Author Topic: 5 ஸ்பைஸ் ரைஸ்  (Read 509 times)

Offline kanmani

5 ஸ்பைஸ் ரைஸ்
« on: September 28, 2013, 12:34:15 AM »
என்னென்ன தேவை?

பாசுமதி அரிசி - ஒரு கப்,
வெண்ணெய், நெய் -  தலா ஒரு டேபிள் ஸ்பூன்,
பச்சைப் பட்டாணி - ஒரு டேபிள் ஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப,
முந்திரி - 6,
பட்டை-2,
கருப்பு ஏலக்காய் - 2,
லவங்கம் - 2,
மராட்டி மொக்கு - 1,
சாதா ஏலக்காய் - 2.
எப்படிச் செய்வது?

ஒரு பாத்திரத்தில் அரிசியைக் கொட்டி சுத்தம் செய்து, தண்ணீரில் ஊற வைக்கவும். அரை மணி நேரம் ஊற வேண்டும்.  கடாயில் வெண்ணெய்  அல்லது நெய் விட்டு பட்டை முதல் ஏலக்காய் வரை வதக்கவும். இட்லி பாத்திரம் அல்லது குக்கரில் தண்ணீர் விட்டு குக்கர் உள்ளே வேறு ஒரு  பாத்திரத்தில் ஊற வைத்த அரிசியை தண்ணீரை வடித்து விட்டு, கொட்டி சிறிது தண்ணீர் தெளித்து, உப்பு, வெண்ணெய், பச்சைப் பட்டாணி, வதக்கிய  பொருள் கள் சேர்த்து மிதமான தீயில் குக்கரில் மூடி போட்டு 5 நிமிடம் வேக விடவும். 5 நிமிடத்திற்கு பின் அணைக்கவும். பரிமாறும் போது மட்டும்  திறக்கவும். வெண்ணெய் விரும்பாதவர்கள் வெண்ணெயை தவிர்க்கலாம். பச்சைப்பட்டாணி ஒரு அலங்கரிப்புதான்.