FTC Forum

Special Category => இன்றைய ராசிபலன் => Topic started by: Evil on December 28, 2018, 09:43:28 AM

Title: தினம் தினம் திருநாளே தினப்பலன் வெள்ளிக்கிழமை, 28 டிசம்பர் 2018
Post by: Evil on December 28, 2018, 09:43:28 AM
மேஷம்
aries-mesham
உறவுகளாலும், உடனிருக்கும் பெண்களாலும் தொல்லைகள் ஏற்படும். வாழ்க்கையில் புதுத் திருப்பங்களால் கீழானநிலை ஏற்படலாம். உங்கள் திறமை பாராட்டப்படாது. பயணத்தில் தடைகள் ஏற்படும்.


ரிஷபம்
taurus-rishibum
நினைத்தபடி எதுவும் நடக்காது. வீட்டில் களவு போவதைத் தவிர்க்க எச்சரிக்கையுடன் இருக்கவும். ஒருவித பயம் கலந்த உணர்வு இருக்கும். பண இழப்புக்களால் தாக்கம் குறையும். காரியத்தடைகளும் ஏற்படும்.
மிதுனம்

gemini-mithunum
பணம் சம்பாதிப்பதில் ஊக்கம் ஏற்படும். சாகசம் புரிவீர்கள். பிறர் உதவியை நாட வேண்டிய சூழ்நிலை உருவாகும். அழகிய ஆடை ஆபரணங்கள் அணிந்து அசத்துவீர்கள். காரிய அனுகூலமும் தனலாபமும் உண்டு.
கன்னி

virgo-kanni
வேலைப்பளு காரணமாக வேளைக்கு உணவருந்த முடியாத நிலை ஏற்படும். ஆறுவது சினம் என்றபடி முன் கோபத்தை அடக்க முன்னேற்றம் ஏற்படும். குறிக்கோளற்ற அலைச்சல்கள் ஏற்பட வாய்ப்புண்டு

மகரம்
capricorn-magaram
கோபத்தை அடக்கி, வார்த்தகளை அளவோடு பேசவும். வண்டி வாகனங்களில் செல்லும் போதும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நாள். தெய்வப் பிரார்த்தனைகளால் தெளிவு பெற வேண்டிய நாள்.

கடகம்
cancer-kadagam
பண விஷயமான சிந்தனைகளே, இன்று உங்கள் மனதில் மேலிடும். கோபத்தை அடக்கி குணமாயிருந்தால் நிம்மதி பிறக்கும். சகோதர வகையில் சமாதானமாகப் போனால் நல்லது. சிலருக்கு குழந்தைகளால் ஏற்படலாம்.

சிம்மம்
leo-simmam
தங்களுக்கு மேலானவர்களைச் சந்திக்கும் எண்ணம் ஈடேறும். நல்லுணவு, மற்றும் நல்ல நண்பர் சேர்க்கை உண்டு. பெண்களால் மனமகிழ்ச்சி அதிகரிக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்துச் சென்று இலாபத்தை அள்ளுவீர்கள்.

துலாம்
libra-thulam
மகிழ்ச்சி நிறைந்த நாளாக அமையும். விரும்பிய பொருட்கள் வீடு வந்து சேரும். அதிகாரப் பதவி கிடைக்கலாம். பரிசுப் பொருட்கள் மற்றும் அன்பளிப்புக்களை அடைவீர்கள். வீட்டிலும் வசதி வாய்ப்புக்கள் அதிகரிக்கும்.

மீனம்
pisces-meenam
இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். சினிமா போன்ற கேளிக்கை நிகழ்ச்சிகள் ஈடுபாட்டால் உள்ளம் மகிழும். புதிய பெண்களின் நட்பால் பெருமை கொள்வீர்கள். வியாபாரிகள் அதிக இலாபம் அடைவர்.

தனுசு
sagittarius-thanusu
தாயார் மூலமாக அனுகூலமான பலன்கள் உண்டு. இறைவழிபாடு செய்வதாலும், பெரியோர்களின் ஆசியாலும் அனைத்தும் நல்லபடியாகவே நடக்கும். ஸ்திரீ வகை இலாபமும், பயணத்தில் மகிழ்ச்சியும் ஏற்படும்.

விருச்சிகம்
scorpio-viruchagam
தொழில் இலாபங்களால் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். விருந்தினர் வருகை மனமகிழ்ச்சி தரும். சொற்பொழித் திறனால் மேடைப் பேச்சு மிளிரும். போட்டி, பந்தயங்களில் கிடைக்கும் வெற்றி பாராட்டுக்களைச் சேர்க்கும்.

கும்பம்
aquarius-kumbam
தனவரவு, கௌரவப்பட்டம், பதவி, சுபகாரிய சித்தி, புத்திர பாக்கியம் ஆகியவை ஏற்படும் நாள். தொழில் வழி வருமானம் ஏற்படும். தங்கள் பணியைப் பொருத்து மேலதிகாரிகளின் ஆதரவு மேன்மையை அளிக்கும்.