Author Topic: இன்றைய ராசி பலன்கள் - 31/12/2013 (Dec 31st)  (Read 861 times)

Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
இன்றைய ராசி பலன்கள் - 31/12/2013 (Dec 31st)

  மேஷம் :

கணவன் - மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பிரச்னைகளுக்கு யதார்த்தமான முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். உறவினர்களால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் வேலையாட்கள் உதவுவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறங்கள் : பிஸ்தா பச்சை,மஞ்சள்


ரிஷபம் :

பிள்ளைகளிடம் எதிர்மறையாக பேச வேண்டாம். பழைய கடன் பிரச்சனை அவ்வப் போது மனசை வாட்டும். பணம், நகையை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கப்பாருங்கள். அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறங்கள் : மெரூண்,வெள்ளை


மிதுனம் :

இன்றையதினம் வீண் சந்தேகமும், மறைமுக விமர்சனங்களும் வந்துச் செல்லும். உறவினர், நண்பர்கள் சிலர் பணம் கேட்டு தொந்தரவு தருவார்கள். லேசாக தலை வலிக்கும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரக்கூடும். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறங்கள் : மயில்நீலம்,பிங்க்


கடகம் :

ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார். வீட்டை புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்தியோ கத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆலிவ்பச்சை,ரோஸ்


சிம்மம் :

எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்தியோ கத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறங்கள் : இளஞ்சிவப்பு,க்ரீம்வெள்ளை


கன்னி :

குடும்பத்தினரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறங்கள் : அடர்சிவப்பு,கிரே


துலாம் :

உறவினர், நண்பர்களைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். சிலர் உங்கள் மீது வீண் பழி சுமத்த முயற்சி செய்வார்கள். புது முதலீடுகளை தவிர்க்கவும். வியாபாரத்தில் ரகசியங்கள் கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உத்தியோ கத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறங்கள் : ரோஸ்,வைலெட்


விருச்சிகம் :

உங்கள் பலம் பலவீனத்தை உணருவீர்கள். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். வாகனத்தை சரி செய்வீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோ கத்தில் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு வரும். அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு,ஊதா


தனுசு :

குடும்பத்தில் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். சொந்த - பந்தங்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறங்கள் : இளஞ்சிவப்பு,பிங்க்


மகரம் :

வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம் குறித்து யோசிப்பீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறங்கள் : ப்ரவுன்,வெளிர் நீலம்


கும்பம் :

எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். பால்ய நண்பர்கள் தேடி வருவார்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் பங்குதாரரை மாற்றுவீர்கள். உத்தியோ கத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறங்கள் : கிரே,இளஞ்சிவப்பு


மீனம் :

சவாலில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறைக் காட்டுவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. சொத்து சிக்கலில் சுமூக தீர்வு காண்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறங்கள் : ப்ரவுன்,கிளிப்பச்சை