Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 297  (Read 1321 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 297

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


Offline VenMaThI

  • FTC Team
  • Full Member
  • ***
  • Posts: 183
  • Total likes: 789
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum



இசை

தாயின் தாலாட்டில் தொடங்கிய இசைப்பயணம்…

மொழியும் தேவை இல்லை
அதன் அர்த்தமும் தேவை இல்லை
மொழி.. மதம்.. நாடு மட்டுமின்றி
ஆண் பெண் என்ற பாகுபாடுமின்றி
கேட்பவர் உள்ளத்தை கொள்ளை கொள்ள
இசையை மிஞ்சும் ஒரு சக்தியும் உண்டோ

மழலையின் சிரிப்பும் இசை
மழலையின் அழுகையும் இசை
பறவையின் மொழியும் இசை
கடலின் அலையும் இசை
காற்றின் அசைவும் இசை
இரவில் தவளையின் சத்தமும் இசை
இடியின் முழக்கமும் இசை
இதயத்தின் துடிப்பும் இசை
மனிதனின் கைத்தட்டும் இசை
மங்கையின் காலில் கொலுசும் இசை
வண்டின் ரீங்காரமும் இசை
சங்கின் ஒங்காரமும் இசை

காதலர்களை..
காடு மலை தாண்டி
கண்டம் பலவும் தாண்டி
கனவுலகில் கைகோர்த்து
களிப்படைய செய்யும் இசை

ஆராத மனதும் ஆறும் ஆடாத காலும் ஆடும்
காதலின் ஆழம் புரியும் மனதின் வலிகள் பறக்கும்
என்றோ நடந்ததை நினைவில் கூறும்
தொலைவில் இருப்பவரை அருகில் காட்டும்
கருத்தான கவிதைக்கும் உயிரோட்டம் தரும் இசை

இசை
தனிமையின் துணை
காதலின் காதல்
இயற்கையின் வருடல்
மழையின் சாரல்
பயணத்தின் தோழன்



அழுகும் மனமும் ஆறுதல் அடையும்
சிரிப்பில் ஆனந்த கண்ணீர் சொரியும்
சொல்லாக்காதலையும் புரியவைக்கும்
சொல்லும் கருத்தையும் உணர வைக்கும்
தன்னிலை மறந்து தன் கவலையும் மறந்து
மனதின் ரணம் அது குறைந்து
இசையில் மயங்கா மனமும் உண்டோ

எதுகை மோனை தேவை இல்லை
ஏட்டு கல்வியும் தேவை இல்லை
பாமரனும் படிக்கும் பாட்டு
பாரினில் பரவும் எட்டுதிக்கு
சிலரின் வாய்மொழி இசை
சிலரின் கைவினை இசை


ஜனனம் முதல் மரணம் வரை
ஜகத்தில் வாழும் உயிர்களுக்கெல்லாம்
இறைவன் கொடுத்த ஈடில்லா தோழன் இசையே

மனமே
பாரங்கள் குறைய
காதலை உணர
பிரிவைப்போக்க
ரணங்கள் ஆற
இரவின் மடியில் இமைதனை மூடி
இசையை சுவாசி......

❤️❤️ ♫ ♬ 🎵 🎼 🎶 ♩ 🎻 🎹 🎸 🎧 ❤️❤️



Offline Sun FloweR

  • Full Member
  • *
  • Posts: 127
  • Total likes: 761
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
தாயின் மடி இசை..
தந்தையின் பாதுகாவல் இசை..

தோழியின் நெருக்கம் இசை..
தோழனின் அணைப்பு இசை..

காதலின் ரீங்காரம் இசை..
கண்ணீரின் ஓங்காரம் இசை..

ஜனனத்தின் துவக்கம் இசை..
மரணத்தின் முடிவு இசை..

பால்யத்தின் தேடல் இசை..
பதின்மத்தின் பரிதவிப்பு இசை..

காமத்தின் ஆர்ப்பாட்டம் இசை..
இறைமையின் மௌனம் இசை..

உருவமற்ற இசை..
உயிர் மீட்டும் இசை..

உணர்வை எழுப்பும் இசை..
உணர்வை செதுக்கும் இசை..

என்றும் புதியதும் இசை..
என்றும் பழையதும் இசை..

இசையால் பிறந்து,
இசையால் வளர்ந்து,
இசையால்
மரித்துப் போகும் மானுடம்...

பிறப்பும் இல்லாது,
இறப்பும் இல்லாது,
என்றும்  வாழ்ந்திருக்கும்
செழித்திருக்கும் நித்ய இசை...
« Last Edit: September 14, 2022, 04:42:58 PM by Sun FloweR »

Offline Charlie

  • Newbie
  • *
  • Posts: 20
  • Total likes: 57
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
இசைக்கு இயங்காத இதயங்கள் உண்டோ!!

உண்டால் தான் தேனின் சுவை தெரியும்!!
உணர்ந்தால்  தான் இசையின் இனிமை புரியும்!!

இசையே நீ பூங்க்காற்றிலே பட்டாடை கட்டி வரும்  பைங்கிளியே!!!

இசையே நீ இதயக்கூட்டில் கூடு கட்டி குடியேருகிறாயே!!!

இசையே என் மனக்காயங்களுக்கு மருந்தாய் வந்து நண்பனாகிறாயே!!!

இசையே எனைக்கிறங்கடித்து  பறக்க வைக்கும் காதலியாகிறாயே!!!

இசையே இரவில் எனைத்தூங்கவைப்பதால் என் உயிர் தாயாகிறாயே!!!

இசையே செவிக்கு  மட்டும் வரமாய் நீ!!

இசையே மகிழ்ச்சியில் உன் ரசிகனாய் நான்!!

இசையே உனை உணர்ந்ததால் மனமுருகி கண்ணீராய் நீ!!!

இசையே  துன்பத்தில் உன் வரிகளாய் நான்!!

இசையே ராகமாய் தாளமாய் பிறந்திடுவாயாக!!!

இசையே என் இதயத்தை மழை துளியால் நனைத்திடுவாயாக!!!

இசை என்னும் சிறகு முளைக்க
மனமோ மகிழ்ச்சியில் திழைக்க
இந்த வரம் போதுமடி !!!

என் உடல் வளர்த்தவள் தாய்தானடி!!!

என் உயிர் வளர்த்தவள் இன்னிசை நீதானடி!!!

Note :  Entha kavithaiya padikiravangaluku  isai engirunthu varuthu theriyumngra vadivelu joke  ah dedicate pannikiren hahahahah just for fun  😝😜
« Last Edit: September 19, 2022, 11:12:13 PM by Charlie »

Offline Tee_Jy

  • Jr. Member
  • *
  • Posts: 89
  • Total likes: 226
  • Karma: +0/-0
  • Gender: Male
  • hi i am Just New to this forum
  மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்திலும் இசை நிறைந்திருக்கிறது......

பிறப்பில் நீ எழுப்பிய அழுகை எனும் இசை....
பிறந்ததும் அப்பன் அள்ளியணைத்து கொஞ்சியது இசை...!
அன்னை தாலாட்டியது இசை...!
நடை பழகும்போது வந்த கொலுசின் சத்தம் இசை....
அதைகண்டு பூரித்துக்கொள்ளும் பெற்றோரின் சிரிப்பு இசை....!
இப்படி வாழ்வில் எல்லாவற்றிலும் இசை நிறைந்திருக்க.

இறப்பினில்  மீண்டும் உனை எழுப்ப துடிப்பவர்களின் அழுகையும் ஒரு வகை இசை....

இசையே.....
உனக்கும்  நினைவுகளை தூண்டும் சக்தி உண்டு...!

சில கணம்  வலிக்கும் அளவிற்கு...
சில கணம் அவளோடு இருந்த நாட்களை எண்ணி மனதிற்குள் என்னை அறியாமல் புன்னகைக்கும் அளவிற்கு.......

செவியில் ஒலியாய் மனதோடு உரையாடும் இசையே...!
இரவின் இருளில் உலகம் சூழ்ந்திருக்க உன்னால் பிழைத்திருக்கிறேன் என்னவளின் பொன்னான நினைவுகளுடன் எனையரியாமல் கண்களின் ஓரம் வடியும் கண்ணீர்த் துளிகளோடு...

தனிமையின் வேதனையில் தவழும் போது என்னவளின் நினைவுகளை கொண்டு வருகிறது இசை...!
அக்கணம் என்னருகில் என்னவளை உணர்கிறேன்....
அவ்இசைக்கு நன்றி...

என் இதய துடிப்பும் ஒரு வகை இசைத்தான் அவைக்கூட மெட்டுகள் போட்டு அவள் பெயரையே இசைகின்றது....!!

அனைத்திற்கும்மேல் இடுகாட்டில் நான் படுத்திருக்கும்போது என்னை சுட்டெரிக்கும் தீ  எழுப்பும் இசையையும் ரசிக்கிறேன்...!!!

அவள் பெயரை இசைத்த இதயம் இசைக்காமல் நின்றதற்கான தண்டனையாக எண்ணி...

இயற்கையோடு அசையும் இதயமே இசையோடு இணைய கற்றுக்கொள்...... 
« Last Edit: September 19, 2022, 04:05:17 PM by Tee_Jy »

Offline SweeTie

மழைத்துளிபோல்  வந்த இசைத்தத்துளியே 
உன் அகராதி நான் அறியேன் 
நீ  பிறந்த  நாடும்  நான்  அறியேன் 
கொண்டாடும்  மொழியும்  அறிந்திலேன்

காலை கதிரவனை  வரவேற்க   
பறவைகள்  வைகறையில்  பாடுவதும் இசை
தாய் பசுவை  தேடும்  இளங்கன்று
ம்மா.... ம்மா.  என  கதறுவதும் இசை

நீலக்  கடல் அலைகள் 
நிற்காமல்   இசைப்பதும்   இசை 
சோலைக்   குயில்கள் 
கூ    கூ   என கூவுவதும் இசை

இடியோடு  கூடிய  கோடைமழை
இசைக் கிறதும்   இசை
கொடி  மரம் அனைத்தையும் 
அடியோடு  சாய்க்கும் புயலும் இசை

மலரிடம்  மயங்கி  மகரந்தம்  அருந்தி
வண்டுகள் பாடும்   ரீங்காரம்
மாரியில்  நிரம்பும்   குட்டை குளங்களில்   
தவளைகள்    பாடும்  காம்போதி

இறைவனை துதிக்கவும்  இசை
இனிமையாய்  வாழவும் இசை 
இழி சொல்லால்  திட்டுவது வசை
இன்  சொல்லல் பேசுவது சுவை

காலையில்  அன்னையின்   சுப்ரபாதம்
மாலையில்  காதலியின் மதுரகீதம்
மதியம்   வசை பாடும்   உறவுகளும்
மறப்பதற்கு   மதுவோடு  நண்பர்களும். ..

வாழ்க்கையின்  தொடக்கம் தாலாட்டு
முடிவில்  கேட்காமல் போவது   ஒப்பாரி 
நடுவில் கேட்பதும்   ரசிப்பதும்தான் 
எத்தனை   ரகமான   இசை வரிசை
என்ன உலகமடா  இது !




 
« Last Edit: September 18, 2022, 11:16:07 PM by SweeTie »

Offline KS Saravanan

இசையே உனது பிறப்பிடம் எது..?

ஆழ்கடலின் ஆழத்தில் நிலவும் நிசப்தமும்
ஓர் இசை..!
ஆர்ப்பரிக்கும் கடலையையும் ஓர் இசையே..!

கல்தோன்றா மண்தோன்றா காலத்திற்கும்
முன்தோண்றிய நிசப்தம் எனும் இசையே

உனது பிறப்பின் ரகசியம் என்னவோ..?
எப்பொழுது எங்கு பிறந்தாய் என்று
அறிந்தவர் யாரோ..!
அனைத்தும் அறிந்த அந்த ஆண்டவனால் கூட
இதற்கு பதில் அளிக்க முடியாமல் போகலாம்..!

எண்ணிலடங்கா பல பரிமாணங்களை கொண்ட நீ
எங்கும் இருக்கிறாய்..!

இறைவன் எங்கும் இருப்பான் எதிலும் இருப்பான்
என்பது, ஆன்றோர்கள் சான்றோர்கள் மற்றும்
முன்னோர்கள் கூறிய முன்மொழி

அத்தகைய முன்மொழியை,

இசையே உன்னை உவமையாக வைத்துத்தான்
கூறி இருப்பார்களோ என எனக்கு
ஐயம் உண்டு என்பதில் ஆச்சர்யம் இல்லை..!

பனிக்குடம் முதல் மண்குடம் வரை
நிழல் கூட இருளின் பிடியில் மறையலாம்..!

ஆனால் இசையே..
நீ எப்போதும் உடன் இருக்கிறாய்..!

நீரின்றி அமையாது உலகு என்பது
வள்ளுவரின் வாக்கு..!

இசையே..
நீ இன்றி இவ்வுலகமே இல்லை என்பது
ஏட்டுரையில் ஏற்றப்படாத
எவர் கற்பனைக்கும் கட்டுப்படாத
பஞ்ச பூதங்களையும் ஆற்க்கொள்ளும்
ஆளுமை நீ..!

இசையே..!
உன்னை எவ்வடிவத்திலும் உருவகப்படுத்தி
போற்றிட முடியவில்லை..!

ஆகையால் வணங்குகிறேன்..!

« Last Edit: September 23, 2022, 12:14:22 AM by KS Saravanan »


Offline CharmY

  • Newbie
  • *
  • Posts: 38
  • Total likes: 77
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
வர்ணங்களை கொண்டு வலை விரித்து...
வானை தொடும் தூரம் வரை...
பறந்த இசை ஒலியில்....
பல நூறு நிறங்களாய்...
படர்ந்து கிடக்கும் ஓசையிலே...
உள்ளம் திறந்து.... ஊனம் மறந்து...
செவி உணர்ந்து ....விழி நிறைந்து ...
காற்றில் மிதக்கும் இறகை போல
மகிழ்ந்திடும் மனமெல்லாம்.....
உன் வர்ணஜால இசை எனும் இன்பத்தில் ...
வான் மழையில் நணயாத மானிடர் தான் உண்டோ.......இசை மழையில் நணயாத உள்ளமும்  தான் உண்டோ..... சில நேரங்களில்  மௌனமாய் ....சில நேரங்களில்  துள்ளளாய்....சில நேரங்களில்  கணத்துடண்...என்னுள் பெய்யும் இந்த இசை மழை......பிரிக்க முடியாத ஒரு உறவாகவே என்னோடு பயணிக்கிறது.....

Offline TiNu

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 643
  • Total likes: 1786
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum


இசையே! இவ்வண்டம் தோன்றிய காலத்தே..
நல்லுயிர்களுடன்.. பயணிக்கும். ஒலியே..
 
உன்னுடனே நாதம் ஒன்றென கலப்பதால்..
உருவாகவும் ஸ்ருதியே.... சுகமானது...

ஸ்ருதிகளின் வனப்பில் மெல்ல மெல்ல...
தலையெடுக்கும் ஸ்வரங்களே இனிமையானது...

ஸ்வரங்களில் செம்மையான.. சீரான.. பிணைப்பில்   
கண்சிமிட்டும் ராகங்களே.. களிப்பானது... 

உன் பரிணாமம்.. கண்டு உணர்கையில்
என்னிலை நான் மறக்கின்றேன்..

உயிருள்ள மானிடர்களிடம்.. நீ ஜனனம்
எடுக்கையில்  ஆகத  நாதமென மிளிருக்கிறாய்..

யோகிகளும் சித்தர்களும் மட்டுமே பட்டுணரும்..
இயற்கை தானே மீட்டும்.. அனாகத நாதமும் நீயே...

நீ  நாதமாய்.. ஸ்ருதியாய் .. ஸ்வரமாய்.. ராகமாய்..
செவிக்கு இனிமையாகும்... சங்கீதமாக இருந்தாலுமே...

உன்னுடனே நானும் நித்தம்...நித்தம்..
சங்கமிக்க என் மனம் ஏங்குதே....

நீ பல்வேறு உருவில்..  என் எதிரே தோன்றினாலும்..
நான் உன்னை உணர்வது. ஒன்றே..  ஒன்று....

என்றும் நீயே என் தாய்.... நானே உன் சேய்...