Author Topic: மாவட்டங்களின் கதைகள்  (Read 4490 times)

Offline kanmani

மாவட்டங்களின் கதைகள்
« on: October 29, 2012, 01:52:36 PM »
மாவட்டங்களின் கதைகள் - சேலம் மாவட்டம் (salem)


சேலம் மாவட்டம்

மேட்டூர் அணை தென்னிந்தியாவின் மிகப் பெரிய அணைக்கட்டுக்களில் ஒன்று


அடிப்படைத் தகவல்கள்
தலைநகர்
   
 சேலம்]

பரப்பு
   
 5,205 ச.கி.மீ



புவியியல் அமைவு

அட்சரேகை  110.14-120.53 N
தீர்க்க ரேகை 770.44-780.50E


எல்லைகள்: இதன ்மேற்கில் தருப்புரி மாவட்டமும், கிழக்கில் விழுப்புரம் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்ளும், தெற்கில் திருச்சிராப்பள்ளி மற்றும் நாமக்கல் மாவட்டங்களும் மேற்கில் ஈரோடு மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளன.

வரலாறு: பிரிட்டீஷ் கிழக்கிந்தியக் கம்பெனிக்கும், சுல்தானுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் திப்பு சுல்தானியரிடமிருந்து பெறப்பட்ட பகுதிகளைக் கொண்டு "பாரமஹால் மற்றும் சேலம்" மாவட்டம் 1792 உருவாக்கப்பட்டது.  தரம்புரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளைக் கொண்ட பாரமஹால் மற்றும் சேலம் மாவட்டத்தின் சில பகுதிகள் இதில் அடங்கியிருந்தன.

சில ஆண்டுகளுக்கு பிறகு இது கிருஷ்ணகிரியைத் தலைநகராகக் கொண்ட பாரமஹால் மாவட்டம் என்றும், சேலத்தைத் தலைநகராககக் கொண்ட தாலக்காட் மாவட்டம் என்றும் இரண்டாகப் பிரிக்கப்பட்டது.  1801 இல் இவை இரண்டும் ஒன்றிணைக்கப்பட்டன.

பின்னர் 1808 இல் இ.ஆர்.ஹார் கிரேவ் மாவட்ட ஆட்சித்தலைவராக இருந்தபோது இது சேலம் மாவட்டம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.  1830-இல் மாவட்டத் தலைநகர் தரும்புரியில் இருந்து சேலத்திற்கு மாற்றப்பட்டது.  தொடர்ந்து சில ஆண்டுகள் தலைநகர் ஒசூருக்கு மாற்றப்பட்டாலும் கூட, 1860 இல் ஆட்சிதலைவர் அலுவலகம் மீண்டும் சேலத்திற்கே மாற்றபட்டது.

1965-இல் சேலத்தில் இருந்து சேரவராயன் மலையின் வடக்கில் உள்ள பகுதிகள் தனியாகப் பிரிக்கபட்டு, தரம்புரி மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்டது.  1996, மே மாதம் சேலம் மாவட்டத்திலிருந்து நாமக்கல் மாவட்டம் உருவானது.

முக்கிய ஆறுகள்: காவிரி, மணிமுத்தாறு, விசிஷ்ட நதி
குறிப்பிடத்தக்க இடங்கள்:

சங்ககிரி கோட்டை: சங்ககிரி மலையில் அமைந்துள்ள இக்கோட்டைக்குள் ஆறு நடைபாதைகள், ஐந்து கோயில்கள், இரண்டு மசூதிகள் மட்டுமல்லாமல், திப்புசுல்தானும் தீரன் சின்னமலையும் பயன்படுத்திய போர் ஆயுதங்களும் உள்ளன.

பொய்மான் கரடு: தரைப்பகுதியில் கிழக்குப் பக்கம், ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து பார்த்தால், பாறைகளுக்கு நடுவே கொம்புகளுடன் ஒரு மான் நிற்பது போல் தோன்றுவதால் இதற்கு பொய்மான் கரடு எனப் பெயர் வந்தது.  இது நாமக்கல் - சேலம் நெடுஞ்சாலையில் உள்ளது.

ஜமா மசூதி: மைசூரை ஆண்ட மன்னர் திப்புசுல்தானால் கட்டபட்ட பழம்பெரும் மசூதி, மணிமுத்தாறின் தென்கரையில் அமைந்துள்ளது.


இருப்பிடமும், சிறப்புகளும்:

சென்னையிலிருந்து 334கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

வடக்கே நாகர் மலை, தெற்கே ஜீரகமலை மேற்கே காஞ்சன மலை, கிழக்கே கொடுமலை என நான நாற்புறமும் மலை சூழ்ந்த எழில் நகரம்

சேலத்தில் விமானநிலையம் உள்ளது.

மாம்பழமும், பச்சரிசியும் இந்த நகரின் சிறப்பை பறைசாற்றுகின்றன.

குருவம்பட்டி உயிரியல் பூங்கா.

இந்தியாவிலேயே அதிகம் மாக்னசைட் உற்பத்தி செய்யும் பகுதிகளில் ஒன்று.

ஜவ்வரிசி மிகுதியாக உற்பத்தி செய்யப்படுகிறது.

சேலம் உருக்காலை, வெள்ளிக்கொலுசு போன்றவற்றிற்கு புகழ் பெற்றது.

ஏழைகளின் ஊட்டி 'ஏற்காடு'

இரும்புத் தாது, பாக்சைட், சுணாம்புக் கல், அலுமினியத் தாது போன்ற கனிம வளங்களைக் கொண்டுள்ளது.

சேலம் சில்வர் பாத்திரங்கள் புகழ் பெற்றது.

« Last Edit: November 20, 2012, 01:23:17 PM by Global Angel »

Offline kanmani

Re: Idhu enga oorunga
« Reply #1 on: October 29, 2012, 01:54:37 PM »
மாவட்டங்களின் கதைகள் - கோயம்புத்தூர் (Coimbatore)

எல்லைகள்: இதன் வடக்கு மறறும் கிழக்கில் ஈரோடு மாவட்டமும், மேற்கிலும் தெற்கிலும் மேற்குத்தொடர்ச்சி மற்றும் ஆனைம்மலைத்தொடரும் எல்லைகளாக அமைந்துள்ளன.

வரலாறு: சங்க காலத்தில் கொங்கு நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது.

முற்காலத்தில் கோயம்புத்தூரிலிருந்து ஏழு கி.மீ. தொலைவிலுள்ள பேரூர் என்பதே மிகப்பெரிய ஊர். கோயம்புத்தூர் இதில் அடங்கிய ஒரு சிறுகிராமமே. திப்புசுல்தான் மறைவிற்குப் பின் (1779), கோயம்புத்தூர் கிழக்கிந்திய கம்பெனியின் ஆதிக்கத்திற்குட்பட்டது. 1805-இல் கோயம்புத்தூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது. தொடர்ந்து இந்தியா சுதந்திரம் அடையும் வரை இது ஆங்கிலேயர் ஆதிக்கதின் கீழிலேயே இருந்து. 1866-இல் கோயம்புத்தூர் நாகராட்சியானது.

முக்கிய ஆறுகள்: சிறுவாணி, அமராவதி.

குறிப்பிடத்தக்க இடங்கள்:

குழந்தை ஏசு தேவலாயம்: கிருத்தவர்களின் வணக்கத்ததிற்குரிய பெருமை மிகு தேவாலயம், கோயம்புத்தூர் நகருக்கு மிக அருகில் கோவைப்புதூரில் அமைந்துள்ளது.

கோட்டை மேடு மசூதி: இஸ்லாமியக் கட்டடக்கலையின் சிறப்புகளைக் கொண்ட கோவையில் எழுந்த முதல் மசூதி என்ற பெருமை கொண்டது. இதன் பிரிவாக ஒரு உருது கல்லூரியும் செயல்பட்டு வருகிறது.

ஈஷா யோக மையம்: சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களால் உருவாக்கட்ட தியானலிங்கம் பல்லாயிரக்கணக்கான பக்தர்களை ஈர்த்து வருகிறது.

வால்பாறை: மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இப்பகுதி மிகப் பெரிபலமான சுற்றுலாத்தலம். தேயிலைத் தோட்டங்களும், பண்ணைகளும் நிறைந்த பசுஞ்சோலை.

ஆனைமலை விலங்குகள் சரணாலயம்: மேற்குத்தொடர்ச்சி மலையில் 1400மீ. உயரத்தில் 958 ச.கி.மீ. பரப்பில் அமைந்துள்ளது. இங்கு யானை, காட்டெருமை, தேவாங்கு, கரடிகள், கரும் பொன்னிறப் புறவைகள், எற்முப்துத் தின்னி போன்றவைகளைக் காணலாம்.

சிறுவாணி அருவி: உலகச்சுவை நீர் தரத்தில் இரண்டாவது இடத்தைப் பெற்றது சிறுவாணி ஆற்று நீர். இது 'கோவையின் குற்றாலம்' எனவும் சிறப்பிக்கப்படுகிறது.

காரமடை ரெங்கநாதர் ஆலயம்: விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்ட கோயம்பத்தூரின் மிகப் பழமையான இரண்டாவது ஆலயமான இங்கு ரெங்கநாதர் பள்ளி கொண்ட கோலத்தில் காட்சியளிக்கிறார்.

கொங்கு நாட்டு திருப்பதி: கொங்கு திருப்பதி என அழைக்கப்படும் இங்கு புரட்டாசி சனிக்கிழமை விஷேசமானது.

தேசியப் பூங்காக்கள்

முதுமலை - நீலகிரி
கிண்டி - சென்னை
மன்னார் வளைகுடா - இராமநாதபுரம்
இந்திராகாந்தி பூங்கா - கோயம்புத்தூர்
முக்குறுத்தி - நீலகிரி

இருப்பிடமும் சிறப்பியல்புகளும்:


சென்னையிலிருந்து 532 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
தமிழகத்தின் மிக உயர்ந்த சிகரம் ஆனைமுடி (2697 மீ)
தமிழகத்தின் முன்னணித் தொழில் நகரம்.
பங்குச் சந்தை செயல்பட்டு வருகிறது.
கோயம்புத்தூரில் விமான நிலையம் உள்ளது.
அமராவதி நீர்தேக்கம்
'தென்னாட்டு காசி' என்றழைக்கப்படும் அவினாசி லிங்கேஸ்வர்ர் ஆலையம் கோவையிலிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ளது.
அறுபடை வீடுகளில் ஒன்றான மருத மலை.
'வாழ்க வளமுடன்' என்ற அருள் வாசகம் தந்த அருட்தந்தை யோகிராஜ் வேதாத்ரி மகரிஷியால் நிறுவப்பட்டதே ஆழியாறு அறிவுத் திருக்கோயில்.

Offline kanmani

Re: Idhu enga oorunga
« Reply #2 on: October 29, 2012, 01:56:08 PM »
மாவட்டங்களின் கதைகள்- ஈரோடு(Erode District)
எல்லைகள்: தெற்கில் திண்டுக்கல் மாவட்டமும், கிழக்கில் சேலம், நாமக்கல், கரூர் மாவட்டங்களும், வடக்கில் கர்நாடக மாநிலமும், மேற்கில் கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களும் எல்லைகளாக அமைந்துள்ளன.

வரலாறு: கோயம்புத்தூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தமையால் இதன் வரலாறும் கோயம்புத்தூர் மாவட்டத்துடனேயே பின்னிப் பிணைந்துள்ளது.  இரு மாவட்டங்களும் இணைந்த பகுதிகள் சங்க காலத்தில் 'கொங்கு நாடு' என்றழைக்கபட்டது.

பழங்குடியினரிடமிருந்து ராஷ்டிர கூடர்களால் கைப்பற்றப்பட்ட இப்பகுதி, பிற்பாடு ராஜராஜ சோழன் ஆட்சிக்குட்பட்டது.  சோழர்களின் வீழ்ச்சிக்குப்பின் சாளுக்கியர், பாண்டியர், ஹொய்சாளர்கள் என்று இது பல்வேறு ஆட்சிகளுக்குட்பட்டது.

பிற்பாடு மதுரை சுல்தானியம், விஜயநகரம், மதுரை நாயக்கர் ஆட்சிக்குட்பட்டது.

நிர்வாகப் பிரிவுகள்

வருவாய் கோட்டங்கள் இரண்டு: ஈரோடு, கோபிச்செட்டிப் பாளையம்,

தாலுக்காக்கள் ஐந்து : ஈரோடு, பெருந்துறை, பவானி, கோபிச்செட்டிப் பாளையம், சத்திய மங்கலம்

மாநகராட்சிகள் ஒன்று: ஈரோடு.

நகராட்சிகள் எட்டு: கோபிச்செட்டிப் பாளையம், சத்தியமங்கலம், பவானி, காசிப்பாளையம், பெரிய சேமூர், புஞ்சைப் புளியம்பட்டி, சூரம் பட்டி, வீரப்பன் சத்திரம்.

ஊராட்சி ஒன்றியங்கள் பதினான்கு: ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி, பெருந்துறை, சென்னிமலை, பவானி, அம்மாப்பேட்டை, அந்தியூர், கோபிச்செட்டிபாளையம், நம்பியூர், தூக்க நாயக்கன் பாளையம், சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி

1799 இல் மைசூர் திப்பு சுல்தான் வீச்சியை அடுத்து, பிரிட்டீஷாரால் முடிசூட்டப்பட்ட மைசூர் மகாராஜா இதை பிரிட்டீஷ் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு வழங்கினார். அன்றிலிருந்து இந்திய சுதந்திரம் வரை இது பிரிட்டிஷாரின் ஆதிக்கத்திலேயே இருந்தது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலிருந்து 1979, ஆகஸ்ட் 31 - ல் ஈரோடு மாவட்டம் தனியே உருவாக்கபட்டது.

முக்கிய ஆறுகள்: காவிரி, நொய்யல், பவானி, அமராவதி

குறிப்பிட்டத்தக்க இடங்கள்: சத்திய மங்கலத்திலிருந்து 16 கி.மீ. தொலைவில் பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பவானிசாகர் அணை, கொடிவேரி அணை, தாளவாடி மலை, தமிழகத்தில் புகழ்பெற்ற அம்மன் கோவிலில் ஒன்றான பண்ணாரி அம்மன் கோவில், விஜயமங்கலம் ஜைனக் கோவில், கொடுமுடி மச்ச கண்டீஸ்வர்ர் சிவன் கோவில், தாராபுரம் காடு ஹனுமந்த சுவாமி கோவில்.

சென்னிமலை: நெசவுக்குப் புகழ் பெற்ற நகரம். இங்குள்ள முருகன் கோவில் புகழ்பெற்றது.  அருணகிரிநாதர் இறைவனிடம் ஆசிகளாகப் படிக்காசு பெற்ற இடம்.

ஶ்ரீ கொண்டாத்து காளியம்மன் கோயில்:

முழுவதும் சலவைக் கற்களால் உருவானது.  இன்றும் இங்கே அம்மன் முன்னிலையில் பூப்போட்டுப் பார்க்கும் நடைமுறையில் உள்ளது.

சங்கமேஸ்வரர் கோயில்: பவானி ஆறு, காவிரி ஆறு, அமுத நதி சங்கமிக்கும் இடம், தென்னிந்தியாவின் திரிவேணி என்றழைக்கப்படுகிறது.


இருப்பிடமும் சிறப்புகளும்




Ø  சென்னையிலிருந்து 400 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
Ø  கடற்கரை இல்லா மாவட்டம்.
Ø  குதிரைச் சந்தை பிரபலமானது.
Ø  பவானி ஜமுக்காலம் பெயர்பெற்றது.
Ø  ஊத்துக்குளி வெண்ணெய் மற்றும் காங்கேயம் காளை.
Ø  கைத்தறி நெசவு ஆடை ஏற்றுமதியில் இம்மாவட்டம் தமிழ்நாட்டில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
Ø  வெள்ளோடு பறைவகள் சராணாலயம் (ஈரோட்டிலிருந்து 15 கி.மீ.)
Ø  மலைக்கோவில் நிறைந்தவை. முக்கிய மலைக்கோவில்கள் நான்கு. சிவன் மலை, சென்னி மலை, திண்டல் மலை, வட்ட மலை.
Ø  ஈரோடு மஞ்சள்; மஞ்சள் சாகுபடிக்குப் பெயர் பெற்ற மாவட்டம்.
Ø  குறிப்பிடத்தக்கோர்: தீரன் சின்னமலை, நரேந்திர தஏவர், பெரியார் ஈ.வெ. இராமசாமி

Offline kanmani

Re: Idhu enga oorunga
« Reply #3 on: October 29, 2012, 01:57:21 PM »
மாவட்டங்களின் கதைகள் - சென்னை மாவட்டம்(chennai)


எல்லைகள்: தமிழகத்தின் வடகிழக்கு மூலையில் வங்காள விரிகுடா கரையைத் தொட்டு அமைந்துள்ளது. இதன் கிழக்கே வங்காள விரிகுடா, ஏனைய திசைகளில் திருவள்ளுவர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் அமைந்துள்ளன.

வரலாறு: முற்காலத்தில் தொண்டை மண்டலத்தின் ஒரு பகுதியாக இருந்தது. 1522-இல் போர்த்துக்கீசியர் சென்னை வந்தனர்.

1639-ல் பிரான்சிஸ் டே என்னும் ஆங்கிலேயர், வேங்கடப்பரிடமிருந்து தற்போதைய சாந்தேமுக்கு அருகிலுள்ள ஒரு மீனவ கிராமத்தில் தங்கி வாணபம் செய்யும் உரிமையைப் பெற்றார்.

சென்னை நகரம் 1659இல் உருவாக்கப்பட்டது.

1640-இல் புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது.

1688இல் சென்னை மாநகராட்சியக்கப்பட்டது.

1946இல் சென்னை பிரெஞ்சுக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது.

1949 உடன்லடிக்கையை அடுத்து இது ஆங்கிலேயர் வசமானது. அதன் பின் நாடு சுதந்திரம் அடையும்வரை இது ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது.

1801 - இல் வெல்லெஸ்லி பிரபு 'மெட்ராஸ் மாகாணத்தை' உருவாக்கியபோது மெட்ராஸ் அதன் தலைநகராமானது.

1996-இல் மெட்ராஸ் என்பது சென்னை எனப் பெயர் பெற்றது.

முக்கிய ஆறுகள்: கூவம், அடையாறு, பக்கிங் ஹாம் கால்வாய்.

நிர்வாகப் பிரிவுகள்:

வருவாய் கோட்டங்கள்:- 1: சென்னை, தாலுகாக்கள்-5: எழும்பூர், நுங்கம்பாக்கம், கோட்டை தண்டையார்பேட்டை, மாம்பலம், கிண்டி, மைலாப்பூர், திருவல்லிக்கேணி, பெரம்பூர், புரசைவாக்கம்,

மாநகராட்சி-1: சென்னை

குறிபிடத்தக்க இடங்கள்

அமீர் மகால்: ஆற்காடு நவாப்க்களின் கலைத்திறனின் சாட்சியாக 14 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டது. 1989-இல் கட்டப்பட்ட இம்மாளிகை 1870 இல் ஆற்காடு அரசு குடும்பத்தாரின் மாளிகையானது.

கன்னிமாரா பொது நூலகம்: மரங்களடர்ந்த சோலைக்குள் அமைந்த மிகப் பழைய நூலகம். இந்தியாவின் தேசிய நூலகங்களில் ஒன்று.

சென்னைப் பல்கலைக் கழகம்: மெரினா கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள இது, இலண்டன் பலகலைக் கழகத்தை முன் மாதிரியாகக் கொண்டு 1857 இல் தொடங்கப்பட்டது.

தொழிற்சாலைகள்: பன்னாட்டு கார் தயாரிப்பு ஆலைகள் சென்னையிலும் அதைச் சுற்றிலும் அமைந்துள்ளன. இவை தவிர இரயில் பெட்டிகள், சைக்கிள்,மோட்டார் வாகனங்கள், தோல் பொருட்கள், டெலிபிரிண்டர், டயர், இயந்திரத் தொழிற்சாலைகள் மிகுதி.

கிண்டி, அம்பத்தூர் தொழில் மையங்கள்

ஆவடியில் டாங்கித் தொழிற்சாலை உள்ளது

சாப்ட்வேர் தொழில் மையமாக வளர்ந்து வருகிறது.

வழிபாட்டிடங்கள்: புனித மேரி தேவாலயம், வேளாங்கன்னி தேவாலயம், மாமூர் மசூதி, பெரிய மசூதி, குருத்வாரா, ஜெயின் குரு மந்திர், மகான் சாந்திநாத் சமணக்கோயில், சின்னமலை தேவாலயம், ஸ்ரீராமகிருஷ்ணா கோயில், திருமலை திருப்பதி தேவாஸ்தானம், சாய்பாபா கோவில், மருந்தீஸ்ரர் திருக்கோயில், காளி பாரிகோயில், மாங்காடு மாரியம்மன் கோவில், அஷ்ட லெஷ்மி கோவில்.


இருப்பிடமும், சிறப்பியல்புகளும்:
தமிழகத்தின் தலைநகரம் சென்னை.
தொழில் துறையில் சிறந்த துறைமுக நகரம்.
அண்ணா நினைவு நூலகம் (2010-இல் திறக்கப்பட்டது.) யுனெஸ்கோ அமைப்புடன் இணைக்கபட்ட இந்தியாவின் இரண்டாவது நகரம்.
மெரினா உலகின் இரண்டாவது பெரிய நீளமான கடற்கரை.
பங்குமார்க்கெட் செயல்பட்டு வருகிறது.
பன்னாட்டு விமான சேவையால் உலகின் பல பகுதிகளோடும்  இணைக்கப்பட்டுள்ளது.
நேப்பியர் பாலம்: ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அப்போதைய ஆளுநர் நேப்பியர் அவர்களால் 1969இல் இரும்பு கிராதிகளால் கட்டபட்டது.  பின்னர் 1943 இல் ஆர்தர் ஹோப் காலத்தில் கான்கிரிட்டால் அகலப்படுத்தப்பட்டு பொது மக்கள் போக்குவரத்துக்கு அனுமதிக்கபட்டது.
டைடல் பூங்கா:  தமிழ்நாட்டின் சிலிக்கான் பள்ளத்தாக்கு, நவீன கட்டிடக் கலையின் அடையாளம்.

Offline kanmani

Re: Idhu enga oorunga
« Reply #4 on: October 29, 2012, 05:56:23 PM »
மாவட்டங்களின் கதைகள் - மதுரை மாவட்டம் ( Madurai District)

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த சான்றோர்கள் வாழ்ந்த இடம்


எல்லைகள்: இதன் வடக்கில் திருச்சி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களும்: தெற்கில் விருதுநகர் மாவட்டமும்; கிழக்கில் சிவகங்கை மாவட்டமும்: மேற்கில் தேனி மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளன.


வரலாறு: புராணங்களில் இது கடம்ப வனம் என்று வழங்கப்படுகிறது. ஒருமுறை இவ்வனத்தின் வழியாகச் சென்ற தனஞ்செயம் என்னும் விவசாயி, ஒரு கடம்ப மரத்தினடியில் தேவேந்திரம் ஒரு சுயம்புலிங்கத்தை தியானித்து நிற்பதைக் கண்டார். விரைந்து மன்னர் குலசேகரப் பாண்டியனிடம் தகவல் சொல்ல, அவர் வனத்தை சீராக்கி, சிவலிங்கம் இருந்த இடத்தைச் சுற்றி ஒரு கோவிலைக் கட்டினார். சிவபெருமானின் திருமுடியிலிருந்து வழிந்த மதுரம் (தேன்) வாழ்ந்த இடமானதால் இது மதுரை எனப் பெயர் பெற்றது. மதுரை பெயர்க்காரணம் பற்றிய ஐதீகக் கதை.

1786-ல் மதுரை மாவட்டம் உருவாக்கப்பட்டது.

1996-இல் இம் மாவட்டத்திலிருந்து தேனி மாவட்டம் புதியதாக உருவாகப்பட்டது.

நிர்வாகப் பிரிவுகள்:

வருவாய் கோட்டங்கள் - 2
மதுரை, உசிலம்பட்டி,
தாலூகாக்கள் - 7: மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மேலூர், பேரையூர், திருமங்கலம், உசிலம்பட்டி, வாடிப்பட்டி
மாநகராட்சி -1: மதுரை
நகராட்சிகள்-6: மேலூர், திருமங்கலம், உசிலம்பட்டி, ஆனையூர், அவனியாபுரம், திருப்பரங்குன்றம். ஊராட்சி ஒன்றியங்கள்-13: அலங்காநல்லூர், செம்பட்டி, கள்ளிக்குடி, கொட்டாம்பட்டி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு,மேலூர், சேடப்பட்டி, டி. கல்லூப்பட்டி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி, வாடிப்பட்டி.

முக்கிய ஆறுகள்: பெரியாறு, வைகை

குறிப்பிடத்தக்க இடங்கள்
திருமலை நாயக்கர் அரண்மனை: திருமலை நாயக்கரால் கட்டப்பட்டட இந்த அரண்மனை சுற்றுலாப்பயணிகளை ஈர்த்துவருகிறது.

நாயக்கர் மஹாலின் உட்புறத்தோற்றம்

குட்லாம்பட்டி அருவி: மதுரை - கொடைக்கானல்சாலையில், 36 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது.


ஸ்ரீ அரவிந்தர் அன்னை தியான மண்டபம்: மதுரை இரயில் நிலையத்திலிருந்து பத்து கி.மீ தொலைவில் திருநகரில் உள்ள இந்த இதயான மண்டபம் ஸ்ரீ அரவிந்தர் அனைக்கு அர்ப்பணிக்கபட்டது. மிகப் பழமையான தியான மண்டபம்.

கூடல் அழகர் கோவில்: கூடலழகரான திருமால் நின்ற கோலத்திலும், அமர்ந்த கோலத்திலும், கிடந்த கோலத்திலும் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

கோச்சடை அய்யனார் கோவில்: வட்டாரப் பண்பாட்டின் அடையாளமாக எழுந்து நிற்கும் இக்கோயில் குடிகொண்டிருக்கும் கோச்சடை அய்யனார் மதுரை மக்களின் காவல் தெய்வமாக வணங்கப்பட்டு வருகிறார்.

வண்டியூர் மாரியம்மன் கோவில்: மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து ஐந்து கி.மீ. தொலைவில் அமைந்திருக்கும் தெப்பக் குளக்கரையில் அமைந்திருக்கும் தெப்பக் குளக்கரையில் அமைந்துள்ள புகழ்பெற்ற கோயில். திருமலைநாயக்கர், மகால் கட்டுவதற்காக மண் எடுக்கப்பட்ட இடத்தை அப்படியே தெப்பக்குளமாக்கி விட்டார். இத் தெப்பக்குளத்தின் மையத்தில் ஒரு பிள்ளையார் கோயிலும் உள்ளது.

ஸ்ரீமத் நடனகோபால நாயகி சுவாமிகள்

(1943-1914) 'மதுரையில் ஜோதி' என்றும் சௌராஷ்டிர ஆழ்வார் என்றும் போற்றப்படுபவர். கடவுளை நாயகனாகவும், தன்னை நாயகியாகவும் பாவித்து இவர் பாடிய கீர்த்தனைகள் கேட்போர் உள்ளத்தைக் கொள்ளை கொள்பவை.


இருப்பிடமும் சிறப்புகளும்:

சென்னையிலிருந்து 447 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

தமிழகத்தின் 'உறங்கா நகரம்' அல்லது 'தூங்கா நகரம்'

மதுரை பொற்றாமைக் குளக்கரைச் சுவர்களில் 1330 குறள்கள் பதிக்கப்பட்டுள்ளன.

மதுரையம்பதி, கூடல் நகர், கடம்பவனம் மதுரையின் சிறப்பு பெயர்கள்

பாண்டிய மன்னர்களின் தலைநகரம்.

கலாச்சாரப் பெருமை மிக்க புகழ்பெற்ற சுல்லாத்தலம்.

மதுரையில் விமான நிலையம் செயல்பட்டு வருகிறது.

மதுரையின் பஞ்சப்பட்டிப் பகுதியில் நவரத்தினக் கற்கள் கிடைக்கின்றன.

ராணி மங்கம்மாள் சத்திரத்தில் அமைந்துள்ள காந்தி அருங்காட்சியகத்தில், விடுதலைப்போரின் முக்கிய நிகழ்வுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் சில முக்கிய இடங்கள்: திருப்பரங்குன்றம், அழகர் மலை, மீனாட்சியம்மன் கோவில், பழமுதிர்சோலை, திருப்பரங்குன்றம்.

ஏப்ரல்-மே மாத்ததில் நடைபெறும் சித்திரைத் திருவிழா பிரபலமானது. அழகர் ஆற்றில் இறங்கும் முக்கிய விழாவே திருவிழாவின் முக்கிய அம்சம்.


Offline kanmani

Re: Idhu enga oorunga
« Reply #5 on: October 29, 2012, 05:58:30 PM »
மாவட்டங்களின் கதைகள் - நாமக்கல் மாவட்டம் - (Namakkal District - Tamilnadu)

தமிழகத்தின் கோழிப்பண்ணை மாவட்டம்


எல்லைகள்: இதன் கிழக்கே பெரம்பலூர் மற்றும் திருச்சி மாவட்டங்களும், மேற்கே ஈரோடு மாவட்டமும்: வடக்கே சேலம் மாவட்டமும், தெற்கில் கரூர் மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளன.

வரலாறு: சேலம் மாவட்டத்தில் இருந்தது 1997, ஜனவரி ஒன்றாம் தேதி நாமக்கல் மாவட்டம் உருவாக்கபட்டது.

கனிமம்: மேக்னசைட், பாக்சைட், குவார்ட்ஸ், சுண்ணாம்புக்கல், கிரானைட்

முக்கிய ஆறுகள்: காவிரி

முக்கிய இடங்கள்:

ஐயாறு: சித்தன் குட்டி மலை உச்சியில் தோன்றும் ஆரோச்சி ஆறு, காப்பபாடியாறு, மூலை, ஆறு, மாசிமலை அருவி, நக்காட்டடி ஆறு என்னும் ஐந்ததுஆறுகள் சங்கமித்து ஒன்றாக உருவெடுத்து வருவதால் இதற்கு  இப்பெயர் வந்தது.  4500 அடி உயரத்திலிருந்து வரும் இந்த ஆற்றுக்கு வெள்ளைப் பாழி ஆறு என்றும் பெயர் உள்ளது.  கொல்லிமலையின் பல இடங்களைத் தொடும் இந்த ஆறு, அங்குள்ள அரப்பள்ளீஸ்வரர் கோவிலுக்கு அப்பால் விழுந்து ஆகாச கங்கை எனப் பெயர் பெறுகிறது.  புளியஞ்சோலை என்னும் இடத்தில் காவிரியுடன் கலக்கிறது.

கொல்லிமலை ஆகாச கங்கை: சுமார் 1190 மீ. உயரமுள்ள கொல்லிமலை முழுவதும் மூலிகைகள் நிறைந்தது.  அரசு மூலிகைப் பண்ணை தாவரத்தோட்டம் உள்ளது.  ஆகாச கங்கையருவி மூலிகை மகத்துவம் மிக்கது. பல்வேறு சித்தர்கள் வாழ்ந்த குகைகள் உள்ளன.  ஆண்டுதோறும் இங்கு கடையேழு வள்ளல்களில் ஒருவரான ஓரிக்கு விழா நடத்தப்படுகிறது.

கொல்லிமலை - ஆகாச கங்கை

கொல்லிமலை - இயற்கை காட்சிகள்
கொல்லிமலையின் ஒரு பகுதி

பனிபடர்ந்த எழிலார்ந்த கொல்லிமலை

பனிபடர்ந்த கொல்லிமலை

நாமக்கல் ஆஞ்சநேயர்: ஒரே கல்லில் 200 அடி உயரத்தில் செதுக்கப்பட்ட அனுமன் கோயில்.

நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர்



அர்த்தநாரீஸ்வரர் கோயில்: தமிழகத்தில் சிவபெருமான் அர்த்தநீஸ்வரராகக் காட்சியளிக்கும் ஒரே கோயில் இதுதான்.  இக்கோயில் மூலவரின் உயரம் ஐந்து அடி.  மூலவர் சிலையை சித்தர்கள் மூலிகைகளால் வடித்துள்ளதாகக் கருதப்படுகிறது.

திருச்செங்கோடு - அர்த்தநாரீஸ்வரர்
திருச்செங்கோடு மலையின் முன் பகுதி தோற்றம்

கவிஞர் ராமலிங்கம் பிள்ளை நினைவில்லம்:

இருபதாம் நூற்றாண்டு தமிழ்க் கவிஞர்களின் புகழ்பெற்ற இவ்விடுதலைவீரர் நினைவாக 2000 ஆண்டு திறக்கப்பட்டது.

நாமக்கல் கவிஞரின் நினைவில்லம் இப்போது நூலகமாக..
நாமக்கல் துர்க்கம் கோட்டை: உறுதிமிக்க இக்கோட்டைத் தூண் வரலாற்றுத் தொடர்ச்சியாக இம்மாவட்டத்தை அடையாளப்படுத்தி நிற்கிறது.
நாமக்கல் கோட்டை

நிர்வாகப் பிரிவுகள்:

வருவாய் கோட்டங்கள்: நாமக்கல், திருச்சிங்கோடு
தாலுகாக்கள்: -4: நாமக்கல், திருச்செங்கோடு, பரமத்தி, - வேலூர், இராசிபுரம்
நகராட்சிகள்- 5: நாமக்கல், திருச்செங்கோடு, குமாரபாளையம்,ராசிபுரம், பள்ளிப்பாளையம்

ஊராட்சி ஒன்றியங்கள்-15: எலச்சிப்பாளையம், எருமப்பட்டி, கபிலர்மலை, கொல்லிமலை,மல்ல முத்திரம், மோகனூர், நாமகிரிப்பேட்டை, நாமக்கல், பள்ளிப்பாளையம், பரமத்தி, புதுச்சத்திரம், ராசிபுரம், சேந்தமங்கலம், திருச்செங்கோடு, வெண்ணந்தூர்.

இருப்பிடமும், சிறப்புகளும்:

சென்னையிலிருந்து 370 கி.மீ. தொலைவில் உள்ளது.

பல்வேறு சித்தர்கள் வாழ்ந்த குகைகள் கொல்லிமலையில் உள்ளன.

தமிழகத்திலேயே அதிக மினிப் பேருந்துகள் இயங்கும் மாவட்டம் இது.

கோழிப்பண்ணைத் தொழில் முக்கியமானது.

லாரித் தொழிலும் சிறப்பாக நடைபெறுகிறது.

கொல்லிமலை, ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி

திருச்செங்கோடு காந்தி ஆஸ்ரமம்

முக்கிய தொழில்கள்:  சங்ககிரி இந்தியா சிமெண்ட் தொழிற்சாலை(Sankakiri Indian cement industry), திருச்செங்கோடு நூற்பாலைகள்(Textile Thiruchengode), குமாரபாளையம் சோப்புத் தொழில். , kumarapalaiyam soap industry.

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வர்ர் கோயில், காளிப்பட்டி ஸ்ரீ கந்தசாமி கோவில், கொல்லிமலை அறப்பளீஸ்வரர் கோயில்.