Author Topic: புழங்கப் படாத .......உணர்வுகள்.....?  (Read 592 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
புழங்கப் படாத .......உணர்வுகள்.....?


புழங்காமல் இருக்கும் மனித உணர்வுகள் கடைசியில் சுத்தமாக இல்லாமலே போய் விடும், எனக்கு தெரிந்து அன்பு சிரிப்பு போன்ற விலை மதிப்பில்லாத மனித உணர்வுகள் புழங்கப் படாமலே இருக்கிறது, போன தலை முறையில் வாழ்ந்த மக்களையும் அடுத்த தலை முறையையும் compare செய்து பார்க்கும் போது எந்த அளவிற்கு குறைந்துள்ளது என்பது முதியோர் இல்லங்கள் உருவாகி இருப்பதும் குடும்ப நல வழக்குகள் பெருகி வருவதும் நமக்கு எடுத்துக் காட்டுகிறது.

இந்த நிலை இன்னும் சில ஆண்டுகளில் தனி மனிதன் மட்டும் ஒவ்வொரு வீட்டிலும் வாழும் நிலை தான் பார்க்க முடியுமோ என்று நினைக்கத் தோன்றுகிறது, ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்ந்த காலம் மாறி என்னால் மட்டுமே என்னை நிர்வகித்துக் கொள்ள முடியும், வேறு சொந்தங்களோ பந்தங்களோ உறவுகளோ தேவை இல்லை என்ற வாழ்க்கையை தான் பார்க்க முடியும் என்று தோன்றுகிறது.

அப்படி தனி மனிதனாக வாழும் பட்சத்தில் அன்புக்கும் சிரிப்புக்கும் இடம் இருக்கவேண்டிய அவசியம் இல்லாமல் போகும், நாளடைவில் அன்பு என்பது, ஐ லவ் மியூசிக் , ஐ லவ் பிரியாணி, என்று மாறுவதற்கான வாய்ப்பு இப்போதே பெரும்பாலான இளம் சமுதாயத்தில் உள்ளது, இந்த புழங்கப் படாத அன்பும் சிரிப்பும் குறைந்திருப்பது நமக்கு வெளிப் படுத்துவது எதிர் கால சந்ததியினரின் வாழ்க்கை முறை அன்பற்ற, இயற்கையான சிரிப்பற்ற தனிமனித வாழ்க்கையாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.