FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Global Angel on March 07, 2012, 02:18:41 AM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 015
Post by: Global Angel on March 07, 2012, 02:18:41 AM
நிழல் படம் எண் : 015


இந்த களத்தின்  நிழல் படத்தை தர்ஷினி வழங்கி உள்ளார் ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்....


(http://friendstamilchat.org/newfiles/OVIYAM%20UYIRAAGIRATHU/015.jpg)
Title: Re: ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
Post by: thamilan on March 07, 2012, 08:51:50 AM
வானத்தின் கண்ணீர்
பூமிக்கு தெளித்திடும் பன்னீர்
வான‌ம் அழுதால்
பூமி செழிக்கும்

உலகம் குளிர்ந்திட‌
பயிர்கள் தளிர்த்திட‌
அணைகள் நிரம்பிட‌
குளங்கள் பெருகிட‌
நீ அழ வேண்டும் இல்லையெனில்
இந்த உலகமே அழுதிடும்

பூமி எமக்கு அன்னை
மேகம் எமக்குத் தந்தை
உலகில் ஒவ்வொரு உயிரும்
உயிர் வாழ‌
ஒவ்வொரு பயிரும்
பிரசவிக்க மழை எனும்
விந்தணுக்கள் வேண்டும்

மேகமே
உன் மழையெனும் அமுதத்தால்
இந்த‌ உலகை குளிர்வித்து
உலக வளங்களை செழிவித்திடும்
உனக்கு நாம் என்ன செய்தோம்

நாட்டை நவீனப் படுத்துகிறோம்
என்ற பெயரில்
காடுகளை வெட்டிவோம்
விஞ்ஞான‌ம் என்ற‌ பெய‌ரில்
ஆலைக‌ளை அமைத்து
அதில் வ‌ரும் புகையால் உன்னை
மாசு ப‌டுத்தினோம்
உல‌கையே காக்கும் உன் உட‌லில்
ஓட்டைக‌ள் உண்டாக்கினோம்

ம‌னித‌ர்க‌ள் செய்யும்
கொடுமை தாழாம‌ல்
அழுத‌ழுது உன் க‌ண்ணில்
க‌ண்ணீரும் வ‌ற்றிவிட்ட‌தா
உன் க‌ண்ணில் இருந்து
க‌ண்ணீர் நிறைய‌ வ‌ர‌ வேண்டும்
அது ஆன‌ந்த‌க் க‌ண்ணீராக‌ இருக்க‌ வேண்டும்

அத‌ற்கு நாம்
வீட்டுக்கு வீடு
ம‌ர‌ம் வ‌ள‌ர்ப்போம்
Title: Re: ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
Post by: Yousuf on March 07, 2012, 09:46:12 AM
சகோதரி தர்ஷினி கொடுத்துள்ள இப்புகைப்படத்திற்கு இந்தியாவின் தண்டகாருன்ய காடுகளை நம்பி வாழும் பழங்குடியின மக்களை பன்னாட்டு தொழிற்சாலைகள் அங்குள்ள கனிம வளங்களை சுரண்ட வேண்டும் என்பதற்காக அங்கு ஆண்டாண்டு காலமாய் வாழ்ந்து வரும் அப்பாவி பழங்குடியின மக்களை வெளியேரசொல்வதும் அதற்க்கு இந்திய அரசாங்கமும், இந்திய அரசபடைகளும் அம்மக்களை படுகொலை செய்து வருவதையும் அறியாதவர்களுக்கு உணர்த்த வேண்டும் என்ற முயற்சியில் இக்கவிதையை எழுதுகிறேன்.

மழை வளம் காக்க
மரம் வளர்ப்போம்!  - என்று கூறும்
இந்திய அரசே!

நீ சொல்வது ஒன்றும்
செய்வது ஒன்றுமாக...
உள்ளதே ஏன்?

ஆண்டாண்டு காலமாய்
காடுகளை நம்பி வாழும்
அப்பாவி மக்களை வெளியேற
சொல்வது ஏன்?

தண்டகாருண்யா காடுகளை...
பன்னாட்டு தொழிற்சாலைகளிடம்
அற்ப லாபத்திற்காய் தாரைவார்த்து
கொடுத்தது ஏன்?

அக்காடுகளை நம்பி வாழும்
அப்பாவி மக்களை...
ரோடுகளில் நிறுத்தியது ஏன்?

அம்மக்களுக்கு கல்வியும்,
சுகாதாரமும், வாழ்வாதாரமும்
வழங்கவேண்டிய அரசே அவர்களை...
அல்லல்பட வைத்தது ஏன்?

இத்தனையும் தட்டிக்கேட்ட
அப்பாவி மக்களை...
கோப்ரா பட்டாளியன்களை அனுப்பி...
கொன்று குவித்தது ஏன்?

கொன்றதோடு விட்டதா
இந்திய அரசபடை என்றால்...
இல்லை இல்லை இன்னும் உள்ளது
இவர்கள் செய்த அட்டூழியங்கள் என்று...
நீண்டு கொண்டே போகிறது பட்டியல்!

அங்கு வாழும் என் தாய்மார்களும்,
சகோதரிகளும் இந்திய அரசபடையால்...
மானபங்கம் படுத்தப்பட்டார்கள்...
இது உச்ச கட்ட வேதனை!

இந்திய அரசே! இந்திய அரசே!
நீ மக்களை வாழவைக்க வந்தாயா?
வாழ்வருக்க வந்தாயா?
எழுகிறது சந்தேகம்!

தண்டகாருன்ய காடுகளின்...
செழிப்பிலே இதுவரை
ஆனந்த கண்ணீர்(மழை) விட்டது...
வான் மேகங்கள்!

இனி அக்காடுகளின்...
அழிவிலே இரத்த கண்ணீர்...
வடிக்க காத்திருக்கிறது...
வான் மேகங்கள்!

உள்ளம் எல்லாம் கொதிக்கிறது...
இக்கொடுமைகளை பார்க்கையில்!
வல்லரசு கணவிலே நல்லரசை
கோட்டை விட்ட இந்திய அரசே!
நீ சிந்திக்க வேண்டும்!
Title: Re: ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
Post by: suthar on March 08, 2012, 07:01:52 AM
தோழி தர்ஷினி கொடுத்த காட்சிக்கு என் கற்பனை பெண் நிலை இல்லாதவள் என்பதை உயிரூட்டி இருக்கிறேன் . இதில் அகர வரிசையில் எழுத முயற்சித்துள்ளேன் ஏதும் தவறு இருப்பின் மன்னிக்கவும்

ன்பே
ருயிரே
னியவளே
கையில் கொடையாளே
ணர்வே என்
க்கமே
ன்னுயிரே
ன் இந்த மாற்றம்
யமில்லா என் மனம் எதிலும்
ன்றாமல் ஒவ்வொரு வினாடியும்
ராயிரம் யுகமானது பெண்ணே.....!

பெண்ணும் காலமும் ஒன்று
இரண்டும் எளிதில் கனியாது

முதமே
னந்தமாய் வாழ
ப்பாவையாகிய பூவை மொய்க்கும்
யாய்
ன் உயிரை குடிக்கும்
ழியனாகும்
னக்கே எனக்கான வாய்ப்பை
ன் பறித்து கொண்டாய்
ந்து நாழிகை கூட பிரியா
ற்றுமை வேண்டும் என கூறியவளே
டமாய் தத்தளிக்க விட்டு சென்றதேன்.

பெண்ணும் கடலும் ஒன்று
பெண் ஆழம்
கடல் ஆழம்
அறிந்தவர்கள் யார்
இரண்டிலும் கரை ஏறுவது கடினம்.....

(உச்சி மீது வான் இடிந்து விழுகின்ற போதிலும்
அச்சமில்லை என்று சொன்ன பாரதியே)
ஞ்சி போயிருப்பான் உன் செயலை கண்டு
சை காதலியே -நீ
ல்லாளாய் இருக்க
னஸ்வரத்தில் நான் கேட்டது
னக்கு கேட்காது போனதா
ரார் முன்னிலையில் கரம் பிடிக்க
த்தனித்தும்
ன் உனக்கு
யம் - நாம்
ன்று பட்டால் வாழ்வு உண்டு
வியமே.........!

பெண்ணும் ஓவியமும் ஒன்று
பெண்ணும் அழகு
ஓவியமும் அழகு
இரண்டிற்கும் உயிருண்டு
ஆனால் உணர்வற்ற ஜடங்கள்........

ன்பாய்
தரவாய்
ன்பமாய் இருக்க வேண்டியவள்
ட்டியாய் தைத்ததால்
னக்கானவன்
சலாய் தவிக்கிறேன்
ங்கும் ஜீவித்திருக்கும் காதலை அடைய
க்க பெருமூச்சு விடுகிறேன்
ந்தாண்டு காதலில்
ழுக்கமாய் நடந்தும்
ரங்கட்டபட்டதன் காரணம் என்னவோ?
பெண்ணே கல்லாகி போனாயோ.....?

பெண்ணும் கல்லும் ஒன்று
எப்படியனில்
பெண் நிலவாய்
நிலவு கல்லாய்
பெண் நிலவென்றால் அவள் கல்தான்!

வானில் சுதந்திரமாய்
சுற்றி திரிந்த தென்றல் பெண்ணை
கார்முகிலன்  தீண்டியதன்
விளைவு  மழை
மழை பெய்தால் புவி  குளிரும்...
இவ்வளவு எடுத்துரைத்தும்
உன் செவி குளிராது போனதேன்?

உன் நினைவுகளை நெஞ்சில் நிறுத்தினாலும்
மனம் எதிலும் லயிக்காது
அழுது
ஆர்பாட்டம் செய்கிறது
இப்பிரிவை தாளமுடியாமல்
இதயத்தில் முளைத்த காதலை
இதயத்துனுள்ளே புதைக்க முயன்றதால்
நீர் பூத்த குளமாய் கண்கள் மங்கி
குபுகுபுவென பொங்கி
கண்கள் கனநீரை
கொப்பளித்து செங்குருதியாய்
கசிந்து வருகிறது பெண்ணே .......!

பெண்ணும் நீரும் ஒன்று
எதனுடனும் ஒன்றிவிடும் ஆற்றல்
இரண்டிற்கும் தனி குணம் கிடையாது
அப்படியானால் பெண் நீர்தான்....
Title: Re: ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
Post by: ஸ்ருதி on March 08, 2012, 07:50:24 AM
காதலை சொன்னாய்
காதலை தந்தாய்
நட்புக்குள் காதலா
கவலை கொண்டேன்
நட்போடு காதலும் என்றாய்...

காணும் கனவினில்
எல்லாம் உன் முகம் என்றேன்
கனவினிலும்
காதல் செய்வேன் என்றாய்
பேசும் வார்த்தைகள்
இனிமை என்றாய்....
பேசவைத்து பார்த்து ரசித்து
சிரித்து மகிழ்ந்தாய்...

கொஞ்சும் என் மொழி
மழலை என்றாய்
சிரிக்கும் என் ஒலி
கவிதை என்றாய்..
செய்யும் குறும்புகள்
பிடிக்கும் என்றாய்..

சின்ன கவிதைகள்
செல்ல சிணுங்கல்கள்
முத்த சத்தங்கள்
இதயத்தின் துடிப்புகள்
எல்லாம் கேட்கும் தருணம்
வேண்டும் என்பாய்

தேடும் கண்களை
தவிக்க வைப்பாய்
தீயாய் தீண்டலை
ரசிக்க வைப்பாய்
கொஞ்சி பேசி
சிலிர்க்க வைப்பாய்
துவளும் மனதை
துடிக்க வைப்பாய்....

காத்திருப்பது பிடிக்கதென்பேன்
காதலோடு காத்திரு
காத்திருப்பதை
மறப்பாய் என்றாய்

காத்திருக்கிறேன்
காதலோடு
மறந்தது நீயோ???

என் உறக்கம் மறந்தேன்
என் குறும்புகளை மறந்தேன்
என் சிரிப்பை மறந்தேன்
என் சினுங்களை மறந்தேன்
என் கவிதையை மறந்தேன்
என்னிடம் நீ ரசித்தவை
எல்லாம் மறந்தேன்
உன்னை மட்டுமே
மறக்க முடியாமல்...

காத்திருந்த கண்கள்
இன்று  கண்ணீரில்..

என் கண்ணீரும்
பிடிக்குமோ?
சொல்லாமல்
சென்றுவிட்டாயே
சொல்லி இருந்தால்
கண்ணீரை பரிசளித்திருபேன்
காதலோடு கண்ணீரையும்....
Title: Re: ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
Post by: ooviya on March 08, 2012, 08:11:41 AM
இதயத்தில் இருந்து
பெருகெடுத்து
கண்கள் வழியே
கன்னங்களை
ஈரம் ஆக்கி
முத்து முத்தான
கண்ணீர் துளிகளே ...

இன்பாமான  நேரத்திலும்
சோகமான நேரத்திலும்
எனக்கு துணையாக
இருந்தாயே...

எத்தனை இரவுகள்
ஆறுதலாக 
என்னை அரவனைத்தாய்...

உப்பு கரிக்கும் உன் அமுதம்
என் இதழில் பட்டு
நாவில் சுவைத்து
என் தாகம் திர்த்தாய்...

நீ எங்கு போனாய் 
வற்றி போன
என் கண்கள்
உன்னை தேடுகிறது...

இயற்கையை குளிப்பாட்ட
உன் கண்ணீரை
வீணாக்காதே...

தனிமையில் வாழும்   
என் போன்ற பெண்களுக்கு
நீ தான் துணை

வா வந்து விடு என்னிடம் !!!!!!!!
Title: Re: ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
Post by: Global Angel on March 10, 2012, 05:07:32 AM
என் வானமே கருக்கொள்கிறது
வற்றாத நதியாய்
வரையறை இல்ல என் அன்பு
வசப்படாமல் போனதால்
என் விழிகளும்
வற்றாத வைகை ஆனதோ .....


என்னை சூழ பல இதயம்
இருந்தும் இல்லை எனகோர் உதயம்
காதலுக்கு மட்டுமல்ல
நல்ல நட்புக்கும் ராசி வேண்டும்
நல்லதே நினைத்தேன்
நான் மட்டும்
நயவஞ்சகம் ஏன் உனக்கு
ஆனந்த கண்ணீர் யாவும்
இன்று அணை கடந்த வெள்ளமாகி
ஆறு கடல் தாண்டிடுமோ ..
எள்ளி நகையாட  நட்பென்று நீ எதற்கு
எதுமே இல்லமால்
பெயருக்கு ஓர் காதல் உறவு எதற்கு


என் இதயத்திற்கு வலிக்குமென்று
அவன் துயில என் ரணங்களை சுகமாக்கி
வெண் பஞ்சு மேகம் அனுப்பினேன்
என் நட்புக்கு தோள்கொடுக்க
நானும் ஒருத்தியாய்
என் தோழமை துயில
நட்பு கரம் கொடுத்து
வெண் மேகத்தை படுக்கை விரித்தேன் ...


வாங்கி வந்த வரமா
இல்லை .வந்ததால் வந்த சாபமா
நல்ல நட்பும் இல்லை
நான் நாடும் இதயமும் இல்லை
எட்ட நின்றே
என் வெண் மேக துகள்களை
கரு மேகமாக்கி
என் கண் வழியே
கர் இருளை திரட்டி
கண்ணீரை கரை புரள செய்கின்றது...

வானமே கண்களாக
வாங்கி வந்த சாபங்கள்
கண்ணீர் துளிகளாக
என் வானமும் காரைகிறது
என் கண்ணீர் துகளில்..
 கண்ணீர் துளிகள் சேர்ந்து
கடலையே உருவாகினாலும்


கண  நேரம் நனைந்து விடு
என் உப்பு துளிகளும்
உவப்பை உணர்த்திவிடும் .. ..