சோதிடம்
மேஷம் • ரிஷபம் • மிதுனம் • கடகம் • சிம்மம் • கன்னி • துலாம்
விருச்சிகம் • தனுசு • மகரம் • கும்பம் • மீனம்
சோதிடம் உள்ளடக்க வகைகள்
[−] சோதிடம்
[×] அஷ்டகவர்கம்
[×] இராசிகள்
[×] இலக்கினங்கள்
[×] குறி கூறுபவர்கள்
[×] சீன சோதிடம்
- சோதிட நூல்கள்
[×] திதிகள்
[×] சோதிட நட்சத்திரங்கள்
[×] யோகங்கள்
விரைவு இணைப்பு: கிளைகள்
சீன முறை • மருத்துவ சோதிடம் • கிளி சோதிடம் • நிதியியல் சோதிடம் • இடவமைப்பு
சோதிடம்[/b]
சொல்லிலக்கணம்சோதிடம் என்ற வார்த்தையான ἀστρολογία என்ற கிரேக்க பெயர்சொல்லிருந்து பிறந்ததாகும். இதற்கு கிரேக்க மொழியில் நட்சத்திரங்களின் கணக்கு என்று பொருளாகும். இச்சொல்லானது நட்சத்திர கணிப்பு என்றாக மாற்றமடைந்தது.
மேற்கத்திய சோதிடம்மேற்கத்திய சோதிடம் தாலமி கோட்பாடுகளின் அடிப்படையிலும், ஹெலினிஸ்டிக் மற்றும் பாபிலோனிய மரபுகளின் அடிப்படையிலும் உருவானவையாகும். இதில் பன்னிரு ராசிகளும், நட்சத்திரங்களும் அடங்கிய ராசிச்சக்கரம் சோதிட கணிப்புமுறைக்கு பயன்படுகிறது.
ஆசிய சோதிடம்இந்திய சோதிடம்ஜோசியம் என்ற சொல்லானது சமஸ்கிருத சொல்லான jyótis என்பதிலிருந்து பிறந்ததாகும். இந்திய சோதிடம் பொதுவாக இந்து சோதிடம் என்றும், வேத சோதிடம் என்றும் அறியப்பெறுகிறது. குழந்தை பிறக்கும் நேரத்தினை கொண்டு அந்நேரத்தில் நவகிரகங்களின் நிலையை கணக்கிட்டு எழுதுவது ஜாதகம் எனப்படுகிறது. நவகிரகங்களின் நிலையைக் கொண்டு குழந்தையின் ராசியும், நட்சத்திரமும், இலக்கணமும் குறிக்கப்பெறுகின்றன.
இந்துக் காலக் கணிப்புமுறையால் உருவான பஞ்சாங்கம் என்ற கால அட்டவனை கொண்டு ஜாதகத்தின் பலன்கள் கணிக்கப்பெறுகின்றன. பஞ்சாங்கம் வாரம், திதி, கரணம், நட்சத்திரம், யோகம் என ஐந்து உறுப்புகளை கொண்டதாகும்.
இந்து சமயத்தின் இதிகாசமான மகாபாரதத்தில் பஞ்சபாண்டவர்களில் ஒருவரான சகாதேவன் காலக்கணிப்பு முறையில் சிறந்தவனாக கொண்டாடப்பெறுகிறார். இவர் குறித்து தந்த நாளில் யுத்தத்தினை தொடங்கினால் வெல்ல இயலும் என எதிரான கௌரவர்களே இவரிடம் வந்து நாள்குறித்து சென்றதாக மகாபாரதம் கூறுகிறது.
கிழக்காசிய சோதிடம்சீன ஜோதிடம் பாரம்பரிய வானியல் மற்றும் நாள்காட்டி அடிப்படையாக கொண்டது. சீன ஜோதிடம் சீன தத்துவத்துடன் (மூன்று நல்லிணக்கம்: சொர்க்கம், பூமி, நீர் கோட்பாடு) நெருக்கமான உறவை கொண்டுள்ளது. சீன சோதிடம் அடிப்படையில் 10 தேவலோக தண்டுகளையும், 12 துருவக் கிளைகளையும் கொண்ட தேவமரமாக உருவகப்படுத்தப்பட்டது. பின்பு இதை கணிப்பதில் இருந்த கடினத் தன்மையை முன்னிட்டு, 12 கிளைகளுக்கு பதில் 12 விலங்குச் சின்னங்களைக் கொண்டு குறிப்பிடப்பட்டது. 10 தண்டுகள் என்பன யின்-யான் முறையில் பிரிக்கப்பட்ட ஐந்து மூலகங்கள் ஆகும். ஆக மொத்தம் 12 விலங்குகள் மற்றும் ஐந்து மூலங்கள் சேர்ந்து 60 ஆண்டுகள் கொண்ட வருடச் சக்கரம் அமைக்கப்பட்டது. இந்த வருடச் சக்கரத்தின் அடிப்படையிலேயே சீன சோதிடம் கணிக்கப்படுகிறது.
சோதிடமும் வான்குறியியலும் (astrology)கோள்களும், விண்மீன் குழுக்களும் (constellation) வான்வெளியிலுள்ள பொருட்களே. அவை புவியீர்ப்பு விசையின் விதிகளுக்கு உட்பட்டே விளங்குகின்றன. வான்வெளியில் இவற்றின் இருப்பிடத்தை காலத்தின் அடிப்படையில் கணிக்கலாம். பண்டைக்காலச் சோதிட நூல்கள் 9 கோள்கள் பற்றிக் கூறுகின்றன. இவற்றுள் 7 உண்மைக்கோள்களாகும் ஏனைய இரண்டும் நிழற்கோள்கள் எனப்படுகின்றன. அக்கோள்கள் பின்வருமாறு:
சூரியன் (ஞாயிறு Sun)
சந்திரன் (திங்கள் Moon)
செவ்வாய் (Mars)
புதன் (அறிவன் Mercury)
குரு (வியாழன் Jupiter)
சுக்கிரன் (வெள்ளி Venus)
சனி (காரி Saturn)
இராகு (நிழற்கோள்)
கேது (நிழற்கோள்)
கோள்களின் நிலைகளையும் நகர்வுகளையும் குறிப்பதற்கு, சோதிட நூல் புவியை மையமாகக் கொண்ட முறைமை ஒன்றையே பயன்படுத்துகின்றது. இது இராசிச் சக்கரம் (zodiac) எனப்படும். இது பூமிக்குச் சார்பாக அதனைச் சுற்றியுள்ளதாகக் காணப்படும் ஞாயிற்றின் தோற்றுப்பாதைக்கு (ecliptic) இருபுறமும் 9 பாகை அளவு விரிந்துள்ள வட்டப் பட்டி போன்ற ஒரு பகுதியாகும். இது கண்ணுக்கு புலப்படாத ஒரு கற்பனையான வடிவமாகும். இந்த இராசிச் சக்கரம் ஒவ்வொன்றும் 30 பாகைகளைக் கொண்ட 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப் பிரிவுகள் பின்வருமாறு:
மேடம் (மேஷம்)
இடபம் (ரிஷபம்)
மிதுனம்
கர்க்கடகம் (கடகம்)
சிங்கம் (சிம்மம்)
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனு (தனுசு)
மகரம்
கும்பம்
மீனம்
சோதிடத்தில் விண்மீன் குழுக்கள்ஞாயிற்றின் தோற்றுப்பாதை (முழுவதுமாக 360 பாகை) 131⁄3 பாகை இடைவெளியில் 27 விண்மீன் குழுக்களாக கூர் செய்யப்பட்டுள்ளது. 'அசுவினி' ஞாயிற்றின் தோற்றுப்பாதையில் முதற் கூராகும், 'ரேவதி' கடைக்கூராகும். இதன்படி, ஒரு கோளின் நிலநிரைக்கோடு (longitude) கொண்டு அக்கோள் எந்த விண்மீன்குழுவில் அமைந்துள்ளது என்பதை கண்டறியலாம். ஒவ்வொரு விண்மீன் குழுவையும் மேலும் 31⁄3 பாகைகள் கொண்ட 4 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இப்பிரிவு 'பாதம்' எனப்படும். ஞாயிற்றின் தோற்றுப்பாதையின் மீதுள்ள இராசி சக்கரமும் 30 பாகை இடைவெளியில் 12 இராசிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. 'மேடம்' இராசி சக்கரத்தில் முதற் கூராகும், 'மீனம்' கடைக்கூராகும்.
இராசி சக்கரத்தில் உள்ள 12 இராசிகளையும், 27 விண்மீன் குழுக்களையும், ஞாயிற்றின் தோற்றுப்பாதையின் பாகைகளையும் பின்வருமாறு இணைத்து பட்டியலிடலாம்:
விண்மீன் குழு இராசி பாகை
அசுவினி மேடம் 13°20'
பரணி மேடம் 26°40'
கிருத்திகை பாதம் 1 மேடம் 30°
கிருத்திகை பாதம் 2,3,4
ரோகிணி பாதம் 1 இடபம் 43°20'
ரோகிணி பாதம் 2,3,4
மிருகசீரிடம் பாதம் 1 இடபம் 56°40'
மிருகசீரிடம் பாதம் 2 இடபம் 60°
மிருகசீரிடம் பாதம் 3,4
திருவாதிரை பாதம் 1,2 மிதுனம் 73°20'
திருவாதிரை பாதம் 3,4
புனர்பூசம் 1,2 மிதுனம் 86°40'
புனர்பூசம் பாதம் 3 மிதுனம் 90°
புனர்பூசம் பாதம் 4
பூசம் பாதம் 1,2,3 கடகம் 103°20'
பூசம் பாதம் 4
ஆயில்யம் பாதம் 1,2,3 கடகம் 116°40'
ஆயில்யம் பாதம் 4 கடகம் 120°
மகம் சிங்கம் 133°20'
பூரம் சிங்கம் 146°40'
உத்திரம் பாதம் 1 சிங்கம் 150°
உத்திரம் பாதம் 2,3,4
அட்டம் பாதம் 1 கன்னி 163°20'
அட்டம் பாதம் 2,3,4
சித்திரை பாதம் 1 கன்னி 176°40'
சித்திரை பாதம் 2 கன்னி 180°
சித்திரை பாதம் 3,4
சுவாதி பாதம் 1,2 துலாம் 193°20'
சுவாதி பாதம் 3,4
விசாகம் பாதம் 1,2 துலாம் 206°40'
விசாகம் பாதம் 3 துலாம் 210°
விசாகம் பாதம் 4
அனுடம் பாதம் 1,2,3 விருச்சிகம் 223°20'
அனுடம் பாதம் 4
கேட்டை பாதம் 1,2,3 விருச்சிகம் 236°40'
கேட்டை பாதம் 4 விருச்சிகம் 240°
மூலம் தனுசு 253°20'
பூராடம் தனுசு 266°40'
உத்திராடம் பாதம் 1 தனுசு 270°
உத்திராடம் பாதம் 2,3,4
திருவோணம் பாதம் 1 மகரம் 283°20'
திருவோணம் பாதம் 2,3,4
அவிட்டம் பாதம் 1 மகரம் 296°40'
அவிட்டம் பாதம் 2 மகரம் 300°
அவிட்டம் பாதம் 3,4
சதயம் பாதம் 1,2 கும்பம் 313°20'
சதயம் பாதம் 3,4
பூரட்டாதி பாதம் 1,2 கும்பம் 326°40'
பூரட்டாதி பாதம் 3 கும்பம் 330°
பூரட்டாதி பாதம் 4
உத்திரட்டாதி பாதம் 1,2,3 மீனம் 343°20'
உத்திரட்டாதி பாதம் 4
ரேவதி பாதம் 1,2,3 மீனம் 356°40'
ரேவதி மீனம் 360°
சோதிட முறைகள் குறி கூறுதல்
எண் சோதிடம்
பெயர் சோதிடம்
கிளி ஜோசியம்
நாடி ஜோசியம்
கைரேகை ஜோசியம்