Author Topic: காதல் சிலருக்கு  (Read 596 times)

Offline thamilan

காதல் சிலருக்கு
« on: August 24, 2011, 01:57:51 PM »
காதல் சிலருக்கு
ஆலமரம்
அது கிளை படர்ந்து
விழுது விட்டு
நீடித்து நிற்கும்

காதல் சிலருக்கு
போதிமரம்
காதலில் விழுந்து
நொந்து நூலாகிய பின்னர்
ஞானம் வரும்

காதல் சிலருக்கு
தூக்குமரம்
அந்த காதலே
அவர்கள் கழுத்தில்
தூக்குக் கயிராக தொங்கும்

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: காதல் சிலருக்கு
« Reply #1 on: August 24, 2011, 05:35:32 PM »
காதல் பலருக்கு பொழுது போக்கு
காலம் முடிந்தவுடன்
கை கழுவி சென்றுவிடுவர் ...
;) ;) ;) ;) ;) ;)