Author Topic: இன்றைய ராசி பலன்கள் - 08/10/2014 (Oct 08th)  (Read 985 times)

Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook



மேஷம்

குடும்பத்தினருடன் வீண் விவாதங்கள் வந்துப் போகும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். உறவினர்களுடன் மனத்தாங்கல் வரும். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியால் பிரச்னைகள் வரக்கூடும். அதிர்ஷ்ட எண்:1 அதிர்ஷ்ட நிறங்கள்:ஆரஞ்சு, பச்சை
 
 

ரிஷபம்

சாணக்கியத்தனமாகப் பேசி சாதிப்பீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நம்பிக்கைக்குறியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வாகன வசதிப் பெருகும். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்தை முடிப்பீர்கள். அதிர்ஷ்ட எண்:5 அதிர்ஷ்ட நிறங்கள்:மெரூண், ப்ரவுன்
 
 

மிதுனம்

எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பழைய உறவினர், நண்பர்களை சந்திப்பீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பயணங்கள் சிறப்பாக அமையும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்தும் தருவார்கள். அதிர்ஷ்ட எண்:6 அதிர்ஷ்ட நிறங்கள்:மெரூண், ஆரஞ்சு
 
 

கடகம்

கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். அதிர்ஷ்ட எண்:3 அதிர்ஷ்ட நிறங்கள்:கிரே, மஞ்சள்
 
 

சிம்மம்

சந்திராஷ்டமம் நீடிப்பதால் உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைத் தூக்கும். உறவினர், நண்பர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். அடுத்தவர்கள் மனசு காயப்படும் படி பேசாதீர்கள். யாரையும் பரிந்துரை செய்ய வேண்டாம். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். அதிர்ஷ்ட எண்:4 அதிர்ஷ்ட நிறங்கள்:ஆரஞ்சு, ஊதா
 
 

கன்னி

பிள்ளைகளின் விருப்பு, வெறுப்பை அறிந்து அதற்கேற்ப அவர்களை நெறிப்படுத்துவீர்கள். தாயாரின் உடல் நலம் சீராகும். புது வேலைக் கிடைக்கும். சகோதர வகையில் நன்மை உண்டு. வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். அதிர்ஷ்ட எண்:8 அதிர்ஷ்ட நிறங்கள்:மஞ்சள், கருநீலம்
 
 

துலாம்

குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அதிர்ஷ்ட எண்:7 அதிர்ஷ்ட நிறங்கள்:ரோஸ், கிரே
 
 

விருச்சிகம்

குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஆதரவுக் கிட்டும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். அதிர்ஷ்ட எண்:2 அதிர்ஷ்ட நிறங்கள்:வெள்ளை, மஞ்சள்
 
 

தனுசு

தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவுக் கிடைக்கும். அதிர்ஷ்ட எண்:6 அதிர்ஷ்ட நிறங்கள்:ஊதா, இளஞ்சிவப்பு
 
 

மகரம்

குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். அரசால் ஆதாயம் உண்டு. உறவினர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். எங்குச் சென்றாலும் நல்ல வரவேற்பு கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். அதிர்ஷ்ட எண்:9 அதிர்ஷ்ட நிறங்கள்:மயில் நீலம், ப்ரவுன்
 
 

கும்பம்

குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணம் கிடைக்கும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதிர்ஷ்ட எண்:4 அதிர்ஷ்ட நிறங்கள்:சில்வர் கிரே, பச்சை
 
 

மீனம்

ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். இதை முதலில் முடிப்பதா, அதை முதலில் முடிப்பதா என்ற ஒரு டென்ஷன் இருக்கும். குடும்பத்தினரைப் பற்றி யாரிடமும் குறைவாகப் பேச வேண்டாம். பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. அதிர்ஷ்ட எண்:8 அதிர்ஷ்ட நிறங்கள்:பிங்க், க்ரீம் வெள்ளை