Author Topic: கிச்சன் சிக்கனம்... கெட்டுப்போகாமல் இருக்க டிப்ஸ்!  (Read 1529 times)

Offline ParZivaL

கிச்சன் சிக்கனம்... கெட்டுப்போகாமல் இருக்க டிப்ஸ்!

 * பப்பாளிப் பழத்தின் காம்பு, தரையை நோக்கி இருக்குமாறு வைத்தால், பழம் விரைவில் அழுகாது.

* புளியை அப்படியே ஜாடியில் கொட்டி வைத்தால் சீக்கிரம் பிசுபிசுத்துவிடும். அதனால் கொஞ்சம் புளி அதன் மேல் சிறிது அளவு உப்பைத் தூவ வேண்டும். பின்னர் கொஞ்சம் புளி... கொஞ்சம் உப்பு எனச் சேமித்தால், புளியில் பூச்சி, புழு வராமல் தடுக்கலாம். புளியின் இயல்பும் கெட்டுப்போகாமல் இருக்கும்.
* தேங்காயை அதன் கண் பகுதி மேல் நோக்கியவாறு வைத்தால், சீக்கிரம் அழுகாது.

* முட்டையை அதன் கூம்பு மேல் நோக்கி இருக்குமாறு வைத்தால், விரைவில் கெட்டுப்போகாது.

* ஒரு கைப்பிடி கல் உப்பை, சின்ன மூட்டையாகக் கட்டி அரிசி சாக்கில் போட்டுவைத்தால் பூச்சி அண்டாது.

* உணவில் உப்பு அதிகமாகிவிட்டால், உரித்த உருளைக்கிழங்கை அப்படியே போட்டால், கரிப்பு குறையும்.

* எலுமிச்சம் பழச் சாற்றை பச்சைக் காய்கறிகளின் மீது தடவினால், காய்கறிகளின் நிறம் சில நாட்கள் மாறாமல் இருக்கும்.

* சர்க்கரை டப்பாவில் சில கிராம்புகளைப் போட்டு வைத்தால், எறும்பு வராது.

* மீந்த இடியாப்பத்தை தயிரில் ஊறவைத்து... வெயிலில் காயவைத்து... நல்லெண்ணெயில் பொரித்துச் சாப்பிடலாம்.
* முட்டைக்கோஸின் தண்டு, அவ்வளவு சத்து நிறைந்தது. கோஸைச் சமைத்துவிட்டு அதன் தண்டை வீணாக்காமல் சாம்பாரில் சேர்த்துச் சமைக்கலாம்.

* தயிர் விரைவில் புளிக்காமல் இருக்க, சிறிய தேங்காய்த் துண்டை அதனுள் போட்டு வைக்கலாம்.

* கறிவேப்பிலைக் காம்பு, கொத்தமல்லித் தழை ஆகியவற்றைத் தூக்கி எறியாமல், வெயிலில் உலர்த்திக்கொள்ளவும். வெறும் கடாயில் ஒரு டீஸ்பூன் வெந்தயம், தனியா சேர்த்து வறுத்து, காய்ந்த கறிவேப்பிலைக் காம்பு, கொத்தமல்லி தழைகளைச் சேர்த்துப் பிரட்டி அரைத்துவைத்துக் கொள்ளவும். சாம்பார் செய்யும்போது இந்தப் பொடியை அதில் சிறிது சேர்த்தால், வாசனை தூக்கலாக இருக்கும்... சுவையும் பின்னும்!
நல்ல சோறு