Author Topic: மனிதனின் கண்ணால் 30 மைலுக்கு அப்பால் பார்க்கலாம்  (Read 324 times)

Offline Little Heart

மனிதனின் கண் மிகவும் உணர்ச்சிமிக்க பகுதிகளில் ஒன்று. இதில் ஆச்சரியமான விடயம் என்னவென்றால், நமது சாதாரண கண்ணால் 30 மைலுக்கு அப்பால் உள்ள ஒரு மெழுகுவர்த்தியின் ஒளியினைக்கூட காண இயலும் என்பது தான். மேலும் சாதாரண கண்ணால் அதிகபட்ச தூரமாக ஆன்ட்ரோமேடா என்ற விண்மீன்கள் நிறைந்த விண்வெளிப்பகுதியினைக் கூட பார்க்க முடியுமாம். இந்த ஆன்ட்ரோமேடா விண்வெளிப்பகுதி புவியிலிருந்து 2.6 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவிலுள்ளது. இவ்வளவு தூரத்தினைக் கூட நமது வெறும் கண்ணாலே பார்க்க முடிகிறது என்பது வியப்பாக இல்லையா?

இதில் ஆச்சரியங்கள் இருந்தாலும், இதற்கு சில வரைமுறைகளும் உண்டு. முப்பது மைலுக்கு அப்பாலுள்ள மெழுகுவர்த்தியை நாம் பார்க்க வேண்டுமென்றால், அந்தத் தூரம் முழுவதும் இருட்டாக இருக்கவேண்டும், மற்றும் பூமி தட்டையாக இருக்க வேண்டும் அல்லது நாம் ஒரு மலையின் உச்சியில் இருந்து அடர்ந்த இருட்டில் மெழுகுவர்த்தியை பார்க்க வேண்டும். இருந்தாலும் நமது கண் ஓர் அதிசயம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை தானே நண்பர்களே?