Author Topic: ~ கருத்தரிப்பது கடினம் என்ற நிலைக்கு சில அறிகுறிகள் ~  (Read 317 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218365
  • Total likes: 23061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
கருத்தரிப்பது கடினம் என்ற நிலைக்கு சில அறிகுறிகள்

பொதுவாக கர்ப்பமாவதற்கு 20-25 தான் சரியான வயது. ஆனால் தற்போது நிறைய பெண்கள்



எதிர்காலத்தை மனதில் கொண்டு, வாழ்வில் ஒரு நல்ல நிலைக்கு வந்த பின், குழந்தையை பெற்றுக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டிருப்பர்.
இதனாலேயே பல பெண்கள் 30 வயதுகளில் திருமணம் செய்து கொள்கின்றனர். ஆனால் அவ்வாறு செய்தால், இறுதி மாதவிடாய்க்கான அறிகுறிகள் ஏற்பட்டு, பின் கருத்தரிப்பதில் பிரச்சனை ஏற்படும். மேலும் தற்போது நிறைய பெண்களுக்கு சீக்கிரமே இறுதி மாதவிடாயானது ஏற்படுவதால், விரைவில் திருமணம் செய்து,கருத்தரிப்பதே சிறந்தது.

இறுதி மாதவிடாய் நெருங்கி, கருத்தரிப்பது கடினம் என்ற நிலை ஏற்படுவதற்கான சில அறிகுறிகளைப் பார்ப்போம்.

• இறுதி மாதவிடாய் என்பதற்கான முதல் அறிகுறி ஹாட் ஃப்ளாஷ் (Hot Flash) எனப்படும் உடலில் ஏற்படும் ஒருவித வெப்பமாகும். இந்த நிலை வந்தால், வயதாகிவிட்டது, ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் உள்ளன என்பதற்கான ஒரு அறிகுறியாகும். இந்த நிலை வந்தால், கருத்தரிப்பதில் பிரச்சனை ஏற்படும்.

• 30-35 வயது வரை இனப்பெருக்க உறுப்பான எந்த ஒரு வேலையும் செய்யாவிட்டால், கருப்பையில் நார்த்திசுக் கட்டிகள் வளர ஆரம்பிக்கும். இதனால் கருப்பையின் உள்ளே விந்தணு செல்வதில் தடை ஏற்பட்டு,கருத்தரிப்பதில் சிரமம் ஏற்படும்.

• ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் இறுதி மாதவிடாய் நெருங்கினால், சில சமயங்களில் அதிக சந்தோஷத்துடனும், சில நேரங்களில் அதிக மன வருத்ததுடன் இருப்பது போன்றும் உணர நேரிடும். இத்தகைய நிலை பொதுவாக மாதவிடாய் ஏற்படும் முன்பு ஏற்படுவது சாதாரணம் தான். இருப்பினும் இறுதி மாதவிடாய் என்றால், இது இன்னும் வேறு மாதிரியாக இருக்கும்.

• முறையற்ற மாதவிடாய் சுழற்சி சில இளம் பெண்கள் முறையற்ற மாதவிடாயினால் பாதிக்கப்பட்டிருப்பார்கள். அதிலும் 34 வயது வரை சீரான மாதவிடாய் சுழற்சியையும், அதற்கு பின் முறையற்ற மாதவிடாய் சுழற்சியும் இருந்தால், கவலைப்பட வேண்டிய நேரம் தான்.

• உடலுறவில் ஆர்வமின்மை எப்போது உடலுறவில் ஆர்வம் இல்லாமல் போகிறதோ, அதுவும் இறுதி மாதவிடாய்க்கான நேரம் நெருங்கிவிட்டது என்பதற்கான அறிகுறியே.

• எடை அதிகரித்தல் 20-30 வயதுகளில் உடல் எடை அதிகரிப்பது சாதாரணமானது தான். ஆனால் அதற்கு மேல், எதுவும் செய்யாமல் உடல் எடையானது தானாக அதிகரித்தால், அது இறுதி மாதவிடாய் வரப்போகிறது என்பதற்கான அறிகுறியாகும்.

• தைராய்டு தைராய்டு சுரப்பியானது சரியான செயல்படாததால்,தற்போது பிரச்சனையின்றி கர்ப்பமாவது என்பது கஷ்டமாகிறது. ஏனெனில் தைராய்டின் போது எப்போது வேண்டுமானாலும் இரத்தப்போக்கு ஏற்படுவதால், எதையும் சரியாக கண்காணிக்க முடியாத நிலை ஏற்படுவதோடு, சில சமயங்களில் தைராய்டு இருந்து கொண்டே கர்ப்பமானால், குழந்தை பிறக்கும் போது மனநிலை பாதிக்கப்பட்டு பிறக்கும்.