FTC Forum

தமிழ்ப் பூங்கா => கதைகள் => Topic started by: இணையத்தமிழன் on July 23, 2016, 10:29:50 PM

Title: காதல்
Post by: இணையத்தமிழன் on July 23, 2016, 10:29:50 PM

அன்பான கணவன் மனைவி. அந்த கணவன் தினமும் அலுவலகம் விட்டு வரும்போது, தன்னுடைய மனைவிக்கு பூ வாங்கி வருவார்.
ஒருநாள் இரவு அந்த கணவர் திடீர்னு இறந்துட்டார்.. மறுநாள் அவரை அடக்கம் பண்ணிட்டாங்க.
வழக்கமா அவர் அலுவலகம் விட்டு வீட்டுக்கு எல்லாரும் அவரோட தினப்படி வழக்கத்தை நினைத்து அழுதுகிட்டு இருக்காங்க.
அப்போ கதவைத் தட்டும் சத்தம் கேட்டு போய் கதவைத் திறக்குறாங்க, அங்கே ஒரு பையன் வந்து பாட்டியம்மாவைக் கூப்பிடுங்கன்னு சொல்கிறான்.
எல்லாரும் என்ன விஷயம்னு கேட்குறாங்க.
நேத்து தாத்தா வந்து இன்று இரவு நான் இறந்துவிடுவேன். நாளை மாலை நான் பூ வாங்கி வராமல் என் மனைவி ஏமாந்து போகக் கூடாது. எனவே நீ தினமும் பூ குடுத்துட்டுவான்னு சொல்லி நிறைய பணம் குடுத்தார்னு சொல்றான்.
அதைக் கேட்டு உறவினர்களெல்லாம் இன்னமும் பெரிதாக அழவே, அந்தப் பையன் உள்ளே போய் பார்க்குறான்,
அந்தப் பையனும் ஷாக்காகி நிக்குறான்.
அங்க, நடுக் கூடத்தில் அந்தப் பாட்டியம்மாவை சடலமாக கிடத்தி இருக்காங்க.
இதில் மனைவி ஏமாந்து போய்விடக் கூடாதுன்னு நினைத்த தாத்தாவின் காதல் உயர்ந்ததா இல்லை, தாத்தாவின் பிரிவை தாங்க இயலாது, தன் இயல்பான வாழ்கை மாறியதை ஏற்றுக்கொள்ள இயலாது  இறந்த பாட்டியின் காதல் உயர்ந்ததா..
Title: Re: காதல்
Post by: ரித்திகா on July 24, 2016, 07:05:05 AM
(http://youqueen.com/wp-content/uploads/2013/10/old-couple-in-love.jpg)

இருவரின் காதலும் உயர்ந்தது ....!!!!
Title: Re: காதல்
Post by: SarithaN on December 19, 2016, 01:18:13 AM
வணக்கம் சகோதரா,

உங்கள் காதல் இல்லறத்தின் சிறப்பு!

நமது தேசத்தில் உடன்கட்டை
ஏறுதல் எனச் சொல்லி, உடன்கட்டை
ஏற்றியதும், ஏற்றுபவர்களும்
இருந்தனர் இன்று முழுதாகவே
இல்லாது ஒழிந்தது என நம்புகின்றேன்.

இணைபிரியா உன்னதர்கள் இல்லறம்
இப்படியும் இருக்கத்தான் செய்கிறது.
வயதான இல்லறவாசிகள் அன்பின்
துடிப்பில் ஒன்றாய் இறப்பது உலகில்
நிகழவே செய்கிறது. அன்பே கடவுள்.

வாழ்த்துக்கள் சகோ, வாழ்க வளமுடன்.

நன்......
Title: Re: காதல்
Post by: SwarNa on May 14, 2017, 01:54:06 PM
உன்னதமான அன்பு <3