ஹாய் வணக்கம் மாஸ்டர் வழக்கம் போல உங்கள் நிகழ்ச்சி அருமை அருமை அருமை ...
இந்த வாரம் இசையால் வெற்றி பெற்ற பாடல் வரிசையில் நான் கேட்க இருக்கும் பாடல் இடம் பெற்ற திரைப்படம் 1989 ஆம் ஆண்டு நடிகர் சிரஞ்சீவி தயாரிப்பில் ராஜசேகர் இயக்கத்தில் வெளி வந்த மாப்பிள்ளை எனும் திரைப்படமாகும் ... இந்த திரை படத்தில் ரஜினிகாந்த் ,அமலா, ஸ்ரீவித்யா , ஜெயசங்கர் , வினுச்சகரவர்த்தி , எஸ் .எஸ் சந்திரன் ,ராஜா,திலீப் .நிழல்கள் ரவி , ஆகியோர் நடிதிருகின்றார்கள் ... இதில் கௌரவ வேடத்தில் இந்த படத்தின் தயாரிப்பாளரான சிரஞ்சீவி நடித்துள்ளார் .. இந்த படத்திற்கு இசை ஞானி இளையராஜா இசை அமைத்துள்ளார் . இதில்
மானின் இரு கண்கள் கொண்ட மானே மானே
என்னோட ராசி நல்ல ராசி
வேறு வேலை உனக்கு இல்லையே என்னை கொஞ்சம் காதலி
என்னதான் சுகமோ நெஞ்சிலே
உனைத்தான் நித்தம் நித்தம் அடித்தேன்
எனும் பாடல்கள் சிறப்பாக அமையப் பெற்றுந்தாலும் மானின் இரு கண்கள் , என்னோட ராசி , என்னதான் சுகமோ ஆகிய பாடல்கள் படி தொட்டி எல்லாம் ஒலித்த பாடல்கள் ..இந்த திரைப்படத்துக்கு வெற்றி வாய்ப்புக்கு பாடல்களும் துணை செய்து இருகின்றமை பாடல்களை கேட்கும்போது தெரிந்து கொள்ள கூடிய்யதாய் இருக்கும் இந்த படம் 2011 ஆம் ஆண்டு கதையில் சிறு மாற்றத்தோடு மீண்டும் திரைபடமாகபட்டது எல்லோருக்கும் தெரிந்திருக்கும் .. இந்த படத்தில் இருந்து நான் கேட்க இருக்கும் பாடல் ... பாலசுப்ரமணியம் ஜானகி இணைந்து பாடிய என்னதான் சுகமோ நெஞ்சிலே ... இதை எனக்காக ஒளிபரப்புமாறு கேட்டுகொள்கின்றேன்