FTC Forum

தமிழ்ப் பூங்கா => கதைகள் => Topic started by: MysteRy on May 03, 2013, 09:55:33 PM

Title: ~ சுவாரசியமான முல்லா கதை சிரிப்பதற்கும் சிந்திப்பதற்கும் !! ~
Post by: MysteRy on May 03, 2013, 09:55:33 PM
சுவாரசியமான முல்லா கதை சிரிப்பதற்கும் சிந்திப்பதற்கும் !!

(http://sphotos-g.ak.fbcdn.net/hphotos-ak-frc1/575462_371402122965294_1793800238_n.jpg) (http://www.friendstamilchat.com)


நான் படித்த முல்லா கதை ஒன்னு.. முல்லா ஒருமுறை பக்கத்து வீட்டுக்காரரிடம் ஒரு பானை இரவல் வாங்கினாராம். பல நாட்கள் வரை முல்லா பானையை திருப்பி தராததால், பக்கத்து வீட்டுக்காரர் வந்து பானையை திருப்பி கேட்டார். அதற்கு முல்லா “அடடே…, உங்களிடம் வாங்கிய பானையை திருப்பி கொடுக்காமல் இருந்ததிலும் ஒரு லாபம் இருக்கின்றது. அந்த பானை ஒரு குட்டி போட்டு இருக்கின்றது, “என்று சொல்லி அதனுடன் ஒரு சிறிய பானையும் கொடுத்தார். பக்கத்து வீட்டுக்காரர் மகிழ்ச்சியில் இரண்டு பானையும் வாங்கிசென்றார்.

அதேபோல் சில நாட்களுக்கு பின் முல்லா அந்த பக்கத்து வீட்டுக்காரரிடம் “முன்பு கொடுத்ததை விட பெரிய பானை ஒன்று இரவல் கொடுக்க முடியுமா?” என்று கேட்டார். பக்கத்துவீட்டுகாரர் ஒன்றுக்கு இரண்டாக கிடைக்கும் என்ற மகிழ்ச்சியில் பெரிய பானை ஒன்றை கொடுத்தார். பல நாட்கள் ஆகியும் முல்லா பானையை திருப்பி தரவில்லை. பின் தயங்கி தயங்கி பக்கத்து வீட்டுக்காரர் முல்லாவிடம் வந்து பானையை திருப்பி கேட்டார்.

” அத ஏன் கேக்கறீக அந்த பானை நேற்றுதான் செத்து போச்சு” என்றார் முல்லா. கோபம் அடைந்த பக்கத்து வீட்டுக்காரர் “என்னது என்னை என்ன இழிச்சாவாயன் என்று நினைத்தாயா? பானை எப்படி செத்து போகும் ” என்று கோபமுற்றார். அதற்கு முல்லா ” பானை குட்டி போட்டதை நம்பு பொழுது ஏன் செத்து போனதை நம்பமுடியாது? ” என்று முல்லா கேட்டதும் பக்கத்து வீட்டுக்காரர் தலைகுனிந்து சென்றுவிட்டார்……

ஆமங்க பொய் சொல்வது எவ்வளவு தப்புனு நினைக்கின்றோமோ அதை விட பொய் என்று தெரிந்தும் நம்புவது மிக பெரிய தப்புங்கோ…. அதுபோல தவறு என்று தெரிந்தும் அதையே செய்யுறது எவ்வளவு தப்பு?… ஆனா அதை நாம் செஞ்சுக்கொண்டே இருக்கின்றோமே ஏன்? அதை பற்றி அடுத்த பதிவுல பாக்கலாங்க…..