தமிழ்ப் பூங்கா > கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது

ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 341

(1/2) > >>

Forum:
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....

**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.

நிழல் படம் எண் : 341

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.
உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

Sun FloweR:
இரவென்ன ? பகலென்ன?
நேரம் காலம் பார்ப்பதில்லை..
அண்ணன் என்ன? தம்பி என்ன?
உறவும் இங்கு இருந்ததில்லை..

ஆணென்ன? பெண்ணென்ன ?
பால்கள் இயல்பு திரிந்ததென்ன..
மானமென்ன? வெட்கமென்ன?
காற்றிலே இயல்பு கரைந்ததென்ன..

மதுவின் பிடியில்
மயங்கி கிடப்பதும்,
மாதுவின் மடியில்
முயங்கி திளைப்பதும்,
வருங்கால தூண்களின்
வாழ்தல் ஆயிற்று..

நடனம் என்ற பெயரில்
அர்த்தமற்று ஆடுதலும்,
ஆடை என்ற பெயரில்
அவயங்கள் தெரிவதும்,
நட்பு என்ற பெயரில்
இச்சித்து நகர்தலும்,
இன்றைய இளைஞர்களின்
கேளிக்கை ஆயிற்று..

உச்சம் தரும் போதைக்காக
ஒரு கூட்டம்..
பெற்றவர்களின் காசை கரியாக்குவதற்காக ஒரு கூட்டம்..
கட்டழகு பெண்ணிற்காக
ஒரு கூட்டம்..
வெறும் பொழுது போக்கிற்காக
ஒரு கூட்டம்..
பணத்திமிரில் ஒரு கூட்டம்..
வறட்டு கௌரவத்திற்காக
ஒரு கூட்டம்..

தன்னை மட்டுமல்ல
தன் வீட்டை, தன் நாட்டை,
தன் பண்பாட்டை,
தன் பாரம்பரியத்தை மறந்து
வெளிநாட்டு நாகரீக மோகத்தில்
சுழலும் ஒரு உலகம்..

இது தனக்கென்று சூட்டிய பெயர் இளமை துள்ளும் வாலிப கழகம்..
நிதர்சனத்தில் என்னவோ
இதன் பெயர் வீழ்ச்சியுறும் வாலிப கழகம்..

Madhurangi:
பெண்ணியத்தின் வரைவிலக்கணம் அறியா..
பெருமைகள் சூழ் தமிழன்னையின் அருமைகள் அறியா..
பெருசுகளின் புலம்பல் எனும் கேலியில் அனுபவங்களின் சிறப்புகள் புரியா..
பெரும்பான்மை இளசுகளின் சங்கமம் நவீன கிளப்புகள்..

காதை பிளக்கும் கூச்சல் ஒலிகள்..
கண்ணை கூசும் வர்ணம் இறைக்கும் ஒளிகள்..
கருத்தை மறக்க வைக்கும்  வெளிநாட்டு மதுக்கள்..
காணசகிக்காத நாரசங்களுக்கு பெயரா நவீன கலையம்சங்கள் ?

நடனமதின் நளினம் இழந்தோம்..
நாணமெனும் இயல்பை துறந்தோம்..
நட்புக்கும் கற்புண்டேன்னும் எண்ணம் மறந்தோம் .. '
நவீன நாகரீகமெனும் மோக வலையில்..

போதையின் பிடியில் ஆரோக்கியத்தை இழந்து..
போதனைகள் போதிக்கும் நல்லுள்ளங்களை boomer என இகழ்ந்து..
போற்றி வளர்த்த தாய் தந்தையின் தியாகங்களை மறந்து..
போசணையற்ற நாட்டின் எதிர்காலத்தை பார்க்கும் துரதிஷ்டம் கிளப்புகளின் வாயில்களில்.. 




HiNi:

"Where is the party?" என்று ஒலிப்பெட்டி  முழங்க!!

2k குழந்தைகளின் நட்பு கொண்டு வந்து சேர்த்த ஓர் சமுக நிகழ்வு!!

நின்றுக்கொண்டிருக்கும் இடங்கள் யாவையும் பூசிக்கொண்டிருக்கும் வர்ண ஜாலங்கள்!!
 
சபையிலே பெரும்பான்மையோர்
 இளம் வயதினர்களின் கூட்டங்கள்!!

"Rock and Kuthu" பாணியில் காதுகளை கிளிறும் பாடல்கள்!!

"நடு தெருவில் சங்கட்டம் இல்லாமல் ஓர் நடனமா? எப்படி இப்படி?" னு உள்ளுணர்வின் குமுறல்!!!

 பக்கத்தில் இருந்தவள் கோபத்துடன் குறு  குறு பார்வையில் கடுகு தாளிக்க

Mind voice னு நினச்சு சத்தமா சொல்லிட்டேன் போல

கூட வந்தவள் "Step it  up" என்று கூச்சல் ஒலி எழுப்ப

இசைக் கச்சேரியில் நம்மை கவனிக்க ஒருத்தரும் இல்லை என தைரியம் என்னை நகர்த்த

கலையின் மீதுள்ள பற்று இறுக்கமான கால்களை தளர செய்ய

இசையில் மயங்கியவள்
கூச்ச சுபாவம் கொண்டவள்
தன் திறமைக்கு வாய்ப்பு கிடைக்காதா? னு ஏங்கியவள்
மனம் திறந்த நடனம்!!!

நதியில் குதித்து விளையாடும்
தன் வழி தெரியாத மீன் போல்

செய்வதறியாது துள்ளி குத்தித்தோடும் மான் குட்டிப் போல்

உடல் அசைவுகள் இசைக்கு இணங்கா விட்டாலும்
மனதிற்கு இணக்கமாய் ஓர் ஆட்டம்!!!

ஆடலும் பாடலும் நிகழ்ச்சியை ரசித்தவர்கள்
தற்போது தலைக்கு ஏறிய மதுவின் வினையாட்டம் என்பார்கள்!!!

 ஆம்...இது போதையின் உச்சம் தான்
மது பாட்டிலில் அடக்கி வைக்கமுடியாத நடனத்தின் என் மோகம்!!!
ஓர் நடனத்தின் உற்சவம்!!!

சமுகத்திற்கு முன் பயந்து என்னை மாற்றி கொள்ளாமல்
விண்ணில் ஆனந்தமாய் பறக்கும் பட்டம் போல்
என் விருப்பங்களை நிறைவேற்றி சிறகடிக்கும் இதயத்தை
வரைமுறையோடு கயிற்றில் கட்டி காத்தால்
எவ்விடத்திலும் ஒலியும் ஒளியும்
வாழ்வில் வசந்தமாய் மிளிறுமென உணர்த்திய தருணம்!!!!

mandakasayam:
புதிய நிகழ்வுகளை மகிழ்ச்சியோடு வரவேற்று அதன் கொண்டாட்டங்களை  பகிர செய்கிறது இளமை...சமூக சீர்கேடு என முத்திரைபடுத்தி அப்புறபடுத்துவது பழமை...

எல்லோருமே அதை கடந்து தானே வந்தோம் ..புத்தாண்டில் ஆரம்பித்து பிறந்தநாள் வரை .
மகிழ்ச்சியான தருணத்தை அனுபவிக்க மானுடர்களின் மனநிலை சமநிலையற்றது
'
 கட்டுக்கோப்போடு இருப்பவர்கள் கூட சமகால நண்பர்களின் ஆனந்தத்தை கண்டு அவர்களும் மகிழ்ச்சியான தருணத்தை அனுபவிக்க நினைக்கிறார்களே''

விண்ணைபிளக்கும் இசையும் ஆரவாரமும் எல்லையில்லா பேரின்பம் சில மணி நேரம் தான் .. அதற்காகவா இவ்வளவு பெரும் குற்றச்சாட்டு ..
வேதனையில் உள்ளவர்கள் கூட சிறியதாக புன்னகைப்பார்கள் அந்த நகைப்பூட்டும் நடனத்தில்..

துவண்டு போனவர்கள் கூட  ஆடல் பாடலை மனமில்லாமல் ஏற்பது இயல்பு தானே ''
அதே மகிழ்ச்சியில்  ..மதுவையும் மாதுவையும்  நாடினால் வாழ்க்கை நடைபிணம்தான் .

தனக்கு தானே வசனம் எழுதிக்கொண்டு  வலம் வரும் தலைகணமுள்ளவர்களே'',
தனக்கான சுதந்திரம் பற்றி போராடுபவர்களே'
 
எல்லைக்குள் இருக்கும் வரை எல்லையில்லா ஆனந்தம் தான்.  அதற்க்கு அப்பால் சென்றால்
எவையும் நிலைக்காது .. நற்பண்புகள் தழைக்காது ...

 

Navigation

[0] Message Index

[#] Next page

Reply

Go to full version