FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: Evil on January 02, 2019, 12:43:56 PM

Title: #பிஸ்கட் #லட்டு
Post by: Evil on January 02, 2019, 12:43:56 PM

#பிஸ்கட் #லட்டு

#தேவையான #பொருட்கள்:

மேரி பிஸ்கட் - 1 பாக்கெட்

கன்டென்ஸ்ட் மில்க் - அரைக் கப்

கோக்கோ பவுடர் - 4 தேக்கரண்டி

பால் - 2 தேக்கரண்டி

உலர் பழங்கள் - 2 டீஸ்பூன் (நறுக்கியது) அழகுப்படுத்துவதற்காக :

ரெயின்போ தெளிப்பு - 1 தேக்கரண்டி

சாக்லேட் - அரை கிண்ணம் (துறுவியது)

தேங்காய் பவுடர் - 4 தேக்கரண்டி

#செயல்முறை:

ஒரு மிக்ஸியை எடுத்து அதில் பிஸ்கட்டை போட்டு நன்றாக தூளாக்கிக் கொள்ளவும். ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் 2 முதல் 3 கரண்டி கன்டெஸ்ட் பாலை சேர்க்கவும். அதனுடன் கொக்கோ தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.

இப்பொழுது கலவையானது ஒரு தடித்த நிலைத்தன்மையுடன் கிடைக்கும். இப்போது கலவையுடன் பிஸ்கட் தூளைச் சேர்க்கவும். கலவையுடன் நீங்கள் தனியே எடுத்து வைத்துள்ள உலர் பழங்களைச் சேர்க்கவும்.

நீங்கள் விரும்பினால் கலவையுடன் மேலும் அதிகமான கன்டென்ஸ்ட் பால், மற்றும் கோகோ பவுடரைச் சேர்க்கலாம். அவை லட்டுவிற்கு மேலும் அதிகமான வழவழப்பைத் தரும். மீண்டும், நீங்கள் கலவையை நன்கு கலக்க வேண்டும்.

கலவையானது ஒரு அடர்ந்த அரை உலர் நிலைக்கு வர வேண்டும். அப்பொழுதுதான நீங்கள் லட்டுவை குறிப்பிட்ட வடிவில் பிடிக்க முடியும்.

இப்போது, சிறிதளவு நெய் எடுத்து உங்களின் உள்ளங்கைகளில் தடவிக் கொண்டு கலவையை லட்டு வடிவத்தில் பிடிக்கவும். பிடித்த லட்டுவை ஒரு தட்டில் தனியே வைக்கவும். லட்டுவை, துறுவிய சாக்லேட், தேங்காய் பவுடர் மற்றும் வானவில் தெளிப்பு கொண்டு அலங்கரிக்கவும்.

லட்டுவை பிரிட்ஜில் சுமார் 10 முதல் 12 நிமிடங்கள் வைத்து குளிர விடவும். தற்பொழுது சுவையான பிஸ்கட் லட்டு தயார்.


(https://scontent.fmaa2-2.fna.fbcdn.net/v/t1.0-9/49592415_334812330707333_3884904541795123200_n.jpg?_nc_cat=108&_nc_ht=scontent.fmaa2-2.fna&oh=0b038927f8fa463c40206b473cd36f97&oe=5CD42C92)