Author Topic: போடா போடி – திரை விமர்சனம்  (Read 1977 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்



எங்க ஆரம்பிக்கிறதுன்னு ஒரு குழப்பமாத்தான் இருக்கு. கதை லண்டன்ல நடக்குது. வரலட்சுமி எனக்கு டான்ஸ்னா உயிருன்னு சொல்லி லெட்ஸ் டான்ஸ்னு அங்கே பிரபலமான டான்ஸ் போட்டிக்காக ப்ராக்டீஸ் பண்ணுது.. “எல்லாம் நல்லாத்தான் போயிட்டு இருந்துச்சு ஒருத்தன சந்திக்கிற வரைக்கும்னு” வாய்ஸ் ஓவர்ல கதையை ஆரம்பிச்சு வைக்க, சிம்பு வர்றார் நான் கெட்டவன், வல்லவன், மன்மதன்னு எப்போதும் பாடுற பல்லவியை பாடிக்கிட்டே.

இவருக்கு என்ன வேணும்னு தெரியலை. வரலட்சுமியை ஒரு பார்ல மீட் பண்றார்.. டேட் பண்றாங்க.. 24 மணி நேரம் ஒன்னா சுத்துறாங்க. என்கூட ஒருத்தன் 2 மணி நேரமே இருக்க மாட்டான். ஓடிடுவான் நீ 24 மணி நேரமும்… மை காட்.. நாம லவ் பண்றமா? இந்த ரேஞ்சுல பேசிகிட்டு இருக்காங்க. லவ்வ பத்தி தத்துவம் மாதிரி என்னமோல்லாம் சொல்றாங்க.

சிம்புவுக்கு வரலட்சுமி இப்டி இன்னொருத்தன கட்டிப்புடிச்சு டான்ஸ்லாம் ஆடுறது புடிக்கல. அவ டான்ஸ் கிளாஸ் போறத கட் பண்ண என்னெல்லாமோ பண்றார். அப்புறம் கடைசில அத விட்டுடு கல்யாணம் பண்ணிக்கலாம்னு கன்டிசன் போடுறார். இதென்ன போங்கா இருக்கு போடான்னு போறார் வரலட்சுமி. அப்படியே போயிருந்துருக்கலாம்.

லவ்வாச்சே.. மறுபடி வர்றார். ஒரு பிளானோட.. கல்யாணம் பண்ணிக்கலாம்.. பட் ஒரு நாள் உனக்கு.. உன் இஷ்டப்படி நான் வாழ்வேன். இன்னொரு நாள் எனக்கு.. என் இஷ்டப்படி நீ வாழனும்னு.. சிம்புவும் வாடி மவளே வா.. ஒரே நாள்ல உன்ன டான்ஸ மறக்க வைக்கிறேன்னு டீலுக்கு ஓக்கே சொல்ல கல்யாணம் கட்டிகிறாங்க.
இது வரைக்கும் ஓரளவுக்கு ஓக்கேதாங்க.. அப்புறம் கதையில என்ன நடக்குதுன்னு யோசிச்சா ஒரு மாதிரி மந்திரிச்சு விட்ட மாதித்தான் இருக்குது.
இடையிடையில பாட்டெல்லாம் வருது.. ஆனா இந்தப் பொண்ணு மட்டும் டான்ஸை விடவே இல்லை. அப்புறம் சிம்புவோட எப்பவுமே எக்ஸ்ட்ரா பிட்டிங்கா வர்ற கட்டைக்குரல் கணேஷ் சித்தப்பா “ஒரு குழந்தையை ரெடி பண்ணிடு..அப்ப அத பாக்கவே புல் டைம் போயிடும். டான்ஸெல்லாம் ஆட முடியாதுன்னு” ஒரு சூப்பர் ஐடியா குடுக்க.. சிம்புவும் பெட்டுக்கு ரோசாப்பூவெல்லாம் போட்டு, ரெடிபண்ணி கர்ப்பம் ஆக்கிடிறாரு. (வொய்ப்ப ஹஸ்பண்ட் எப்படி ப்ரக்னண்ட் ஆக்கலாம்னு ரொம்ப சீரியஸா ரூம் போட்டு சீன் யோசிச்சிருக்காய்ங்கன்னா பாத்துக்கங்க).

குழந்தை பொறந்துடுது.…ஆனா அந்தப் வரலட்சுமி பொண்ணு அதே காம்படிசனுக்கு இன்னும் பிரிபேர் பண்ணிட்டு இருக்கு. அதோட ப்ரண்ட்ஸ்லாம் இன்னும் அத கட்டிப்பிடிச்சு கண்ணத்துல கிஸ் பண்ண, என்ன கொடுமைடா இதுன்னு சிம்பு சண்டைலாம் போடுறாரு.

இப்படியே போயிட்டு இருக்கவங்க வாழ்க்கையில ஒரு சோகம். குழந்தையை இழந்துடுறாங்க..பிரிச்சுடுறாங்க.. ஒரு வருசமோ.. ரெண்டு வருசமா.. மறுபடி வரலட்சுமி வீட்டுக்கு வருது..இப்ப ஒரு 3 கன்டிசனோட.. பேசக்கூடாது.. அப்டி இப்டின்னு. இப்பவும் அதே காம்படிசனுக்கு பிரிபேர் பண்ணுது.
ஆனா சிம்பு, அவன் அங்க தொடுறான் இங்க தொடுறான்னு சொன்றதெல்லாம் வரலட்சுமிக்கு ஞாபகம் வர அந்த பார்ட்னரோட கெமிஸ்ட்ரி காணாமப்போயிட..திடீர்னு சம்பந்தமேயில்லாம “நீ தானே என் புருசன்.. நீயே தொட்டு ஆடு”ன்னு ஒரு அற்புதமான ஐடியா வர.. ரெண்டு பேரும் ஆட ஆரம்பிக்கிறாங்க. (இந்த ஐடியா அப்பவே வந்திருந்த இது ஒரு ஷார்ட் பிலிமா யூடியூப்ல வந்திருக்கும்.)

ஆக்சுவலா கதையில கொஞ்சம் ஆழமான விசயத்தை தொட முயற்சி பண்ணிருக்காரு டைரக்டர் விக்னேஷ் சிவன். ஆண் பெண் உறவுக்காக, கல்யாணத்துக்காக பெண் தன்னோட தனித்தன்மையெல்லாம் விட்டுக்குடுத்துடனுமா அப்படிங்கிற மாட்டர். அத எடுக்கணும்னு நினைச்ச ஒரு விசயத்துக்காக பாராட்டலாம். ஆனா அத திரைக்கதையா பண்ணதுல எந்த ஆழமும் இல்லை அகலமும் இல்லை. எங்கெங்கயோ அலையுற திரைக்கதையும் எந்த விதத்துலயும் கைகுடுக்கல. ஆண் பெண் உறவுச்சிக்கல கொஞ்ச நாள் முன்னாடி வந்த ‘காதலில் சொதப்புவது எப்படி’ மிக அழகாய் கையாண்டிருந்தது. இவங்க அந்த டிவிடிய ஒரு நாலஞ்சு தடவை பாத்திரக்கலாம். இப்படி சொதப்பிருக்காம தப்பிச்சிருக்கலாம்.

திடீர்னு சிம்பு சில டயலாக்லாம் பேசுறார். ‘நாங்கல்லாம் சினிமால அனுஷ்காவ எந்த ஹீரோவாச்சும் தொட்டு தடவி கொஞ்சுறத பாத்து ரசிப்போம். ஆனா நிஜத்துல எங்க காதலிய எவனும் தொடக்கூடாது..

என்னமோ சொல்ல வர்றாங்க.. என்னன்னுதான் மறுபடியம் குழப்பமா இருக்கு. இந்தக் கதையில வர்றத பத்தி பேசுறாங்களா.. இல்ல சொந்தக்கதையில வர்றத பேசுறாங்களான்னு.

நாமல்லாம் வெள்ளக்காரங்க இல்லை.. நம்ம பொண்ணுங்களும் பசங்களும் ப்ரெண்டா இருந்தா கட்டில்லாம் பிடிக்கக்கூடாது. கன்னத்துல கிஸ்லாம் பண்ணக்கூடாதுன்னு சிம்பு அடுத்த டயலாக் சொல்றார். ம்ம். இத டி.ஆர் சொன்னாக்க ஏத்துக்கலாம்… சிம்பு படத்துல சொல்றப்ப.. ஸாரி பாஸ். என்னமோ சாத்தான் வேதம் ஓதுதுண்ணு சொல்வாங்களே அதுதான் ஞாபகம் வருது.

வரலட்சுமியின் கதாபாத்திரம் மட்டும்தான் தெளிவாய் உருவாக்கப்பட்டிருக்கிறது. அவரும் தன் பங்கை சிறப்பாய் செய்திருக்கிறார். மிக வித்தியாசமான குரல் என்பது உண்மைதான்,. ஆனாலும் படம் முழுவதும் கேட்பது கஷ்டமாய் இருக்கிறது.

ரொம்ப நாளைக்கப்புறம் ஷோபனா. ஆனால் அவரை எதர்க்கு இந்தப் படத்திற்கு கூட்டி வந்தார்கள் என யோசிக்கும் அளவிற்கு வீண்டிக்கப்பட்டிருக்கிறார்.

லண்டன்ல நடக்குற உலகப்புகழ் டான்ஸ் காம்பெடிசன்ல குத்து டான்ஸ் ஜெயிச்சா எப்படிங்கிறது சுவாரஸ்யமான கற்பனை தான். ஆனா இந்தக் கதைக்கு அதான் க்ளைமாக்ஸா. டர்ட்டி டான்ஸிங் இன்புலவன்ஸ்.

மொத்தத்துல ஒரு ஆழமான கதையை அப்படி இப்படின்னு எடுத்துருக்க மாதிரி இருக்கு.
 :D :D :D :D :D :D

valai thalathil petrathu
« Last Edit: November 27, 2012, 04:46:09 PM by Global Angel »