Author Topic: கருப்பு வெள்ளை ...... ரீமேக்  (Read 623 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
கருப்பு வெள்ளை ...... ரீமேக்

கருப்பு வெள்ளையில் எடுக்கப்பட்ட சினிமா என்றவுடனேயே நினைவிற்கு வருவது கதையம்சம், நடிப்பு, இசை.

பெரும்பாலான கருப்பு வெள்ளை சினிமாக்களில் நம்மால் மேற்ச் சொன்னவைகளை எதிர் பார்க்க முடிந்தது, தற்கால சினிமாக்கள் இவை மூன்றையும் மறக்க செய்து இருப்பதன் காரணமாக நான் நினைப்பது, முதலில் சினிமாக்களில் வண்ணங்கள் , ஆடைகளில் வித்தியாசங்கள் காண்பிப்பது, ஆடம்பர செட்டுகளை போடுவது, வெளிநாடுகளில் படமாக்குவது போன்ற மக்களின் கண்களை கவரும் படியான இத்தகைய மாற்றங்கள் தான் ஏற்ப்பட்டுள்ளது, இதில் கருத்து என்பதோ கதை என்பதோ நடிப்பு என்பதோ எதிர்பார்க்க முடியாமல் போக , பார்ப்பவரின் எண்ணங்களை வண்ணங்கள் மட்டும் சுண்டி இழுத்தால் போதுமென்ற வகையில் இந்தக் கால சினிமாக்கள் வந்து கொண்டிருக்கின்றன.

இங்கொன்றும் அங்கொன்றுமாக கதையம்சம் உள்ள படங்கள் இருந்தாலும் அவை கூட ஆஹா!! ஒ ஹோ !!! என்று சொல்லும்படி இருப்பதில்லை. கதையம்சம் என்பது எங்கேயோ யாரோ ஒருவரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் சினிமாவக்கப்படுவதும் ஒரு புதிய trend ஆக வந்துக் கொண்டிருக்கிறது.

சில புதிய பாடல்கள் நன்றாக இருந்தாலும், பாடலை கேட்ட சில நிமிடங்களிலேயே அந்த பாடலின் வரிகளும் ராகமும் மறந்து போய் விடுவதாகவே உள்ளது, புதிய வரவுகளில் பெரும்பாலான பாடல்கள் காதை செவிடாக்கும் சப்தங்களாகத்தான் இருக்கின்றன, மேற்க்கத்திய பாணியில் வெளி வரும் பாடல்களில் எந்தவித ஈர்ப்பும் ஏற்பட வாய்ப்பு இல்லாமல் போய் விடுகிறது.

கதையம்சம் என்பது கேள்விக் குறிதான், இத்தகைய சினிமாக்களை பார்க்கும் போது நமது எண்ணங்களை ஈர்க்க கூடியதாக இல்லை , பல வருடங்கள் சென்று அவற்றைப் பற்றி நினைத்துப் பார்க்கும் அளவிற்கு கதைகள் நம் மனதில் நீங்கா இடம் பிடிப்பதாக வருவதே இல்லை.

இந்த வகையில் கருப்பு வெள்ளை படங்களில் நெஞ்சத்தை விட்டு நீங்கா இடம் பெற்ற சினிமாக்களின் எண்ணிக்கை நீண்டது தான்.

மூன்று மணி நேரம், ஒரு தியேட்டரில் பணம் கொடுத்து, நேரம் பணம் அத்துடன் முக்கியமாக நமது சிந்தனை, சிந்தனையை சினிமாவில் பதிய வைக்கும் சினிமாக்கள் வருவது என்பது இல்லாத ஒன்றாகி வருகிறது.

நடுத்தர வயதுடையோரை சின்னத் திரை சீரியல் ஆக்கிரமித்து கொண்டிருப்பதாக சொல்கின்றனர், இருக்கலாம், சுவாரசியம் இல்லாத சீரியல்களை தினமும் குறிப்பிட்ட நேரத்தில் 1/4 மணி நேரம் பார்ப்பதால் முழு திருப்தி கிடைக்குமா என்றால், என்னை பொறுத்தவரையில் கிடைக்கவில்லை. நான் இதுவரை தொலைக்காட்ச்சியில் ஒரு சீரியலையும் பார்த்தது கிடையாது, ஏன் என்றால் அதில் எனக்கு முழு திருப்தி இல்லை. நேரத்தை வீணடிக்கிறேன் என்று தான் தோன்றுகிறது, ஈர்ப்பு இல்லை, சுவாரசியம் இல்லை.

அதை விட ஒரு நாவல் வாங்கி படித்துக் கொள்ளலாம். தொலைக்காட்சி இல்லாத காலங்களில் அப்படித்தான் இருந்தது. தற்ப்போது புத்தகம் படிப்போரின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்து விட்டது என்று தோன்றுகிறது.

ஆக, கருப்பு வெள்ளை படங்களை, தற்காலத்து அழகிய நிறங்களில் ரீமேக் செய்தால், கதை நடிப்பு பாடல்கள் எதையுமே மாற்றாமல், நன்றாக இருக்கும், ரீமேக் செய்கிறேன் என்று பழைய பாடல்களையெல்லாம் நாசமாக்கி கொண்டிருக்கிறார்களே அப்படி அல்ல. அப்படியே, ஒன்றையும் மாற்றாமல் ரீமேக் செய்தால் சினிமா எப்படி இருக்கும் என்று கற்ப்பனை செய்து பார்க்கிறேன், அத்தகைய நடிப்பை தற்போதுள்ள நடிகைகளில் யாரால் ஓரளவுக்காவது நடிக்க முடியும் என்பது தெரியவில்லை, என் கற்ப்பனையில் கருப்பு வெள்ளை சினிமாக்கள் புதிய வண்ணத்தில்................