FTC Forum

தமிழ்ப் பூங்கா => கதைகள் => Topic started by: தமிழன் on February 14, 2014, 09:20:41 AM

Title: தட்டுங்கள் திறக்கப்படும்
Post by: தமிழன் on February 14, 2014, 09:20:41 AM
ஒரு சீனக் கதை இது.
சுவாங் ட்ஸுவின் வீட்டு தோட்டத்தில் ஒரு ரோஜா செடி இருந்தது. அது அபரிதமாக பூத்து வந்தது.
   திடீரென அது பூப்பதை நிறுத்திவிட்டது.
சுவாங்கு கவலை உண்டானது. அவை அந்த ரோஜாசெடியை மிகவும் நேசித்தார்.
அந்த செடிமீது அவர் இன்னும் கவனம் செலுத்தினார்.
ஆனாலும் ஏதும் நடக்கவில்லை. ரோஜா பூக்கவில்லை. வாரங்கள் கடந்தன. மாதங்கள் ஆகின.
ஓர் நாள், எதோ தவறு நடந்திருக்கிறது என்ற எண்ணம் அவருக்கு தோன்றியது.
இனி ஏதும் செய்ய முடியாது என்ற முடிவுக்கு அவர் வந்தார். அந்த நேரத்தில் ரோஜாசெடி பேசியது.
" ஐயா தவறு என்னிடம் இல்லை. என்னை சுற்றிஇருக்கும் மோசமான சூழ்நிலை காரணமாகவே என்னால் பூக்க முடியவில்லை.
இந்த மண்ணைப் பாருங்கள். இதில் சத்தே இல்லை. இதோ, என்னை சுற்றி இருக்கும் பாறைகளைப் பாருங்கள். நீர் தேடிச் செல்லும் என் வேர்களை இவை தடை செய்கின்றன.
   அதோ. அந்த சூரியனைப் பாருங்கள். எவ்வளவு சூடு! இந்த சூழ்நிலை யில் நான் எப்படி பூப்பேன்?
    நான் இங்கே தனியாக இருக்கிறேன். எனக்கு துணையாக வேறு செடிகளும் இருந்தால் நானும் உற்சாகமாக இருப்பேன். நன்றாக பூப்பேன்."

இதைக் கேட்டு சுவாங் வெயிலை தடுப்பதற்கு பந்தல் போட்டார்.  அழகுக்கு பதித்திருந்த கற்களை அகற்றினார். மண்ணையும் மாற்றினார். அருகில் வேறு செடிகளையும் நாட்டினார்.
      ஆனால் ஏதும் நடக்கவில்லை. ரோஜாசெடி பூக்கவும் இல்லை. வாரங்கள் கடந்தன.
      ஒரு நாள், சுவாங் ரோஜா செடியை பார்த்து, " நான் சொல்கிறேன் என்று வருந்தாதே. சுற்றுச் சூழலில் எந்த தவறும் இல்லை. தவறு உன்னிடம் தான் இருக்கிறத்து. எனக்கு ஒரு சீடர் இருந்தார். அவர் வழக்காடுபவர். அவர் எப்போதும் பிறர் மேலே குற்றம் சுமத்துவார். அதனால் அவர் மாறவே இல்லை. நீயும் அவரை போலவே இருகிறாய்." என்றார்.
      அந்த ரோஜாசெடி சிரித்தது. " ஐயா உங்களுடைய அந்த சீடர் என்னையும் கெடுத்து விட்டார். நான் அவரை பின்பற்றி வந்தேன் " என்றது.
      அடுத்த நாள் செடியில் மாற்றம் தெரிந்தது. அது பசுமையானது. பூக்கள் மலரத் தொடங்கின.
  பந்தலை அகற்றி விட்டார். பாறைகள் மீண்டும் பதிக்கப்பட்டன. சுற்றுப்புற சுழல் பழையபடி ஆனது.
    ஆனால், ரோஜாசெடி பெரிய பூக்களாக. முன்பை விட அதிகம் பூக்கத் தொடங்கியது.
    இது ஒரு அழகான கதை
பெரும்பாலோனோர் மீது குற்றம் சுமதுபவர்களாகவே இருக்கின்றனர்.
  கணவன் மனைவி மீது குற்றம் சொல்கிறான். மனைவி கணவன் மேல் குற்றம் சொல்கிறாள்.
    பெற்றோர் பிள்ளைகள் மீது குற்றம் சொல்கிறார்கள். பிள்ளைகள் பெற்றோர் மீது குற்றம் சொல்கிறார்கள்.
     ஆசிரியர்கள் மாணவர்கள் மீது குற்றம் சொல்கிறார்கள். மாணவர்கள் ஆசிரியர்கள் மீது குற்றம் சொல்கிறார்கள்.
    மக்கள் தலைவர்கள் மீது குற்றம் சொல்கிறார்கள். தலைவர்கள் மக்கள் மீது குற்றம் சொல்கிறர்கள்.
      பிறர் மீது குற்றம் சொல்பவன் தன் குறைகளை காணமாட்டான்.
    தன் நோயை அறியாதவன் மருந்துண்ண மாட்டான்.
    வீடும் நாடும் நன்றக இல்லாமல் இருப்பதற்குக் காரணம் ஒவ்வொருவரும் மற்றவர் மீது குற்றம் சொல்லிக் கொண்டிருப்பது தான்.
         நல்லது நடந்தால் அதில் பங்கு. தீயது நடந்தால் அதை மற்றவர் மீது போட்டு விடுவது. இது தான் மனித இயல்பு.
     தன குறை தெரிந்து திருந்தாதவன் வளரமாட்டான்.

பாலர் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும் தங்கள் வறுமைக்குக் காரணம் என் பிறரை தான் கூறுகிறார்கள்.
உழைக்காத சோம்பேறிகள் விதியின் மேல் பழி போடுகிறார்கள்
உழைத்தால் உயரலாம் என்பது விதி. அதை பலர் உணர்வதில்லை.
இறைவன் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு ஆற்றலை கொடுத்திருக்கிறான். ஒவ்வொரு மனிதனும் தனது சுயம் எது தனது ஆற்றல் எது என் உணர்ந்து கொண்டால் வாழ்வில் வெற்றி நிச்சயம் பெறுவான்..
அதற்கு பூட்டிக் கிடக்கும் உன் மனதை தட்டு.
தட்டினால் திறக்கப்படும் என்றார் கிறிஸ்து.
அவர் சொன்னது அடுத்தவன் வீட்டுக் கதவை அல்ல.
அடுத்தன் வீட்டுக் கதவை தட்டுவதால் நீ உன் வீடு போய் சேர  மாட்டாய். உன் வீட்டுக் கதவை தட்டு.
இயேசு சொன்ன கதவு நம் மனக் கதவு. தன மனக் கதவை தட்டுபவனே தன் மனதை திறக்கிறான்.
தன மனதை திறந்தவனே தன குறைகளையும், தன ஆற்றலையும் அறிகிறான் .
தன குறைகளை அறிந்தவன் வாழ்க்கையை அறிந்தவன் ஆகிறான்.
வாழ்க்கையை அறிந்தவன் அதில் வெற்றி பெறுகிறான்.