FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Forum on September 05, 2021, 03:58:39 PM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 276
Post by: Forum on September 05, 2021, 03:58:39 PM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 276

இந்த களத்தின்இந்த  நிழல் படம்  FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

(http://friendstamilchat.org/Forummedia/forumimages/OU/276.jpg)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 276
Post by: Mr Perfect on September 05, 2021, 05:32:12 PM

👍சந்தோஷம் என்பது அனைத்து துன்பங்களையும் போக்க கூடிய ஒரு சிறந்த மருந்தாகும்💪

சந்தோஷமாக இருக்க காரணம் தேடாதீர்கள் ஏனென்றால்???💪

நாம் உயிரோட இருப்பதே இக்காலகட்டத்தில் மிகப்பெரிய சந்தோஷம்தான்💪

நாம் வருத்தப்படுவதற்கு ஆயிரம் காரணம் இருக்குமானால் நம் சந்தோஷப்பட வாழ்க்கையில் சில காரணமாவது இருக்கும்💪

உதிர போகிறோம் என்றும தெரிந்தும்கூட பூக்கள் எல்லாம் மலர்ந்த முகத்துடனே இருக்கிறது அது உதிரும் வரை💪

வாழ்க்கையில் வரும் சங்கடங்கள் அனைத்தையும் சவாலாக எடுத்துப் பாருங்கள் சாகும் வரை வாழ்கை
சுவாரசியமாகவும் சந்தாஷமாகவும் இருக்கும்💪

பிரச்சனையின் போது அழுவதும் ஆண்டவனை தொழுவதும் கோழையின் அடையாளம் சங்கடத்தின் திறவுகோல்💪

மலையளவு பிரச்சனை வந்தாலும் நான் மனம் கலங்க மாட்டேன் மகிழ்ச்சியாக இருப்பேன் என்று உன் மனதிடம் சபதம் இடு💪

கடவுளுக்கு சமமாக நம் எண்ணங்களுக்கு சக்தி உண்டு💪

எண்ணங்களில் சந்தோஷத்தை கொண்டு வந்தால் அது நிட்சியமாக வாழ்க்கையில் சந்தோஷத்தை கொண்டு வரும்💪

சந்தோஷமான எண்ணங்கள் தான் வாழ்க்கையில் சில சாதனைகளைப் புரியவைக்கும்💪

வேதனை இல்லாத நெஞ்சம் இல்லை வேதனைகளையும் சாதனையாக மாற்றுபவரின் பெயர் சரித்திரத்தில் இடம் பெறாமல் போனதில்லை💪

சோகமான நேரத்தில் சங்கடங்களை பட்டியிலடாதே சந்தோஷங்களை பட்டியிலிடு அது உன் சந்தோஷமான மனநிலைக்கு மாற்றம்💪

நம் சந்தோஷங்களை உணர்வதே சில சங்கடங்களை தாண்டிய பிறகுதான்💪

சங்கடங்களையும் சந்தோசத்தையும் சமநிலையில் பார்க்கும் மனநிலை உனக்கு வந்துவிட்டால்💪

வாழ்நாள் முழுவதும் சந்தோசங்கள் உன் வாழ்க்கையில் சங்கமிப்பது சாத்தியமே💪
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 276
Post by: எஸ்கே on September 05, 2021, 05:38:13 PM
மகிழ்ச்சியின் வெளிப்பாடு கொண்டாட்டம் தான்!🤗
கொண்டாட்டத்தின் போது அதன் பின்னணியில் ஏற்படுகின்ற,
சந்தோஷத்தின் உட் கூறுகள் தான் நமக்குள் ஏற்படுகின்ற மாற்றம்!🤗
அதில் ஏற்படும் மன நிறைவு ஈடு செய்ய முடியாத பேரின்பம்!🤗

என்ன கொண்டாட்டம்?
எதற்கான கொண்டாட்டம்?
நண்பர்களின் கொண்டாட்டமா?
குடும்ப உறுப்பினர்களின்
கொண்டாட்டமா?
ஒரு  குழுவின் செயல்பாட்டில் ஏற்படுகின்ற மகிழ்ச்சியா!!🤗
வெற்றி  களிப்பில் ஏற்படுகின்ற கொண்டாட்டமா!!🤗

எந்த வகையான கொண்டாட நிகழ்வாக,
இருந்தாலும் அனைவரின் மனதும்
ஒரு சேர இணையும் மகிழ்ச்சியில்!!!🤗
மகிழ்ச்சியின் கத கதப்பில் நாம்
மனம் லயித்து  கிடக்கின்றோம்!!!🤗
அதன் போக்கில் விட்டு பிடிப்போம் வாழ்வில் மகிழ்ச்சியின் எல்லை கோடு எதுவென்று!🤗

மனித வாழ்வில் அளவிட முடியாத இன்பங்கள் நிறைந்த,
தருணங்கள் தான் இந்த கொண்டாட்டம்!!!!🤗
அப்படியான நிகழ்வில் தான் மனிதனின் மனம் நிறையும்!!!!🤗
இப்படியான நிகழ்வுகள் தான்
இறுதி வரை  அசை போடலாம்!!!!🤗
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 276
Post by: Sun FloweR on September 05, 2021, 06:30:45 PM
எல்லைகளை வகுத்துவிட்ட
மனிதர்களையும்
கோடுகளைப் போட்டுக் கொண்ட
மனங்களையும்
தூரமாய் நிறுத்திவிட்டு
மதயானை வேகம் கொண்டு
உலகாளும் உள்ளம் கொண்ட
புதுயுக யுவதிகள் இவர்கள்....

பொங்கிவரும் வெள்ளமென
ஆசைகளும் கனவுகளும்
நிறைந்து வழிய..
தீப்பந்தங்களை ஏற்றிக்கொண்ட
நம்பிக்கைப் பேரொளி
திசையெங்கும் பரவி
விரவிக் கிடக்கின்றது....

பூட்டிவைத்த விலங்குகள் உடைய
ஏவுகணைச் சீறலாய்
முன்னேறும் பருந்தைப் போல
கட்டவிழ்ந்த அடிமைக் கனவொன்று
சுதந்திரமாய் விண் ஏறி தாவுகின்றது
பெரும் மனமகிழ்வோடு ...

மழையில் நனைந்த இலையாய்
களிப்பில் நனைந்த இதயங்கள்
பளிச்சென்று மாறி
தாவிச்செல்கின்றன
உயரம் நோக்கி.....
சிகரம் நோக்கி.....

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 276
Post by: Dear COMRADE on September 05, 2021, 06:46:04 PM
நீந்திச் செல்லும்
காரிருள் மேகம் எல்லாம்
நிலம் நனைத்துச் செல்லாது...
அதுபோல்,
கடந்து வந்த
பாதைகள் எல்லாம்
மறவா நினைவுகள் ஏந்தாது...

நெடுந்தூர பயணத்தில்
இளைப்பாறும் ஓர் நொடி...
தாண்டி வந்த தடங்களை
சற்று திரும்பி நோக்கும் போது...
கல்லூரி நட்பின் கல்வெட்டு - சற்று
கனமான வலி கோர்த்து...
பாதச்சுவட்டின் இடுக்கினிலே
எம்மைப் பார்த்து ஏங்கிடுமே...
இன்னோர் முறை வருவீரோ என்று

நண்பர்கள் படைசூழ
துன்பங்கள் மறந்து நாம்
துள்ளித் திரிந்த காலமல்லோ...
நட்பும் கொண்டோம்
காதலும் கொண்டோம்- நடுவினிலே
சின்னச் சின்ன
பிணக்குகளும் கொண்டோம்...

நாளைய விடியலின்
எதிர்காலம் நமை நோக்க...
கல்லூரி அந்தம் தந்த
பிரியாவிடை கண்ணீர்த் துளிகள்
இன்றும் எமை பிரியாதல்லோ...

மின்னலாய் ஓடும்
வாழ்க்கை நதியினிலே...
கல்லூரி நட்பின் ஓடம்
மிண்டும் மெல்லத் தவழுமே...
ஆண்டுகள் கழிந்து - அந்த
உறவுகளை எதேச்சையாக கானும் நேரம்
எம் கனாக்களில்...
எங்கேயும் எப்போதும்.

பாரீர் என் நிலையை,
அன்று
ஆயிரம் பேர் அருகிலிருப்பினும்
தனிமையின் பிடிவிலங்கை
நான் ஆசையோடு ஏந்தியதால்...
இன்று,
திரும்பிக் கிடைக்கா
இப்பொக்கிஷத்தின்  நிஜம் தொலைத்து
நிழலின் மொழிக்கு
வார்த்தைகள் கொடுக்கின்றேன்...

சாத்தியம் எனில்,
காலம் கடந்து பயணிப்பேன்
அந்த,
பசுமை வீசிய
கல்லூரி நட்பெனும் பூங்காவில்
புதிதாய் மலரும் பூவாக...

                                 அன்புடன் HunteR🙂

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 276
Post by: Orchids on September 05, 2021, 07:11:09 PM
உற்சாகம் நிரம்பிய மாலை
நண்பர்கள் கூடிய அவ்வேளை

மின்சார விளக்குகள் இரவை பகலாக்கும்
சில்லென்ற காற்று மனதை மயக்கும்

நண்பர்தம் ஆனந்த களி கூத்து
உல்லாச நிதி ஊற்று.

தோழர்கள் அருகில்
தனிமை தான் தொலைவில்

சிரிக்கலாம் மிதக்கலாம்
துயரங்கள் மறக்கலாம்

களைப்புகளை களிப்பாக்கி..
கவலைகளை காற்றோடு பறக்க விடலாம்..

நட்பைத் தவிர
மனதை லேசாக்கும்
உறவைதான் இப்பிரபஞ்சம்
கண்டுள்ளதா?

தோல்விகளையும்
காயங்களையும்
இலகுவாக்க வேறெதுவும் தேவைதானா!

தன்னலம் பொறாமை போட்டி ஏதுமறியாமல்
ஜொலிக்கும் நட்சத்திரக் கூட்டத்தில்
 மின்மினியாய்
நான்!








Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 276
Post by: MoGiNi on September 05, 2021, 08:41:20 PM
தேவையாய் இருக்கிறது
சில அழுத்தங்களுக்கு
அப்புறமான
ஒரு கொண்டாட்டம் ...

நினைவலைகளில்
நீந்தி கடந்த
சில அழுத்தங்களை
பல நிகழ்வுகளை
கடந்து
இவுலகின்
இறுக்கங்களை  களைந்து
கவலையற்ற நிமிடங்களை
யாசித்திருக்கும்  மனதிற்கு
இறுக்கம் களைந்த
சில நிமிடங்கள்
தேவையாய் இருக்கிறது ...

யாரோடும்
ஒன்றிவிடாத
மனங்களின் ரணங்கள்
தன்னை ஆற்றிக்கொள்ள
சில ஆடல் பாடல் கலந்த
மணித்துளிகளை 
யாசித்து கிடக்கின்றது ..

சமூகத்தின் கோடுகளை
தாண்டி
சல்லாபிப்பதாய்
சில பிணங்கள்
பிதற்றிக் கொள்ளட்டும்
பிணங்கள் மீதான
அக்கறைகளை
கடந்து விடுங்கள்
அவை எவ்விதத்திலும்
உதவிடப் போவதில்லை
அதன் உருக்கங்கள்
உங்களையும்
தம்மைப்போல்  ஆக்குவதே ...

வாழ்நாளின்
பெரும்பகுதிகளை
விரக்தியில் வெறுப்பில்
சுமைகளில் கடந்தவர்களுக்கு
எப்பொழுதும்
தேவையாய் இருப்பது
தன்னை மறக்க
இல்லை
தன்னை கொடுக்க
ஒரு மனதும்
ஒரு இளைப்பாறலும் மட்டுமே ..

அது இதயமாக இருக்கலாம்
இல்லை இசையாக இருக்கலாம்
ஏதுவாய் இருப்பினும்
தேவை ஒன்றுதான்
இளைப்பாற ஒரு மணித்துளி ..
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 276
Post by: SweeTie on September 06, 2021, 06:33:12 AM
கல்லூரி  விடுதலையில்
களிப்பில்  கன்னிப் பெண்கள்
ஜாதி  மதம்    குலம் மறந்து   
ஜோதி மயமான  காலம் 

சண்டைகளும்   சமாதானங்களும்
வெறுப்புகளும்   வீறாப்புகளும்[
போட்டிகளும்   பொறாமைகளும் 
ஒருங்கே  அமைந்த   கல்லூரி பருவம்

காலங்கள் கடந்தாலும்   
கண்ணிலே   காட்சிதரும்   காலம்
ஒரு கோடி  பொன்  அள்ளி கொடுத்தாலும்
மீண்டும்  மீளாத    காலம் 

வரவில்லாமல்   செலவு செய்து 
பொறுப்பில்லாமல்  மகிழ்ந்திருக்கும் 
புண்ணியமான   நாட்கள்...... வாழ்வின்
பொன்மயமான    காலம்
'
உரிமை   இல்லாத  நாளைய உலகின்
நம்பிக்கை  நட்சத்திரங்கள்   
இன்றய  மகிழ்ச்சி   ஏதுவரை தொடரும்
தெரியாத  புதிரான   வாழ்க்கை

இன்பமும் துன்பமும் இணைந்ததே வாழ்க்கை
துன்பத்தை  கண்டு சோர்ந்து விடாதே
இன்பத்தை  கண்டு  இறுமாப்படையாதே
இரண்டும் இல்லையென்றால்  வாழ்க்கையோ  சூனியம்.
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 276
Post by: TiNu on September 06, 2021, 07:55:54 AM


சமூக சந்தோச கொண்டாட்டங்கள் யாவுமே..
பிரமாண்டமாக... உருவெடுக்கும்  தருணங்கள் - எப்போதும்
யாராலும் கணிக்க முடியாத நொடி பொழுதுகளே..

ஒருவரின் தனிப்பட்ட விடா முயற்சியினாலே..
தொட்டு பறித்து...  சுவைத்த.... வெற்றி கனியும் கூட - அவரின்
அருகிலிருந்த சுற்றத்தாரின்.. மன மகிழ்ச்சியும் கொண்டாட்டமே..

குழுமமாக.... கூட்டமாக.... பல கைகள் ஒன்று கூடியே..
நேர்மையாக திட்டமிட்டு.. செய்த நற்செயலும் கூட - அங்கே
ஒன்று பட்டு உழைத்தவர்களின் சாதனையும்  கொண்டாட்டமே..

ஒவ்வொருவரின் மனதை செம்மையாக்கும் கல்வி சாலையிலுமே..
வாழ்வை வளமாக்கும்,, பயிற்சியும் இறுதி தேர்ச்சியும் கூட - நம்முடன்
பயணித்த குருக்கள்,நண்பர்களின் ஆனந்தமும் கொண்டாட்டமே 

ஒருவரின்...  தவறான கணிப்பில் தழுவிய  தோல்வியோ..
ஒருவரின்... காலத்தின் கட்டம் கொடுக்கும் உயிர் அழிவோ - அது
எந்த சூழ்நிலையிலும் உன் கொண்டாட்டமென எண்ணாதே...

பல மனங்களின் மகிழ்ச்சிகள் ஒன்றினையும் தருணங்களே.. 
குதூகல சந்தோச கொண்டாட்டமென உருவெடுக்கும் - அவை   
என்றுமே.. நேர்மையாகவும் கண்ணியமாகவும் இருக்கட்டுமே...

ஆனந்தத்தில் திளைக்கும் மனது ஆனந்தமாக இருக்கட்டும்..
மகிழ்ச்சியான தருணங்கள் மகிழ்ச்சியாக இருக்கட்டும்...
சந்தோச கொண்டாட்டங்கள் சந்தோசமாக இருக்கட்டும்..

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 276
Post by: AgNi on September 06, 2021, 08:06:30 AM



பெண்களின் வாழ்கைசக்கரம்
--------------------------------------------------

பள்ளிபருவம் நாள்கண்டு
கவலைகள் ஏதுமில்லாமல்
துள்ளி சிரித்திருந்தேன்!

கல்லூரிப்பருவம்  தொடங்கிய நாள்முதல்..
பல்வேறு நட்புகளுடன்
கொண்டாடி களித்திருந்தேன்...

காதல் கொண்ட நாள் முதல்
இன்பத்தில்  நனைந்து திளைத்திருந்தேன்..

கல்யாணம் கண்ட நாள்முதல்
கணவனின் அன்பான
அரவணைப்பில் மகிழ்ந்திருந்தேன்

பிள்ளைக்கரு உண்டான‌
நாள்முதல் தாயாகும் மகிழ்வில்
பூரித்திருந்தேன்...

குழவிகள் வளரும் நாள்முதல்
குடும்ப பாரத்தை இழுக்கும்
வண்டியாய் சுமந்திருந்தேன்...

பொறுப்புக்கள் உயர நாள்முதல்
உழைத்து உழைத்து ஓடாய்
தேய்ந்திருந்தேன்...

வேலை ‌புதுவாழ்வு என
பிள்ளைகள் கூட்டைவிட்டு
பறந்த நாள்முதல்
வெற்றுக்கை பார்த்து.‌
தனித்திருந்தேன்..‌

கொண்டாட்டமாய் துவங்கிய
வாழ்க்கைச்சக்கரம்.‌‌.
தனிமையில் திண்டாட்டமாய்
ஒருநாள் மாறும்....

மாற்றம் ஒன்றே மாறாதது அல்லவா?