Author Topic: அரிசி மாவு பனானா சாஸ்  (Read 437 times)

Offline kanmani

என்னென்ன தேவை?
அரிசி மாவு பவுடர்-2 கப்
பாதாம் பால்- 1 1/4
வடிகட்டிய கருப்பு பீன்ஸ்-1/2 கப்
தானிய சர்க்கரை -1 தேக்கரண்டி
தண்ணீர்- 1கப்

சாஸ் தயாரிக்க

வெண்ணிலா  - 2டீஸ்பூன்
கனியும் வாழைப்பழம்-1
மஞ்சள்-1டீஸ்பூன்
உப்பு -1/2 தேக்கரண்டி
இஞ்சி சாறு- 1/2 தேக்கரண்டி

எப்படி செய்வது?

மாவு தயார் செய்வதற்கு அரிசி மாவையும், பாதாம் பாலை சேர்த்து மாவை கெட்டியான உருண்டையாக பிசைந்து கொள்ளவும்.. சர்க்கரையுடன் சிறிது தண்ணீர் ஊற்றி பாகு எடுத்து அதனுடன் கருப்பு பீன்ஸ், சேர்த்து பிசையவும். பிசைந்து வைத்துள்ள மாவை சிறிய வடைகளாக நிறைய செய்து அதில் பீன்ஸ கலவையை கொஞ்சம் கொஞ்சமாக வைத்து மூடி உருண்டைகளாக பிடிக்கவும்..   இதை ஆவியில் வேகவைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ளவும். மஞ்சள், வெண்ணிலா, உப்பு, வாழைப்பழம், ஆகியவற்றின் சாறை ஒன்றாக கலந்து சுமார் 7 நிமிடங்கள் மிதமான வெப்பத்தில் வைத்து கிளறவும். சாஸை இறக்கி ஒரு கிண்ணத்தில் ஊற்றி ஆவியில் வேகவைத்த உருண்டைகளை போட்டு சாஸில் மிதக்கவிடவும். அதில் இஞ்சி சாறு சேர்த்து பரிமாறவும்.