துவர் உதவியின்றி வீட்டிலேயே செய்து கொள்ளும் மருத்துவம்.
Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 07, 2012, 10:52:32 PM

கொ


கொசுறு _ கடையில் பொருள் வாங்கியபின் இனாமாகக் கொள்ளும் சிறு பொருள்.
கொஞ்ச நஞ்சம் _ குறைந்த அளவு.
கொடுப்பனை _ நற்பேறு.
கொட்டு கொட்டு என்று _ அதிக மழை பெய்தலின் குறி : அயராமல் கண்விழித்தலின் செயல்.
கொட்டைபோடு _ யாவும் தெரிந்த தன்மை.


கொண்டவன் _ கணவன்.
கொதிப்பு _ கோபம்.
கொத்திக் கொண்டு போ _ கைபற்றிக் கொள்.
கொந்தளிப்பு _ மனத்துள் தோன்றும் குமுறல்.
கொலைப்பசி _ அகோரமான பசி.


கொல்லென்று _ சிரித்தல் வகை சாற்றுதல்.
கொள்ளையாக _ மிகுதியாக[/b]
Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 07, 2012, 10:55:28 PM
கோ


கோடங்கி _ உடுக்கையடித்துக் குறிசொல்பவன்.
கோடானுகோடி _ எண்ணிக்கையற்ற.
கோடாலிக்காம்பு _தன் இனத்தையே அழிப்பவன்.
கோட்டா _ கேலி: கிண்டல்.
கோட்டி _ பைத்தியம்.


கோட்டை கட்டு _ கற்பனையில் இரு.
கோட்டை விடு _ தவறவிடு.
கோணல் மாணல் _ ஒழுங்கற்றுத் தாறுமாறாக உள்ளது.
கோதா _ மல்யுத்தம் செய்தல்.
கோயில் பெருச்சாளி _ பிறர் சொத்தைச் சிறிது சிறிதாக அபகரிப்பவர்.


கோரப்பிடி _ வறுமைத்துன்பம்.
கோரமான _ அச்சம் தருகிற.
கோரம் _ சபை நடத்தத் தேவையான குறைந்த அளவு உறுப்பினர்கள்.
கோளாறு _ சீர்குலைவு : சிக்கல்.
கோள் மூட்டுதல் _ ஒருவரைப்பற்றித் தவறாகக் கூறுதல்.


கோஷம் _உரத்த குரலில் அனைவரும் சேர்ந்து எழுப்புதல்.
கோஷா _ இஸ்லாமிய மகளிர் உடலை மறைத்துக்கொள்ளும் ஆடை நிலை.
கோஷ்டி _ஒரு வகையாகப் பிரிந்து நிற்கும் கும்பல்.
கோஸ் _ முட்டைக்கோஸ்.
Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 07, 2012, 10:57:00 PM
கெள

கெளபீனம் _கோவணம்.
கெளளிசொல் _ பல்லி ஒலி எழுப்பும் வகை.
Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 07, 2012, 11:03:33 PM



சகட்டுமேனிக்கு _ ஒட்டு மொத்தமாக.
சகலபாடி _ மனைவியின் சகோதரி கணவன்.
சகவாசம் _ பழக்கம் : தொடர்பு.
சகஜம் _ பொது : இயல்பு.
சகாயம் _ உதவி.


சகிதம் _ துணை.
சக்களத்தி _ முதல் மனைவி இருக்கும் போது கணவன் திருமணம் செய்து கொண்ட மற்றொரு பெண்.
சங்கதி _ சம்பவம் : செயல்தன்மை.
சங்கடம் _ தயக்க நிலை.
சங்கல்பம் _ தீர்மானம் : மன உறுதிப்பாடு.


சங்கிரகம் _ சுருக்கமாக எழுதப்பட்டது.
சங்கேதம் _ ஒரு சிலருக்கு மட்டும் புரியுமாறு கூறும் இரகசியமான குறிப்புச் சொல்.
சங்கோசம் _ வெட்கம், கூச்சம்.
சச்சரவு _ தகராறு.
சஞ்சாரம் _ நடமாட்டம்.


சஞ்சிகை _ வார, மாத இதழ்.
சடாரென்று _ வேகமாக.
சடுகுடு _ கபடி விளையாட்டு.
சட்டென்று _ விரைவாக.
சட்னி _ சிற்றுண்டிக்குரிய தொடுகறி.


சதக்கென்று _ வேகமாகப் பதியுமாறு.
சதா _ எப்போதும்.
சந்தடி _ நடமாட்டம் : இரைச்சல்.
சந்தா _ உறுப்பினர் பதிவுக்குச் செலுத்தும் தொகை.
சந்தேகம் _ ஐயப்பாடு.


சந்தோஷம் _ மகிழ்ச்சி.
சபலம் _ சிறுமையுடைய ஆசை.
சபாஷ் _ பாராட்டுச் சொல்.
சப்புக் கொட்டு _ தின்பண்ட ருசி.
சப்பைக்கட்டு _குற்றத்தை மறைத்து வலிந்து பாராட்டிப் பண்புரைத்தல்.


சமத்காரம் _ சாதுரியம்.
சமய சஞ்சிவி _ தக்க தருணத்தில் உதவுபவன்.
சமயோசிதம் _ இடத்திற்குப் பொருத்தமாக.
சமாளி _ ஈடுகொடு : துணிந்து செயல்படு.
சமேதராக _ ஒன்று கூடி இணைந்து.


சமோசா _ தின் பண்ட வகை.
சம்சயம் _ சந்தேகம் : ஐயம்.
சம்பிரதாயம் _ நடைமுறை : வழக்கமான சொல்.
சம்போகம் _ உடலுறவு.
சம்மன் _ குறிப்பிட்ட நாளில் வருமாறு கூறும் உத்தரவு.


சரசம் _ காமக் கிளர்ச்சி.
சரடு விடுதல் _ பொய் : புனைந்துரை.
சரமாரியாக _ அடுக்கடுக்காக.
சரேலென்று _ வேகமாக : விரைந்து.
சர்வர் _ உணவு விடுதியில் உணவு பரிமாறுபவர்.


சர்வே _ நில அளவை.
சலசலக்க, சலசலப்பு _ ஒலி எழுதல்.
சலாம் _ வணக்க முறை.
சலூன் _ முடிதிருத்தகம்.
சல்லடை போட்டுத் தேடு _ துருவித் தேடு.


சல்லா _ மிக மெல்லிய.
சவக்களை _ பொலிவிழந்த தோற்றம்.
சவடால் _ ஆரவாரப் பேச்சு.
சவால் _ அறைகூவல்.
சளசள என்று _ ஓயாத பேச்சு.


சள்ளை _ தொல்லை.
சஷ்டி _ அமாவாசைக்குப் பின் ஆறாவது நாள்
Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 07, 2012, 11:07:31 PM
சா

சாகசம் _ வீர தீரச் செயல்.
சாகபட்சிணி _ தாவரங்களை உண்ணும் உயிரினம்.
சாக்குப் போக்கு _ வலிமையில்லாத காரணம்.
சாங்கோபாங்கமாக _ மிக விரிவாக.
சாசுவாதம் _ நிலையானது.


சாடை மாடையாக _ மறைமுகமாக.
சாட்சாத் _ ஆதாரபூர்வமாக.
சாமானியம் _ சாதாரணம்.
சாயபு _ இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவரைக் குறிப்பிடும் சொல்.
சாயம் வெளுத்தது _ கூறிய பொய் முதலான செயல்கள் தெரிந்து உண்மை அறியப்பட்டது.

சால்ஜாப்பு _ பாசாங்கு.
சாவுகிராக்கி _ எரிச்சலைத் தூண்டும் நபர்.
சாவு மணி _ தீயவை அழிதலைக் குறிப்பது.
சாஷ்டாங்க நமஸ்காரம் _ தரையில் எட்டு அங்கம் பதியுமாறு வணங்குதல்
Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 07, 2012, 11:17:50 PM
சி


சிகிச்சை _உடல் நோய் தீர்க்கும் மருத்துவ முறை.
சிக்கி முக்கிக் கல் _ நெருப்பை உண்டாக்கக் கூடிய கல் வகை.
சிங்கப் பல் _மேல் வரிசையில் கோரைப் பல்லுக்குச் சற்று முன் நீண்டு முளைத்திருக்கும் பல்.
சிங்கினாதம் _ முசுடு பண்ணுதல்.
சிடுசிடுப்பு _ எரிச்சல் கலந்த சினம்.


சிணுங்குதல் _மெல்லிய அழுகை.
சிண்டு முடி _ ஒருவரைப் பற்றி மற்றொருவரிடம் குற்றம் சொல்லிச் சண்டை மூட்டி விடு.
சிதம்பர ரகசியம் _ அளவுக்கதிகமாகப் பாதுகாக்கப்படும் இரகசியம்.
சிதிலம் _சிதைவு : இடிந்த நிலை.
சித்தாள் _ கூலி வேலை செய்யும் நபர்.

சிபாரிசு _ பரிந்துரை.
சிம்ம சொப்பனம் _நடுங்க வைப்பது.
சிரத்தை _ முழு மனதோடு.
சிரமம் _தொந்தரவு.
சிரேஷ்டம் _ சிறப்புடையது.


சிலாக்கியம் _ நல்லது : மேன்மை உடையது.
சில்மிஷம் _ குறும்பு.
சிறுக்கி _ கீழ்த்தரமானவள்.
சிறு பிள்ளைத்தனம் _ பொறுப்பில்லாத நிலை.
சின்னப் புத்தி _ குறுகிய மனப்பான்மை.


சின்ன வீடு _மனைவி இருக்கும் போது வேறு ஒருத்தியோடு தனியாக நடத்தும் குடும்பம்.
சிஷ்ய கோடி _ மாணவர் குழாம்.

Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 07, 2012, 11:22:21 PM

சீ

சீக்காளி _நோயாளி.
சீக்கிரம் _ விரைவில்.
சீக்கு _ நோய்.
சீட்டுக்கிழி _ வேலையை விட்டு நீக்கு.
சீண்டுதல் _ வெறுப்பு உண்டாக்குதல்.


சீமை _ மேலை நாடு : அயல் நாடு.
சீமையெண்ணெய் _ மண்ணெண்ணெய்.
சீலைப் பேன் _ ஆடைகளில் தொற்றும் பேன்.
சீனி _ சருக்கரை
.
Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 07, 2012, 11:26:53 PM
சு


சுக்கு நூறாக _ சிறு சிறு துண்டுகளாக.
சுதாரி _ சாமர்த்தியமாச் சமாளி.
சும்மா _ கருத்து ஏதும் இன்மை.
சுயபுராணம் _ தன்னைப் பற்றிய பேச்சு.
சுயரூபம் _ உண்மையான இயல்பு : தன்மை.


சுயார்ஜிதம் _ சுய சம்பாத்தியம்.
சுரண்டல் _ பிறர் செல்வம் உழைப்பு முதலியவற்றைத் தன்னுடைய நலத்துக்காகப் பயன் படுத்தல்.
சுரணை _ புலனுணர்வு.
சுவிசேஷம் _ நற்செய்தி.
சுளுக்கு _ தசை நார் பிறழ்தல்.


சுளையாக _ கணிசமாக.
சுறுசுறு என்று _ விரைவாக : பரபரப்பாக.
சுற்றிப்போடு _ மிளகாய், மண், உப்பு முதலியவற்றைக் கொண்டு திருஷ்டிக்கழி
Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 07, 2012, 11:28:43 PM


சூ


சூடுசுரணை _ எதிர்த்துச் செயல்படவேண்டும் என்கிற உணர்வு.
சூடு பிடிப்பது _ தீவிரமாகச் செயற்படுதல்.
சூட்டிகை _ அறிவுக் கூர்மை.
சூட்டோடு சூடாக _ ஒரு செயலை நடத்திய நிலையில் தொடர்ந்து மேவுதல்.
சூத்திரதாரி _ பின்னால் இருந்து இயக்குபவன்.


சூரப்புலி _ துணிச்சல் உள்ளவர்.
சூனா வயிறு _ பெருத்த வயிறு.
சூனியக்காரி _ சூனிய வித்தை செய்பவள்.
சூனியம் _ வெறுமை : பில்லி சூனியம் : ஞான சூனியம் : அறிவற்றவன்.
Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 07, 2012, 11:30:57 PM
செ

செஞ்சோற்றுக் கடன் _ நன்றி மறவாமை.
செத்துப் பிழைத்தல் _ ஆபத்திலிருந்து மீளுதல்.
செப்படிவித்தை _ ஒரு பொருளைத் தோன்றவும் மறையவும் செய்யும் தந்திர வித்தை.
செமத்தியாக _ மிகவும் பலமாக.
செலவு வை _ செலவழிக்கச் செய்.


செல்லம் _ குழந்தைகளிடம் காட்டும் அன்பு மிகுதி.
செல்லரித்துப்போன _ மதிப்பிழந்த : சீர் கெட்ட.
செல்லாக் காசு _ பயனற்றது : மதிப்பிழந்தது.
செல்வாக்கு _ மதிப்பு : பெருமை.
செவ்வாய் தோஷம் _ ஜாதகருக்கு லக்கினத்திலிருந்து 7 அல்லது 8 முதலான இடத்தில் செவ்வாய் இருப்பதால் கூறப்படும் குறை


Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 07, 2012, 11:32:24 PM
சே

சேட்டை _ குறும்பு.
சேர்ந்தாற் போல் _ தொடர்ச்சியாக : கும்பலாக.
சேவார்த்தி _ கோவிலில் இறைவனை வழிபட வரும் பக்தர்கள்.
Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 07, 2012, 11:33:45 PM
சை

சைத்தான் _ கடவுளின் எதிரியாகவும் தீய சக்தியாகவும் கருதப்படும் ஆவி.
சைவப் பழம் _ சிவ பக்தியால் திளைத்து உடம்பெங்கும் விபூதி தரித்த தோற்றப் பொலிவு.
சைனியம் _ போர்ப்படை சார்ந்தவர் குழுமம்.
Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 07, 2012, 11:39:25 PM
சொ

சொகுசு _ வசதி நிரம்பியது.
சொக்குப் பொடி _ மயங்கச் செய்தல்.
சொச்சம் _ கொஞ்சம் அதிகம் : மீதி : பாக்கி.
சொட்டைச் சொள்ளை _ அடுத்தவர் மீது காணும் குற்றம் குறை.
சொர்க்க போகம் _ வசதியும் சுகமும்.


சொல்லிக்கொடுத்தல் _ அறிவுரை கூறுதல் : பிறரை தூண்டி விட்டுக் கலகத்தை ஏற்படுத்துதல் : வியாபாரத்தில் விலையைச் சொல்லிக் குறைத்துக் கொடுத்தல்.
சொல்லிக் கொள்ள _ பெருமை என்று கருத.
சொள்ளு _ எச்சில் : உமிழ் நீர்.
சொஸ்தமாக்கு _ நோயைக் குணமாக்கு.

Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 07, 2012, 11:40:37 PM
சோ

சோதா _ உடல் வலிமையில்லாதவன்: வேலை செய்யாதவன்.
சோபன அறை _ படுக்கையறை : அலங்கார அறை.
சோப்பளாங்கி _ திறமையில்லாதவன் : பயனில்லாதவன்.
சோளக் கொல்லை பொம்மை _ தினைப் புனத்தில் துணியால் சுற்றப்பட்ட ஒரு வகை வடிவம்.
சோனி _ மெலிந்தவன் : வலுவற்றவன்.
Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 07, 2012, 11:41:43 PM
செள


செளஜன்னியம் _ சுமுகம் : இனிய குணம்.

Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 07, 2012, 11:43:43 PM


டபாய் _ ஏமாற்று.
டப்பாங்குத்து _ தாளத்துக்கேற்ப குதித்தாடும் ஆட்டம்.
டமாரம் _ பேரொலி உண்டாக்கும் வாத்தியம்.
டம்பம் _ ஆடம்பரம் : வெளிப்பகட்டு.
டவாலி _ மாவட்ட ஆட்சியர் : நீதிபதி முதலியோரின் ஊழியர் தன் தோள் பட்டையிலிருந்து குறுக்காக அணியும் பித்தளை வில்லையுடைய சிவப்புப் பட்டை
.
Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 07, 2012, 11:44:27 PM
டா


டாம்பீகம் _ ஆடம்பரம் : பகட்டு.

Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 07, 2012, 11:45:32 PM
டி

டிமிக்கி _கண்ணில் படாது நழுவுதல்.
Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 07, 2012, 11:46:28 PM

டூ

டூப்பு _ நம்ப முடியாத பேச்சு.
டூ விடுதல் _ நட்பு முறித்தல்.
Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 07, 2012, 11:47:19 PM
டே

டேரா போடுதல் _ நீண்ட காலம் தங்குதல்.
Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 07, 2012, 11:48:32 PM
டோ


டோஸ் _ பிறரை வசை கூறி ஏசுதல்
Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 07, 2012, 11:49:42 PM




தகதக என்று _ அடுப்புத் தீ எரிதலைக் குறித்தது.
தகாத _ முறையற்ற.
தகிடு தத்தம் _ தவறான வழி முறையைப் பின்பற்றுதல்.
தங்கக் கம்பி _ மிகவும் நல்லவன்.
தங்கமான _ மாசுமறுவற்ற.


தங்கு தடை _ தடுமாற்றம்.
தடபுடல் _ மிகுந்த ஆடம்பரம்.
தடம் புளுதல் _ பாதை மாறுதல்.
தடியன் _ பயனற்றவன்.
தடுமாற்றம் _ நிலை தவறுதல்.


தட்டிக்கழி _ காரணம் ஏதேனும் காட்டி ஒதுக்கு.
தட்டிக்கொடு _ ஊக்கப்படுத்து.
தட்டிச் செல் _ வெற்றி பெற்றுப் பெருமை கொள்.
தட்டிச் சொல் _ மறுத்துக் கூறு.
தட்டிப் பறி _ கவர்ந்து கொள்.


தட்டுத் தடுமாறுதல் _ இயல்பாகச் செய்ய முடியாமல் வருத்தம் கொள்ளல்.
தட்டுப் படுதல் _ புலனுக்குத் தெரிதல்.
தட்டுப்பாடு _ போதிய அளவு பொருள் கிடைக்காது பற்றாக் குறை யுண்டாதல்.
தண்ணீர் காட்டு_ அலைக்கழித்து ஏமாற்று.
தண்ணீர் தெளித்து _ விடு: ஒருவரை அவர் விருப்பம் போல் நடக்குமாறு விட்டுவிடு.


தப்புக் கணக்குப் போடு _ உண்மைக்கு மாறாக மதிப்பிடு.
தப்புத் தண்டா _ முறையற்ற செயல்.
தமாஷ் _ நகைச்சுவை பேசுதல்.
தம்பட்டம் அடி _ பலர் அறியுமாறு கூறு.
தயார் _ உடனடியான நிலை உருவாதல்.


தர்ம அடி _ குற்றம் புரிந்தவர் பலரால் படும் அடி உதை.
தலைக்கனம் _ செருக்கு.
தலை காட்டு _ தோன்று : வெளிப்படு.
தலைக் குனிவு _ அவமானம்.
தலை தீபாவளி _ திருமணமான பின் கொண்டாடும் முதல் தீபாவளி.



தலை தூக்கு _ மேல் நிலைக்கு எழுதல்.
தலை தெறிக்க _ வேகமாக.
தலை நிமிர்தல் _ பெருமை கொள்ளுதல்.
தலைப்படு _ முற்படு.
தலைமறைவு _ பதுங்கியிருத்தல்.


தலை மாடு _ படுக்கை நிலையில் தலையிருக்கும் பக்கம்.
தலையணை மந்திரம் _ மனைவி கணவனுக்குப் படுக்கையறையில் பேசும் பேச்சு.
தலையாட்டிப் பொம்மை _ சுய சிந்தனையின்றிப் பிறர் சொல்வதற்கெல்லாம் சரி என்று கூறுபவன்.
தலையை வாங்கு _ தொந்தரவு செய்.
தவக்கம் _ தாமதம்.



தவசிப்பிள்ளை _ சமையல் செய்பவர்.
தவிடு பொடியாக்கு _ ஒன்று மில்லாமல் செய்.
தழுதழுத்த _ உணர்ச்சியால் துக்கம் மேலிட்டு உச்சரிக்கும் குரல் குழைவது.
தள்ளாத காலம் _ முதுமையுடைய பருவம்.
தள்ளாமை _ முதுமையின் தளர்ச்சி.


தள்ளிப் போடு _செயலைப் பின்னர் செய்யலாம் என்று ஒத்திப் போடு.
தள்ளுபடி _ விற்பனை விலையை விடக் குறைவாக விற்றல்.
தறுவாய் _ தருணம் : சமயம்.
தனிக்குடித்தனம் _ திருமணத்திற்குப் பின் கணவனும் மனைவியும் தனி வீட்டில் நடத்தும் குடும்பம்.
தன்னந்தனியாக _ தான் ஒருவன் மட்டும் : திருமணம் செய்து கொள்ளாத தன்மை.


தஸ்தாவேஜு _ ஆணவம் : பத்திரம் முதலியன.
Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 07, 2012, 11:52:09 PM

தா


தாகசாந்தி _ இளநீர் : மோர் பானங்கள்.
தாக்கல் செய் _ ஒப்படை : பதிவு செய்.
தாக்கீது _ நீதிமன்ற உத்தரவு.
தாக்குப் பிடி _ பொறுமையோடு ஈடு கொடுத்துச் சமாளி.
தாசில் பண்ணு _ அதிகாரம் செலுத்து.


தாட்சண்யம் _ மனிதாபிமானம்.
தாட்டு பூட்டு என்று _ அதிகாரம் காட்டும் வகையில் உரக்க கத்துதல்.
தாத்பரியம் _ கொள்கை : பொருள்.
தாம்பத்தியம் _ குடும்ப வாழ்க்கை.
தாம்பாளம் _ பெரிய தட்டு.



தாம்பூலம் மாற்று _ திருமணம் நிச்சயம் செய்.
தாயத்து _ மந்திரித்த தகட்டை அடைத்துத் தரும் உலோகக் குப்பி.
தாயம் விழவில்லை _ கைகூட வில்லை.
தாய்ப்பத்திரம் _ சொத்துரிமை குறித்த முதல் பத்திரம்.
தாய் மாமன் _ தாயின் சகோதரர்.


தாரக மந்திரம் _ உயிர் மூச்சாகக் கொள்வது.
தாரதம்மியம் _ஏற்றத்தாழ்வு.
தாராளமாக _மிகையாக : அதிகமாக.
தாரைவார் _கைவிட்டுப் போக விடு.
தாலியறுத்தல் _விதவையாதல் : கைம் பெண்ணாதல்.


தாவா _ பிரச்சினை : வழக்கு : தகராறு.
தாளம் போடு _ பிறர்க்கு ஒத்துப் போ : துன்பப் படு.
தாறுமாறாக _ஒழுங்கற்ற நிலையில்.
தான் தோன்றித்தனம் _ கட்டுப் பாடின்றி தன்னிச்சையாக : ஒழுங்கு முறையில்லாது.
தாஜா பண்ணுதல் _ ஒருவரை மகிழ்வித்தல்.
Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 07, 2012, 11:54:55 PM
தி

திகுதிகு என்று _ கடுமையான வலியோடு வருந்தும் குறிப்பு.
திக்கித் திணறு _ திக்கு முக்காடு : சிக்கலில் தவி.
திக்பிரமை _ திகைப்பு : சுய உணர்வில்லாமை.
திடீர் என்று _ எதிர் பாராத : முன்னறிவிப்பின்றி .
திடுக்கிடு _ அதிர்ச்சி யுண்டாதல்.


திடுதிடு என்று, திடுதிப் என்று _ வேகமாக : எதிர் பாராது.
திட்ட வட்டம் _ உறுதியான : தெளிவான.
திட்டி வாசல் _ கோயில் வெளிக் கதவினுள் பொருத்தப்படும் சிறு கதவு.
திட்டு _ மனத்தைப் புண்படுத்தும் வசைப் பேச்சு.
திமிலோகப் படுதல் _ பரபரப்பு அடைதல்.


திமுதிமு என்று _ கூட்டமாகச் சேர்ந்து ஓசையுடன் ஓடும் தன்மை.
திராணி _ வலிமை : ஆற்றல்.
திராபை _ மதிப்பற்றது : இழிந்தது.
திரிசமன் _ கையாடுதல் : தகாத செயல்.
திருக்கண்ணமுது _ பாயசம்.



திருகு தாளம் _ புரட்டுச் செயல் : மாறுபட்ட பேச்சு.
திரு திரு என்று _ அச்சத்தை வெளிப்படுத்தும் தன்மையில் விழித்தல்.
திருப்பு முனை _ வாழ்க்கையின் பாதையை மாற்றும் கட்டம்.
திருமேனி _ கோவில்களில் உள்ள கடவுள் சிலை.
திருவாய் மலர்தல் _ ஞானிகள் உபதேசித்தல்.


திருஷ்டி பரிகாரம் _ ஒன்றின் சிறப்பினைக் குறைக்குமாறு செய்யும் குறைபாடு.
திரேகம் _ உடல்.
தில்லு முல்லு _ முறையற்ற வழி முறை.
திவால் _ தொழிலில் இழப்புண்டாகி அழிவு கொள்வதால் காணப் பெறும் ஏழ்மை நிலை.
Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 07, 2012, 11:55:56 PM
து


துக்கடா _ சிறியது : முக்கியமில்லாதது.
துக்கிரி _ விரும்பத் தகாதது : அமங்கலத் தன்மை.
துச்சம் _ அற்பப் பொருள் : பொருட் படுத்தாமை.
துடிதுடிப்பு _ துன்பத்தின் மிகுதி.
துடியான _ சுறுசுறுப்பான.


துடுக்கு _ குறும்புத்தனம்.
துணிகரம் _ பாவச் செயலை அச்சமின்றி செய்தல்.
துணுக்குறுதல் _மன நடுக்கம் : அடைதல்.
துணை போதல் _ பாவச் செயலுக்கு உதவுதல்.
துண்டு விழுதல் _ பணப் பற்றாக் குறை.


துதி பாடுதல் _ புகழ்ந்து பேசுதல்.
துப்பட்டி _ சால்வை.
துப்புக் கெட்டு _ திறமையில்லாது.
துருதிர்ஷ்டம் _ நற்பேறின்மை.
துரு துரு என்று _ சுறு சுறுப்பு.


துருப்புச் சீட்டு _ ஒருவரை வயப் படுத்த அவர்க்கு பிரியமானதைத் தன்பால் கைக் கொண்டு செயல் மேற் கொள்ளுதல்.
துர்லபம் _ அரிது : கடினம்.
துல்லியம் _ மிகச் சரியானது.
துவம்சம் _ நாசம் : அழிவு.
துவேஷம் _ பகை : வெறுப்பு.


துஷ்டன் _ தீய செய்பவன்.
துஷ்பிரயோகம் _ அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல்
Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 07, 2012, 11:56:58 PM
தூ

தூக்கிக்கொடு _தயங்காமல் கொடு.
தூக்கிச் சாப்பிட்டது _எல்லாவற்றையும் விட மிக அதிகமான செலவாகியது.
தூக்கி நிறுத்து _ தளர்விலிருந்து ஒருவரை மேலேற்றி வாழச்செய்.
தூக்கியெறிந்து பேசு _ மதிப்பின்றி பேசு.
தூக்கி வாரிப் போடுதல் _ அதிர்ச்சியடைதல்.


தூக்குக் கயிறு _ துன்பம் உடையது.
தூங்கி வழிதல் _ சுறுசுறுப்பின்றி மந்தமாதல்.
தூபம் போடுதல் _ஒருவர் கோள் சொல்ல ஏனோர் உடன் பேசுதல்.
தூரதிருஷ்டி _ எதிர் கால நிலையை அறிதல்.
தூற்று _ அவதூறு செய்.


தூஷணம் _வகைச்சொல் : அவ மதிப்பு.
தூஷித்தல் _ பழித்தல்.
Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 07, 2012, 11:57:56 PM
தெ

தெற்கத்திய _ தென் பகுதி சார்ந்த.
தெனாவட்டு _ அடக்க மின்மை.
தென்படுதல் _ கண்ணுக்குப் புலப்படுதல்.
தென்னம் பிள்ள_ தென்னங் கன்று.
Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 07, 2012, 11:59:19 PM
தே


தேசாந்திரம் _ பல இடங்களுக்கும் விருப்பப்படி செல்லுதல்.
தேசாபிமானம் _ நாட்டுப்பற்று.
தேசிக்காய் _ எலுமிச்சை.
தேசியமயமாக்கு _ அரசுடமையாக்கு.
தேவ ஆவி _ பரிசுத்த ஆவி.


தேவகுமாரன் _ இயேசு.
தேவலாம் _ தேவலை : ஏற்கத் தகுந்தது.
தேன் மெழுகு _ தேனடையிலிருந்து எடுக்கப்படும் மஞ்சள் நிறமெழுகு.
தேனிரும்பு _கலப்பில்லாத மிக உறுதியான இரும்பு.
தேஜஸ் _ ஒளி : முகத்தில் தோன்றும் பிரகாசம்.
Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 08, 2012, 12:00:08 AM
தொ

தொங்கட்டான் _ காதணி.
தொடர்கதை _ தொடர்ச்சியாக நிகழும் செயல்.
தொடை தட்டுதல் _ பரபரப்புடன் செயல் புரிய ஆயத்தமாதல்.
தொடை நடுங்கி _ அச்சம் உடையவன் : பயந்து நடுங்குபவன்.
தொட்டால் சிணுங்கி _ எடுத்ததற்கெல்லாம் அழத் தொடங்கும் தன்மை.


தொட்டுக் கொள்ள _ இட்லி முதலிய சிற்றுண்டிக்குப் பக்க உணவாகவுள்ள சட்னி முதலாவன.
தொண தொண என்று _ எரிச்சல் தருமாறு திரும்பத் திரும்பப் பேசுதல்.
தொத்திக் கொள்ளுதல் _ வாய்ப்பு நேரும் போது சரியாகப் பற்றிக் கொள்ளுதல்.
தொப்பைத் தள்ளுதல் _ வயிறு பருத்து முன் பக்கம் சாய்தல்.
தொம்பக் கூத்தாடி _ கழைக் கூத்தாடுபவன்.


தொம்பை _ மூங்கிலால் செய்யப்பட்ட குதிர் போன்ற கூடை.
தொழில் காய்ச்சல் _ ஒருவனது தொழில், மேன்மை கண்டு மற்றொருவன் கொள்ளும் பொறாமை.
தொள தொள என்று _ உடலுக்குச் சற்றுப் பெரிதாக உள்ள சட்டையைக் குறிப்பது
Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 08, 2012, 11:38:57 PM
தோ

தோட்டி வேலை _ கோள் சொல்லுதல்.
தோது _ வசதி : பொருத்தம் வாய்த்தப்படி.
தோரணை _ வகிக்கும் பதிவிக் கேற்றப்படி நடக்கும் பாவனை.
தோஷம் _ தவிர்க்க முடியாத குறை.
Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 08, 2012, 11:41:14 PM


நக்கீரத்தனம் _ யாவரையும் குற்றம் சொல்லும் தன்மை.
நச்சரித்தல் _ தொந்தரவு செய்தல்.
நச்சு நச்சு என்று _ விடாமல் தொடர்ந்து.
நடமாட்டம் _ இயக்கம்.
நடைப்பிணம் _ சுறுசுறுப்பில்லாதவர் : மகிழ்ச்சியற்றவர்.


நடைபோடு _ வெற்றியோடு முன்னேறும் தன்மை.
நடையைக் கட்டு _ இடத்தை விட்டு நீங்கு.
நட்டாற்றில் கைவிடு _ இக் கட்டான நிலையில் வெளியேற்றி ஒருவனைப் புறக்கணித்தல்.
நப்பாசை _ பயனற்ற எதிர்பார்ப்பு.
நமுட்டுச் சிரிப்பு _ போலிச்சிரிப்பு.


நயினா _ தந்தை.
நஷ்டம் _ இழப்பு.
Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 08, 2012, 11:42:31 PM
நா

நாட்டுக்கட்டை _ உடல் வாகான கிராமத்தான்.
நாராசம் _காதுக்கு இனிமையில்லாத சொல் : அருவருப்புடைய சிறிய சந்து.
நாஷ்டா _ காலைச் சிற்றுண்டி.
Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 08, 2012, 11:44:07 PM
நி



நிதர்சனம் _ வெளிப்படையானது.
நிப்பாட்டு _ நிறுத்தி விடு.
நிர்த்தாட்சண்யம் _ இரக்க மற்ற தன்மை.
நிர்ப்பந்தி _ கட்டாயப் படுத்து.
நிர்மூலம் _ அழிவு.


நிறைகுடம் _ அடக்கமானவர்.
நிறை மாதம் _ கர்ப்பவதியின் பிரசவம் சம்பவிக்கும் பத்தாம் மாதம்.
நிஜம் _ உண்மை.
நிஜார் _ கால் சட்டை.
நிஷ்களங்கம் _களங்கமற்றது.


நிஷ்காமியம் _ ஆசையற்ற தன்மை : தன்னலம் கருதாமை.
நிஷ்டூரம் _ கொடுமை.
நிஷ்டை _ தியானம்.
Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 08, 2012, 11:45:25 PM
நெ

நெஞ்சழுத்தம் _ மன இறுக்கம்.
நெட்டுருப்பண்ணு _ மனப் பாடம் செய்.
நெடுஞ்சாண் கிடையாக _ உடம்பு முழுதும் தரையில் படும்படியாக.
நெத்தியடி _ செயல் இழக்கச் செய்யும் தாக்குதல் : பிறரை அவமானம் செய்தல்.
நெளிவு சுளிவு _ வியாபார தந்திரம்.
Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 08, 2012, 11:47:31 PM
நை


நையாண்டி _பிறர் குறையை நகைச்சுவையாக உரைத்தல்.
நையாண்டி மேளம் _ காவடி, கரகம் முதலியவற்றுக்குப் பொருத்துமாறு அடிக்கும் மேள வகை.
நைஸ் பண்ணுதல் _ ஒருவரை மகிழப் பண்ணுதல்.
Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 08, 2012, 11:48:23 PM
நொ


நொடித்துப் போதல் _ சீர் குலைதல்.
நொண்டிச் சாக்கு _ பொருத்த மற்ற காரணம்.
நொந்து கொள்ளுதல் _ குறை பட்டுக் கொள்ளுதல்.
நொறுக்கித் தள்ளு _ சிறப்பாகச் செய்.
நொறுக்குத் தீனி _அவ்வப்போது தின் பண்டம் தின்னுதல்.

Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 08, 2012, 11:49:28 PM


பகடைக்காய் _ இருதிறத்தாரின் போராட்டத்தில் இடை நின்று தவிக்கும் ஒருவர்.
பகரமாக _ பார்ப்பதற்கு கம்பீரமாக.
பகல் கனவு _ நிறைவேறும் வாய்ப்பு இல்லாதது.
பகல் வேஷம் _ நல்லவர் போன்று நடித்தல்.
பகல் கொள்ளை _ அநியாயமாக விலையேற்றி விற்பனை செய்தல்.


பகாளாபாத் _ தயிர் கலந்த உணவு வகை.
பகிரங்கம் _ வெளிப்படை.
பகிஷ்கரி _ புறக்கணித்தல் : ஒதுக்குதல்.
பகிஷ்காரம் _ புறக்கணிப்பு.
பகீர் எனல் _ மனத்துள் அச்சம் படர்தல்.


பகீரதப் பிரயத்தனம் _ கடும் முயற்சி.
பக்க பலம் _ வலுவான ஆதரவு : பெருந்துணை.
பக்கவாத்தியம் _ துணையாக வரும் இசைக் கருவிகள் : ஒருவன் கோள் சொல்ல உடன் இருப்பவர்கள் அதையொட்டிப் பேசுதல்.
பக்கா _ சரியான.
பக்கிரி _ பரதேசி : வறியவன்.



பங்காளிக் காய்ச்சல் _ போட்டியும் பொறாமையும்.
பசை _ பண வசதி.
பச்சாதாபம் _ இரக்கம் , பரிவு.
பச்சையாக _ வெளிப்படையாக.
பச்சைக் கொடி _ அனுமதி.



பஞ்சப் பாட்டு _ இல்லாமையைப் பற்றிப் புலம்புதல் : வசதி குறைவு குறித்து வருந்துதல்.
பஞ்சப்படி _ அகவிலைப்படி.
படபடப்பு _ மனக்கிலேசம் : சஞ்சலம்.
படம் காட்டு _ பெரிது படுத்திக் கூறு.
படம் பிடித்துக் காட்டு _ உண்மையைத் தெளிவாகக் கூறு.



படவா _ வகைச்சொல் : அன்புடன் அழைக்கும் கொச்சை மொழி.
படாடோபம் _ ஆடம்பரம் : பகட்டு.
படிப்படியாக _ சிறிது சிறிதாக.
படிப்பினை _ உலக அனுபவ ஞானம்.
படியளத்தல் _ சோற்றுக்கு வழி செய்தல்.


படுத்து விட்டது _ தொழில் மந்தம் ஆதல்.
படைப்பாளி _ கதாசிரியர்.
பட்சபாதம் _ வேண்டியவர் வேண்டாதவர் என்னும் கருத்து.
பட்சி _ பறவை.
பட்டணப் பிரவேசம் _ மடாதிபதி,குரு பூசை முடிந்ததும் நகரை வலம் வருதல்.



பட்டர் _ திருமால் கோயிலில் பூசை செய்பவர்.
பட்டாதாரர் _ நிலவுரிமையாளர்.
பட்டாபிஷேகம் _ முடிசூட்டு விழா.
பட்டாமணியம் _ கிராம அதிகாரி.
பட்டி _ திருட்டு ஆடு, மாடுகளை அடைத்து வைக்கும் கூடம் : வெற்றிலைப் பாக்கு கட்டி வைக்கப்பட்ட சுருள்.



பட்டிக்காடு _ வசதியற்ற சிறு கிராமம்.
பட்டி தொட்டி _ சிறு கிராமமும் அதனையொட்டிய பகுதியும்.
பட்டும் படாமலும் _ முழுமையாக ஈடுபடாத.
பட்டு வாடா _ விநியோகம்.
பட்டை சாதம் _ நைவேத்தியமாகப் படைக்கப்பட்டுப் பின்னர் வழங்கப்படும் சோறு.


பட்டை நாமம் _ ஏமாற்றும் தன்மை.
பதம் பார்த்தல் _ சோதித்துப் பார்த்தல்.
பதார்த்தம் _ சமைத்த காய்கறிகள்.
பதிலடி _ எதிர் நடவடிக்கை.
பதுக்கல் _ சட்ட விரோதமாக மறைத்து வைத்தல்.


பதைபதைத்தல் _ மிகவும் வருந்துதல்.
பத்தாம் பசலி _ பழமையானவர் : காலத்திற்குப் பொருந்தாத பழைமைவாதி.
பத்திரப்படுத்து _ பாதுகாப்பு செய்.
பத்திரமாயிரு _ பாதுகாப்பாய் இரு.
பத்ரகாளி _ சண்டைக்காரி.


பப்பளம் _ உப்பி எழக்கூடிய அப்பள வகை.
பம்மாத்து _ பொய்ச் செயல் : நடிப்பு.
பம்மு _ பதுங்கு : ஒளிந்து கொள்.
பயங்கரம் _ அச்சந்தருவது.
பயங்கரவாதி _ கொடூரமான செயல்களைப் புரிபவன்.


பயபக்தி _ பணிவும் அன்பும் கலந்த பண்பு.
பயமுறுத்து _ அச்சுறுத்து.
பயல் _ சிறுவனை அழைக்கும் சொல்.
பயில்வான் _ மல்யுத்தம் புரிபவன்.
பரபரக்க _ அவசரமாக.


பரபர என்று _ வேகமாக.
பரபரப்பு _ அமைதியின்மை.
பரமாச்சாரியார் _ ஆன் மீக குரு.
பரவசம் _ பெரு மகிழ்ச்சியால் உண்டாகும் இன்ப உணர்வு.
பரவலாக்கு _ பல இடங்களிலும் இருக்கச் செய்.



பரவாயில்லை _ பொருட்படுத்த வேண்டாம்.
பராக் _ கவனத்தை ஈர்க்கும் சொல்.
பராக்கிரமம் _ ஆற்றல், வலிமை.
பராக்குப் பார் _ வேடிக்கைப் பார்.
பராமரி _ பேணிக் காப்பாற்று.


பராமரிப்பு _ கவனிப்பு : பேணுதல்.
பராரி _ வறியவன்.
பரிகாசம் _ ஏளனம் : கேலி.
பரிகாரம் _ தீர்வு.
பரிச்சயம் _ பழக்கம் : அறிமுகம்.


பரிசம் _ மண மகளுக்கு மணமகன் வீட்டார் தரும் தொகை : ஒருவர் உடல் மீது மற்றொருவர் கை முதலானவை படுதல்.
பரிசாரகன் _ சமையல் காரன்.
பரிசீலனை _ ஆய்வு : சீர் தூக்கி ஆராய்தல்.
பரீட்சார்த்தம் _ சோதனை முயற்சி.
பரிதவிப்பு _ மனவுளைப்பு.



பரிபாலனம் _ நிர்வாகம்.
பரிமாறு _ உணவு படைத்தல்.
பரிவாரம் _ உடன் வரும் ஆதரவாளர்கள்.
பருப்பு வேகாது _ ஏமாற்ற முடியாது : தந்திரம் பலிக்காது.
பரோபகாரி _ தாராளமாக உதவி செய்பவர்.


பர்தா _ உடலையும், முகத்தையும் மறைக்கும் ஆடை வகை.
பலவந்தம் _ வலுக்கட்டாயம்.
பலாபலன் _ நன்மை ,தீமை.
பலிகடா _ ஒருவனைத் தப்புவிக்கப் பிறிதொருவனைக் குற்றவாளியாக்கும் தன்மை.
பலே _ பாராட்டுக்குறிப்பு.


பல்லைக் கடித்துக் கொண்டிரு _ கட்டுப்படுத்திக் கொண்டு அமைதியாய் இரு.
பவனம் _ இருப்பிடம்.
பவிசு _ மேல் நிலை : சிறப்பு.
பழிக்குப் பழி _ வஞ்சம் தீர்ப்பது : தீங்கு செய்வது.
பழி கிடத்தல் _ நெடு நேரம் காத்திருத்தல்.



பழிப்புக் காட்டு _ ஏளனம் செய்.
பழுத்த சுமங்கலி _ கணவனோடு நெடிது காலம் வாழ்ந்து கொண்டிருக்கும் முதுமையான சுமங்கலி மாது.
பழைய ஆகமம் _ கிறித்துவின் வருகையை அறிவிக்கும் பழைய ஏற்பாடு.
பழையது _ முதல் நாள் காலை வடித்த சோறு.
பழைய பஞ்சாங்கம் _ மிகப் பழைமையான நாகரிக முடையவர்.


பளபளப்பு _ மினுக்குதல்.
பளார் என்று _ கன்னத்தில் கடுமையாக அடி கொடுத்தலின் வேகத்தைக் குறிப்பது.
பளிச் சென்று _ கண்ணைப் பறிக்கும் ஒளிக் குறிப்பு.
பள்ளிக் கணக்கு _ பள்ளிக் கூடத்தில் படித்த கல்வி.
பற்றாக் குறை _ தட்டுப்பாடு.


பன்னாடை _ தென்னை, பனை மட்டைகளின் இடையே பின்னப்பட்ட வலை : இழிந்த குணமுடையவன் டு ஈயாதவன்.
பன்னிப் பன்னி _ திரும்பத் திரும்ப.
பஜ்ஜி _ ஒரு பலகாரம்.
பஜனை _ பலர் சேர்ந்து பாடும் பக்திப் பாடல்.
பஜார் _ கடைத் தெரு.


பஸ்கி _ உடற் பயிற்சி வகை.
பஸ்பம் _ தூள் மருந்து.
Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 08, 2012, 11:53:29 PM

பா

பாகவதர் _இசைப் பாடகர்.
பாசாங்கு _ போலி நடிப்பு.
பாச்சா _ வலிமை : திறமை முதலியன.
பாச்சி _ தாய்ப்பால் : பால்.
பாடாவதி _ மட்டமானது : பயனற்றது.


பாட்டுக்கு _ தன் போக்கில்.
பாட்டி வைத்தியம் _ அனுபவ வாயிலாக நோய்க்கு ஏற்றபடி செய்யும் மருத்துவம்.
பாடு _ பொறுப்பு : உழைப்பு : பாட்டுப் பாடுவது.
பாணி _ தனித்தன்மை.
பாதுஷா _ ஓர் இனிப்புப் பண்டம்: முகலாய மன்னர்.


பாத்தியதை _ தொடர்பு : பொறுப்பு.
பாம்பு விரல் _ நடுவிரல்.
பாரபட்சம் _ ஒருவர் பக்கம் சார்தல்.
பாரம்பரியம் _ தொன்மை மரபு.
பாரா _ கட்டுரையில் வரும் பத்தி : காவல் காத்தல்.


பாராமுகம் _ பார்த்ததாகக் காட்டிக் கொள்ளாத தன்மை.
பாராயணம் _ மனப் பாடம் செய்தல் : வேதம் ஓதுதல்.
பாரியானது _ பருத்த தேகம்.
பால் கோவா _ ஓர் இனிப்புப் பண்டம்.
பால் மாறு _ சோம்பல் படு.



பால்யம் _ சிறுவயது.
பால்பல் _ குழந்தைப் பருவத்தில் தோன்றும் பல்.
பாவனை _ பாசாங்கு : நடிப்பு.
பாழாய்ப்போன _ அருவருப்போடு குறிக்கும் தன்மை: பயனற்ற செயல்.
பாழாக்கு _ வீணாக்கு.


பாஷ்யம் _ விரிவுரை.
பாஷாணம் _ நஞ்சு.
Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 08, 2012, 11:54:55 PM
பி


பிகு _ பிகுவு : தற்பெருமை.
பிக்கல் _ கடன் தொல்லை : தொந்தரவு.
பிசகு _ தவறு : உறுப்பு பிசகுதல்: சுளுக்கு.
பிசாத்து _ அற்பம்.
பிசிர் _ பயனற்றது.



பிசினாறி _ கஞ்சன்.
பிசுக்கு _ அழுக்கு.
பிசுபிசுப்பு _ ஒட்டும் தன்மை : கைகூடாத தன்மை : வெற்றி பெறாமை.
பிடி கொடுக்காது _ மற்றார்க்கு இடம் கொடுக்காதபடி.
பிடிமானம் _ அக்கறை.


பிட்டுவை _ வெளிப்படையாகச் சொல்.
பிதுரார்ஜிதம் _ தந்தை வழி முன்னோர் சொத்து.
பித்தலாட்டம் _ பொய்ச்செயல்.
பித்தான் _ சட்டையின் இறுக்கத்திற்குத் துளையிட்டு இணைக்கப்படும் கருவி.
பித்துக்குளி _ பைத்தியம்.




பிரகடனம் _ அறிவிப்பு.
பிரச்சினை _ சிக்கல்.
பிரசித்தம் _ நன்கு அறிமுகமானது.
பிரசுரம் _ வெளியீடு.
பிரத்தியட்சம் _ நன்கு தெரிவது.



பிரத்தியோகம் _ சிறப்புடைய.
பிரதட்சிணம் _ வலம் வருதல்.
பிரதாபம் _ சிறப்புகள் : பெருஞ் சாதனை.
பிரதானம் _ முக்கியமானது.
பிரதானி _ அமைச்சன்.



பிரதிக்ஞை _ உறுதி மொழி.
பிரதி கூலம் _ தீமை.
பிரதிஷ்டை _ தெய்வத்தைக் கோயிலில் வைக்கும் ஆகமச் சடங்கு.
பிரதேசம் _ நிலப்பகுதி.
பிரபஞ்சம் _ அண்டம் : பெரு வெளி.


பிரபலம் _ புகழ்.
பிரமகத்தி _ விடாது தொடரும் கொலைப் பாவம்.
பிரம பிரயத்தனம் _ கடும் முயற்சி.
பிரமரகசியம் _ பரம ரகசியம்.
பிரம வித்தை _ அறிய செயல்.



பிரமாணம் _ உண்மை என்று நிறுவுதற்குரிய ஆதாரம்.
பிரமாதம் _ அருமை : மிகவும் சிறப்புடையது.
பிரமிப்பு _ வியப்பு.
பிரமுகர் _ மதிப்பு மிக்கவர் : கணவான்.
பிரமை _ மயக்க உணர்வு.



பிரயத்தனம் _ முயற்சி.
பிரயாசை _ முயற்சி : உழைப்பு.
பிரயோகம் _ பயன் படுத்துதல் : கையாளுதல்.
பிரயோஜனம் _ பயன்.
பிரவாகம் _ வெள்ளப் பெருக்கு.



பிரவேசம் _ நுழைவு.
பிரளயம் _ அழிவு.
பிரஸ்தாபம் _ செய்தி.
பிராது _ முறையீடு.
பிராந்தியம் _ பகுதி


பிராப்தம் _ பேறு.
பிராயச் சித்தம் _ பரிகாரம்.
பிராயம் _ வயது.
பிரார்த்தனை _ வேண்டுகோள் : வழிபாடு.
பிரான் _ கடவுள்.



பிரியா விடை _ பிரிவதற்காக வருந்தி விடை கொடுத்தனுப்புதல்.
பிரேரணை _ தீர்மானம்.
பிலுபிலுவென்று _ மாற்றார் சண்டையிட்டுத் துன்புறுத்துதல்.
பிள்ளை குட்டி _ குழந்தைகள்.
பிள்ளையாண்டான் _ இளைஞன்.


பிள்ளையார் எறும்பு _ கறுப்பு நிறமுடைய கடிக்காத எறும்பு வகை.
பிள்ளையார் சுழி _ "உ" என்னும் எழுத்து.
பிற்பாடு _ பிறகு.
பினாத்து _ பிதற்று.
பினாமி _ ஒருவர் தன் சொத்தைப் பெயரளவில் மற்றொருவர் பெயரில் வைத்துப் பயனைப் பெறச் செய்யும் ஏற்பாடு.
Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 08, 2012, 11:56:16 PM
பீ


பீத்தல் _ தற்பெருமைப் பேச்சு.
பீராய்தல் _ பலவாறு அலைந்து பணம் சேகரித்தல்
Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 08, 2012, 11:57:25 PM
பு



புகுந்து விளையாடுதல் _நன்கு எளிதாகச் செயற்படுதல்.
புகைச்சல் _ மனக்குமுறல்.
புக்கை _ அரிசியையும் பருப்பையும் சேர்த்துக் குழைவாக வடித்துச் செய்யும் உணவு.
புசுபுசு என்று _ மிகவும் மிருதுத் தன்மையுடையது.
புடம் போட்டது _தூய்மையுடையது.


புடைசூழ _ பலர் பின் தொடர்தல்.
புட்டிப்பால் _ தாய்ப் பாலுக்குப் பதிலாக தரும் குழந்தை உணவு.
புத்தகப் புழு _ புத்தகம் படிப்பதிலேயே நேரத்தைக் கழிப்பவன்.
புத்திர பாக்கியம் _ குழந்தைப் பேறு.
புரட்டன் _ உண்மையில்லாதவன்: பொய்யன்.



புரவியாட்டம் _ பொய்க் கால் குதிரை ஆடுதல்.
புருஷன் _ கணவன்.
புருஷ லட்சணம் _ ஆணுக்குரிய சிறப்பு.
புருஷார்த்தம் _ உறுதிப் பொருள்.
புரையிடம் _ வீட்டை யொட்டிய காலியிடம்.


புரையேறுதல் _ மூச்சுக் குழாயினுள் உணவுப் பொருளில் சிறிது சென்று எரிச்சல் உண்டாதல்.
புலி வேஷம் _ புலி வேடம் கொண்டு ஆடுதல்.
புளகாங்கிதம் _ மெய் சிலிர்ப்பு : மகிழ்ச்சிப் பெருக்கால் தோன்றும் உணர்வு.
புளி மூட்டை _ உடல் கொழுத்து விளங்கும் மூடன்.
புளுகன்,புளுகுணி _ பொய் பேசுபவன்.


புறுபுறு _ கோபம் காணுதலைக் குறிப்பது.
புனப்பாகம் _ வடித்த சோற்றை மீண்டும் கொதிக்க வைத்துத் தயாரிக்கும் கஞ்சியுணவு.
புஜம் _ தோள் பட்டைக்குக் கீழ் உள்ள கைப்பகுதி.
புஷ்டி _ பருமன்.
புஷ்பம் _ மலர்.


புஷ்பவதி _ பருவமடைந்த பெண்.
புஸ் என்று _ ஒன்றுமில்லாமல்.

Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 12, 2012, 04:06:13 AM
பூ


பூகோளம் _புவியியல்.
பூசி மெழுகு _ குற்றமாயினும் வெளிப்படுத்தாது மறைத்து விடு.
பூச்சாண்டி காட்டுதல் _ அச்சுறுத்தும் நோக்கத்தில் விரட்டுதல்.
பூச்சிக் காட்டு _ குழந்தைகளுக்குக் அச்சம் உண்டாக்குமாறு செய்.
பூதாகரம் _ மிகப் பெரிய வடிவம்.


பூம்பூம் மாடு _ அலங்காரம் செய்து பெருமாள் மாட்டுக் காரன் அழைத்து வரும் மாடு.
பூர்வாங்கம் _ முதல் நிலை.
பூர்வாசிரமம் _ துறவியின் கடந்த வாழ்க்கையின் பகுதி.
பூஜ்யம் _ ஒன்றுமில்லை எனப்படுவது.
பூஜை புனஸ்காரம் _ வழிபாட்டு நியமம்.


பூஜை போடுதல் _ யாருக்கும் கொடுக்காது பாதுகாக்கும் தன்மை
.

Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 12, 2012, 04:07:09 AM
பெ

பெட்டிக் கடை _ சிறிய கடை.
பெட்டி போடு _ துணிகளை மடிப்பு செய்யப் பயன்னடுத்தும் நெருப்புப் பெட்டி.
பெட்டி வண்டி _ கூண்டுள்ள வண்டி.
பெண்சாதி _ மனைவி.
பெண் வீட்டார் _ திருமணப் பெண்ணுடைய பெற்றோர் முதலானோர்.


பெயரளவில் _ வெறும் தோற்றம்.
பெயரெடு _ புகழ் பெறு.
பெயர் பெற்ற _ புகழுடைய.
பெரிது படுத்து _ முக்கியத்துவம் கொடு.
பெரிய ஆள் _ வல்லோன் : அறிவுடையோன்.


பெரிய புள்ளி _ செல்வாக்குடையவர்.
பெரிய மனம் _ தாராள மனம் : இரக்க சுபாவம்.
பெரியவர் _ வயதில் முதிர்ந்தவர்.
பெருந்தகை _ பெருமையுடையவர் : சான்றோர்.
பெருந் தன்மை _ தாராள மனப்பாங்கு.


பெருநோய் _ தொழு நோய் : குட்டம்.
பெரும் பாலும் _ பல : அனேகமாக.
பெரும் போக்கு _ பெருந் தன்மை.
பெருமக்கள் _ சான்றோர்.
பெருமாள் மாடு _ பூம் பூம் மாடு.

பெருவிரல் _ கட்டை விரல்.


Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 12, 2012, 04:08:04 AM
பே


பேக்கு _ அறிவற்றவன்.
பேசா மடந்தை _ மெளனம் சாதிப்பவள்.
பேச்சு வாக்கில் _ முக்கியம் காட்டாதவாறு.
பேச்சு வார்த்தை _ சமாதான நாட்டத்தில் பேசி வழக்கைத் தீர்த்தல்.
பேட்டை _ ஏழை மக்கள் வசிக்கும் பகுதி.



பேத்தல் _ உளறுதல் : பிதற்றல்.
பேந்தப் பேந்த _ ஒன்றும் புரியாமல் விழித்தல்.
பேரண்டம் _ பிரபஞ்சம்.
பேர்வழி _ ஆள்.
பேறு காலம் _ மகப் பேறு தருணம்.


பேனா நண்பர் _ கடித வாயிலான நண்பர்.
பேஜார் _ சிரமம் : தொந்தரவு.
பேஷாக _ மகிழ்ச்சியுடன் ஒப்புதல் தருவது.
பேஷ் _ பாராட்டுச் சொல்.
Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 12, 2012, 04:08:53 AM
பை


பைசல் _தீர்வு காணுதல்.
பைய _ மெதுவாக.
பைராகி _துறவி.
பைஜாமா _இறுக்கம் இல்லாத கால் சட்டை.
Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 12, 2012, 04:09:40 AM
பொ


பொக்கிஷம் _ உயர்ந்த பொருள்.
பொக்கை வாய் _ பல் இல்லாத வாய்.
பொசுக்கு _ கருகச் செய்.
பொடிசு _ சிறியது.
பொடியன் _ சிறுவன்.


பொட்டை _ குருடு : வீரமில்லாதவன்.
பொத்தான் _ பித்தான் ( காண்க)
பொத்து _ உள்ளங்கையில் மூடுதல்.
பொத்துக் கொண்டு வருதல்_ துக்கம் அல்லது சினம் திடீரெனத் தோன்றுதல்.
பொது ஜனம் _ பொது மக்கள்.

 பொய்க்கால்_ மரக்கட்டை.
பொல்லாப்பு _ வெறுப்பு : வேண்டாத பழி.

Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 12, 2012, 04:10:22 AM
போ


போகப் போக _ நாளடைவில்.
போக்குக் காட்டு _ பாவனை செய்.
போட்டா போட்டி _ பலத்த போட்டி.
போதாக் குறைக்கு_ கூடுதலாக.


போயும் போயும் _பயனற்றதாக.
போஜனம் _சாப்பாடு.
போஷகர் _ பாதுகாவலர்.
போஷனை _ பராமரிப்பு.
போஷாக்கு _ சத்துப் பொருள்.
Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 12, 2012, 04:11:07 AM
பெள

பெளத்திரன் _ மக்கள் வழிப் பேரன்.
பெளத்திரி _ மக்கள் வழிப் பேர்த்தி.
Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 12, 2012, 04:12:05 AM



மகசூல் _ தானிய விளைச்சல்.
மகத்தான _ பெரிதான : நிரம்ப.
மகத்துவம் _ பெருமை.
மகமை _ வியாபாரிகள் தங்கள் வருமானத்திலிருந்து ஒதுக்கிச் சமூகத்தின் பொது வளர்ச்சிக்கு ஏற்படுத்தும் நிதி.
மகராசன் _ செல்வம் மிகுந்த தருமவான்.


மகராசி _ மகராசன் என்பதன் பெண்பால்.
மகரிஷி _ முனிபுங்கவர்.
மகாசந்நிதானம் _ சைவ மடத்தின் பீடாதிபதி.
மகாத்மா _ உன்னத மனிதர் : மகான்.
மகாத்மியம் _ மகிமை.


மகால் _ அரண்மனை.
மகானுபாவன் _ ஒருவரை ஏளனக் குறிப்பில் உரைப்பது.
மகிஷம் _ எருமைக்கடா.
மகோன்னதம் _ உன்னதமானது.
மக்கர் _ இயந்திரம் பழுதடைதல்.


மக்கல் _ கெட்டுப் போனது.
மக்கு _ மூடன் : மெழுகு போன்ற பொருள்.
மங்களம் பாடுதல் _ நிகழ்ச்சியை முடித்தல்.
மசக்கை _ கர்ப்பவதி.
மசமசஎன்று _ அசமந்தமாக.



மட்டம் போடுதல் _ வேலை செய்யாதிருத்தல்.
மட்டுப் படு _ குறை : வேகம் : தணி.
மட்டுப் படுத்து _ குறைவுப் படுத்து.
மட்டு மரியாதை _ உரிய மரியாதை.
மடிப்பிச்சை _ இரந்து பெறுவது.


மண்டியிடு _ பணிந்து வணங்கு.
மண்டூகம் _ மூடன்.
மண்டைக் கர்வம் _ மடடைக் கனம் : இறுமாப்பு : செருக்கு.
மண்டையை உடைத்துக் கொள் _தீவிரமாகச் சிந்தனை செய்.
மண்ணாங்கட்டி _ உருப்படாதது.



மண்ணைக் கவ்வுதல் _ தோல்வியடைதல்.
மத்தியஸ்தம் _ சமரசம்.
மந்தகாசம் _ புன்சிரிப்பு.
மந்தணம் _ இரகசியம்.
மந்தம் _ சோர்வு.



மந்த மாருதம் _ தென்றல்.
மந்தை வெளி _ மேய்ச்சல் நிலம்.
மப்பும் மந்தாரமாக _ மழை வரும் குறிப்பு.
மமதை _ செருக்கு.
மயான வைராக்கியம் _ தற்காலிக உறுதி.



மயிரிழையில் _ நல்வாய்ப்பின் பேறு.
மரப்பாச்சி _ குழந்தைகளுக்கு விளையாட்டுக் காட்டும் மரப் பொம்மை.
மரியாதையாக _ அச்சுறுத்தும் குறிப்பு.
மருத்துவச்சி _ அனுபவத்தால் மருத்துவம் செய்யும் மாது.
மருந்துக்குக் கூட _ சிறிதளவிலும்.


மலங்க மலங்க _ குழப்பமாக.
மலைமலையாக _ குவியலாக.
மல்லாந்து _ முதுகு கீழாகவும் முகம் மேல் நோக்கியும் இருத்தல்.
மல்லாடுதல் _ சிரமப் பட்டுப் போராடுதல்.
மல்லுக் கட்டு _ தகராறு.


மவுசு _ மதிப்பு.
மற்றபடி _ வேறு.
மனக் கோட்டை _ கற்பனை.
மனப்பான்மை _ கருத்து.
மனப்பிராந்தி _ மனத்தில் உண்டாக்கும் உணர்வு : பயம் : வீண் கற்பனை.


மனம் போனபடி _ விரும்பிய படி.
மனஸ்தாபம் _ மனத் தாங்கல்.
மனுஷன் _ மனிதன்.
மனுஷி _ பெண்.
மனோபாவம் _ மனப்பான்மை.
Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 12, 2012, 04:12:54 AM
மா


மாசு மருவற்ற _சுத்தமான.
மாட்டல் _காதணி.
மாந்திரீகம் _மந்திர வித்தை.
மாப்பிள்ளை _ மணமகன்.
மாமாங்கம் _12 ஆண்டுகாலம் நெடுங்காலம்.


மாமிசப் பட்சிணி _பிற விலங்கின் இறைச்சியை உணவாகக் கொள்ளும் பிராணி.
மாமியார் வீடு _ சிறைச்சாலை.
மாமூல் _சகஜம் : அன்பளிப்பு : லஞ்சம்.
மாய்மாலம் _பாசாங்கு.
மாரடித்தல் _ விருப்ப மில்லாத வேலை செய்தல்.


மார்வாடி _வட்டிக்குப் பணம் தருபவன்.
மாவுத்தன் _ யானைப்பாகன்.
மாறி மாறி _அடுத்தடுத்து.
மாஜி _முன்னாள்.


Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 12, 2012, 04:13:38 AM
மி

மிஞ்சிப் போனால் _ மிக அதிகமான அளவு காணின்.
மித்திரன் _ நண்பன்.
மினுமினுப்பு _ ஒளிர்வு.
Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 12, 2012, 04:14:30 AM
மு



முகத்திரை _மறைவான பொய்ம்மை.
முகங் கொடுத்துப் பேசு _ இன்னுரை செய்.
முகம் செத்துப் போதல் _ அவ மதிப்பு காணல்.
முகராசி _ நற்பேறு.
முக வெட்டு _ முகப் பொலிவு.


முகாந்தரம் _ அடிப்படை : ஆதாரம்.
முக்கி முனகி _ சிரமப் பட்டு.
முடிப்பு _ பணம்.
முடியைப் பிய்த்துக் கொள் _ மன அலைச்சல் : அவதிப்படு.
முடிவு கட்டு _ தீர்மானம் செய்.


முடுக்கி விடு _துரிதப் படுத்து : தூண்டுதல் செய்.
முடை நாற்றம் _துர் நாற்றம்.
முட்டி மோது _ அலைமோது.
முட்டுக்கட்டை _ தடை.
முண்டியடி _ நெருக்கிக் கொண்டு செல்.



முதலிரவு _ மணமக்கள் தாம்பத்திய உறவு கொள்ளும் நாள்.
முதலைக் கண்ணீர் _ போலி அன்பு.
முதுகில் குத்துவது _ துரோகம் செய்வது.
முதுமக்கள் தாழி _ முற்காலத்தில் இறந்தவரை அடக்கம் செய்யப் பயன் படுத்திய மட்பாண்டம்.
மும்முரம் _ தீவிரம் : செயல் துரிதம்.



முரண்டு _ பிடிவாதம் : எதிர்த்தல்.
முழம் போடு _ அளந்து பார்.
முழுக்க முழுக்க _ முழுமையாக.
முழுக்குப் போடு _ தொடர்பை விட்டுவிடு.
முழுங்குதல் _ அபகரித்தல்.


முழு மூச்சாக _ சிரத்தையாக.
முளையிலே கிள்ளி எறி _ ஆரம்பத்திலேயே அழித்து விடு.
முறை வாசல் _ பல குடித்தனங்கள் உள்ள வீட்டில் தூய்மை செய்யும் பங்கு முறை.
முன்பின் தெரியாத _ பழக்கமில்லாத.
முஸ்தீபு _ முன்னேற்பாடு : ஆயத்தம்.
Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 12, 2012, 04:15:19 AM
மூ


மூக்கணாங் கயிறு _வாலிபத் துடிப்பை அடக்கும் வகையில் ஒரு பெண்ணைப் பார்த்துத் திருமணம் செய்து வைத்தல்.
மூக்கறு _ அவமானப் படுத்து.
மூக்கறுபடு _ அவமானப்படு.
மூக்கில் விரலை வை _ ஆச்சரியப் படுத்தலைக் குறிப்பது.
மூக்கில் வேர்தல் _ பிறர் இரகசியத்தை எப்படியோ தெரிந்து கொள்ளும் தன்மை.


மூக்குடைபடு _ அவமானப்படு.
மூக்குப்பிடிக்க _ அளவுக்கு அதிகமாக.
மூக்கும் முழியுமாக _ அழகாக.
மூக்கு முட்ட _ வயிறு நிரம்ப.
மூக்கைச் சிந்துதல் _ நினைத்த மாத்திரத்தில் கண்ணீர் விட்டு அழுதல்.



மூக்கைத் துளைத்தல் _ சுவையான உணவு வகை.
மூக்கை நுழைத்தல் _ பிறர் விவகாரத்தில் தலையிடுதல்.
மூச்சுப் பேச்சு காணோம் _ அமைதியாக உள்ள தன்மை.
மூச்சு விடாதே _ எதையும் சொல்லாதே.
மூடு மந்திரம் _ இரகசியம்.


மூட்டை முடிச்சு _ பயணத்துக்குரிய பொருள்கள்.
மூட்டி விடு _ கலகம் செய்.
மூலவர் _ அதிகாரம் கொண்ட பெரிய அதிகாரி.
மூலை முடுக்கு _ எல்லா இடமும்.
மூளியாக _ மங்கலத் தோற்றமின்றிக் கை,கழுத்து முதலியவற்றில் அணிகலன் இன்மை குறிப்பது.

Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 12, 2012, 04:16:11 AM
மெ


மெத்தென்று _மிருதுவாக.
மெத்தனம் _ஆர்வமின்மை.
மெய்க் கீர்த்தி _ அரசனது வரலாற்றுச் செய்தி.
மெய்சிலிர்த்தல் _பரவசம் கொள்ளுதல்.
மெனக் கெட _இதற்கெனத் தனிக்கவனம் செலுத்தி.
Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 12, 2012, 04:16:53 AM
மே


மேடை ஏற்று _பலர்க்கும் அறிமுக மாக்கு.
மேதா விலாசம் _ மேன்மை வெளிப்பாடு.
மேலோட்டம் _ கருத்தின்றி.
மேம்போக்கு _ உண்மையான கருத்தில்லாது.
மேல் வரும்படி _இலஞ்சம் : துணைவருவாய்.

மேஜர் _ நன்கு புத்தி தெரிந்தவன்
.
Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 12, 2012, 04:17:41 AM
மை


மைசூர்பாகு _ஓர் இனிப்பு பண்டம்.
மைல்கல் _சாதனை வகை.
Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 12, 2012, 04:18:27 AM


மொ


மொக்குதல் _உண்பதை இகழ்ந்து கூறுதல்.
மொடாமுழுங்கி _ யாவற்றையும் தானே கவர்ந்து கொள்பவன்.
மொட்டைக் கடிதம் _ முகவரி இல்லாத கடிதம்.
மொட்டையடி _ஒருவரை ஏழ்மையாக்கு: ஏமாற்றிப் பணம் பறி.
மொய்யெழுதுதல் _திருமண அன்பளிப்பு.
Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 12, 2012, 04:19:09 AM
மோ


மோசடி செய், மோசம் செய் _ ஏமாற்று.
மோசம் போ _ ஏமாறு.
மோட்ச தீபம் _ ஆன்ம சாந்தி.
மோட்டா _ கனமான துணி.
 மோஸ்தா _நவீன அலங்காரம்.
Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 12, 2012, 04:19:51 AM



யதேச்சதிகாரம் _ சர்வாதிகாரம்.
Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 12, 2012, 04:20:42 AM
யு


யுனானி _ கிரேக்க வைத்திய முறை.
Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 12, 2012, 04:21:29 AM
யோ


யோக்கியதாம்சம் _தகுதி.
Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 12, 2012, 04:22:30 AM
யெ


யெளவனம் _இளமை வனப்பு.
Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 12, 2012, 04:23:15 AM



ரகசியம் _பிறர் அறியாதபடி உரைப்பது.
ரகளை _ தகராறு : கூச்சல் : ஆரவாரம்.
ரங்கராட்டினம் _ ராட்டின வகை: குழந்தைகள் விரும்பியேற்கும் பொழுது போக்கு.
ரசகுல்லா _ இனிப்புப் பண்ட வகை.
ரசம் _ மிளகு கலந்த சுவை நீர்மம்: சோற்றில் கலந்து உண்பது.


ரசாபாசம் _ மதிப்பிழக்கும் ஆரவாரம்.
ரசீது _ பணம் பெற்றதற்குத் தரும் வரவுச் சீட்டு.
ரஞ்சகம் _ இன்பம் தருவது.
ரட்சகன் _ பாதுகாப்பவன் : நன்மை செய்பவன்.
ரண சிகிச்சை _ அறுவை சிகிச்சை.


ரத்தக் காட்டேரி _ பேய் வகை.
ரத்தினச் சுருக்கம் _ தெளிவும் சுருக்கமும் உடைய பேச்சு.
ரத்து செய் _ இல்லாமல் ஆக்குதல் : விலக்குதல்.
ரம்பம் _ பேசியே வெறுப்பு உண்டாக்குபவன்.
ரவுடி _ கலாட்டா செய்பவன்: வீண் சண்டை பிடிப்பவன்.


ரவை _ மிகவும் கொஞ்சமானது.
ரஜா _ விடுமுறை.

Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 12, 2012, 04:24:01 AM
ரா


ராகம் _பண்ணிசை.
ராந்தல் _ விளக்கு.
ராஜகோபுரம் _ கோயிலின் பெரிய கோபுரம்.
ராஜ பாட்டை _ அகன்ற வீதி.
ராஜ மரியாதை _ சிறந்த வரவேற்பு.
Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 12, 2012, 04:24:40 AM
ரி


ரிஷி மூலம் _ முனிவரின் பிறப்பு முதலானவை.
ரிஷபம் _ காளை மாடு.
Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 12, 2012, 04:25:31 AM
ரீ


ரீதி _ ஒழுங்கு முறை.

Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 12, 2012, 04:26:28 AM
ரு


ருசி _ உணவின் சுவை.
ருசு _ ஆதாரம்.
Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 12, 2012, 04:27:27 AM
ரூ


ரூபம் _ உருவம் : வடிவம்
Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 12, 2012, 04:28:20 AM
ரே

ரேக்ளா வண்டி _ ஒருவர் அமர்ந்து செல்லும் வண்டி.
ரேழி _வீட்டின் நடைபாதை பகுதி.
Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 12, 2012, 04:29:14 AM
ரொ

ரொக்கம் _ பணமாகத் தருவது.
ரொட்டி _ கோதுமையிலான உணவு.
ரொம்ப _ மிகவும்.

Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 12, 2012, 04:30:02 AM
ரோ

ரோகி _ நோயாளி.
ரோதனை _ தொல்லை.
ரோமம் _ முடிமயிர்.
ரோஷம் _ தன்மான உணர்வு
Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 13, 2012, 03:31:49 AM



லகான் _ குதிரையின் கடிவாளம்.
லகு _ எளிது.
லக்கினம் _ இராசி வகை.
லங்கணம் _ பட்டினி.
லங்கோடு _ நாடா இணைக்கப்பட்ட கோவணம் : கீழுடை.


லஞ்சம் _ கையூட்டு.
லடாய் _ தகராறு.
லட்சணம் _ அழகு : தகுதி : சிறப்பு.
லட்சாதிபதி _ செல்வந்தன்.
லட்சியம் _ நோக்கம் : குறிக்கோள்.


லட்சுமி கடாட்சம் _ செல்வச் செழிப்பு.
லட்சோபலட்சம் _ பலர் : பல.
லபக் கென்று _ கவ்விப் பறித்தல்.
லபி _ வாய்த்தது.
லம்பாடி _ நாடோடிகள்.


லயம் _ ராக ஒழுங்கு.
லயித்தல் _ மனம் இசைதல்.
லஜ்ஜை _ வெட்கம் : நாணம்
.
Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 13, 2012, 03:33:11 AM
லா

லாகிரி _ போதை.
லாட்டரி _ திண்டாட்டம்.
லாந்தர் _ விளக்கு வகை.
லாந்து _ அங்குமிங்கும் உலாவுதல்.
லாபம் _ ஆதாயம்.


லாம் பெண்ணை _ மண்ணெண்ணெய்.
லாயக்கு _ பொருத்தம்.
லாயம் _ குதிரை கட்டுமிடம்.
லாவகம் _சாமர்த்தியம்.
லாவண்யம் _ அழகு : கவர்ச்சி.

Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 13, 2012, 03:34:01 AM
லி

லிகிதம் _ கடிதம்.
லிபி _ எ எழுத்து


Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 13, 2012, 03:34:44 AM
லீ

லீலை _கேளிக்கை.
Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 13, 2012, 03:35:31 AM
லு


லுங்கி _ கைலி : ஆடை வகை.
Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 13, 2012, 03:36:24 AM
லூ

லூட்டி _ விளையாட்டுத்தனமான ஆரவாரம்.
Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 13, 2012, 03:37:12 AM
லே

லேகியம் _ களிம்பு மருந்து.
லேசாக _ எளிமையாக.
லேவாதேவி _ கொடுத்து வாங்கும் வர்த்தகம்
Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 13, 2012, 03:38:04 AM
லொ


லொட்டு லொசுக்கு _ தேவையற்றது
Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 13, 2012, 03:38:54 AM
லோ

லோபி _ கஞ்சன்.
லோலாக்கு _ காதணி : தொங்கட்டான்.
லோல் படு _ அலைந்து வருந்து
Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 13, 2012, 03:39:43 AM
லெள


லெளகீகம் _உலகியல் நிலை : உலக நடை முறை.
Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 13, 2012, 03:40:40 AM





வகுப்பு வாதம் _சாதி அல்லது மத அடிப்படை கொண்டு கலவரம் செய்தல்.
வகையறா _ தொடர்புடைய ஏனையவை : மரபுடையோர்.
வகையாக _ தப்பிக்க முடியாதபடி.
வக்கடை _ வயல் வரப்பில் ஒட்டப்படும் ஓடை.
வக்கணை _ துடுக்காகப் பேசுதல்.


வக்காலத்து _ மற்றொருவர்க்காகப் பரிந்து பேசுதல்.
வக்கிரம் _ நன்னெறியிலிருந்து திரிதல்.
வக்கு _ திறன் : ஆற்றல்.
வங்கு _ சரும நோய் வகை.
வசதி _ வாய்ப்பு : அனுகூலம் : சுகம்.


வசமாக _ தப்பிக்க முடியாதபடி.
வசன கர்த்தா _ நாடக வசனம் எழுதுபவர்.
வசனம் _ உரையாடல்.
வசீகரம் _ கவர்தல்.
வசூலி _ பணம் பெறு.


வசை பாடுதல் _ குறை சொல்லுதல்.
வஞ்சப் புகழ்ச்சி _ புகழ்வது போல் இகழ்தல்.
வடிகட்டின _ சுத்தமான : முழுமையான.
வண்ட வாளம் _ உண்மை நிலைமை.
வதவத என்று _ அளவிற்கு அதிகமாக.



வதுவை _ திருமணம்.
வத்தலும் தொத்தலுமாக _ மிகவும் மெலிந்த உடலமைப்புடைய.
வத்திப் பெட்டி _ தீப் பெட்டி.
வத்தி வை _ சண்டையை மூட்டு : கோள் சொல்.
வம்சாவளி _ கால் வழி : மரபு வழி.



வம்பள _ வீண் பேச்சு.
வம்புச் சண்டை _ வலியச் சென்று போடும் சண்டை.
வம்பு தும்பு _ வீண் சச்சரவு.
வயசுப் பெண் _ பருவமடைந்த இளம் பெண்.
வயணம் _ ருசியான உணவு.



வயதானவர் _ 18 வயதிற்கு மேற்பட்டவர்.
வயிற்றலடி _ பிழைப்பைக் கெடு.
வயிற்றுப் பிழைப்பு _ உயிர் வாழும் பொருட்டு உழைத்துப் பொருளீட்டுதல்.
வயிற்றெரிச்சல் _ பொறாமை : மனக் கொதிப்பு.
வயிற்றைக் கலக்குகிறது _ அச்சத்தால் கவலை மிகுதல்.


வயிற்றைக் கழுவுதல் _ அடிப்படைத் தேவை குறித்து உணவு கிடைக்கும் வகையில் நடந்து கொள்ளுதல்.
வரலாறு காணாத _ புதுமை மிளிர.
வரவர _ நாளடைவில்.
வரவு வைக்காதே _ பொருட் படுத்தாதே.
வராண்டா _ நடைவழி : முற்றம்.


வரிசை _ சீர் வரிசை.
வரிந்து கட்டிக் கொண்டு _ தீவிரமாக.
வரும்படி _ வருமானம்.
வர்த்த மானம் _ வரலாறு : முழுவிவரம்.
வலுக்கட்டாயமாக _ வற்புறுத்துதல் தன்மை.


வலக்கரம் _ பக்க பலம்.
வழிக்குக் கொண்டு வா _ நன்னெறியில் நிற்கச் செய்.
வளவள என்று _ மிகுதியாக.
வளைத்துப் போடு _ தன் வயப்படுத்து.
வள்ளு வள்ளென்று _ எரிச்சல் காட்டும் குறிப்பு.


வனாந்தரம் _ காட்டுப் பிரதேசம்.
வஜா _ வரி நீக்கம்.
வஸ்தாது _ திறமை மிக்கவன்.
வஸ்திர காயம் _ பொடியாக்குதல்.
வஸ்திரம் _ ஆடை.
வஸ்து _ பொருள்
Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 13, 2012, 03:41:37 AM
வா


வாகடம் _வைத்திய நூல்.
வாடிக்கை _ தொடர்ந்து நிலவுவது.
வாட்ட சாட்டம் _ நல்ல தோற்றப் பொலிவு.
வாபஸ் வாங்கு _ திரும்பப் பெறு.
வாயடைத்தல் _ அதிர்ச்சியில் மெளனமாதல்.


வாயாடி _ அதிகமாகப் பேசுவோர்.
வாயில்லாப் பூச்சி _ எதிர்த்துக் கேட்கும் திறனற்றவர்.
வாயும் வயிறுமாக _ கர்ப்பமாக இருத்தல்.
வாயைக் கட்டு _ உணவில் கட்டுப்பாடுடன் இருத்தல்.
வாயைப் பிள _ திகைத்தல்.


வாய்க்கு வந்தபடி _ வரன் முறையில்லாது.
வாய்க் கொழுப்பு _ பிறரை மதியாது பேசுதல்.
வாய் கிழிய _ பயனற்ற முறையில்.
வாய்த் துடுக்கு _ துடுக்காகப் பேசுதல் : மதிப்பில்லாது பேசுதல்.
வாய்தா _ மற்றொரு நாளுக்குத் தள்ளி வைத்தால் :நிலவரி.



வாய்ப்பந்தல் _ ஆடம்பரப் பேச்சு.
வாரிச் சுருட்டிக் கொண்டு _ பதற்றம் மிக்கு.
வாரிக் கொட்டுதல் _ மிகுந்த வருவாய் அடைதல்.
வார்த்தை ஜாலம் _ அலங்காரப் பேச்சு.
வாலாட்டுதல் _ குறும்பு செய்தல்.


வாலாயம் _ வழக்கமானது.
வாலைக் குமரி _ இளம் பெண்.
வாழா வெட்டி _ கணவனைப் பிரிந்து வாழ்பவள்.
வாழையடி வாழையாக _ தொடர்ச்சியாக.
வாழ்வாங்கு வாழ்தல் _ இனிது விளங்குதல்.



வாளாவிரு _ அமைதியாகயிரு.
வாளிப்பு _ செழுமை.
வானம் பார்த்த பூமி _ மழையை நம்பிப் பயிரிடப் படும் நிலம் : மானாவாரி.
வாஸ்தவம் _ உண்மை.
வாஸ்து _ மனைக்குரிய தெய்வம்
.
Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 13, 2012, 03:42:39 AM
வி

விகட கவி _சிரிக்கப் பேசுவோன்.
விகடம் _ வேடிக்கைப் பேச்சு.
விக்கினம் _ இடையூறு.
விசாரம் _ துன்பம் : சிந்தனை : ஆராய்ச்சி.
விசாரி _ கேட்டுத் தெரிந்து கொள்: வினவு.


விசிப் பலகை _ ஊஞ்சல் பலகை.
விசிறி மடிப்பு _ மேலாடையில் விசிறி போன்று மடித்தல்.
விசுக் கென்று _ உடனடியாக.
விசும்பல் _ விம்மியழுதல்.
விசுவாசம் _ நன்றியுணர்வு.



விசுவாசி _ அன்பு செலுத்து.
விடலைத் தேங்காய் _ சிதறு தேங்காய்.
விடாக் கண்டன் _ பிடிவாதக்காரன்.
விடாப்பிடியாக _ விட்டுக் கொடுக்காத.
விடா முயற்சி _ உறுதிப் பாடு.



விடிய விடிய _ தொடர்ந்து : இரவு முழுவதும்.
விடிவு காலம் _ நல்ல காலம்.
விட்டுக் கொடு _ இணங்கிப் போ.
விட்டுச் செல் _ இருக்குமாறு செய்து கொடு.
விட்டுத் தள்ளு _ ஒதுக்கு.


விட்டுப்பிடி _ கடுமையைக் குறைத்து நட.
விட்டொழி _ கைவிடு.
விதண்டா வாதம் _ பயனற்ற பேச்சு.
விதந்து _ பராட்டுரை.
விதரணை _ விவேகம்.



விதிர்விதிர்த்தல் _ அதிர்ச்சியடைதல்.
விதூஷகன் _ கோமாளி.
வித்தகன் _ தேர்ந்தவன்.
வித்தாரம் _ தந்திரம் : அழகுத்திறன்.
வித்தியாசம் _ வேறுபாடு.



விமோசனம் _ பரிகாரம்.
வியர்த்தம் _ பயனற்றது : வீண்.
வியாகூலம் _ கவலை.
வியாசம் _ கட்டுரை.
வியாபகம் _ பரவியிருக்கும் தன்மை.



வியாபாரம் _ வாணிபம்.
வியாஜ்யம் _ வழக்கு.
வியூகம் _ படை அணி வகுப்பு.
விரகதாபம் _ காதல் ஏக்கம்.
விரசம் _ ஆபாசம்.



விலாவரியாக _ விளக்கமாக.
வில்லங்கம் _ சொத்தின் பேரில் கடன், இல்லாதது.
வில்லுப்பாட்டு _ கதைகளை இசை கூட்டும் வகையில் நடத்தும் வகை.
வில்வண்டி _ கூண்டு வண்டி.
விவிலியம் _ பைபிள்.



விழுந்தடித்துக் கொண்டு _வேகமாக.
விழுந்து விழுந்து _ அதிக ஈடுபாடு கொள்ளும் தன்மை.
விளாசுதல் _ விரைந்து அடித்தல்.
விறுவிறு என்று _ வேகமாக.
விஷப் பரீட்சை _ ஆபத்தான செயல்.



விஷம் _ நஞ்சு : கெட்டது.
விஷமம் _ குறும்புச் செயல்.
விஷமி _ கேடு விளைவிப்பவன்.
விஷயம் _ விவரம் : பொருள்.
விஸ்தரி _ பரவலாக்கு.


விஸ்தாரம் _ விரிவு.
விஸ்தீரணம் _ பரப்பு.
விஸ்வரூபம் _ பெருக்கிக் காட்டுதல், ஒன்றைப் பூதாகரமாகச் செய்தல்
Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 13, 2012, 03:43:49 AM
வீ  


வீட்டுக்கு அனுப்பு _வேலையை விட்டு நீக்கு.
வீட்டுப் பாடம் _ மாணவர் வீட்டில் செய்யும் பாடம்.
வீதி நாடகம் _ தெருக்களில் நடத்தும் நாடகம்.
வீராவேசம் _ வீரம் காட்டும் வெறி.
வீராப்பு _ வாய்ப்பேச்சு.



வீரியம் _ சக்தியின் மேன்மையைக் குறித்தல்
Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 13, 2012, 03:44:48 AM
வெ  

வெகு _மிகுதி : அதிகம்.
வெகுவாக _ மிகவும்.
வெக்கை _ வெப்பம்.
வெடவெடத்தல் _ நடுங்குதல்.
வெடுக்கென்று _எதிர்பாராத விதமாக.


வெட்ட வெளிச்சம் _ வெளிப்படை.
வெலவெலத்தல் _ நடுங்குதல்.
வெளிக்குப் போதல் _ மலம் கழித்தல்.
வெளிச்சம் போட்டுக் காட்டு _ பகிரங்கப் படுத்து.
வெளிப்பகட்டு _ போலி.


வெளியாள் _ அயலான்.
வெளி வேஷம் _ பொய்யானது: போலி.
வெளுத்துக் கட்டு _ வெளுத்து வாங்கு : சிறப்பைக் காட்டு.
வெள்ளக்காடு _நீர்ப் பெருக்கு.
வெள்ளாமை _விவசாயம்.


வெள்ளாவி _ஆடை வெளுத்தல்.
வெள்ளித் திரை _ திரைப்படம்.
வெள்ளெளுத்து _ தூரப் பார்வை.
வெள்ளையறிக்கை _ விளக்க அறிக்கை.
வெள்ளைக்காரன் _ இங்கிலாந்து நாட்டைச் சார்ந்தவன்.


வெள்ளைக்காரி _வெள்ளைக்காரன் என்பதன் பெண் பால்.
வெள்ளையடி _ சுண்ணாம்புப் பூசு.
வெள்ளையணு _இரத்தத்தில் உள்ள வெள்ளை நிற உயிரணு.
வெள்ளையன் _ஆங்கிலேயன்.
வெள்ளை வெளேர்என்று _ வெண்மையாக.
வெள்ளோட்டம் _ சோதனை ஓட்டம்.


Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 13, 2012, 03:45:37 AM
வே

வேகத்தடை _வாகனத்தின் வேகம் குறைக்கப்படும் வகையில் சாலையின் குறுக்கே போடும் சிறு திட்டு.
வேக்காடு _ வெப்பம்.
வேடதாரி _பொய்யன்.
வேட்டு வை _ ஒருவன் வாழ்க்கையைக் கெடு.
வேட்டைப் பல் _கோரைப் பல்.


வேண்டா வெறுப்பாக _ விருப்பமில்லாது.
வேண்டு மென்றே _ நன்று அறிந்தே.
வேலையைக் காட்டு _ குறும்பு செய் : விஷமம் செய்
Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 13, 2012, 03:46:27 AM
வை


வைத்தகண் வாங்காது _ கூர்ந்து பார்த்தல்.
Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 13, 2012, 03:47:30 AM



ஜகத்குரு _ சங்கராசாரியார்.
ஜகம் _ உலகம்.
ஜடம் _ உயிரற்ற பொருள்.
ஜடா முடி _ சடை முடி.
ஜடை _ பின்னல்.



ஜட்கா _ குதிரை வண்டி.
ஜட்டி _இடுப்பில் அணியும் உடை.
ஜதை _ இரட்டை.
ஜந்து _ உயிரினம்.
ஜபம் _ வழிபாடு.


ஜப்தி _ கடன் வாங்கியவரின் சொத்தைக் கைப்பற்றுதல்.
ஜமாபந்தி _ கிராமக் கணக்குகளை ஆய்ந்து குறை நீக்க நடத்தும் கூட்டம்.
ஜமாய் _ மகிழ்ந்திரு.
ஜரூர் _ விரைவு.
ஜலதரங்கம் _ இசைக் கருவி வகை.


ஜலதாரை _ சாக்கடை.
ஜலதோஷம் _ மூக்கிலிருந்து நீர் வடிதல்.
ஜலம் _ நீர்.
ஜல்தி _ சீக்கிரம்.
ஜல்லி _ சிறுசிறு கருங்கல் துண்டுகள்.


ஜல்லிக்கட்டு _ காளையைத் துரத்திப் பிடிக்கும் வீர விளையாட்டு.
ஜவாப் _ பொறுப்பு.
ஜவுளி _ துணி வகை.
ஜனங்கள் _ மக்கள்.
ஜனநாயகம் _ மக்களாட்சி.


ஜனரஞ்சகம் _ மக்கள் விரும்பி மகிழ்தல்.
ஜனனம் _ பிறப்பு.
ஜனாதிபதி _ குடியரசுத் தலைவர்.
ஜன்னல் _ வீட்டில் காற்றும் வெளிச்சமும் வரும் வகையில் உள்ள அமைப்பு.
ஜன்னி _ நோய் வகை.
Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 13, 2012, 03:48:32 AM
ஜா

ஜாகை _தங்கும் இடம் : வீடு.
ஜாக்கிரதை _ கவனம் : எச்சரிக்கை.
ஜாங்கிரி _ ஓர் இனிப்புப் பண்டம்.
ஜாடை மாடையாக _ மறைமுகமாக.
ஜாதகம் _கிரகங்களின் நிலையை லக்கின புடமிட்டுக் கூறுதல்.


ஜாபிதா _ பட்டியல்.
ஜாம்பவான் _ யாவற்றிலும் வல்மையுடையவன்.
ஜாமீன் _ குற்றம் சாட்டப்பட்டுச் சிறையில் உள்ளவரை விடுவித்தல்.
ஜாலம் _தந்திரம் : தாமதம் செய்தல்.
ஜாலரா போடுதல் _ஒருவர் சொன்னபடி ஆமோதித்து நடத்தல்.


ஜானவாசம் _ மாப்பிள்ளை அழைப்பு.
ஜாஸ்தி _ அதிகம்.
Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 13, 2012, 03:49:17 AM
ஜி

ஜிகினா _ வண்ண இழை.
ஜிப்பா _இறுக்கமில்லாத சட்டை.
ஜிமிக்கி _ காதில் தொங்கும் தோடு.
ஜியோமிதி _ கோண கணிதம்
Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 13, 2012, 03:50:12 AM
ஜீ


ஜீயர் _ வைணவ மடத்தின் தலைவர்.
ஜீரணம் _ செரித்தல்.
ஜீவ காருண்யம் _ உயிர்களிடம் இரக்கம் காட்டுதல்.
ஜீவ நதி _ வற்றாத நதி.
ஜீவனம் _ பிழைப்பு.


ஜீவன் _ உயிர்.
ஜீவிதம் _ உயிர் வாழ்தல்.
Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 13, 2012, 03:52:00 AM
ஜெ


ஜெயந்தி _ பிறந்தநாள்.
ஜெயம் _ வெற்றி.
ஜென்ம பூமி _ பிறந்த இடம்.
ஜென்ம விரோதி _ பரம விரோதி.
ஜென்மம் _ பிறவி
Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 13, 2012, 03:52:55 AM
ஜே



ஜே _ வாழ்க என்னும் பொருளது : வெல்க என்னும் பொருளது.
ஜேபி _ சட்டையில் உள்ள பை.
ஜேப்படி _ திருட்டு.
ஜேஜே என்று _ பெருங் கூட்டம்.
ஜேஷ்ட _ மூத்த
Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 13, 2012, 03:53:43 AM
ஜொ


ஜொலித்தல் _ஒளிர்தல்
Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 13, 2012, 03:54:29 AM
ஜோ

ஜோசியம் _ சோதிடம்.
ஜோடனை _ அலங்காரம் : கற்பனை.
ஜோடி _ அலங்கரி : இணை.
ஜோடு _ காலணி.
ஜோடு தவலை _ வாயகன்ற சிறு பித்தளைப் பாத்திரம்.



ஜோதி _ ஒளிப் பிழம்பு.
ஜோதிடம் _ சோதிடம்.
ஜோர் _ மகிழ்ச்சி நிலை : சிறப்பு.
ஜோல்னாப்பை _ தோளில் தொங்கும் துணிப்பை.
ஜோலி _ வேலை : பணி.

Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 13, 2012, 03:55:16 AM
ஸ்ரீ


ஸ்ரீ _ திரு.
ஸ்ரீமதி _ திருமதி.
ஸ்ரீலஸ்ரீ _ சீர்வளர்சீர் : சீலத்திரு
Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 13, 2012, 03:56:08 AM


ஷரத்து _ விபரம்.
Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 13, 2012, 03:56:53 AM


ஷோ

ஷோக்கு _ உல்லாசத் தோற்றம்
Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 13, 2012, 03:57:46 AM
ஸ்


ஸ்தபதி _ சிற்பி.
ஸ்தம்பம் _ தூண் : கொடி மரம்.
ஸ்தம்பித்தல் _ அதிர்ச்சியில் நிலை மறத்தல்.
ஸ்தலம் _ தலம் : கோயில்.
ஸ்தாபகம் _ தோற்றம்.


ஸ்தாபனம் _ நிறுவனம் : அமைப்பு.
ஸ்தானம் _ நிலை : இடம்.
ஸ்திதி _ வசதி நிலை.
ஸ்திரம் _ உறுதி : நிலையானது.
ஸ்திரி _ பெண்.


ஸ்துதி _ வழிபாடு.
ஸ்தூபி _தூண்.
ஸ்நானம் _ குளித்தல்.
ஸ்நேகம் _ நட்பு.
ஸ்பரிசம் _ தொடு உணர்ச்சி.


ஸ்பஷ்டம் _ தெளிவாக.
ஸ்வாதீனம் _ உணர்வு.
ஸ்வீகாரம் _ தத்து எடுத்தல்.
ஸ்வாமி _ சுவாமி : தெய்வம்.
Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 14, 2012, 12:16:32 AM



ஹரிகதை _ திருமாலைப் பற்றிய புராணம்.
ஹர்த்தால் _ கடையடைப்பு.
ஹஜ் _மெக்காவிற்கு மேற் கொள்ளும் புனிதப் பயணம்.
Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 14, 2012, 12:17:18 AM


ஹா

ஹாயாக _ மகிழ்வாக.
ஹாஜி _ ஹஜ் பயணத்தை நிறைவேற்றியவர்.
ஹாஸ்யம் _ நகைச்சுவை.
Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 14, 2012, 12:18:02 AM
ஹி


ஹிம்சை _ உயிர்வதை
Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 14, 2012, 12:18:42 AM


ஹே


ஹேஷ்யம் _ அனுமானம் : உறுதிப் படாத செய்தி.
Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 14, 2012, 12:19:23 AM
ஹோ


ஹோட்டல் _ ஓட்டல் : சிற்றுண்டிச் சாலை.
ஹோதா _செல்வாக்கு.
ஹோமம் _ஓமம் : யாகம் : வேள்வி : நெருப்பு.
ஹோமியோபதி _ மருத்துவ முறை.
Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 14, 2012, 12:20:13 AM


க்ஷ

க்ஷணம் _ கணம்.
க்ஷயம் _ நோய்வகை.
க்ஷவரம் _ சவரம் : மயிர் நீக்குதல்.
க்ஷீணி _ குன்றுதல்
Title: Re: வழக்குச் சொல் அகராதி
Post by: Global Angel on January 14, 2012, 12:20:58 AM
ஷே


ஷேத்திரம் _ புனிதத் தலம்.
ஷேத்திராடனம் _ புனித யாத்திரை.
ஷேமம் _நலம், சுகம்