FTC Forum

தமிழ்ப் பூங்கா => காலக்கண்ணாடி => Topic started by: Global Angel on May 18, 2012, 01:51:50 AM

Title: காலம் ஒரு பார்வை
Post by: Global Angel on May 18, 2012, 01:51:50 AM
கிரெகொரியின் நாட்காட்டி


கிரெகொரியின் நாட்காட்டி (Gregorian calendar) என்பது இன்று உலகில் பரவலாக பயன்பாட்டில் உள்ள நாட்காட்டியாகும். இது கி. மு 45 -ல் ரோமப் பேரரசர் ஜூலியஸ் சீசரால் உருவாக்கப்பட்ட ஜூலியின் நாட்காட்டியின் (Julian calendar) ஒரு திருத்தப்பட்ட வடிவமாகும். இத்தாலியரான அலோயிசியஸ் லிலியஸ் (Aloysius Lilius) என்ற மருத்துவரால் முன்வைக்கப்பட்டது. இது பிப்ரவரி 24 1582 இல் அப்போதைய திருத்தந்தையான திருத்தந்தை பதின்மூன்றாம் கிரகோரியின் ஆணைப்படி துவக்கி வைக்கப்பட்டது. இதன் காரணமாக பின்னாளில் இந்நாட்காட்டிக்கு "கிரகோரியன் நாட்காட்டி" என்னும் பெயர் வழங்கலாயிற்று.
 இந்த நாட்காடியின் படி இயேசு பிறந்ததாக கணிக்கப்பட்ட ஆண்டிலிருந்து ஆண்டுகள் இலக்கமிடப்பட்டன. மேலும் இக்காலப்பகுதி "ஆண்டவரின் ஆண்டு" எனவும் பெயரிடப்பட்டது. இது கிபி 6 வது நூற்றாண்டில் டயனீசியஸ் எக்சீகுவஸ் (Dionysius Exiguus) என்னும் கிறித்தவத் துறவியால் உரோமையில் துவக்கப்பட்ட ஆண்டுக் கணிப்பு முறையாகும்.
 
கிரிகோரியன் நாட்காட்டி பயன்படுத்தும் முன்னர் இருந்த ரோமானிய நட்காட்டியில் ஜனவரி, பிப்ரவரி, மார்ச்சு, ஏப்ரல், மே, ஜூன், செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் எனப் பத்து மாதங்கள் கொண்டதே ஒரு ஆண்டாகும். பின்னரே ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்கள் சேர்க்கப்பட்டன. கிரகோரியின் நாட்காட்டியானது 'ஜூலியன் நாட்காட்டியின்' சராசரி ஆண்டைவிட நீளமாகக் காணப்பட்டமையால் இளவேனிற் சம இராப்பகல் நாள், நாட்காட்டியில் பின்னோக்கி நகர்வதைத் திருத்துவதற்காக முன்கொணரப்பட்டது. மேலும் உயிர்த்த ஞாயிறு நாளை கணக்கிட பயன்பட்ட சந்திர நாட்காட்டியும் பல குறைகளைக் கொண்டிருந்ததும் இன்னொரு முக்கிய காரணமாகும்.

 
ஸ்பெயின், போர்ச்சுக்கல், போலிஷ் லிதுவேனியன் காமன்வெல்த், இத்தாலியின் பெரும்பகுதிகள் போன்றவையே கிரிகோரியன் நாட்காட்டியை முதலில் ஏற்றுக் கொண்டன. 1582 அக்டோபர் முதல் இவை கிரிகோரியன் நாட்காட்டியைப் பயன்படுத்தத் தொடங்கின. இங்கிலாந்தும் அமெரிக்காவும் 1752 ஆம் ஆண்டிற்குப் பிறகே கிரிகோரியன் நாட்காட்டியை அங்கீகரித்தன. ஆங்கிலேய ஆட்சி காலத்தில் இந்தியாவிலும் இந்த நாட்காட்டி புழக்கத்திற்கு வந்தது. கிரிகோரியன் நாட்காட்டியை கடைசியாக ஏற்றுக் கொண்ட நாடுகளில் கடைசியாக வருவது கிரீஸ் ஆகும். 1923 பிப்ரவரி 15 -ல் தான் இந்நாடு கிரிகோரியன் நாட்காட்டியை அங்கீகரித்தது.
Title: Re: காலம் ஒரு பார்வை
Post by: Global Angel on May 18, 2012, 01:55:11 AM
ஜனவரி 1


ஜனவரி 1 கிரிகோரியன் ஆண்டின் முதலாவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 364 (நெட்டாண்டுகளில் 365) நாட்கள் உள்ளன.


நிகழ்வுகள்

 கிமு 45 - ஜூலியன் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டது.

 630 - முகமது நபி தனது படைகளுடன் மெக்கா நோக்கிப் பயணமானார்.

 1502 - போர்த்துக்கீச நாடுகாண் பயணி பெட்ரோ ஆல்வாரெஸ் கப்ரால் பிரேசில்
 நாட்டின் ரியோ டி ஜனெய்ரோ நகரை அடைந்தான்.

 1600 - ஸ்கொட்லாந்து ஜூலியன் நாட்காட்டியை பயன்படுத்த ஆரம்பித்தது.

 1700 - ரஷ்யா ஜூலியன் நாட்காட்டியை பயன்படுத்த ஆரம்பித்தது.
 1752 - கிரிகோரியன் நாட்காட்டியை பிரித்தானியா ஏற்றுக்கொண்டது.

 1772 - 90 ஐரோப்பிய நாடுகளில் பயன்படுத்தக்கூடியதான உலகின் முதலாவது பயணிகள் காசோலை லண்டனில் விற்பனைக்கு வந்தது.

 1800 - டச்சு கிழக்கிந்தியக் கம்பனி கலைக்கப்பட்டது.

 1801 - பெரிய பிரித்தானியா மற்றும் அயர்லாந்துப் பேரரசு இணைந்து ஐக்கிய இராச்சியம் ஆனது.

 1804 - எயிட்டி பிரெஞ்சு ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றது.
 1806 - பிரெஞ்சு குடியரசு நாள்காட்டி பாவனையிலிருந்து விலக்கப்பட்டது.

 1808 - ஐக்கிய அமெரிக்காவில் அடிமைகளை இறக்குமதி செய்வது தடை செய்யப்பட்டது.

 1833 - ஐக்கிய இராச்சியம் போக்லாந்து தீவுகளின் மீது உரிமை கொண்டாடியது.
 1858 - இலங்கையில் முதலாவது தந்திச் சேவை கொழும்புக்கும் காலிக்கும் இடையில் ஆரம்பமானது.

 1861 - போர்ஃபீரியோ டயஸ் மெக்சிக்கோ நகரைக் கைப்பற்றினான்.
 1866 - யாழ்ப்பாணத்தில் முதன் முதலாக காவற்துறை (Police Force) அமைக்கப்பட்டது.

 1867 - ஐக்கிய அமெரிக்காவில் ஒஹாயோவின் "சின்சினாட்டி" நகருக்கும்
கென்டக்கியின் "கொவிங்டன்" நகருக்கும் இடையில் ஜோன் ஏ. ரோப்லிங் தொங்கு
பாலம் திறக்கப்பட்டது. இதுவே உலகின் அதி நீளமான தொங்கு பாலமாகும்.

 1872 - இலங்கையில் ரூபாய், மற்றும் சதம் ஆகிய நாணயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

 1872 - முதலாவது இந்திய அஞ்சல் (தபால்) சேனீ மலைச் (Mount Cenis) சுரங்கம் ஊடாக சென்றது.

 1877 - இந்தியாவின் மகாராணியாக விக்டோரியா டில்லியில் அறிவிக்கப்பட்டார்.

 1883 - இலங்கையின் தமிழர் தாயகம் வடக்கு, கிழக்கு என இரண்டு மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது.

 1886 - பர்மா விக்டோரியா மகாராணிக்கு அவரது பிறந்தநாள் பரிசாக வழங்கப்பட்டது.
 1890 - எரித்திரியா இத்தாலிய குடியேற்ற நாடாக ஆக்கப்பட்டது.
 1893 - ஜப்பானில் கிரெகோரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டது.

 1896 - இலங்கையில் முன்னர் ரொபேர்ட்சன் கம்பனியின் பொறுப்பில் இருந்த தொலைபேசி சாதனத்தை இலங்கை அரசு கையேற்றது
.
 1899 - கியூபாவில் ஸ்பானிய ஆளுகை முடிவுற்றது.

 1901 - பிரித்தானியக் குடியேற்ற நாடுகளான நியூ சவுத் வேல்ஸ், குயின்ஸ்லாந்து, விக்டோரியா, தாஸ்மானியா, மேற்கு ஆஸ்திரேலியா ஆகியன ஆஸ்திரேலிய பொதுநலவாயம் என்ற ஒரே நாடாக இணைந்தன. அதன் முதலாவது பிரதமராக எட்மண்ட் பார்ட்டன் தெரிவு செய்யப்பட்டார்.

 1905 - டிரான்ஸ்-சைபீரியன் தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது.

 1906 - பிரித்தானிய இந்தியாவில் இந்திய சீர்தர நேரம் அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

 1911 - வட மண்டலம் தெற்கு ஆஸ்திரேலியாவிலிருந்து பிரிக்கப்பட்டு ஆஸ்திரேலிய நடுவண் அரசின் ஆட்சியின் கீழ்க் கொண்டுவரப்பட்டது.

 1912 - சீனக் குடியரசு அமைக்கப்பட்டது.
 1919 - ஸ்கொட்லாந்தில் அயோலயர் என்ற கப்பல் (HMS Iolaire) மூழ்கியதில் 205 பேர் கொல்லப்பட்டனர்.

 1926 - துருக்கி கிரிகோரியன் நாட்காட்டிக்கு மாறியது.
 1927 - மெக்சிக்கோவில் கத்தோலிக்க மதத் தடையை எதிர்த்து மதத் தீவிரவாதிகள் அரசுடன் போர் தொடுத்தனர்.

 1927 - துருக்கி கிரெகொரியின் நாட்காட்டியை அறிமுகப்படுத்தியது. இதன்படி 1926, டிசம்பர் 18இற்கு அடுத்த நாள் ஜனவரி 1, 1927ஆக மாற்றப்பட்டது.

 1935 - இத்தாலியக் குடியேற்ற நாடுகளான திரிப்பொலி, சிரெனாய்க்கா ஆகியன சேர்ந்து லிபியா ஆகியன.

 1945 - பெல்ஜியத்தின் செனோன் நகரில் 30 ஜேர்மனிய போர்க்கைதிகள் ஐக்கிய அமெரிக்கப் படைகளினால் படுகொலை செய்யப்பட்டனர்.

 1947 - இரண்டாம் உலகப் போரின் முடிவில் கைப்பற்றப்பட்ட ஜேர்மனியின் பிரித்தானிய மற்றும் ஐக்கிய அமெரிக்கப் பகுதிகள் ஒன்றாக்கப்பட்டன. இது பின்னர் ஜேர்மன் சமஷ்டிக் குடியரசு எனப் பெயர் பெற்றது.

 1948 - பிரித்தானிய தொடருந்து சேவைகள் நாட்டுடமை ஆக்கப்பட்டன.

 1948 - பிரிவினைக்குப் பின்னர் பாகிஸ்தானுக்கு வழங்குவதாக ஒப்புக்கொள்ளப்பட்ட 550 மில்லியன் ரூபாய் பணத்தை இந்தியா வழங்க முடியாதென அறிவித்தது.

 1949 - ஐநா அறிவுறுத்தலின் படி காஷ்மீரில் நள்ளிரவுக்கு ஒரு நிமிடத்துக்கு முன்னர் போர்நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி பாகிஸ்தானுடனான இந்தியப் போர் முடிவுக்கு வந்தது.

 1956 - சூடான் நாடு எகிப்து மற்றும் பிரித்தானியா ஆகியவற்றிடம் இருந்து விடுதலை பெற்றது.

 1958 - இலங்கையில் வாகன இலக்கத்தகடுகளில் சிங்கள மொழியில் ஸ்ரீ எழுத்து கட்டாயமாக்கப்பட்டது.

 1958 - ஐரோப்பிய சமுகம் அமைக்கப்பட்டது.
 1959 - கியூபாவின் அதிபர் ஃபுல்ஜென்சியோ பட்டீஸ்டா ஃபிடெல் காஸ்ட்ரோவின் படைகளினால் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

 1960 - கமரூன் பிரான்ஸ் மற்றும் பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்றது.
 1962 - மேற்கு சமோவா நியூசிலாந்திடம் இருந்து விடுதலை பெற்றது.
 1971 - ஐக்கிய அமெரிக்கத் தொலைக்காட்சிகளில் புகைத்தல் குறித்த விளம்பரங்கள் தடை செய்யப்பட்டன.

 1978 - ஏர் இந்தியா போயிங் 747 விமானம் வெடித்து பம்பாயில் கடலில் வீழ்ந்து மூழ்கியதில் 213 பேர் கொல்லப்பட்டனர்.

 1981 - பலாவுக் குடியரசு ஐக்கிய அமெரிக்காவின் அதிகாரத்துள் சுயாட்சி பெற்றது.
 1984 - புரூணை ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
 1993 - செக்கோசிலவாக்கியா நாடு செக் குடியரசு, சிலோவாக் குடியரசு என இரு நாடுகளாகப் பிளவடைந்தது.

 1995 - உலக வணிக அமைப்பு உருவாக்கம்.
 1999 - யூரோ நாணயம் அறிமுகம்.
 2008 - கொழும்பில் ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரன் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.



பிறப்புகள்

 1943 - செம்பியன் செல்வன், ஈழத்து எழுத்தாளர்
 1966 - மில்லர், முதல் கரும்புலி (இ. 1987)
 1978 - பரமஹம்ஸ நித்யானந்தர், இந்திய ஆன்மிகவாதி
 
இறப்புகள்

 1901 - சி. வை. தாமோதரம்பிள்ளை தமிழ்ப் பதிப்புத்துறையின் முன்னோடி (பி. 1832)
 2008 - தியாகராஜா மகேஸ்வரன், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி
 
சிறப்பு நாள்

 விடுதலை நாள்: கியூபா (1899)
 ஹெயிட்டி (1804)
 சூடான் (1956)
 கமரூன் (1960)
 செக் குடியரசு (1993)
 சிலோவாக்கியா (1993)
 தாய்வான் (1912)

Title: Re: காலம் ஒரு பார்வை
Post by: Global Angel on May 18, 2012, 02:00:21 AM
ஜனவரி 2

ஜனவரி 2 கிரிகோரியன் ஆண்டின் இரண்டாம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 363 (நெட்டாண்டுகளில் 364) நாட்கள் உள்ளன


நிகழ்வுகள்

 366 - அலமானி எனப்படும் ஜேர்மனிய ஆதிகுடிகள் ரைன் ஆற்றைக் கடந்து ரோமை முற்றுகையிட்டனர்.

 1492 - ஸ்பெயினில் முஸ்லிம்களின் ஆளுகைக்குட்பட்ட கடைசி நகரமான கிரனாடா சரணடைந்தது.

 1757 - கல்கத்தாவை ஐக்கிய இராச்சியம் கைப்பற்றியது.
 1782 - பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி அட்மிரல் எட்வெர்ட் ஹியூஸ் தலைமையில் இந்தியாவில் இருந்து திருகோணமலை நோக்கிப் புறப்பட்டது.

 1791 - ஒகைய்யோ மாநிலத்தில் குழந்தைகள் உட்பட குடியேற்றவாசிகள் 14 பேரை இந்திய ஆதிகுடிகள் படுகொலை செய்தனர்.

 1793 - ரஷ்யாவும் புரூசியாவும் போலந்தை பங்கிட்டன.
 1893 - வட அமெரிக்காவில் தொடருந்துப் பாதைகளில் நேரத்தை அளவிடும் குரோனோமீட்டர்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

 1905 - ரஷ்யக் கடற்படையினர் சீனாவின் போர்ட் ஆதரில் ஜப்பானியரிடம் சரணடைந்தனர்.

 1921 - ஸ்பெயினின் சாண்டா இசபெல் கப்பல் மூழ்கியதில் 244 பேர் கொல்லப்பட்டனர்.

 1941 - இரண்டாம் உலகப் போர்: வேல்ஸில் கார்டிஃப் என்ற இடத்தில் லாண்டாஃப் தேவாலய ஜெர்மனியரின் குண்டுவீச்சில் பலத்த சேதம் அடைந்தது.

 1942 - இரண்டாம் உலகப் போர்: மணிலா ஜப்பானியரினால் கைப்பற்றப்பட்டது.
 1955 - பனாமாவின் அதிபர் ஜோசே அன்ரோனியோ ரெமோன் படுகொலை செய்யப்பட்டார்.

 1959 - முதலாவது செயற்கைச் செய்மதி, லூனா 1, சோவியத் ஒன்றியத்தால் விண்ணுக்கு ஏவப்பட்டது.

 1971 - கிளாஸ்கோவில் உதைபந்தாட்ட மைதானம் ஒன்றில் இடம்பெற்ற விபத்தில் சிறுவர்கள் உட்பட 66 பேர் கொல்லப்பட்டனர்.

 1982 - சோமாலிய அரசுக்கு எதிரான தமது முதலாவது இராணுவ நடவடிக்கையை சோமாலிய தேசிய இயக்கம் தொடங்கியது. சோமாலியாவின் வடபகுதியில் அரசியல் கைதிகளை விடுவித்தனர்.

 1993 - யாழ்ப்பாணம், கிளாலி நீரேரியில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் இலங்கைப் படையினரால் படுகொலை செய்யப்பட்டனர்.

 1999 - விஸ்கொன்சின் மாநிலத்தில் இடம்பெற்ற பலத்த பனிப்புயலில் சிக்கி 68 பேர் கொல்லப்பட்டனர்.

 2006 - மன்னாரில் இலுப்பைக்கடவையில் இடம்பெற்ற இலங்கைப் படையினரின் வான் தாக்குதலில் 8 சிறுவர்கள் உட்பட 15 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 40 பேர் படுகாயமடைந்தனர்.

 2008 - விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்குமிடையே 2002 இல் கைச்சாத்திடப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையில் இருந்து வெளியேறுவதாக இலங்கை அரசு அறிவித்தது.
 
பிறப்புகள்

 1940 - எஸ். ஆர். ஸ்ரீனிவாச வரதன், ஏபெல் பரிசு பெற்ற கணித இயலர்.
 1961 - கேணல் கிட்டு, விடுதலைப் புலிகளின் மத்தியகுழு உறுப்பினர், தளபாதி (இ. 1993)
 
இறப்புகள்

 1782 - கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் - இலங்கையின் கண்டியை ஆண்ட கடைசி அரசன்.
 1876 - மீனாட்சி சுந்தரம் பிள்ளை, தமிழறிஞர் (பி. 1815)
 1960 - தி. வை. சதாசிவ பண்டாரத்தார், தமிழக வரலாற்று அறிஞர் (பி. 1892)
Title: Re: காலம் ஒரு பார்வை
Post by: Global Angel on May 18, 2012, 02:04:53 AM
ஜனவரி 3

ஜனவரி 3 கிரிகோரியன் ஆண்டின் மூன்றாம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 362 (நெட்டாண்டுகளில் 363) நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

 1431 - பிரெஞ்சு வீராங்கனை 19 வயது ஜோன் ஒஃப் ஆர்க் கைது செய்யப்பட்டு பியேர் கவுச்சோன் ஆயரிடம் ஒப்படைக்கப்பட்டாள்.

 1496 - லியொனார்டோ டா வின்சி தனது பறக்கும் இயந்திரம் ஒன்றை சோதனையிட்டது வெற்றியளிக்கவில்லை.

 1754 - அம்பலப்புழாவில் நடைபெற்ற சண்டையில் கொச்சி அரசரதும், நாடிழந்த ஏனைய அரசர்களினது கூட்டுப்படைகளைத் தோற்கடித்து அவரை எதிர்த்தவர்கள் அனைவரையும் திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மர் முறியடித்தார்.

 1815 - ஆஸ்திரியா, பிரித்தானியா, பிரான்ஸ் ஆகியன இணைந்து புரூசியா, மற்றும் ரஷ்யாவை எதிர்த்து இரகசிய கூட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்தின.

 1833 - போக்லாந்து தீவுகளை பிரித்தானியா கைப்பற்றியது.
 1859 - தமிழகத்தில் போளூர் பகுதியில் நிலநடுக்கம் பதியப்பட்டது.

 1861 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஐக்கிய அமெரிக்காவில் இருந்து பிரிவதில்லை என டெலவெயர் வாக்களித்தது.

 1870 - புரூக்ளின் பாலம் கட்டுமானப் பணிகள் ஆரம்பமாயின.

 1888 - 91 சமீ முறிவுத் தொலைநோக்கி முதன்முறையாக கலிபோர்னியாவில் உபயோகிக்கப்பட்டது. இதுவே அந்நேரத்தில் உலகின் மிகப் பெரும் தொலைநோக்கி ஆகும்.

 1921 - துருக்கி ஆர்மேனியாவுடன் அமைதி உடன்பாட்டிற்கு ஒப்புக்கொண்டது.

 1924 - பண்டைய எகிப்தின் துட்டன்காமன் மன்னன் அடக்கம் செய்யப்பட்ட பெட்டியை பிரித்தானியாவின் தொல்லியலாளர் ஹவார்ட் கார்ட்டர் கண்டுபிடித்தார்.

 1925 - இத்தாலியின் ஆட்சி அதிகாரம் முழுவதும் தன்னிடம் உள்ளதாக முசோலினி அறிவித்தார்.

 1932 - பிரித்தானியர் மகாத்மா காந்தி மற்றும் வல்லபாய் பட்டேல் ஆகியோரைக் கைது செய்தனர்.

 1947 - அமெரிக்கக் காங்கிரசின் அமர்வுகள் முதற்தடவையாக தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டது.

 1956 - ஈபெல் கோபுரத்தில் ஏற்பட்ட தீயினால் கோபுரத்தின் மேற்பகுதி சேதமடைந்தது.

 1957 - முதலாவது மின்கடிகாரத்தை ஹமில்ட்டன் வாட்ச் கம்பனி அறிமுகப்படுத்தியது.

 1958 - மேற்கிந்தியத் தீவுகளின் கூட்டமைப்பு அமைக்கப்பட்டது.
 1959 - அலாஸ்கா ஐக்கிய அமெரிக்காவின் 49வது மாநிலமானது.
 1961 - அமெரிக்க அரசு கியூபாவுடனான ராஜதந்திர உறவுகளை முறித்துக்கொண்டது.

 1961 - இடாகோவில் அணுக்கரு உலை ஒன்றில் ஏற்பட்ட கசிவின் காரணமாக மூன்று தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.

 1966 - இந்தியப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரிக்கும் பாகிஸ்தான் அதிபர் அயூப்கானுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் டாஷ்கெண்டில் ஆரம்பமாயின.

 1974 - யாழ்ப்பாணத்தில் நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு ஆரம்பமானது.
 1977 - ஆப்பிள் கணினி நிறுவனமயப்படுத்தப்பட்டது.

 1990 - பனாமாவின் முன்னாள் அதிபர் மனுவேல் நொரியேகா அமெரிக்கப் படைகளிடம் சரணடைந்தார்.

 1994 - ரஷ்யாவின் இர்கூத்ஸ்க்கில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று தரையில் மோதி வெடித்ததில் 125 பேர் கொல்லப்பட்டனர்.

 1995 - விடுதலைப் புலிகள் - இலங்கை அரசு பேச்சுக்களின் இரண்டாம் கட்டம் ஆரம்பமானது.

 2004 - எகிப்திய விமானம் ஒன்று செங்கடலில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 148 பேரும் கொல்லப்பட்டனர்.

 
பிறப்புகள்

 1740 - கட்டபொம்மன், ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்ட மன்னன் (இ. 1799)

 1956 - மெல் கிப்சன், அவுஸ்ரேலிய நடிகர்
 1969 - மைக்கேல் சூமாக்கர், ஜெர்மனியைச் சேர்ந்த பார்முலா 1 ஓட்டுனர்
 
இறப்புகள்

 2005 - ஜே. என். டிக்சித், இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் (பி. 1936)
Title: Re: காலம் ஒரு பார்வை
Post by: Global Angel on May 18, 2012, 02:08:27 AM
ஜனவரி 4

ஜனவரி 4 கிரிகோரியன் ஆண்டின் 4ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 361 (நெட்டாண்டுகளில் 362) நாட்கள் உள்ளன.


நிகழ்வுகள்

 கிமு 46 - டைட்டஸ் லபீனஸ் ருஸ்பீனா என்ற நகரில் இடம்பெற்ற சமரில் ஜூலியஸ் சீசரைத் தோற்கடித்தான்.

 1493 - கொலம்பஸ் தான் கண்டுபிடித்த புதிய உலகை விட்டுப் புறப்பட்டார்.

 1642 - இங்கிலாந்து மன்னன் முதலாம் சார்ல்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கைது செய்ய தனது படைவீரர்களை அனுப்பினான்.

 1698 - லண்டனில் அரச மாளிகையான வைட்ஹோல் தீயினால் சேதமுற்றது.
 1717 - நெதர்லாந்து, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகியன கூட்டு ஒப்பந்தம் ஏற்படுத்தின.
 1762 - ஸ்பெயின் மற்றும் நேப்பில்ஸ் மீது இங்கிலாந்து போரை அறிவித்தது.

 1847 - சாமுவேல் கோல்ட் தனது முதலாவது சுழல் துப்பாக்கியை அமெரிக்கஅரசுக்கு விலைக்கு விற்றார்.

 1854 - கப்டன் வில்லியம் மக்டொனால்ட் என்பவர் மக்டொனால்ட் தீவுகளைக் கண்டுபிடித்தார்.

 1878 - சோஃபியா நகரம் ஒட்டோமான் ஆட்சியில் இருந்து விடுதலை பெற்றது.
 1884 - ஃபாபியன் அமைப்பு லண்டனில் ஆரம்பிக்கப்பட்டது.

 1889 - இலங்கையில் சபரகமுவா மாகாணம் என்ற புதிய மாகாணம் சேர் ஈ. என். வோக்கர் என்பவரால் உருவாக்கப்பட்டது.

 1896 - யூட்டா 45வது மாநிலமாக ஐக்கிய அமெரிக்காவுடன் இணைந்தது.
 1912 - பிரித்தானியக் காலனித்துவ நாடுகளில் சாரணர் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.
 1948 - பர்மா ஐக்கிய இராச்சியத்திலிருந்து விடுதலை பெற்றது.
 1951 - சீனா மற்றும் வட கொரியப் படைகள் சியோல் நகரைக் கைப்பற்றின.

 1958 - 14 வயது பொபி ஃபிஷர் ஐக்கிய அமெரிக்காவின் சதுரங்க சம்பியன் போட்டியில் வெற்றி பெற்றார்.

 1958 - முதலாவது செயற்கைக் கோள் ஸ்புட்னிக் 1 தனது சுழற்சிப் பாதையை விட்டு விலகி பூமியில் வீழ்ந்தது.

 1959 - லூனா 1 சந்திரனுக்கு மிக அண்மையில் சென்ற விண்கலம் ஆனது.

 1990 - பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தில் பயணிகள் தொடருந்து ஒன்று சரக்கு தொடருந்துடன் மோதியதில் 300 பேர் கொல்லப்பட்டனர்.

 1998 - அல்ஜீரியாவில் மூன்று வெவ்வேறு நிகழ்வுகளில் 170 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

 2004 - ஸ்பிரிட் என்ற நாசாவின் தரையுளவி செவ்வாயில் தரையிறங்கியது.
 
பிறப்புகள்

 1643 - சேர் ஐசக் நியூட்டன், ஆங்கில அறிவியலாளர் (இ. 1727)
 1809 - லூயி பிறெயில், (இ. 1852)
 1940 - பிறையன் டேவிட் ஜோசெப்சன், நோபல் பரிசு பெற்றவர்
 1940 - காவோ சிங்ஜியான், நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர்
 1945 - ரிச்சார்ட் ஷ்ரொக், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்
 1984 - ஜீவா, தமிழ்த் திரைப்பட நடிகர்
 1985 - ஏல் ஜெஃபர்சன், அமெரிக்க கூடைப்பந்து வீரர்
 
இறப்புகள்

 1960 - அல்பேர்ட் காம்யு, நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் (பி. 1913)
 1961 - எர்வின் சுரோடிங்கர், ஆஸ்திரிய-ஐரிய இயற்பியலாளர் (பி. 1887)
 1965 - டி. எஸ். எலியட், நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் (பி. 1888)
 
சிறப்பு நாட்கள்
 பர்மா - விடுதலை நாள் (1948)
Title: Re: காலம் ஒரு பார்வை
Post by: Global Angel on May 18, 2012, 02:11:47 AM
ஜனவரி 5

ஜனவரி 5 கிரிகோரியன் ஆண்டின் 5ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 360 (நெட்டாண்டுகளில் 361) நாட்கள் உள்ளன.


நிகழ்வுகள்

 1477 - பேர்கண்டி இளவரசன் சார்ல்ஸ் கொல்லப்பட்டான். பேர்கண்டி பிரான்சின் பகுதியானது.

 1554 - நெதர்லாந்தில் ஐன்ட்ஹோவென் என்ற இடத்தில் பரவிய தீயினால் 75 விழுக்காடு வீடுகள் சேதமாயின.

 1655 - கோ-சாய் என்பவன் ஜப்பானின் மன்னனானான்.
 1757 - பிரான்சின் பதினைந்தாம் லூயி கொலை முயற்சி ஒன்றிலிருந்து தப்பினான்.

 1781 - அமெரிக்கப் புரட்சிப் போர்: வேர்ஜீனியாவில் ரிச்மண்ட் நகரம் பிரித்தானியக் கடற்படையினரால் தீக்கிரையாக்கப்பட்டது.

 1854 - சான் பிரான்சிஸ்கோவில் நீராவிக் கப்பல் ஒன்று மூழ்கியதில் 300 பேர் கொல்லப்பட்டனர்.

 1896 - வில்ஹெம் ரொண்ட்ஜென் ஒரு வகைக் கதிர்வீச்சைக் கண்டுபிடித்ததாக ஆஸ்திரியப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. இது பின்னர் எக்ஸ் கதிர் எனப் பெயரிடப்பட்டது.

 1900 - ஐரிஷ் தலைவர் ஜோன் எட்வர்ட் ரெட்மண்ட் பிரித்தானியாவின் ஆட்சிக்கெதிராகக் குரல் எழுப்பினார்.

 1905 - யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியான மோர்னிங் ஸ்டார் வாரப் பத்திரிகையாக பெரிய அளவில் வெளிவர ஆரம்பித்தது.

 1918 - ஜெர்மன் தொழிலாளர்களின் அமைதிக்கான சுதந்திரக் குழு (நாசிக் கட்சி) அமைக்கப்பட்டது.

 1933 - கோல்டன் கேட் பாலத்தின் கட்டுமானப் பணிகள் சான் பிரான்சிஸ்கோவில் ஆரம்பித்தது.

 1940 - பண்பலை வானொலி முதற்தடவையாக காட்சிப்படுத்தப்பட்டது.

 1945 - போலந்தின் புதிய சோவியத் சார்பு அரசை சோவியத் ஒன்றியம் அங்கீகரித்தது.

 1967 - இலங்கை வானொலி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் எனப் பெயர் மாற்றம் பெற்றது.

 1971 - உலகின் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கிடையில் மெல்பேர்ணில் நடைபெற்றது.
 1972 - விண்ணோடத் திட்டத்தை முன்னெடுக்க அமெரிக்கஅதிபர் ரிச்சார்ட் நிக்சன் உத்தரவிட்டார்.

 1974 - பெருவின் தலைநகரான லிமாவில் நிகழ்ந்த நிலநடுக்கத்தினால் நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன. 6 பேர் கொல்லப்பட்டனர்.

 1975 - தாஸ்மானியாவில் டாஸ்மான் பாலத்தில் சரக்குக் கப்பல் ஒன்று மோதியதில் 12 பேர் கொல்லப்பட்டனர்.

 1976 - கம்போடியா சனநாயகக் கம்பூச்சியா என கெமர் ரூச் அரசினால் பெயர் மாற்றம் பெற்றது.

 1984 - ரிச்சர்ட் ஸ்டோல்மன் குனூ இயங்குதளத்தைஉருவாக்கத் தொடங்கினார்.
 1997 - ரஷ்யப் படைகள் செச்சினியாவில் இருந்து வெளியேறின.
 2000 - இலங்கையின் தமிழ் அரசியற் தலைவர் குமார் பொன்னம்பலம் கொழும்பில் படுகொலை செய்யப்பட்டார்.

 2005 - ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த மைக்கல் பிரவுண் தலைமையிலான வானியல் ஆராய்ச்சிக் குழுவினர் சூரியக் குடும்பத்தில் ஏரிஸ் என்ற புதிய குறுங் கோள் (dwarf planet) ஒன்றைக் கண்டுபிடித்தனர்.

 2007 - கொழும்பிலிருந்து 36 கிமீ தொலைவில் நித்தம்புவ என்ற இடத்தில் இடம்பெற்ற பேருந்துக் குண்டுவடிப்பில் 6 பொதுமக்கள் கொல்லப்பட்டு 50 பேர் வரை காயமும் அடைந்தனர்.
 

பிறப்புகள்

 1592 - ஷாஜஹான், மொகாலயப் பேரரசர் (இ. 1666)
 1846 - ருடோல்ஃப் இயூக்கென், நோபல் பரிசு பெற்ற ஜேர்மனிய எழுத்தாளர் (இ. 1926)
 1874 - ஜோசப் ஏர்லாங்கர், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (இ. 1965)
 1902 - ரா. கிருஷ்ணசாமி நாயுடு, தமிழக அரசியல்வாதி (இ. 1973)
 1926 - ஜே. பி. ஜெயரத்தினம், சிங்கப்பூர் அரசியல்வாதி (இ. 2008)
 1927 - சிவாய சுப்ரமணியசுவாமி, இந்து அமெரிக்க ஆன்மிகவாதி (இ. 2001)
 1928 - சுல்பிக்கார் அலி பூட்டோ, பாகிஸ்தானின் அதிபர் (இ. 1979)
 1932 - உம்பேர்டோ ஈக்கோ, இத்தாலிய எழுத்தாளர்
 1937 - சித்தி அமரசிங்கம், ஈழத்துக் கலைஞர், பதிப்பாளர் (இ. 2007)
 1938 - நுகுகி வா தியங்கோ, கென்ய எழுத்தாளர்
 1986 - தீபிகா படுகோணெ, இந்திய திரைப்பட ந‌டிகை
 
இறப்புகள்

 1933 - கால்வின் கூலிட்ஜ், ஐக்கிய அமெரிக்காவின் 30வது குடியரசுத் தலைவர் ( பி. 1872)

 1970 - மாக்ஸ் போர்ன், நோபல் பரிசு பெற்ற ஜேர்மனிய இயற்பியலாளர் (பி. 1882)
 1981 - ஹரோல்ட் உரே, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வேதியியலாளர் (பி. 1893)
 2000 - குமார் பொன்னம்பலம், இலங்கையின் தமிழ் அரசியற் தலைவர், (பி. 1938)
Title: Re: காலம் ஒரு பார்வை
Post by: Global Angel on May 18, 2012, 02:16:22 AM
ஜனவரி 6

ஜனவரி 6 கிரிகோரியன் ஆண்டின் 6ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 359 (நெட்டாண்டுகளில் 360) நாட்கள் உள்ளன.


நிகழ்வுகள்

 1066 - இங்கிலாந்தின் மன்னனாக ஹாரல்ட் கோட்வின்சன் முடிசூடிக் கொண்டான்.
 1690 - முதலாம் லெப்பல்ட் மன்னனின் மகன் ஜோசப் ரோமின் மன்னன் ஆனான்.

 1838 - சாமுவேல் மோர்ஸ் மின்னியல் தொலைத்தந்தியை முதன் முறையாக வெற்றிகரமாக சோதித்தார்.

 1887 - எதியோப்பியாவின் ஹரார் நகர மன்னன் இரண்டாம் அப்-தல்லா எதியோப்பியாவின் இரண்டாம் மெனெலிக் மீது போர் தொடுத்தான்.

 1899 - இந்தியாவின் வைசிராயாக கேர்சோன் பிரபு நியமிக்கப்பட்டார்.

 1900 - போவர்கள் தென்னாபிரிக்காவின் லேடிஸ்மித் நகரைத் தாக்கினர். 1,000 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

 1907 - மரியா மாண்ட்டிசோரி தனது முதலாவது பாடசாலையை தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக ரோமில் ஆரம்பித்தார்.

 1912 - நியூ மெக்சிக்கோ 47வது மாநிலமாக ஐக்கிய அமெரிக்காவுடன் இணைந்தது.
 1928 - தேம்ஸ் ஆறு லண்டனில் பெருக்கெடுத்ததில் 14 பேர் கொல்லப்பட்டனர்.

 1929 - அன்னை தெரேசா இந்தியாவின் வறிய மற்றும் நோயுற்றவர்களுக்கு சேவை செய்வதற்காக கல்கத்தாவைச் சென்றடைந்தார்.

 1936 - கலாஷேத்திரா சென்னை அடையாறில் ஆரம்பிக்கப்பட்டது.
 1940 - போலாந்தின் பொஸ்னான் நகரில் நாசி ஜேர்மனியினரால் பலர் கொல்லப்பட்டனர்.

 1950 - ஐக்கிய இராச்சியம் மக்கள் சீன குடியரசை அங்கீகரித்தது.
 1959 - பிடெல் காஸ்ட்ரோ கவானாவை அடைந்தார்.

 2007 - கொழும்பிலிருந்து 36கிமீ தொலைவில் நித்தம்புவ என்ற இடத்தில் இடம்பெற்ற பேருந்துக் குண்டுவடிப்பில் 6 பொதுமக்கள் கொல்லப்பட்டும் 50 பேர் வரை காயமும் அடைந்தனர்.

 2007 - இந்தியாவில் அஸ்ஸாம் மாநிலத்தில் பிற மாநிலத்தவரைக் குறிவைத்து உல்ஃபா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 55 பேர் கொல்லப்பட்டனர்.

 2007 - இலங்கை, காலி மாவட்டம் மீட்டியகொட சீனிகம பகுதியில் இடம்பெற்ற பேருந்துக் குண்டுவெடிப்பில் 15 பொதுமக்கள் வரையில் கொல்லப்பட்டும் 40 பேர் வரை படுகாயமும் அடைந்தனர்.

 
பிறப்புகள்

 1883 - கலீல் ஜிப்ரான், எழுத்தாளர் (இ. 1931)
 1910 - ஜி. என். பாலசுப்பிரமணியம், கருநாடக இசைக் கலைஞர் (இ. 1965)
 1924 - கிம் டாய் ஜுங், தென்கொரியக் குடியரசுத் தலைவர், நோபல் பரிசு பெற்றவர் (இ. 2009)

 1944 - ரோல்ஃப் சிங்கேர்னாகல், நோபல் பரிசு பெற்றவர்
 1959 - கபில் தேவ், இந்தியத் துடுப்பாட்டக்காரர்.
 1967 - ஏ. ஆர். ரஹ்மான் இந்திய திரைப்பட இசையமைப்பாளர்
 1982 - கில்பர்ட் அரீனஸ், அமெரிக்கக்க் கூடைப்பந்து வீரர்
 
இறப்புகள்


 1852 - லூயி பிரெயில், பார்வையற்றவர்களுக்கான எழுத்தினை உருவாக்கியவர் (பி. 1809)

 1884 - கிரிகோர் ஜோஹன் மெண்டல் ஆஸ்திரியப் பாதிரி, மரபியல் அறிவியலின் தந்தை (பி. 1822)

 1918 - கேன்ட்டர், ஜெர்மன் கணிதவியலாளர் (1845
 1919 - தியொடோர் ரோசவெல்ட், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க அதிபர் (பி. 1858)
 1990 - பாவெல் செரென்கோவ், நோபல் பரிசு பெற்ற இரசியர் (பி. 1904)
 1997 - பிரமீள், ஈழத் தமிழ் எழுத்தாளர்,

 2010 - திருவேங்கடம் வேலுப்பிள்ளை - விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தந்தை
Title: Re: காலம் ஒரு பார்வை
Post by: Global Angel on May 18, 2012, 02:20:40 AM
ஜனவரி 7


ஜனவரி 7 கிரிகோரியன் ஆண்டின் 7ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 358 (நெட்டாண்டுகளில் 359) நாட்கள் உள்ளன

நிகழ்வுகள்

 1325 - போர்த்துக்கல் மன்னனாக நான்காம் அல்ஃபொன்சோ முடிசூடினான்.
 1558 - காலே (Calais) நகரத்தை இங்கிலாந்திடம் இருந்து பிரான்ஸ் கைப்பற்றியது.
 1598 - ரஷ்யாவின் ஆட்சியை போரிஸ் கூதுனோவ் கைப்பற்றினான்.
 1608 - வேர்ஜீனியாவின் ஜேம்ஸ்டவுண் நகரம் தீயினால் அழிந்தது.

 1610 - கலிலியோ கலிலி ஜூபிட்டர் கோளின் நான்கு இயற்கை செய்மதிகளைக் கண்டறிந்தார்.

 1782 - அமெரிக்காவின் முதலாவது வர்த்தக வங்கி வட அமெரிக்க வங்கி திறக்கப்பட்டது.

 1789 - ஐக்கிய அமெரிக்காவில் முதற்தடவையாக அரசுத் தலைவர் தேர்தல் இடம்பெற்றது.

 1841 - யாழ்ப்பாணத்தில் உதயதாரகை பத்திரிகை தமிழ், ஆங்கில மொழிகளில் ஆரம்பிக்கப்பட்டது.

 1894 - வில்லியம் கென்னடி டிக்சன் அசையும் படத்துக்கான காப்புரிமம் பெற்றார்.

 1927 - அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்து முதலாவது தொலைபேசிச் செய்தி நியூயோர்க் நகருக்கும் லண்டனுக்கும் இடையில் அனுப்பப்பட்டது.

 1935 - முசோலினி மற்றும் பிரெஞ்சு வெளிவிவகார அமைச்சர் பியேர் லாவல் ஆகியோர் பிரெஞ்சு-இத்தாலிய உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.

 1942 - இரண்டாம் உலகப் போர்: பிலிப்பீன்சின் பட்டான் குடா மீதான தாக்குதல் ஆரம்பமானது.

 1950 - அயோவாவில் மருத்துவ மனை ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 41 பேர் கொல்லப்பட்டனர்.

 1953 - அமெரிக்க அதிபர் ஹரி ட்ரூமன் ஐக்கிய அமெரிக்கா ஐதரசன் குண்டைத் தயாரித்திருப்பதாக அறிவித்தார்.

 1959 - பிடல் காஸ்ட்ரோவின் புதிய கியூபா அரசை அமெரிக்கா அங்கீகரித்தது.
 1968 - நாசாவின் சேர்வயர் 7 விண்கலம் ஏவப்பட்டது.

 1972 - ஸ்பானிய விமானம் ஒன்று வீழ்ந்து நொருங்கியதில் 104 பேர் கொல்லப்பட்டனர்.

 1979 - வியட்நாமியப் படைகளிடம் கம்போடியாவின் தலைநகர் புனோம் பென் வீழ்ந்தது. பொல் பொட்டும் அவனது கெமர் ரூச் படைகளும் பின்வாங்கினர்.

 1984 - புரூணை ஆசியான் அமைப்பில் 6வது உறுப்பு நாடாக இணைந்தது.

 1990 - பீசாவின் சாய்ந்த கோபுரத்தின் உட்பகுதி பாதுகாப்புக் காரணங்களுக்காக பொதுமக்களின் பார்வைக்கு மூடப்பட்டது.

 2006 - திருகோணமலையில் இலங்கைக் கடற்படையினர் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதில் 15 படையினர் கொல்லப்பட்டனர்.

 
பிறப்புகள்

 1502 - பாப்பரசர் 13வது கிரெகரி, (இ. 1585)
 1925 - தங்கம்மா அப்பாக்குட்டி, யாழ்ப்பாணத்தின் சமூக சேவையாளர்
 1941 - ஜோன் வோக்கர், ஆங்கிலேய வேதியியலாளர்
 1948 - இசிரோ மிசுகி, யப்பானியப் பாடகர்
 1979 - பிபாசா பாசு, இந்திய நடிகை
 
இறப்புகள்

 1943 - நிக்கோலா தெஸ்லா, கண்டுபிடிப்பாளர் (பி. 1856)
 1984 - ஆல்பிரட் காஸ்லர், நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு இயற்பியலாளர் (பி. 1902)
 1998 - விளாடிமிர் பிரெலொக், நோபல் பரிசு பெற்ற வேதியியலாளர் (பி.1906)
Title: Re: காலம் ஒரு பார்வை
Post by: Global Angel on May 18, 2012, 02:24:21 AM
ஜனவரி 8

ஜனவரி 8 கிரிகோரியன் ஆண்டின் 8வது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 357 (நெட்டாண்டுகளில் 358) நாட்கள் உள்ளன


நிகழ்வுகள்

 1297 - மொனாக்கோ விடுதலை பெற்றது.
 1782 - திருகோணமலை கோட்டையை பிரித்தானியர் கைப்பற்றினர்.
 1806 - கேப் கொலனி பிரித்தானியாவின் குடியேற்ற நாடாகியது.

 1815 - அண்ட்ரூ ஜாக்சன் தலைமையில் ஐக்கிய அமெரிக்கப் படைகள் லூசியானாவின் நியூ ஓர்லீன்சில் பிரித்தானியரைத் தோற்கடித்தனர்.

 1838 - ராபர்ட் கால்டுவெல் மதப் பணியாற்ற அயர்லாந்தில் இருந்து சென்னை வந்தார்.

 1838 - அல்பிரட் வெயில் புள்ளிகளையும் கோடுகளையும் கொண்ட தொலைத்தந்தியை அறிமுகப்படுத்தினார்.

 1867 - வாஷிங்டன், டிசியில் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் முதன்முறையாக வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

 1889 - ஹெர்மன் ஹொல்லெரிக் மின்னாற்றலில் இயங்கும் பட்டியலிடும் கருவிக்கான (tabulating machine) காப்புரிமம் பெற்றார்.

 1900 - அலாஸ்கா இராணுவ ஆட்சியில் வந்தது.

 1902 - நியூயோர்க் நகரில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 17 பேர் கொல்லப்பட்டனர்.

 1906 - நியூ யோர்க்கில் ஹட்சன் ஆற்றில் களிமண் கிண்ட்டும் போது இடம்பெற்ற நிலச்சரிவில் 20 பேர் கொல்லப்பட்டனர்.

 1908 - நியூ யோர்க் நகரில் பார்க் அவெனியூ சுரங்கத்தில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 17 பேர் கொல்லப்பட்டனர்.

 1912 - ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் அமைக்கப்பட்டது.

 1916 - முதலாம் உலகப் போர் (கலிப்பொலி நடவடிக்கை): கூட்டுப் படைகள் துருக்கியின் கலிப்பொலியில் இருந்து வெளியேறின.

 1926 - அப்துல்-அசீஸ் இபன் சாவுட் ஹெஜாஸ் நாட்டின் மன்னராக முடிசூடி அதன் பெயரை சவுதி அரேபியா என மாற்றினார்.

 1940 - இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியா உணவுப் பங்கீட்டை அறிமுகப்படுத்தியது.

 1956 - எக்குவடோரில் ஐந்து அமெரிக்க மதபோதகர்கள் பழங்குடியினரால் கொல்லப்பட்டனர்.

 1959 - பிடெல் காஸ்ட்ரோவின் கியூபப் புரட்சி முடிவுக்கு வந்தது.
 1962 - நெதர்லாந்தில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 93 பேர் கொல்லப்பட்டனர்.
 1973 - சோவியத் விண்கப்பல் லூனா 21 விண்ணுக்கு ஏவப்பட்டது.

 1994 - ரஷ்யாவின் விண்வெளி வீரர் வலேரி பல்யாக்கொவ் மீர் விண்வெளி நிலையத்துக்கு சோயூஸ் விண்கப்பலில் பயணமானார். இவர் மொத்தம் 437 நாட்கள் விண்ணில் தங்கியிருந்தார்.

 1995 - தமிழீழ விடுதலைப் புலிகள் - சந்திரிகா அரசு போர் நிறுத்தம் ஆரம்பமாகியது.

 1996 - சயீரில் அண்டோனொவ் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 350 பேர் கொல்லப்பட்டனர்.

 2008 - கொழும்பு புறநகர்ப் பகுதியான ஜா-எலையில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான டி.எம்.தசநாயக்க உட்பட மூவர் கொல்லப்பட்டனர்.
 
பிறப்புகள்

 1867 - எமிலி பால்ச், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளர் (இ. 1961)
 1891 - வால்தர் போத், நோபல் பரிசு பெற்ற ஜேர்மானியர் (இ. 1957)
 1899 - எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கா, இலங்கையின் நான்காவது பிரதமர் (இ. 1959)

 1935 - எல்விஸ் பிரெஸ்லி, அமெரிக்க இசைக் கலைஞர் (இ. 1977)
 1942 - ஸ்டீபன் ஹோக்கிங், கோட்பாட்டு இயற்பியலாளர்
 1942 - ஜூனிசிரோ கொய்சுமி, ஜப்பான் பிரதமர்
 1976 - பிரெட் லீ, அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்
 
இறப்புகள்
 1324 - மார்கோ போலோ, இத்தாலிய வணிகர் (பி. 1254)
 1642 - கலீலியோ கலிலி, இத்தாலிய வானியலாளர் (பி. 1564)
 1941 - பேடன் பவல், சாரணர் இயக்கத்தைத் தோற்றுவித்த ஆங்கிலேயர் (பி. 1857)
 1997 - மெல்வின் கால்வின், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1911)
 2002 - அலெக்சாண்டர் புரோகோரொவ், நோபல் பரிசு பெற்ற ரஷ்யர் (பி. 1916)
 2008 - லசந்த விக்கிரமதுங்க, இலங்கை ஊடகவியலாளர்
Title: Re: காலம் ஒரு பார்வை
Post by: Global Angel on May 18, 2012, 02:28:08 AM
ஜனவரி 9


ஜனவரி 9 கிரிகோரியன் ஆண்டின் 9வது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 356 (நெட்டாண்டுகளில் 357) நாட்கள் உள்ளன

நிகழ்வுகள்

 475 - பைசண்டைன் பேரரசன் சீனோ அவனது தலைநகரான கொன்ஸ்டண்டீனப்போல் நகரை விட்டுக் கட்டாயமாக வெளியேற்றப்பட்டான்.

 1431 - ஜோன் ஒஃப் ஆர்க் மீதான முன் விசாரணைகள் ஆங்கிலேயர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நீதிமன்றத்தில் ஆரம்பமானது.

 1707 - ஸ்கொட்லாந்து மற்றும் இங்கிலாந்து பேரரசுகளை இணைக்க இங்கிலாந்து நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது.

 1760 - ஆப்கானியர்கள் மரதர்களைத் தோற்கடித்தனர்.
 1768 - பிலிப் ஆஸ்ட்லி என்பவர் முதன் முதலாக நவீன சர்க்கஸ் காட்சியை லண்டனில் நடத்தினார்.

 1788 - கனெடிகட் 5வது மாநிலமாக ஐக்கிய அமெரிக்காவில் இணைந்தது.
 1793 - ஜான் பியர் பிளன்சார் வாயுக்குண்டில் பறந்த முதல் அமெரிக்கர் ஆனார்.

 1799 - பிரித்தானியப் பிரதமர் வில்லியம் பிட் நெப்போலியனுக்கெதிரான போருக்கு நிதி சேர்ப்பதற்காக வருமான வரியை அறிமுகப்படுத்தினார்.

 1816 - ஹம்பிறி டேவி சுரங்கத் தொழிலாளர்களுக்காக வடிவமைக்கப்பட்ட டேவி விளக்கை வெற்றிகரமாகப் பரிசோதனை செய்தார்.

 1857 - கலிபோர்னியாவில் 7.9 ரிக்டர் நிலநடுக்கம் பதியப்பட்டது.

 1858 - டெக்சாஸ் குடியரசின் கடைசித் தலைவர் அன்சன் ஜோன்ஸ் தற்கொலை செய்து கொண்டார்.

 1861 - அமெரிக்க உள்நாட்டுப் போர் தொடங்க முன்னர் ஐக்கிய அமெரிக்காவில் இருந்து இரண்டாவது மாநிலமாக மிசிசிப்பி பிரிந்தது.

 1878 - இத்தாலியின் மன்னனாக முதலாம் உம்பேர்ட்டோ முடி சூடினான்.

 1905 - ரஷ்யத் தொழிலாளர் சென் பீட்டர்ஸ்பேர்க்கில் குளிர்கால அரண்மனையை முற்றுகையிட்டனர். சார் மன்னரின் படைகள் பலரைச் சுட்டுக் கொன்றனர் (ஜூலியன் நாட்காட்டியின் படி). இந்நிகழ்வே 1905 ரஷ்யப் புரட்சி ஆரம்பமாவதற்கு வழிகோலியது.

 1916 - முதலாம் உலகப் போர்: ஒட்டோமான்களின் வெற்றியுடன் கலிப்பொலி நடவடிக்கை முடிவுக்கு வந்தது.

 1921 - புனித ஜார்ஜ் கோட்டையில் சென்னை சட்டமன்றத்தின் முதலாவது கூட்டம் நடைபெற்றது.

 1951 - ஐநாவின் தலைமையகம் நியூ யோர்க் நகரில் அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.

 1964 - மாவீரர் நாள்: பனாமா கால்வாயில் பனாமாவின் தேசியக்கொடியை இளைஞர்கள் ஏற்ற முயன்ற பின்னர் அமெரிக்கப் படைகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையில் சமர் மூண்டது. 21 பொதுமக்களும் 4 படையினரும் கொல்லப்பட்டனர்.

 1972 - ஹொங்கொங்கில் குயீன் எலிசபெத் கப்பல் தீக்கிரையானது.
 1974 - யாழ்ப்பாணத்தில் நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு முடிவடைந்தது.

 1986 - பொலரொயிட் உடன் காப்புரிமப் பிரச்சினை முறிவடைந்ததைத் தொடர்ந்து கொடாக் நிறுவனம் உடனடி படம்பிடிகருவி தயாரித்தலை நிறுத்தியது.

 1990 - நாசாவின் கொலம்பியா விண்ணோடம் ஏவப்பட்டது.

 1991 - லித்துவேனியாவின் விடுதலைக் கோரிக்கையை நசுக்குவதற்காக சோவியத் ஒன்றியம் வில்னியூஸ் நகரை முற்றுகையிட்டது.

 2001 - சீனாவின் ஷென்சூ 2 விண்கலம் ஏவப்பட்டது.

 2005 - சூடான் அரசுக்கும் சூடான் மக்கள் விடுதலை இயக்கத்துக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் கென்யாவில் கைச்சாத்திடப்பட்டது.
 
 பிறப்புகள்

 1868 - சோரென்சென், டென்மார்க் வேதியியலாளர் (இ. 1939)
 1908 - சிமோன் ட பொவார், பிரெஞ்சுப் பெண் எழுத்தாளர் (இ. 19886)
 1913 - ரிச்சர்ட் நிக்சன், ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் (இ. 1994)
 1922 - ஹார் கோவிந்த் கொரானா, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இந்தியர்
 1927 - துரைசாமி உருத்திரமூர்த்தி, ஈழத்துக் கவிஞர் (இ. 1971)
 1934 - மகேந்திர கபூர், இந்தித் திரைப்படப் பாடகர் (இ. 2008)
 1959 - ரிகொபேர்ட்டா மென்ச்சு, நோபல் பரிசு பெற்ற கௌதமாலா எழுத்தாளர்
 1989 - மைக்கல் பீஸ்லி, அமெரிக்கக் கூடைப்பந்தாட்டக்காரர்
 
இறப்புகள்

 1873 - மூன்றாம் நெப்போலியன், பிரெஞ்சு மன்னன் (பி. 1808)
 1924 - சேர் பொன்னம்பலம் அருணாசலம், இலங்கையின் தேசியத் தலைவர் (பி. 1853)
 1961 - எமிலி பால்ச், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1867)
 1998 - கெனிச்சி ஃபூக்கி, நோபல் பரிசு பெற்ற ஜப்பானிய வேதியியலாளர் (பி. 1918)
 
சிறப்பு நாள்
 பனாமா - மாவீரர் நாள்
Title: Re: காலம் ஒரு பார்வை
Post by: Global Angel on May 18, 2012, 02:31:41 AM
ஜனவரி 10

ஜனவரி 10 கிரிகோரியன் ஆண்டின் 10வது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 355 (நெட்டாண்டுகளில் 356) நாட்கள் உள்ளன.


நிகழ்வுகள்

 1475 - மல்தாவியாவின் மூன்றாம் ஸ்டீபன் ஒட்டோமான் பேரரசுப் படைகளைத் தோற்கடித்தான்.

 1645 - லண்டனில் முதலாம் சார்ல்ஸ் மன்னருக்கு ஆதரவாக செயற்பட்டமைக்காக ஆயர் வில்லியம் லாவுட் கழுத்து வெட்டிக் கொல்லப்பட்டார்.

 1806 - கேப் டவுனில் டச்சு குடியேறிகள் பிரித்தானியரிடம் சரணடைந்தனர்.

 1810 – நெப்போலியன் பொனபார்ட் 14 ஆண்டுகளாகப் பிள்ளைகள் இல்லாத நிலையில் ஜொசப்பின் என்ற தனது முதல் மனைவியை மணமுறிவு செய்தான்.

 1840 - ஐக்கிய இராச்சியத்தில் முன்கட்டணம் செலுத்தப்படக்கூடிய கடித உறையுடன், சீரான பென்னி தபால் சேவை ஆரம்பித்துவைக்கப்பட்டது.

 1861 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: புளோரிடா கூட்டமைப்பில் இருந்து விலகியது.
 1863 - உலகின் மிகப் பழமையான சுரங்க தொடருந்து பாதை லண்டனில் திறக்கப்பட்டது.

 1881 - யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.

 1920 - முதலாம் உலகப் போரை முடிவுக்குக் கொண்டு வர கூட்டு நாடுகள் தமாது முதலாவது கூட்டத்தை ஆரம்பித்தன. வெர்சாய் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

 1924 - பிரித்தானியாவின் நீர்மூழ்கிக் கப்பல் எல்-34 ஆங்கிலக் கால்வாயில் மூழ்கியதில் 43 பேர் கொல்லப்பட்டனர்.

 1946 - லண்டனில் ஆரம்பமாகிய ஐக்கிய நாடுகளின் முதலாவது பொதுச்சபைக் கூட்டத்தில் 51 நாடுகள் பங்குபற்றின.

 1962 - பெருவில் நிகழ்ந்த சூறாவளியில் 4000 பேர் வரை கொல்லப்பட்டனர்.

 1974 - யாழ்ப்பாணத்தில் 4வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாள் நிகழ்வில் 11 பொதுமக்கள் இலங்கை காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்டனர்.

 1984 - 117 ஆண்டுகளின் பின்னர் வத்திக்கானும் ஐக்கிய அமெரிக்காவும் தூதரக உறவுகளை ஏற்படுத்திக் கொண்டன.

 1989 - கியூபா படைகள் அங்கோலாவில் இருந்து வெளியேற ஆரம்பித்தன.
 1995 - உலக இளையோர் நாள் பிலிப்பீன்ஸ் நாட்டில் இடம்பெற்றது.

 2001 - விக்கிப்பீடியா நியூபீடியாவின் கீழ் ஆரம்பிக்கப்படட்து. இது பின்னர் 5 நாட்களின் தனித்தளமாக இயங்க ஆரம்பித்தது.

 2005 - தெற்கு ஆஸ்திரேலியாவில் அயர் குடாநாட்டில் இடம்பெற்ற காட்டுத்தீயில் சிக்கி 9 பேர் இறந்தனர். 113 பேர் காயமடைந்தானர்.
 
பிறப்புகள்

 1869 - கிரிகோரி ரஸ்புட்டீன், ரஷ்ய மதகுரு (இ. 1916)
 1883 - டால்ஸ்டாய், ருஷ்ய எழுத்தாளர் (இ. 1945)
 1916 - சூன் பேர்க்ஸ்ட்ரொம், மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்றவர் (இ. 2004)
 1936 - ராபர்ட் வில்சன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்
 1940 - கே. ஜே. யேசுதாஸ், இந்தியப் பாடகர்
 1974 - கிருத்திக் ரோஷன், இந்திய நடிகர்
 
இறப்புகள்

 1761 - ஆனந்த ரங்கம் பிள்ளை, தமிழில் நாட்குறிப்பு எழுதியவர் (பி. 1709)
 1778 - கரோலஸ் லின்னேயஸ், சுவீடன் நாட்டு தாவரவியலாளர், விலங்கியலாளர், மருத்துவர் (பி. 1707)

 1904 - ஜீன் லியோன் ஜேர்மி, பிரெஞ்சு ஓவியர், சிற்பர் (பி. 1824)
 1951 - சின்கிளயர் லூயிஸ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளர் (பி. 1885)
 1986 - யாரொஸ்லாவ் செய்ஃபேர்ட், நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் (பி. 1901)
 1997 - அலெக்சாண்டர் ரொட், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1907)
 2006 - ஆர். எஸ். மனோகர், தமிழ்த் திரைப்பட, நாடக நடிகர்
 2008 - பாண்டியன், தமிழ்த் திரைப்பட நடிகர்
Title: Re: காலம் ஒரு பார்வை
Post by: Global Angel on May 18, 2012, 04:58:40 AM
ஜனவரி 11

ஜனவரி 11 கிரிகோரியன் ஆண்டின் 11வது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 354 (நெட்டாண்டுகளில் 355) நாட்கள் உள்ளன



நிகழ்வுகள்

 1055 - தியோடோரா பைசண்டைன் பேரரசியாக முடி சூடினாள்.
 1569 - முதலாவது குலுக்குச் சீட்டு இங்கிலாந்தில் பதிவாகியது.

 1693 - சிசிலியில் எட்னா எரிமலை வெடித்ததையடுத்து இடம்பெற்ற பெரும் நிலநடுக்கம் சிசிலி மற்றும் மோல்ட்டாவின் பல பகுதிகளை அழித்தது.

 1779 - மணிப்பூரின் மன்னராக சிங்-தாங் கோம்பா முடிசூடினார்.


 1782 - பிரித்தானியர் சேர் எட்வேர்ட் ஹியூஸ் மற்றும் சேர் ஹெக்டர் மன்ரோ தலைமையில் திருகோணமலையைக் கைப்பற்றினர்.

 1787 - யுரேனஸ் கோளின் இரண்டு துணைக்கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
 1805 - மிச்சிகன் பிரதேசம் அமைக்கப்பட்டது.

 1851 - சீனாவில் குயிங் அரசிற்கெதிராக ஹொங் க்சியூகான் என்பவர் தலைமையில் தாய்பிங் என்ற இராணுவக் குழு ஆரம்பிக்கப்பட்டது.

 1861 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: அலபாமா ஐக்கிய அமெரிக்காவில் இருந்து விலகியது.

 1879 - ஆங்கிலோ-சூளு போர் ஆரம்பமானது.
 1878 - பால் முதற்தடவையாக புட்டியில் அடைத்து விற்கப்பட்டது.

 1911 - காம்ரேட் என்ற பத்திரிகையை விடுதலைப் போராட்ட வீரர் மவுலானா முகம்மது அலி கல்கத்தாவில் வெளியிட ஆரம்பித்தார்.

 1922 - நீரிழிவுக்கு மருந்தாக மனிதரில் இன்சுலின் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது.

 1942 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பான் நெதர்லாந்தின் மீது போரை அறிவித்தது.
 1942 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பான் கோலாலம்பூரைக் கைப்பற்றியது.

 1943 - ஐக்கிய அமெரிக்காவும் ஐக்கிய இராச்சியமும் சீனாவின் மீதான நில உரிமையை இழந்தன.

 1946 - என்வர் ஹோக்ஸா அல்பேனியாவின் சர்வாதிகாரியாகத் தன்னை அறிவித்து அதனைக் குடியரசாக்கினார்.

 1957 - ஆபிரிக்க உடன்பாடு டக்கார் நகரில் எட்டப்பட்டது.
 1962 - பெருவில் இடம்பெற்ற சூறாவளி காரணமாக 4,000 பேருக்கு மேல் இறந்தனர்.
 1972 - கிழக்கு பாகிஸ்தான் வங்காளதேசம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
 1998 - அல்ஜீரியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
 
 பிறப்புகள்

 1924 - ரொஜர் கிலெமின், நோபல் பரிசு பெற்றவர்
 1953 - ஜெயராஜ் பெர்னான்டோபுள்ளே, இலங்கையை அரசியல்வாதி (இ. 2008)
 1973 - ராகுல் திராவிட், இந்தியத் துடுப்பாட்டக்காரர்

இறப்புகள்
 1932 - திருப்பூர் குமரன், இந்திய விடுதலைப் போராட்ட தியாகி (பி. 1904)
 1966 - லால் பகதூர் சாஸ்திரி, 3வது இந்தியப் பிரதமர் (பி. 1904)
 1968 - ஐசடோர் ஐசாக் ராபி, நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1898)
 1975 - நீலாவணன், ஈழத்துக் கவிஞர் (பி. 1931)
 1976 - ஏரம்பு சுப்பையா, இலங்கையின் நடன ஆசிரியர்
 1983 - பிர்லா, இந்தியத் தொழிலதிபர் (பி. 1894)
 1991 - கார்ல் ஆன்டர்சன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1905)
 2007 - எருவில் மூர்த்தி, ஈழத்துக் கவிஞர்
 2008 - எட்மண்ட் ஹில்லரி, நியூசிலாந்து மலையேறுநர் (பி. 1919)
 
 சிறப்பு நாள்
 அல்பேனியா - குடியரசு நாள் (1946)
 நேபாளம் - ஐக்கிய நாள்
Title: Re: காலம் ஒரு பார்வை
Post by: Global Angel on May 18, 2012, 12:17:26 PM
ஜனவரி 12

ஜனவரி 12 கிரிகோரியன் ஆண்டின் 12வது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும்
353 (நெட்டாண்டுகளில் 354) நாட்கள் உள்ளன


நிகழ்வுகள்

 475 - பசிலிஸ்கஸ் பைசண்டைன் பேரரசனாக முடி சூடினான்.
 1528 - சுவீடனின் மன்னனாக முதலாம் குஸ்தாவ் முடி சூடினான்.

 1539 - புனித ரோமப் பேரரசு மன்னன் ஐந்தாம் சார்ல்ஸ், மற்றும் பிரெஞ்சு மன்னன் முதலாம் பிரான்சிஸ் ஆகியோருக்கிடையில் ஒப்பந்தம் கைச்சாத்தாகியது.

 1853 - தாய்பிங் இராணுவம் சீனாவின் வூச்சாங் நகரைப் பிடித்தது.
 1875 - சீனாவின் மன்னானாக குவாங்-சூ முடி சூடினான்.

 1908 - முதற்தடவையாக தூர இடத்துக்கான வானொலி செய்தி ஈஃபெல் கோபுரத்தில் இருந்து அனுப்பப்பட்டது.

 1915 - அமெரிக்கக் காங்கிரஸ் பெண்களுக்கு வாக்குரிமை அளிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது.

 1918 - பின்லாந்தில் உள்ள யூதர்கள் முழுக் குடியுரிமையைப் பெற்றார்கள்.

 1940 - இரண்டாம் உலகப் போர்: பின்லாந்தின் பல நகரங்களின் மீது ரஷ்யா குண்டுகளை வீசியது.

 1945 - இரண்டாம் உலகப் போர்: சோவியத் ஒன்றியம் நாசிகளுக்கு எதிரான பெரும் போரை கிழக்கு ஐரோப்பாவில் ஆரம்பித்தது.

 1964 - சான்சிபாரின் புரட்சிவாதிகள் சன்சிபார் புரட்சியை முன்னெடுத்து சன்சிபாரைக் குடியரசாக அறிவித்தனர்.

 1967 - எம்.ஜி.ஆர். கொலை முயற்சி: நடிகர் எம். ஆர். ராதா, எம். ஜி. ராமச்சந்திரனை துப்பாக்கியால் சுட்டுப் படுகாயப்படுத்தினார்.

 1970 - நைஜீரியாவில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.

 1976 - பாலஸ்தீன விடுதலை இயக்கம் ஐநா பாதுகாப்பு அவையில் வாக்குரிமையில்லாமல் விவாதங்களில் கலந்து கொள்வதற்கு ஐநா பாதுகாப்பு அவை 11-1 என்ற வாக்கு வித்தியாசத்தில் அனுமதி அளித்தது.

 1992 - மாலியில் அரசியல் கட்சிகள் அமைப்பதற்கு ஏதுவாக பொது வாக்கெடுப்பு மூலம் அரசியல் அமைப்புச் சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டது.

 2004 - உலகின் மிகப் பெரும் பாயணிகள் கப்பலான ஆர்எம்எஸ் குயீன் மேரி 2 தனது கன்னிப்பயணத்தை ஆரம்பித்தது.

 2005 - புளோரிடாவின் கென்னடி ஏவுதளத்திலிருந்து போயிங் டெல்டா-II என்ற விண்கலத்தை 133 மில்லியன் மைலுக்கு அப்பால் பரிதியைச் சுற்றி பூமியை நெருங்கி வரும் டெம்பெல் 1 என்ற வால்மீனைக் குறிவைத்து நாசா ஏவியது.

 2006 - சவுதி அரேபியாவில் மினா நகரில் சாத்தான் மீது கல்லெறியும் நிகழ்ச்சியின் போது இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 44 இந்தியர்கள் உட்பட 362 பேர் உயிரிழந்தனர்.
 2006 - 25 ஆண்டுகளுக்கு முன்னர் பாப்பரசர் இரண்டாம் ஜோன் போலை சுட்டுக் காயப்படுத்திய மெஹ்மேட் அலி ஆக்கா என்பவர் துருக்கிய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

 2007 - மாக்னாட் வாள்வெள்ளி சுற்றுப்பாதை வீச்சுக்குக் கிட்டவாக வந்து 40 ஆண்டுகளில் தெரிந்த மிகவும் பிரகாசமான வால்வெள்ளியானது.
 
பிறப்புகள்
 1863 - சுவாமி விவேகானந்தர் (இ. 1902)
 1899 - போல் ஹேர்மன் முல்லர், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1965)
 1917 - மகேஷ் யோகி, இந்திய ஆன்மிகவாதி (இ. 2008)
 1960 - டாமினீக் வில்கின்ஸ், அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்
 1972 - பிரியங்கா காந்தி, இந்திய அரசியல்வாதி
 
இறப்புகள்

 1976 - அகதா கிறிஸ்டி, ஆங்கில எழுத்தாளர் (பி. 1890)
 1997 - சார்ல்ஸ் ஹக்கின்ஸ், நோபல் பரிசு பெற்ற கனடிய புற்றுநோய் ஆராய்ச்சியாளர் (பி. 1901)
 2000 - வி. ஆர். நெடுஞ்செழியன், தமிழக அரசியல் தலைவர் (பி. 1920
 
சிறப்பு நாள்

 தான்சானியா: சான்சிபார் புரட்சி நாள் (1964)
 இந்தியா: தேசிய இளைஞர் நாள் (சுவாமி விவேகானந்தர் பிறப்பு)
Title: Re: காலம் ஒரு பார்வை
Post by: Global Angel on May 18, 2012, 12:21:47 PM
ஜனவரி 13

ஜனவரி 13 கிரிகோரியன் ஆண்டின் 13வது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 352 (நெட்டாண்டுகளில் 353) நாட்கள் உள்ளன

நிகழ்வுகள்


 1610 - கலிலியோ கலிலி வியாழனின் 4வது துணைக்கோளைக் கண்டுபிடித்தார்.

 1658 - இங்கிலாந்தின் இராணுவ மற்றும் அரசியல் தலைவருமான ஒலிவர் குரொம்வெல்லுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டிய எட்வார்ட் செக்ஸ்பி என்பவன் லண்டன் கோபுர சிறையில் இறந்தான்.

 1830 - லூசியானாவில் நியூ ஓர்லீன்ஸ் நகரில் பெரும் தீ பரவியது.

 1840 - லோங் தீவில் லெக்சிங்டன் என்ற நீராவிக்கப்பல் மூழ்கியதில் 139 பேர் கொல்லப்பட்டனர்.

 1847 - கலிபோர்னியாவில் மெக்சிக்கோ-அமெரிக்கப் போர் காகுவெங்கா என்ற இடத்தில் எட்டப்பட்ட உடன்பாட்டின் மூலம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

 1908 - பென்சில்வேனியாவில் ரோட்ஸ் ஒப்பேரா மாளிகையில் தீப்பிடித்ததில் 171 பேர் கொல்லப்பட்டனர்.

 1915 - இத்தாலியின் அவசானோ பிரதேசத்தில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 29,800 பேர் கொல்லப்பட்டனர்.

 1930 - மிக்கி மவுஸ் கார்ட்டூன் துணுக்குகளாக முதன் முதலாக வெளிவரத்தொடங்கியது.

 1938 - இங்கிலாந்து திருச்சபை சார்ல்ஸ் டார்வினின் கூர்ப்புக் கொள்கையை ஏற்றுக் கொண்டது.

 1939 - அவுஸ்திரேலியாவில் விக்டோரியா மாநிலத்தில் 20,000 சதுர கிமீ நிலம் காட்டுத்தீயினால் அழிந்தது. 71 பேர் கொல்லப்பட்டனர்.

 1942 - ஹென்றி போர்ட் பிளாஸ்டிக்கினால் ஆன தானுந்துக்கான காப்புரிமம் பெற்றார்.

 1953 - யூகொஸ்லாவியாவின் தலைவராக மார்ஷல் ஜோசிப் டீட்டோ தெரிவு செய்யப்பட்டார்.

 1964 - கல்கத்தாவில் இந்து-முஸ்லிம் கலவரம் மூண்டதில் நூற்றுக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

 1972 - கானாவில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது.

 1982 - வாஷிங்டன், டிசியில் விமானம் ஒன்று பாலம் ஒன்றில் வீழ்ந்து நொருங்கியதில் 78 பேர் கொல்லப்பட்டனர்.

 1985 - எதியோப்பியாவில் பயணிகள் தொடருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 428 பேர் கொல்லப்பட்டனர்.

 1991 - சோவியத் படைவீரர்கள் லித்துவேனியாவில் சோவியத் ஆட்சிக்கெதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட பொதுமக்களைத் தாக்கி 14 பேரைக் கொன்றனர்.

 1992 - இரண்டாம் உலகப் போரின் போது கொரியப் பெண்களை பாலியல் அடிமைகளாக கட்டாயமாக சிறைப்படுத்தி வைத்திருந்தமைக்காக ஜப்பான் மன்னிப்புக் கோரியது.

 2001 - எல் சல்வடோரில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 800 பேர் கொல்லப்பட்டனர்.

 2006 சீனாவின் தென் கிழக்குப் பகுதியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தினால் 13,000 வீடுகள் இடிந்து தரை மாட்டமாயின.
 
 பிறப்புகள்

 1864 - வில்ஹெம் வியென், நோபல் பரிசு பெற்ற ஜேர்மானியர் (இ. 1928)
 1879 - மெல்வின் ஜோன்ஸ், அரிமா சங்கத்தை அமெரிக்கர் (இ. 1961)
 1911 - ஆனந்த சமரக்கோன், சிங்கள இசைக்கலைஞர் (இ. 1962)
 1927 - சிட்னி பிரென்னர், நோபல் பரிசு பெற்ற பிரித்தானியர்
 1946 - ஆர். பாலச்சந்திரன், கல்வியாளர், கவிஞர் (இ. 2009)
 1949 - ராகேஷ் சர்மா, விண்வெளியில் பறந்த முதல் இந்தியர்.
 
 இறப்புகள்

 1906 - அலெக்சாண்டர் பப்போவ், ரஷ்ய இயற்பியலாளர் (பி. 1859)
 1941 - ஜேம்ஸ் ஜோய்ஸ், ஐரிய எழுத்தாளர் (பி. 1882)
Title: Re: காலம் ஒரு பார்வை
Post by: Global Angel on May 18, 2012, 12:25:31 PM
ஜனவரி 14


ஜனவரி 14 கிரிகோரியன் ஆண்டின் 14வது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 351 (நெட்டாண்டுகளில் 352) நாட்கள் உள்ளன


நிகழ்வுகள்

 1539 - ஸ்பெயின் கியூபாவை இணைத்துக் கொண்டது.
 1690 - கிளாரினெட் இசைக்கருவி ஜெர்மனியில் வடிவமைக்கப்பட்டது.
 1724 - ஸ்பெயின் மன்னன் ஐந்தாம் பிலிப் முடி துறந்தான்.

 1761 - இந்தியாவில் பானிப்பட் போரின் மூன்றாம் கட்டம் ஆப்கானியர்களுக்கும் மராட்டியர்களுக்கும் இடையில் இடம்பெற்றது. ஆப்கானியர்களின் வெற்றி இந்திய வரலாற்றில் ஒரு பெரும் திருப்புமுனையாக அமைந்தது.

 1784 - அமெரிக்கப் புரட்சிப் போர்: ஐக்கிய அமெரிக்கா இங்கிலாந்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டது.

 1814 - நோர்வேயை டென்மார்க் மேற்கு பொமிரானியாவுக்காக சுவீடனுக்கு விட்டுக்கொடுத்தது.

 1858 - பிரான்ஸ் மன்னன் மூன்றாம் நெப்போலியன் கொலைமுயற்சி ஒன்றிலிருந்து தப்பினான்.

 1907 - ஜமெய்க்காவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

 1913 - கிரேக்கம் துருக்கியரை பிசானி என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் வென்றனர்.

 1943 - இரண்டாம் உலகப் போர்: பிராங்கிளின் ரூசவெல்ட், வின்ஸ்டன் சேர்ச்சில் கசபிளாங்காவில் சந்தித்து போரின் அடுத்தகட்ட நகர்வுக்கான தீர்மானங்களை எடுத்தனர்.

 1950 - சோவியத் ஒன்றியத்தின் மிக்-17 போர் விமானம் வெள்ளோட்டம் விடப்பட்டது.

 1969 - ஹவாயிற்கு அருகில் அமெரிக்கக் கடற்படைக் கப்பல் ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 27 பேர் கொல்லப்பட்டனர்.

 1974 - திருச்சி, தஞ்சை மாவட்டங்களிலிருந்து பிரித்து புதுக்கோட்டை மாவட்டம் உருவாக்கப்பட்டது.

 1994 - ஐக்கிய அமெரிக்கத் தலைவர் பில் கிளிண்டன் மற்றும் ரஷ்யத் தலைவர் போரிஸ் யெல்ட்சின் கிரெம்ளினில் புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டனர்.

 1995 - சந்திரிகா அரசு - விடுதலைப் புலிகள் 3ம் கட்ட பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாயின.

 1996 - உலகின் முதலாவது 24 மணி முழு நேர தமிழ் வானொலி ஒலிபரப்பு, "கனேடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்" என்னும் பெயரில் கனடாவின் டொராண்டோ நகரில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப் பட்டது.

 1998 - ஆப்கானிஸ்தானின் சரக்கு விமானம் ஒன்று பாகிஸ்தானில் மலை ஒன்றில் மோதியதில் 50 பேர் கொல்லப்பட்டனர்.

 2005 - சனிக் கோளின் டைட்டான் என்ற நிலாவில் ஐரோப்பாவின் இயூஜென் விண்கலம் இறங்கியது.
 
பிறப்புகள்

1977 - நாராயண் கார்த்திகேயன், கார் பந்தய வீரர்
 
இறப்புகள்

 1898 - லூயி கரோல் ஆங்கில எழுத்தாளர், கணிதவியலாளர் (பி. 1832)
 1901 - சார்ல்ஸ் ஹெர்மைட், பிரெஞ்சு கணிதவியலர் (பி. 1822)
 1957 - ஹம்பிறி போகார்ட், அமெரிக்க நடிகர் (பி. 1899)
 1978 - கியோடல், ஆஸ்திரிய அமெரிக்க, கணித, மெய்யியல் அறிஞர் (பி. 1906)
 2000 - எம். வி. வெங்கட்ராம், தமிழக எழுத்தாளர் (பி. 1920)
 
சிறப்பு நாள்

 தைப்பொங்கல் - தமிழர் திருநாள் (ஜனவரி 14 அல்லது ஜனவரி 15, இந்து நாட்காட்டியின் படி)

 தமிழ்ப் புத்தாண்டு (2008 ஆம் ஆண்டிலிருந்து: ஜனவரி 14 அல்லது ஜனவரி 15, இந்து நாட்காட்டியின் படி)
Title: Re: காலம் ஒரு பார்வை
Post by: Global Angel on May 18, 2012, 12:35:40 PM
ஜனவரி 15

ஜனவரி 15 கிரிகோரியன் ஆண்டின் 15வது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 350 (நெட்டாண்டுகளில் 351) நாட்கள் உள்ளன. திருவள்ளுவர் ஆண்டு தொடக்கம்


நிகழ்வுகள்

 69 - ரோமின் ஆட்சியை ஓத்தோ கைப்பற்றித் தன்னை மன்னனாக அறிவித்தான். எனினும் மூன்று மாதங்களில் அவன் தற்கொலை செய்து கொண்டான்.

 1559 - முதலாம் எலிசபெத் இங்கிலாந்தின் அரசியாக முடி சூடினாள்.

 1582 - லிவோனியா மற்றும் எஸ்தோனியாவை ரஷ்யா போலந்திடம் கையளித்தது.

 1609 - உலகின் ஆரம்பகால செய்திப்பத்திரிகைகளில் ஒன்றான Avisa Relation oder Zeitung, ஜேர்மனியில் வெளியிடப்பட்டது.

 1759 - பிரித்தானிய அருங்காட்சியகம் திறக்கப்பட்டது.
 1777 - அமெரிக்கப் புரட்சிப் போர்: வெர்மொண்ட் விடுதலையை அறிவித்தது.

 1799 - இலங்கையில் அடிமைகள் கொண்டுவரப்படுவது முற்றாகத் தடை செய்யப்பட்டது.

 1892 - ஜேம்ஸ் நெய்ஸ்மித் கூடைப்பந்து விளையாட்டு விதிகளை உருவாக்கினார்.

 1908 - யாழ்ப்பாணத்துக்கும் காரைநகருக்கும் இடையில் பயணிகள் படகுச் சேவை (ferry) ஆரம்பிக்கப்பட்டது.

 1915 - மலாவியில் வெள்ளையினக் குடியேற்றத்தை எதிர்த்து யோன் சிலம்புவே தலைமையில் இடம்பெற்ற கிளர்ச்சியில் மூன்று வெள்ளையினத்தவர்கள் கொல்லப்பட்டனர்.

 1919 - மசாசுசெட்ஸ் மாநிலத்தில் பொஸ்டன் நகரில் இடம்பெற்ற பெரும் வெள்ளப் பெருக்கினால் 21 பேர் கொல்லப்பட்டனர்.

 1919 - ஜெர்மனியின் இரு சோசலிஸ்டுகளான ரோசா லக்சம்பேர்க், மற்றும் கார்ல் லீப்னெக்ட் ஆகியோர் துணை இராணுவக்குழுவினரால் சித்திரவதை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டனர்.

 1936 - முற்றிலும் கண்ணாடியால் அமைக்கப்பட்ட கட்டடம் ஒகைய்யோவில் கட்டப்பட்டது.

 1943 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியர்கள் பசிபிக் பெருங்கடல் தீவான குவாடல்கனாலில் இருந்து விரட்டப்பட்டனர்.

 1943 - பென்டகன் திறக்கப்பட்டது.

 1944 - ஆர்ஜெண்டீனாவில் சான் ஜுவான் நகரில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 10,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.

 1966 - நைஜீரியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அபூபக்கர் டஃபாவா பாலேவா என்பவாரின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.

 1969 - சோயூஸ் 5 விண்கலத்தை சோவியத் ஒன்றியம் விண்ணுக்கு ஏவியது.

 1970 - நைஜீரியாவிடம் இருந்து 32-மாத விடுதலைப் போரின் பின்னர் பயாஃப்ரா சரணடைந்தது.

 1970 - முவாம்மர் அல்-கடாபி லிபியாவின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 1975 - போர்த்துக்கல் அங்கோலாவுக்கு விடுதலை வழங்கியது.

 1973 - வியட்நாம் போர்: வடக்கு வியட்நாம் மீதான தாக்குதல்களை இடை நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் ரிச்சார்ட் நிக்சன் அறிவித்தார்.

 1977 - சுவீடனில் இடம்பெற்ற விமான விபத்தில் 22 பேர் கொல்லப்பட்டனர்.
 2001 - விக்கிப்பீடியா தொடங்கப்பட்டது.

 2005 - ஈசாவின் ஸ்மார்ட்-1 என்ற லூனார் விண்கலம் சந்திரனில் கல்சியம், அலுமீனியம், சிலிக்கன் மற்றும் இரும்பு ஆகியவற்றைக் கண்டுபிடித்தது.

 2005 - செல்பேசிகளில் தமிழ் குறுஞ் செய்திகளை அனுப்பும் செல்லினம் என்ற மென்பொருள் மலேசியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

 2007 - சதாம் உசேனின் சகோதரர் பர்சான் இப்ராகிம், மற்றும் ஈராக்கின் முன்னாள் பிரதம நீதியரசர் அவாத் ஹமீட் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர்.
 
பிறப்புகள்

 1622 - மொலியர், பிரெஞ்சு நாடகாசிரியர், நடிகர் (இ. 1673)
 1866 - நேத்தன் சோடர்புளொம், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1931)
 1895 - ஆர்ட்டூரி வேர்ட்டானென், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1973)
 1908 - எட்வர்ட் டெல்லர், ஹங்கேரியில் பிறந்த அமெரிக்க இயற்பியலாளர், ஹைட்ரஜன் குண்டின் தந்தை (இ. 2003)
 1923 - ருக்மணி தேவி, சிங்களத் திரைப்பட நடிகை (இ. 1978)
 1926 - காசாபா தாதாசாகேப் சாதவ், இந்திய ஒலிம்பிக் வீரர் (இ. 1984)
 1929 - மார்ட்டின் லூதர் கிங், அமெரிக்க கறுப்பினத் தலைவர் (இ. 1968)
 1956 - மாயாவதி குமாரி, இந்திய அரசியல்வாதி
 
இறப்புகள்

 1919 - ரோசா லக்சம்பேர்க், ஜெர்மனிய சோசலிசவாதி (பி. 1870)
 1981 - தேவநேயப் பாவாணர், தமிழறிஞர் (பி. 1902)
 1988 - ஷோன் மாக்பிரைட், நோபல் பரிசு பெற்ற ஐரிஷ் குடியரசு இராணுவத் தலைவர் (பி. 1904)
 1998 - குல்சாரிலால் நந்தா, 2வது இந்தியப் பிரதமர், (பி. 1898)
 2008 - கே. எம். ஆதிமூலம், தமிழக ஓவியர் (பி. 1938)
 
 சிறப்பு நாள்

 மலாவி - யோன் சிலம்புவே நாள்
 விக்கிப்பீடியா நாள்
Title: Re: காலம் ஒரு பார்வை
Post by: Global Angel on May 18, 2012, 12:51:56 PM
ஜனவரி 16

ஜனவரி 16 கிரிகோரியன் ஆண்டின் 16வது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 349 (நெட்டாண்டுகளில் 350) நாட்கள் உள்ளன


நிகழ்வுகள்

 1547 - நான்காம் இவான் ரஷ்யாவின் சார் மன்னனாக முடிசூடினான்.
 1556 - இரண்டாம் பிலிப்பு ஸ்பெயின் மன்னன் ஆனான்.

 1581 - இங்கிலாந்து நாடாளுமன்றம் ரோமன் கத்தோலிக்க மதத்தை சட்டத்துக்கெதிரானதாக்கியது
.
 1707 - ஸ்கொட்லாந்து, இங்கிலாந்துடன் இணைந்து ஐக்கிய இராச்சியம் ஆக உருவாவதற்கு ஏதுவாக அமைந்த சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது.

 1761 - பிரித்தானியர் பாண்டிச்சேரியை பிரான்சிடம் இருந்து கைப்பற்றினர்.
 1777 - வெர்மொண்ட் நியூயோர்க்கில் இருந்து விடுதலையை அறிவித்தது.
 1795 - பிரான்ஸ், நெதர்லாந்தின் யூட்ரேக்ட் என்ற இடத்தைக் கைப்பற்றியது.

 1864 - டென்மார்க்கின் மன்னன் ஒன்பதாம் கிறிஸ்டியான் ஜெர்மனி மீது போரைத் தொடுத்தான்.

 1909 - ஏர்ணெஸ்ட் ஷாக்கிளெட்டனின் குழுவினர் தென் முனையைக் கண்டுபிடித்தனர்.

 1945 - ஹிட்லர் தனது சுரங்க மறைவிடத்திற்கு தப்பிச் சென்றார்.
 1956 - எகிப்து அதிபர் கமால் அப்துல் நாசர் பாலஸ்தீனத்தைக் கைப்பற்றுவதாக சூளுரைத்தார்.

 1979 - ஈரான் மன்னர் முகமது ரேசா பாஹ்லாவி குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறி எகிப்தில் குடியேறினார்.

 1991 - ஐக்கிய அமெரிக்கா ஈராக் மீது போரை அறிவித்தது.

 1992 - எல் சல்வடோர் அதிகாரிகள் தீவிரவாதத் தலைவர்களுடன் மெக்சிக்கோ நகரில் அமைதி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

 1993 - விடுதலைப் புலிகளின் தளபதி கேணல் கிட்டு உட்பட 10 விடுதலைப் புலிகள் வெளிநாடொன்றில் இருந்து இலங்கை திரும்புகையில் சர்வதேசக் கடற்பரப்பில் இந்தியக் கடற்படையால் சுற்றி வளைக்கப்பட்ட போது கப்பலை வெடிக்க வைத்து இறந்தனர்.

 2001 - கொங்கோ தலைவர் லாரன்ட் கபிலா தனது மெய்க்காவலரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

 2006 - எலென் ஜோன்சன் சேர்லீஃப்ப் லைபீரியாவின் அதிபரானார். இவரே ஆபிரிக்க நாடொன்றின் முதலாவது பெண் அரசுத் தலைவர் ஆவார்.

 2003 - கொலம்பியா விண்ணோடம் தனது கடைசிப் பயணத்தை ஆரம்பித்தது. இது 7 விண்வெளி வீரர்களுடன் 16 நாட்களின் பின்னர் பூமி திரும்புகையில் வெடித்துச் சிதறியது.

 2008 - 2002 போர்நிறுத்த உடன்படிக்கையில் இருந்து இலங்கை அரசு அதிகாரபூர்வமாக விலகியது.

 2008 - இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு இலங்கையில் தனது பணிகள் அனைத்தையும் நிறுத்தியது.
 
பிறப்புகள்


 1929 - எஸ். ஜே. தம்பையா, மானிடவியல் ஆய்வாளர், பல்சான் பரிசு பெற்றவர்
 1932 - டயான் ஃபொஸி, கொரில்லாவைப் பற்றி சிறந்த ஆய்வுகள் நடத்திய அமெரிக்கப் பெண் (இ. 1985)
 
இறப்புகள்


 1711 - யோசப் வாஸ் அடிகள், கோவாவில் பிறந்து இலங்கை கத்தோலிக்கருக்கு சேவை செய்வதற்கு வந்த குருவானவர் (பி. 1651)
 1967 - ராபர்ட் ஜெ. வான் டி கிராப், அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1901)
 1993 - கேணல் கிட்டு (சதாசிவம் கிருஷ்ணகுமார்), விடுதலைப் புலிகளின் மத்தியகுழு உறுப்பினரும், தளபதியும் (பி. 1961)
 
சிறப்பு நாள்

 தாய்லாந்து: ஆசிரியர் நாள்
Title: Re: காலம் ஒரு பார்வை
Post by: Global Angel on May 24, 2012, 02:02:59 AM
ஜனவரி 17

ஜனவரி 17 கிரிகோரியன் ஆண்டின் 17வது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 348 (நெட்டாண்டுகளில் 349) நாட்கள் உள்ளன


நிகழ்வுகள்

 1377 - பாப்பாண்டவர் பதினோராம் கிரெகரி தனது ஆட்சியை ரோமுக்கு மாற்றினார்.

 1524 - இத்தாலிய நாடுகாண்பயணி ஜியோவன்னி டா வெரசானோ சீனாவுக்கான தனது பயணத்தை ஆரம்பித்தார்.

 1595 - பிரான்சின் நான்காம் ஹென்றி ஸ்பெயின் மீது போரை அறிவித்தான்.

 1648 - இங்கிலாந்தின் லோங் நாடாளுமன்றம் முதலாம் சார்ல்சுடனான தொடர்புகளை அறுத்தது. இதன் மூலம் இங்கிலாந்தின் உள்நாட்டுப் போர் இரண்டாம் கட்டத்தை அடைந்தது.

 1773 - கப்டன் ஜேம்ஸ் குக் அண்டார்க்டிக் வட்டத்தை அடைந்த முதல் ஐரோப்பியன் ஆனான்.

 1819 - சைமன் பொலிவார் கொலம்பியக் குடியரசை அறிவித்தார்.

 1852 - ஐக்கிய இராச்சியம் தென்னாபிரிக்காவின் டிரான்ஸ்வால் போவர் குடியேற்றங்களை அங்கீகரித்தது.

 1893 - ஹவாயில் அமெரிக்க கடற்படையின் தலையீட்டால் அரசி லிலியோகலானியின் அரசு கவிழ்க்கப்பட்டது.

 1899 - பசிபிக் பெருங்கடல் பகுதியில் வேக் தீவை ஐக்கிய அமெரிக்கா கைப்பற்றிக் கொண்டது.

 1917 - கன்னித் தீவுகளுக்காக ஐக்கிய அமெரிக்கா $25 மில்லியனை டென்மார்க்கிற்குக் கொடுத்தது.

 1928 - லியோன் ட்ரொட்ஸ்கி மொஸ்கோவில் கைது செய்யப்பட்டார்.

 1945 - இரண்டாம் உலகப் போர்: சோவியத் படைகள் போலந்தின் வார்சா நகரைக் கைப்பற்றினர்.

 1945 - சோவியத் படைகள் நெருங்கியதை அடுத்து அவுஷ்விட்ஸ் வதை முகாமில் இருந்து நாசிகள் வெளியேற ஆரம்பித்தனர்.

 1946 - ஐநா பாதுகாப்பு அவை தனது முதலாவது கூட்டத்தை நடத்தியது.
 1951 - சீன மற்றும் வட கொரியப் படையினர் சியோல் நகரைக் கைப்பற்றினர்.

 1961 - கொங்கோ சனநாயகக் குடியரசின் பிரதமர் பாட்ரிஸ் லுமும்பா இராணுவப் புரட்சியின் பின் கைது செய்யப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார்.

 1973 - பேர்டினண்ட் மார்க்கோஸ் பிலிப்பீன்சின் நிரந்தர அதிபர் ஆனார்.
 1991 - வளைகுடாப் போர் ஆரம்பித்தது.

 1995 - ஜப்பானின் கோபே நகரில் இடம்பெற்ற 7.3 ரிக்டர் நிலநடுக்கத்தில் 6,434 பேர் கொல்லப்பட்டனர்.

 1998 - ஐக்கிய அமெரிக்கத் தலைவர் பில் கிளின்டன் தன்னைப் பாலியல் வதைக்கு உட்படுத்தியதாக போலா ஜோன்ஸ் குற்றஞ்சாட்டினார்.

 
பிறப்புகள்

 1706 - பெஞ்சமின் பிராங்கிளின், அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர், எழுத்தாளர் (இ. 1790)
 1911 - ஜோர்ஜ் ஸ்டிக்லர், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (இ. 1991)
 1917 - எம். ஜி. இராமச்சந்திரன், தமிழ்நாட்டின் முதலமைச்சர் (இ. 1987)
 1942 - முகமது அலி, அமெரிக்கக் குத்துச் சண்டை வீரர்
 1977 - என். சொக்கன், தமிழக எழுத்தாளர்
 1982 - டுவேன் வேட், அமெரிக்காவின் கூடைப்பந்து ஆட்டக்காரர்
 
இறப்புகள்

 1961 - பாட்ரிஸ் லுமும்பா, கொங்கோ சனநாயகக் குடியரசின் பிரதமர் (பி. 1925)
 2002 - கமீலோ ஜோஸ் சேலா, நோபல் பரிசு பெற்ற ஸ்பானிய எழுத்தாளர் (பி. 1916)
 2007 - ஆர்ட் புச்வால்ட், அமெரிக்க நகைச்சுவையாளர் (பி. 1925)
 2008 - பாபி ஃபிஷர், அமெரிக்க சதுரங்க ஆட்டக்காரர் (பி. 1943)
 2009 - கமில் சுவெலபில், செக் நாட்டுத் தமிழறிஞர் (பி. 1927
Title: Re: காலம் ஒரு பார்வை
Post by: Global Angel on May 24, 2012, 02:06:33 AM
ஜனவரி 18

ஜனவரி 18 கிரிகோரியன் ஆண்டின் 18வது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 347 (நெட்டாண்டுகளில் 348) நாட்கள் உள்ளன.


நிகழ்வுகள்

 350 - ஜெனரல் மக்னென்டியஸ் ரோமப் பேரரசன் கொன்ஸ்டன்சை அகற்றி தன்னை மன்னனாக அறிவித்தான்.

 1520 - அசுண்டே ஆற்றுக்கருகில் இடம்பெற்ற போரில் டென்மார்க் மற்றும் நோர்வேயின் இரண்டாம் கிறிஸ்டியன் சுவீடனை வென்றான்.

 1535 - லீமா நகரம் நிறுவப்பட்டது.

 1591 - சியாம் மன்னன் நரெசுவான் பர்மாவின் இளவரசன் மின்சிட் சிராவுடன் மோதி அவனைக் கொன்றான்.

 1670 - ஹென்றி மோர்கன் பனாமாவைக் கைப்பற்றினான்.

 1701 - பிரஷ்யாவின் மன்னானாக முதலாம் பிரெடெரிக் முடி சூடினான்.

 1778 - ஹவாய் தீவுகளைக் கண்டறிந்த முதலாவது ஐரோப்பியன் கப்டன் ஜேம்ஸ் குக். இதற்கு சான்ட்விச் தீவுகள் எனப் பெயரிட்டான்.

 1788 - இங்கிலாந்தில் இருந்து 736 கைதிகளைக் கொண்ட முதலாவது தொகுதி ஆஸ்திரேலியாவின் பொட்டனி விரிகுடாவைச் சென்றடைந்தது.

 1824 - இலங்கையின் ஆளுநராக சேர் எட்வர்ட் பார்ன்ஸ் நியமிக்கப்பட்டார்.

 1871 - வடக்கு ஜெர்மனி கூட்டமைப்பு மற்றும் தெற்கு ஜெர்மன் மாநிலங்கள் ஆகியன ஜெர்மன் பேரரசு என்ற பெயரில் இணைந்தன. முதலாம் வில்ஹெல்ம் அதன் முதலாவது மன்னனான்.

 1896 - எக்ஸ்றே இயந்திரம் முதற் தடவையாகக் காட்சிப்படுத்தப்பட்டது.

 1911 - யூஜின் எலி என்பவர் தனது விமானத்தை சான் பிரான்சிஸ்கோ துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த USS பென்சில்வானியா என்ற கப்பலின் மீது இறக்கினார். கப்பலொன்றில் தரையிறக்கப்பட்ட முதலாவது விமானத் இதுவாகும்.

 1919 - முதலாம் உலகப் போர்: பாரிஸ் அமைதி உச்சி மாநாடு பிரான்சில் வேர்சாயி நகரில் ஆரம்பமானது.

 1929 - லியோன் ட்ரொட்ஸ்கி சோவியத் ஒன்றியத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

 1944 - இரண்டாம் உலகப் போர்: மூன்று ஆண்டுகளாக நாசிகளால் முற்றுகையிடப்பட்டிருந்த லெனின்கிராட் நகரை சோவியத் படைகள் மீட்டெடுத்தன.
 1960 - கொங்கோவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் முக்கிய வட்டமேசை மாநாடு பெல்ஜியத்தில் நடைபெற்றது.

 1969 - ஐக்கிய அமெரிக்காவின் விமானம் ஒன்று சாண்டா மொனிக்கா விரிகுடாவில் வீழ்ந்ததில் 38 பேர் கொல்லப்பட்டனர்.

 1977 - அவுஸ்திரேலியாவின் சிட்னியின் புறநகர்ப் பகுதியான கிரான்வில் என்ற இடத்தில் பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் அதன் மேல் சென்று கொண்டிருந்த தொடருந்து கீழே வீழ்ந்ததில் 83 பேர் கொல்லப்பட்டனர்.

 1995 - 17,000 ஆண்டுகள் பழமையான குகை ஓவியங்கள் தெற்கு பிரான்சில் கண்டுபிடிக்கப்பட்டன.

 1997 - போர்ஜ் அவுஸ்லாண்ட் என்பவர் அண்டார்க்டிக்காவை துணை எதுவுமின்றி முதன் முதலில் கடந்து சாதனை படைத்தார்.

 2002 - சியேரா லியோனியில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது.

 2003 - கன்பராவில் இடம்பெற்ற காட்டுத்தீயில் 4 பேர் கொல்லப்பட்டு 500 வீடுகள் முற்றாக எரிந்து சேதமடைந்தன.

 2007 - மேற்கு ஐரோப்பாவின் 20 நாடுகளில் தாக்கிய கிரில் சூறாவளியினால் ஐக்கிய இராச்சியத்தில் 14 பேர், மற்றும் ஜெர்மனியில் 13 பேருமாக மொத்தம் 44 பேர் கொல்லப்பட்டனர்.
 
பிறப்புகள்

 1854 - சுன்னாகம் குமாரசாமிப்புலவர், ஈழத்துப் புலவர் (இ. 1922)
 1921 - நாம்பு ஓச்சிரோ, இயற்பியல் அறிஞர்
 1937 - ஜோன் ஹியூம், நோபல் பரிசு பெற்றவர்.
 1955 - எரிக் சொல்ஹெய்ம், நோர்வே அமைச்சர்
 
இறப்புகள்

 1862 - ஜான் டைலர், ஐக்கிய அமெரிக்காவின் 10வது குடியரசுத் தலைவர் (பி. 1790)
 1873 - எட்வர்ட் பல்வர்-லிட்டன், ஆங்கில எழுத்தாளர் (பி. 1803)
 1936 - றூடியார்ட் கிப்லிங், நோபல் பரிசு பெற்ற பிரித்தானிய எழுத்தாளர் (பி. 1865)
 1963 - ப. ஜீவானந்தம், தமிழகப் பொதுவுடமைக் கட்சித் தலைவர் (பி. 1906)
 1995 - அடொல்ஃப் பியூட்டெனண்ட், நோபல் பரிசு பெற்ற ஜேர்மானிய வேதியியலாளர் (பி. 1903)
 1996 - என். டி. ராமராவ், தெலுங்கு திரைப்பட நடிகர், அரசியல்வாதி (பி. 1923
Title: Re: காலம் ஒரு பார்வை
Post by: Global Angel on May 24, 2012, 02:17:08 AM
ஜனவரி 19

ஜனவரி 19 கிரிகோரியன் ஆண்டின் 19வது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 346 (நெட்டாண்டுகளில் 347) நாட்கள் உள்ளன

நிகழ்வுகள்

 1788 - இங்கிலாந்தில் இருந்து கைதிகளை ஏற்றி வந்த இரண்டாவது தொகுதி கப்பல்கள் நியூ சவுத் வேலிசின் பொட்டனி பே பகுதியை வந்தடைந்தது.

 1806 - நன்னம்பிக்கை முனையை பிரித்தானியா பிடித்தது.
 1839 - பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனி யேமனின் ஏடென் நகரைக் கைப்பற்றியது.
 1899 - ஆங்கிலோ-எகிப்திய சூடான் அமைக்கப்பட்டது.

 1903 - ஐக்கிய அமெரிக்காவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே முதலாவது வானொலி ஒலிபரப்பு ஆரம்பமாயிற்று.

 1917 - லண்டனில் ஆயுதக் களஞ்சியம் ஒன்றில் இடம்பெற்ற வெடிவிபத்தில் 73 பேர் கொல்லப்பட்டும் 400 பேர் காயமும் அடைந்தனர்.

 1927 - பிரித்தானியா சீனாவுக்கு படைகளை அனுப்பியது.
 1941 - இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியப் படைகள் இத்தாலி வசமிருந்த எரித்திரியாவைத் தாக்கினர்.

 1942 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியப் படைகள் பர்மாவை முற்றுகையிட்டனர்.
 1966 - இந்திரா காந்தி இந்தியப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 1981 - ஈரானில் 14 மாதங்களுக்கு முன்னர் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்ட 52 அமெரிக்கர்களை விடுவிக்க ஐக்கிய அமெரிக்காவும் ஈரானும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

 1983 - நாசி போர்க் குற்றவாளி கிளவுஸ் பார்பி பொலிவியாவில் கைது செய்யப்பட்டான்.

 1986 - முதற் கணினி நச்சுநிரலான பிரெயின் ((c)Brain) பரவத் தொடங்கியது.
 1997 - 30 ஆண்டுகளுக்குப் பின்னர் யாசர் அரபாத் ஹெப்ரோன் திரும்பினார்.

 2006 - சிலவாக்கியாவின் விமானப்படை விமானம் ஹங்கேரியில் வீழ்ந்து
நொருங்கியது.

 2006 - புளூட்டோவுக்கான முதலாவது நியூ ஹரைசன்ஸ் என்ற விண்ணுளவியை நாசா விண்ணுக்கு ஏவியது.

 2007 - இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வாகரையைத் தாம் கைப்பற்றிவிட்டதாக இலங்கை இராணுவம் அறிவித்தது.
 
பிறப்புகள்

 1736 - ஜேம்ஸ் உவாட், கண்டுபிடிப்பாளர் (இ. 1819)
 1807 - ராபர்ட் ஈ. லீ, அமெரிக்கப் பொறியியலாளர் (இ. 1870)
 1809 - எட்கார் அலன் போ, அமெரிக்க எழுத்தாளர், கவிஞர் (இ. 1849)
 1839 - பால் செசான், பிரெஞ்சு ஓவியர் (இ. 1906)
 1912 - லியோனிட் கண்டரோவிச், நோபல் பரிசு பெற்ற இரசியப் பொருளியலாளர் (இ. 1986)
 1933 - சீர்காழி எஸ். கோவிந்தராஜன், கருநாடக, திரையிசைப் பாடகர் (இ. 1988)
 1948 - வானம்பாடி யோகராஜ், ஈழத்து வில்லிசைக் கலைஞர் (இ. 1999)
 
இறப்புகள்

 1905 - தேவேந்திரநாத் தாகூர், இந்தியப் பகுத்தறிவாளர் (பி. 1817)
 1990 - ஓஷோ, இந்திய ஆன்மிகவாதி (பி. 1931)
Title: Re: காலம் ஒரு பார்வை
Post by: Global Angel on May 24, 2012, 02:21:03 AM
ஜனவரி 20

ஜனவரி 20 கிரிகோரியன் ஆண்டின் 20வது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 345 (நெட்டாண்டுகளில் 346) நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

 1265 - இங்கிலாந்து நாடாளுமன்றம் தனது முதலாவது கூட்டத்தை வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் நடத்தியது.

 1523 - இரண்டாம் கிறிஸ்டியான் டென்மார்க், நோர்வேயின் மன்னர் பதவியில் இருந்து அகற்றப்பட்டான்.

 1649 - இங்கிலாந்தின் முதலாம் சார்ல்ஸ் மன்னனுக்கெதிராக தேசத்துரோகக் குற்றச்சாட்டுகளுக்காக விசாரணைகள் ஆரம்பமாயின.

 1783 - பெரிய பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகியன புரட்சிப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு அமைதி உடன்பாட்டில் கைச்சாத்திட்டன.

 1788 - இங்கிலாந்தில் இருந்து கைதிகளை ஏற்றிக்கொண்டு வந்த முதல் தொகுதி கப்பல்களின் மூன்றாவது கப்பல் நியூ சவுத் வேல்சின் பொட்டனி விரிகுடாவை அடைந்தன.

 1795 - பிரெஞ்சுப் படைகள் ஆம்ஸ்டர்டாமைக் கைப்பற்றின.

 1839 - யூங்கே என்ற இடத்தில் பெரு மற்றும் பொலீவியா கூட்டுப் படைகளுடன் இடம்பெற்ற சமரில் சிலி வெற்றி பெற்றது.

 1841 - ஹாங்காங் தீவு பிரித்தானியாவினால் கைப்பற்றப்பட்டது.
 1887 - பேர்ள் துறைமுகத்தை கடற்படைத்தளமாகப் பாவிப்பதற்கு அமெரிக்க செனட் அனுமதியளித்தது.

 1892 - முதலாவது அதிகாரபூர்வமான கூடைப்பந்தாட்ட விளையாட்டு மசாசுசெட்சில் இடம்பெற்றது.

 1906 - வாரன்ஸ் சர்க்கஸ் (Warren's Circus) யாழ்ப்பாணம் வந்திறங்கியது. இதுவே யாழ்ப்பாணம் கண்ட முதலாவது சர்க்கஸ் ஆகும்.

 1913 - யாழ்ப்பாணம், உடுவிலில் இராமநாதன் பெண்கள் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.
 1936 - எட்டாம் எட்வேர்ட் ஐக்கிய இராச்சிய மன்னனாக முடிசூடினார்.
 1929 - வெளிப்புறக் காட்சிகளைக் கொண்ட முதலாவது முழு-நீளத் திரைப்படம் In Old Arizona திரையிடப்பட்டது.

 1944 - இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியாவின் ரோயல் வான்படையினர் பேர்லின் மீது 2,300 தொன் குண்டுகளை வீசினர்.

 1945 - ஹங்கேரி இரண்டாம் உலகப் போரில் தனது பங்கை முடித்துக் கொள்வதாக அறிவித்தது.

 1947 - கொலை முயற்சி ஒன்றிலிருந்து மகாத்மா காந்தி உயிர் தப்பினார்.
 1969 - முதலாவது துடிமீன் கிராப் விண்மீன் தொகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.

 1981 - ரொனால்ட் ரேகன் ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவராகி 20 நிமிடங்களில் ஈரான் தான் 444 நாட்களாகப் பிடித்து வைத்திருந்த 52 அமெரிக்க பணயக் கைதிகளையும் விடுவித்தது.

 1990 - அசர்பைஜானிய விடுதலைக்கு ஆதரவான போராட்டம் சோவியத் இராணுவத்தினரால் நசுக்கப்பட்டது.

 1991 - சூடான் அரசு நாடெங்கும் இஸ்லாமியச் சட்டத்தை அறிமுகப்படுத்தியதில் நாட்டின் வடக்குப் பகுதி முஸ்லிம்களுக்கும் தெற்கில் வாழும் கிறிஸ்தவர்களுக்கும் இடையில் உள்நாட்டுப் போர் மேலும் தீவிரமடைந்தது.

 1992 - பிரான்சில் பயணிகள் விமானம் ஒன்று வீழ்ந்து நொருங்கியதில் 85 பேர் கொல்லப்பட்டனர்.

 2001 - பிலிப்பீன்சில் இடம்பெற்ற புரட்சியில் தலைவர் ஜோசப் எஸ்ட்ராடா பதவியகற்றப்பட்டு குளோரியா மக்கபாகல்-அறாயோ தலைவரானார்.
 
பிறப்புகள்

 1873 - ஜொஹன்னஸ் வில்ஹெம் ஜென்சென், இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றவர் (இ. 1950)
 1920 - பெடெரிக்கோ ஃபெலினி, இத்தாலியத் திரைப்பட இயக்குனர் (இ. 1993)
 1930 - எட்வின் ஆல்ட்ரின், அமெரிக்க விண்வெளி வீரர்
 1931 - டேவிட் லீ, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர்
 1956 - பில் மேகர், அமெரிக்க மேடைச் சிரிப்புரையாளர்
 
இறப்புகள்

 1838 - ஒசியோலா, அமெரிக்க தொல்குடி போர்த் தலைவன் (பி. 1804)
 1936 - ஐந்தாம் ஜார்ஜ், இங்கிலாந்தின் மன்னன் (பி. 1865)
 1987 - பெரியசாமி தூரன், கருநாடக இசை வல்லுனர் (பி. 1908)
 
சிறப்பு தினம்

 அமெரிக்க அதிபர்கள் பதவியேற்கும் நாள் (1937 இலிருந்து)
Title: Re: காலம் ஒரு பார்வை
Post by: Global Angel on June 19, 2012, 12:07:51 AM
ஜனவரி 21


கிரிகோரியன் ஆண்டின் 21வது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 344 (நெட்டாண்டுகளில் 345) நாட்கள் உள்ளன


நிகழ்வுகள்

    1643 - ஏபல் டாஸ்மான் தொங்காவில் இறங்கிய முதல் ஐரோப்பியர் ஆனார்.

    1793 - பிரான்சின் பதினாறாம் லூயி மன்னன் அரசத்துரோகக் குற்றச்சாட்டுகளுக்காக மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்டான்.

    1861 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஜெபர்சன் டேவிஸ் ஐக்கிய அமெரிக்காவின் செனட்டில் இருந்து விலகினார்.

    1924 - சோவியத் தலைவர் விளாடிமிர் லெனின் இறந்தார்.
    1925 - அல்பேனியா குடியரசாக அறிவிக்கப்பட்டது.

    1941 - இரண்டாம் உலகப் போர்: அவுஸ்திரேலிய மற்றும் பிரித்தானியப் படைகள் லிபியாவின் டோபுருக் நகரைத் தாக்கின.

    1947 - முதலாவது சிங்களத் திரைப்படம் (கடவுணு பொரன்டுவ) திரையிடப்பட்டது.
    1954 - உலகின் முதலாவது அணுசக்தியாலான நீர்மூழ்கிக் கப்பல், USS நோட்டிலஸ், ஐக்கிய அமெரிக்காவில் வெள்ளோட்டம் விடப்பட்டது

    1960 - மேர்க்குரி விண்கலத்தில் சாம் என்ற பெண் குரங்கு விண்வெளிக்குப் பயணமானது.

    1972 - திரிபுரா, மேகாலயா, மணிப்பூர் ஆகியன இந்தியாவின் தனி மாநிலங்களாக்கப்பட்டன.

    2004 - நாசாவினால் செவ்வாய்க் கோளுக்கு அனுப்பப்பட்ட ஸ்பிரிட் தளவுளவியின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. எனினும் இது பூமியில் தன்னியக்க முறையில் திருத்தப்பட்டு பெப்ரவரி 6 இல் தொடர்புகள் மீண்டும் பெறப்பட்டன.

    2008 - அலாஸ்காவின் இயாக் மொழி பேசும் கடைசி பழங்குடி இறந்தார்.

பிறப்புகள்

    1912 - கொன்ராட் எமில் புளொக், நோபல் பரிசு பெற்ற ஜேர்மானியர் (இ. 2000)
    1953 - பால் ஆலன், மைக்ரோசாப்ட் நிறுவனர்களில் ஒருவர்.
    1963 - அகீம் ஒலாஜுவான், நைஜீரியக் கூடைப்பந்து ஆட்டக்காரர்

இறப்புகள்

    1924 - விளாடிமிர் லெனின், மார்க்சியப் புரட்சியாளர் (பி. 1870)
    1989 - சு. வித்தியானந்தன், ஈழத்துத் தமிழறிஞர், பேராசிரியர்
    2002 - சொக்கலிங்க பாகவதர், தமிழ் திரைப்பட நடிகர்
Title: Re: காலம் ஒரு பார்வை
Post by: Global Angel on June 19, 2012, 12:10:56 AM
ஜனவரி 22


ஜனவரி 22 கிரிகோரியன் ஆண்டின் 22வது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 343 (நெட்டாண்டுகளில் 344) நாட்கள் உள்ளன.


நிகழ்வுகள்

    1506 - 150 சுவிஸ் பாதுகாப்புப் படைகளைக்கொண்ட முதற் தொகுதி வத்திக்கானை அடைந்தது.

    1798 - நெதர்லாந்தில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது.
    1840 - பிரித்தானிய குடியேற்றவாதிகள் நியூசிலாந்தை அடைந்தனர்.

    1863 - ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக போலந்து, லித்துவேனியா, பெலரஸ் ஆகிய நாடுகளில் கிளர்ச்சி வெடித்தது.

    1879 - தென்னாபிரிக்காவின் சூலுப் படைகள் ஐசண்டல்வானாவில் வைத்து பிரித்தானியப் படைகளைத் தோற்கடித்தனர்.

    1889 - கொலம்பியா கிராமபோன் வாஷிங்டனில் அமைக்கப்பட்டது.

    1899 - ஆறு ஆஸ்திரேலிய காலனிகளின் தலைவர்கள் கூட்டமைப்பு பற்றி விவாதிக்க மெல்பேர்னில் கூடினர்.

    1901 - 64 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த விக்டோரியா மகாராணி தனது 81வது அகவையில் காலமானதை அடுத்து அவரது மூத்த மகன் ஏழாம் எட்வேர்ட் பிரித்தானியாவின் மன்னரானார்.

    1905 - சென் பீட்டர்ஸ்பேர்க்கில் சார் மன்னருக்கெதிராக தொழிலாளர்களின் எழுச்சி முறியடிக்கப்பட்டது.

    1906 - பிரிட்டிஷ் கொலம்பியாவின் வான்கூவர் தீவில் வலென்சியா என்ற பயணிகள் கப்பல் பாறைகளுடன் மோதியதில் 130 பேர் கொல்லப்பட்டனர்.

    1941 - இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய இராச்சியம் லிபியாவின் டோப்ருக் நகரை நாசிப் படைகளிடம் இருந்து கைப்பற்றியது.

    1942 - இரண்டாம் உலகப் போர்: சிங்கப்பூர் செண்பக விநாயகர் கோயில் ஜப்பானியரின் குண்டுவீச்சினால் பெரும் சேதமுற்றது.

    1952 - உலகின் முதலாவது பயணிகள் ஜெட் விமானம் (BOACயின் Comet) சேவைக்கு விடப்பட்டது.

    1957 - சினாய் தீபகற்பத்தில் இருந்து இஸ்ரேல் வெளியேறியது.
    1964 - கென்னத் கவுண்டா வட றொடீசியாவின் முதலாவது அதிபரானார்.

    1973 - நைஜீரியாவின் கானோ விமானநிலையத்தில் போயிங் விமானம் ஒன்று வீழ்ந்து வெடித்ததில் 176 பேர் கொல்லப்பட்டனர்.

    1980 - நோபல் பரிசு பெற்ற சோவியத் இயற்பியலாளர் அந்திரே சாகரொவ் மாஸ்கோவில் கைது செய்யப்பட்டார்.

    1984 - ஆப்பிள் மக்கிண்டொஷ் கணினி அறிமுகப்படுத்தப்பட்டது.
    1992 - சாயீரின் தேசிய வானொலி நிலையத்தை தீவிரவாதிகள் கைப்பற்றி அரசை பதவி விலகும்படி அறிவித்தனர்.

    1999 - இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில் ஆஸ்திரேலிய கிறிஸ்தவ மதப் போதகர் கிரஹாம் ஸ்டைன்ஸ் என்பவரும் அவரது இரு மகன்களும் இந்துத் தீவிரவாதிகளால் உயிருடன் எரிக்கப்பட்டனர்.

    2003 - பயனியர் 10 விண்கலத்துடன் கடைசித் தொடர்பு மேற்கொள்ளப்பட்டது.
    2004 - ஆர்க்குட் தொடங்கப்பட்டது.

பிறப்புகள்

    1561 - பிரான்சிஸ் பேக்கன், ஆங்கிலேய மெய்யியலாளர் (இ. 1626)
    1788 - ஜார்ஜ் கோர்டன் பைரன், ஆங்கில-ஸ்கொட்டியக் கவிஞர் (இ. 1824)
    1901 - விக்டோரியா, பிரித்தானிய மகாராணி (பி. 1819)
    1908 - லேவ் லான்டாவு, நோபல் பரிசு பெற்ற ரசிய இயற்பியலாளர் (இ. 1968)
    1909 - ஊ தாண்ட், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் (இ. 1974)
    1922 - தி. வே. கோபாலையர், தமிழறிஞர் (இ. 2007)
    1936 - அலன் ஹீகர், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்
    1988 - கிரெக் ஓடென், அமெரிக்காவின் கூடைப்பந்து ஆட்டக்காரர்

இறப்புகள்

    1666 - ஷா ஜகான், முகலாலயப் பேரரசர் (பி. 1592)
    1922 - பிரெட்ரிக் பாஜெர், நோபல் பரிசு பெற்றவர் ([இ. 1837)
    1947 - சுவாமி ஞானப்பிரகாசர், ஈழத்தின் பன்மொழிப் புலவர் (பி. 1875)
    2005 - வேந்தனார் இளங்கோ, ஆஸ்திரேலியத் தமிழறிஞர்
    2008 - ஹீத் லெட்ஜர், ஹாலிவுட் நடிகர் (பி. 1979)
Title: Re: காலம் ஒரு பார்வை
Post by: Global Angel on July 04, 2012, 06:22:25 PM

ஜனவரி 23  


ஜனவரி 23 கிரிகோரியன் ஆண்டின் 23வது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 342 (நெட்டாண்டுகளில் 343) நாட்கள் உள்ளன


நிகழ்வுகள்

 1368 - சூ யுவான்ஷாங் சீனாவின் பேரரசனாக முடிசூடினான். இவனது மிங் பரம்பரை 3 நூற்றாண்டுகள் சீனாவை ஆண்டது.

 1556 - சீனாவின் சாங்சி மாநில நிலநடுக்கத்தில் 830,000 வரையானோர் இறந்தனர். உலக வரலாற்றில் மிக அதிகமானோர் கொல்லப்பட்ட நிலநடுக்கம் இதுவாகும்.

 1570 - ஸ்கொட்லாந்தில் உள்நாட்டுப் போர் வெடித்தது.

 1639 - பெருவைச் சேர்ந்த யூதக் கவிஞர் பிரான்சிஸ்கோ மல்டொனால்டோ டி சில்வா எரியூட்டிக் கொல்லப்பட்டார்.

 1719 - புனித ரோம் பேரரசின் கீழ் லீக்டன்ஸ்டைன் நாடு உருவாக்கப்பட்டது.

 1789 - ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது கத்தோலிக்கக் கல்லூரியான ஜோர்ஜ்டவுன் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.

 1793 - ரஷ்யாவும் பிரஷ்யாவும் போலந்தைப் பிரித்தனர்.
 1833 - போக்லாந்து தீவுகளை பிரித்தானியா மீண்டும் கைப்பற்றிக் கொண்டது.

 1870 - மொன்டானாவில் அமெரிக்கப் படைகளினால் பெண்கள், குழந்தைகள் உட்பட 173 செவ்விந்தியர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

 1874 - விக்டோரியா மகாராணியின் மகன் எடின்பரோ கோமகன் அல்பிரட் ரஷ்யாவின் மூன்றாம் அலெக்சாண்டரின் ஒரே மகளான மரீயா அலெக்சாந்திரொவ்னாவை திருமணம் புரிந்தார்.

 1924 - விளாடிமிர் லெனின் ஜனவரி 21 இல் இறந்ததாக சோவியத் ஒன்றியம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.

 1937 - லியோன் ட்ரொட்ஸ்கி தலைமையில் ஜோசப் ஸ்டாலின் அரசைக் கவிழ்க்க முயன்றதாக 17 கம்யூனிஸ்டுகளின் மீது மாஸ்கோவில் விசாரணைகள் ஆரம்பமாயின.

 1943 - இரண்டாம் உலகப் போர்: லிபியாவின் தலைநகர் திரிப்பொலியை நாசிகளிடம் இருந்து பிரித்தானியர் கைப்பற்றினர்.

 1943 - இரண்டாம் உலகப் போர்: ஆஸ்திரேலிய, மற்றும் அமெரிக்கக் கூட்டுப் படைகள் பப்புவாவில் யப்பானியப் படைகளைத் தோற்கடித்தனர். இது பசிபிக் போரில் யப்பானியரின் வீழ்ச்சிக்கு வழிகோலியது.

 1950 - இஸ்ரேலின் சட்டசபை ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அறிவித்தது.
 1957 - சென்னை மாநிலத்தில், தமிழ் ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டது.

 1973 - வியட்நாமில் அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டதாக அமெரிக்க அதிபர் ரிச்சார்ட் நிக்சன் அறிவித்தார்
.
 1996 - ஜாவா நிரலாக்க மொழியின் முதற் பதிப்பு வெளியானது.

 1998 - யாழ்ப்பாணம், புங்குடுதீவில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி துணை இராணுவக்குழுவின் முகாம் விடுதலைப்புலிகளால் தாக்கியழிக்கப்பட்டதில் அம்முகாமில் இருந்த ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்.

 2002 - அமெரிக்க ஊடகவியலாளர் டானியல் பேர்ள் கராச்சியில் கடத்தப்பட்டார். இவர் பின்னர் கொலை செய்யப்பட்டார்.

 2005 - திருச்சி ஸ்ரீரங்கத்தில் கல்யாண மண்டபத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் மணமகன் உள்பட 62 பேர் கொல்லப்பட்டனர்.
 
பிறப்புகள்

 1876 - ஒட்டோ டியெல்ஸ், நோபல் பரிசு பெற்ற ஜேர்மனியர் (இ. 1954)
 1897 - சுபாஷ் சந்திர போஸ், இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் (இ. 1945)
 1907 - ஹிடெக்கி யுக்காவா, நோபல் பரிசு பெற்ற யப்பானியர் (இ. 1981)
 1915 - ஆர்தர் லூயிஸ், நோபல் பரிசு பெற்ற பிரித்தானியர் (இ. 1991)
 1918 - கேர்ட்ரூட் எலியன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க அறிவியலாளர் (இ. 1999)
 1929 - ஜோன் போல்யானி, நோபல் பரிசு பெற்ற கனடியர்
 1930 - டெரெக் வால்கொட், நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர்
 

இறப்புகள்

 1873 - இராமலிங்க அடிகள், ஆன்மீகவாதி (பி. 1823)
 1944 - எட்வர்ட் மண்ச், நோர்வே நாட்டைச் சேர்ந்த ஓவியர் (பி. 1863)
 1989 - சல்வடோர் டாலி, ஸ்பானிய ஓவியர் (பி. 1904)
Title: Re: காலம் ஒரு பார்வை
Post by: Global Angel on July 04, 2012, 06:25:24 PM
ஜனவரி 24  



ஜனவரி 24 கிரிகோரியன் ஆண்டின் 24வது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 341 (நெட்டாண்டுகளில் 342) நாட்கள் உள்ளன

நிகழ்வுகள்

 41 - கலிகுலா படுகொலை செய்யப்பட்டான். அவனது மாமன் குளோடியஸ் முடி சூடினான்.

 1679 - இங்கிலாந்தின் இரண்டாம் சார்ல்ஸ் நாடாளுமன்றத்தைக் கலைத்தான்.
 1857 - தெற்காசியாவின் முதலாவது முழுமையான பல்கலைக்கழகம் கல்கத்தா பல்கலைக்கழகம் திறக்கப்பட்டது.

 1887 - அபிசீனியப் படைகள் டொகாலி என்ற இடத்தில் இத்தாலியர்களைத் தோற்கடித்தனர்.

 1897 - சுவாமி விவேகானந்தர் சிக்காகோவிலிருந்து நாடு திரும்பும் வழியில் யாழ்ப்பாணம் வருகை தந்தார். யாழ் இந்துக் கல்லூரியில் பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

 1908 - பேடன் பவல் சாரணீய இயக்கத்தை ஆரம்பித்தார்.
 1918 - கிரெகோரியின் நாட்காட்டி ரஷ்யாவில் பெப்ரவரி 14 முதல் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

 1924 - ரஷ்யாவின் பெட்ரோகிராட் நகரம் லெனின்கிராட் எனப் பெயர் மாற்றப்பட்டது.

 1927 - ஆல்பிரட் ஹிட்ச்கொக் தனது த பிளெஷர் கார்டன் என்ற தனது முதலாவது திரைப்படத்தை வெளியிட்டார்.

 1939 - சிலியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 30000 பேர் கொல்லப்பட்டனர்

 1943 - இரண்டாம் உலகப் போர்: பிராங்க்ளின் ரூஸ்வெல்ட், வின்ஸ்டன் சேர்ச்சில் ஆகியோர் தமது கசபிளாங்கா உச்சி மாநாட்டை முடித்துக் கொண்டனர்.

 1966 - ஏர் இந்தியா விமானம் ஒன்று பிரான்சுக்கும் இத்தாலிக்கும் இடையில் வீழ்ந்ததில் 117 பேர் கொல்லப்பட்டனர்.

 1972 - இரண்டாம் உலகப் போரில் காணாமல் போன ஜப்பானிய படைவீரனான சொயிச்சி யாக்கோய் என்பவன் குவாம் காடு ஒன்றில் இருக்கக் கண்டுபிடிக்கப்பட்டான்.

 1978 - கொஸ்மொஸ் 954 என்ற சோவியத் செய்மதி பூமியின் வளிமண்டலத்துள் எரிந்து அதன் பகுதிகள் கனடாவின் வடமேற்குப் பிரதேசத்தில் வீழ்ந்தன.

 1984 - முதலாவது ஆப்பிள் மாக்கின்டொஷ் கணினி விற்பனைக்கு வந்தது.
 1986 - வொயேஜர் 2 விண்கலம் யுரேனசின் 81,500 கிமீ தூரத்துக்குள் வந்தது.

 1993 - துருக்கிய ஊடகவியலாளரும்ம் எழுத்தாளருமான ஊகுர் மும்க்கு அங்காராவில் கார்க் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார்.

 1996 - மாஸ்கோவுக்கு உளவு பார்த்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில் போலந்துப் பிரதமர் ஜோசப் அலெக்ஸ்கி தனது பதவியைத் துறந்தார்.

 2007 - சூடானிலிருந்து 103 பயணிகளுடன் சென்ற விமானம் நடு வானில் கடத்தப்பட்டது.

 2009 - இலங்கை ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட அரசுத்தலைவர் தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் கொழும்பில் காணாமல் போனார்.


 
பிறப்புகள்

 1924 - சி. பி. முத்தம்மா, இந்தியப் பெண் சாதனையாளர் (இ. 2009)
 
இறப்புகள்

 1965 - வின்ஸ்டன் சர்ச்சில், பிரித்தானியப் பிரதமர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1874)
 1966 - ஹோமி பாபா, இந்திய அணு ஆராய்ச்சி நிபுணர் (பி. 1909)
Title: Re: காலம் ஒரு பார்வை
Post by: Global Angel on July 04, 2012, 06:29:12 PM
ஜனவரி 25


ஜனவரி 25 கிரிகோரியன் ஆண்டின் 25வது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 340 (நெட்டாண்டுகளில் 341) நாட்கள் உள்ளன


நிகழ்வுகள்


 1327 - 14 வயது மூன்றாம் எட்வர்ட் இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினான்.
 1494 - இரண்டாம் அல்பொன்சோ நேப்பில்ஸ் மன்னனாக முடிசூடினான்.
 1498 - போர்த்துக்கீச நாடுகாண்பயணி வாஸ்கோ ட காமா தென்கிழக்கு ஆபிரிக்காவை அடைந்தார்.

 1755 - மாஸ்கோ பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.

 1881 - தொமஸ் அல்வா எடிசன், அலெக்சாண்டர் கிரஹாம் பெல் ஆகியோர் இணைந்து ஓரியண்டல் டெலிபோன் கம்பெனி என்ற நிறுவனத்தை ஆரம்பித்தனர்

 1882 - வேல்ஸ் இளவரசர்கள் அல்பேர்ட் விக்டர், ஜோர்ஜ் ஆகியோர் கொழும்பு வந்து சேர்ந்தனர்.

 1890 - நெல்லி பிளை தனது 72 நாள் உலகம் சுற்றும் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டார்.

 1917 - டானிஷ் மேற்கிந்தியத் தீவுகள் ஐக்கிய அமெரிக்காவுக்கு $25 மில்லியன்களுக்கு விற்கப்பட்டது.

 1918 - உக்ரேன் மக்கள் போல்ஷெவிக் ரஷ்யாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தனர்.

 1919 - நாடுகளின் அணி நிறுவப்பட்டது.

 1924 - முதலாவது குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் பிரான்சில் ஷாமனீ என்ற இடத்தில் ஆரம்பமானது.

 1942 - இரண்டாம் உலகப் போர்: தாய்லாந்து ஐக்கிய அமெரிக்கா மீதும் ஐக்கிய இராச்சியம் மீதும் போரை அறிவித்தது.

 1949 - சீனக் கம்யூனிஸ்டுகளின் படைகள் பீக்கிங்கினுள் நுழைந்தன.

 1949 - இஸ்ரேலில் இடம்பெற்ற முதலாவது பொதுத் தேர்தலில் David Ben-Gurion பிரதமரானார்.

 1955 - சோவியத் ஒன்றியம் ஜேர்மனி மீது அதிகாரபூர்வமாக போரை நிறுத்தியது.

 1971 - உகண்டாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் மில்ட்டன் ஓபோட் அதிபர் பதவியில் இருந்து அகற்றப்பட்டு இடி அமீன் தலைவரானார்.

 1971 - இந்தியாவின் 18வது மாநிலமாக இமாசலப் பிரதேசம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
 1981 - மா சே துங்கின் மனைவி ஜியாங் கிங் இற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இது பின்னர் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

 1986 - தேசிய எதிர்ப்பு இயக்கத்தினரால் உகாண்டா அரசு கவிழ்க்கப்பட்டது.
 1994 - நாசாவின் கிளமென்டைன் விண்கலம் சந்திரனை நோக்கி ஏவப்பட்டது.

 1995 - யோசப் வாஸ் அடிகளார் பாப்பரசர் இரண்டாம் அருளப்பர் சின்னப்பரால் முத்திப்பேறு பெற்றவராக அறிவிக்கப்பட்டார்.

 1998 - கண்டியின் தலதா மாளிகையில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டு 25 பேர் படுகாயமடைந்தனர்.

 1999 - மேற்கு கொலம்பியாவில் இடம்பெற்ற 6.0 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் 1000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.

 2002 - விக்கிப்பீடியா மீடியாவிக்கி மென்பொருளுக்கு மாறியது.
 2004 - ஒப்போர்ச்சுனிட்டி தளவுளவி (MER-B) செவ்வாயில் தரையிறங்கியது.

 2005 - இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் மந்திராதேவி என்ற இடத்தில் கோயில் ஒன்றில் சனநெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உட்பட 258 பேர் கொல்லப்பட்டனர்.

 2006 – சூரியக் குடும்பத்திற்கு வெளியே பால் வழியின் நடுவிற்குக் கிட்டவாக பூமியில் இருந்து 21,500 ± 3,300 ஒளியாண்டுகள் தூரத்தில் OGLE-2005-BLG-390Lb என்ற கோள் கண்டுபிடிக்கப்பட்டது.

 2009 - முல்லைத்தீவில் ராமநாதபுரம் பகுதியில் உள்ள கல்மடு குளத்தின் அணை விடுதலைப் புலிகளால் உடைக்கப்பட்டது.
 
 பிறப்புகள்


 1627 - ரொபேர்ட் பொயில், ஐரிஷ் வேதியியலாளர் (இ. 1691)
 1872 - பி. ஆர். ராஜமய்யர், எழுத்தாளர், பத்திரிகையாசிரியர் (இ. 1898)
 1917 - ஈலியா பிரிகோஜின், நோபல் பரிசு பெற்ற ருசிய அறிவியலாளர் (இ. 2003)
 1928 - எடுவார்ட் ஷெவார்டுநாட்சே, ஜோர்ஜியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர்
 1933 - கொரசோன் அக்கினோ, பிலிப்பைன்ஸ் முன்னாள் குடியரசுத் தலைவர் (இ. 2009)
 1941 - செங்கை ஆழியான், ஈழத்து எழுத்தாளர்
 1949 - போல் நர்ஸ், நோபல் பரிசு பெற்ற பிரித்தானியர்
 
இறப்புகள்

 1922 - சுன்னாகம் குமாரசாமிப் புலவர் (பி. 1855) 2005 - பிலிப் ஜான்சன், அமெரிக்கக் கட்டிடக் கலைஞர் (பி. 1906)
 2006 - நெல்லை கிருஷ்ணமூர்த்தி, கருநாடக இசைக் கலைஞர்
 
சிறப்பு நாள்

 ரஷ்யா: மாணவர் நாள் (தத்தியானா நாள்)
Title: Re: காலம் ஒரு பார்வை
Post by: Global Angel on July 04, 2012, 06:32:24 PM
ஜனவரி 26

ஜனவரி 26 கிரிகோரியன் ஆண்டின் 26வது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 339 (நெட்டாண்டுகளில் 340) நாட்கள் உள்ளன.


நிகழ்வுகள்

 1340 - இங்கிலாந்து மன்னன் மூன்றாம் எட்வர்ட் பிரான்சின் மன்னனாக அறிவிக்கப்பட்டான்.

 1500 - விசெண்ட் யானெஸ் பின்சோன் பிரேசில் நாட்டில் காலடி வைத்த முதலாவது ஐரோப்பியர் ஆனார்ர்.

 1531 - போர்த்துக்கல், லிஸ்பன் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

 1565 - கர்நாடகா மாநிலத்தின் தலைக்கோட்டை என்ற இடத்தில் விஜயநகரப் பேரரசுக்கும் இஸ்லாமிய தக்காணத்து சுல்தான்களுக்கும் இடையில் இடம்பெற்ற சமரில் கடைசி இந்துப் பேரரசு தோல்வி கண்டது. இத்தோல்வி இந்தியாவின் பெரும் பகுதி இஸ்லாமியரின் கட்டுப்பாட்டுக்குள் வரக் காரணியாய் இருந்தது.

 1788 - ஆர்தர் பிலிப் தலைமையில் பிரித்தானியக் கைதிகளின் முதலாவது தொகுதியைக் கொண்ட கப்பல் சிட்னியை அடைந்து புதிய குடியேற்றத்தை ஆரம்பித்தனர். இது ஆஸ்திரேலிய நாளாகக் கொண்டாடப்படுகிறது.

 1837 - மிச்சிகன் ஐக்கிய அமெரிக்காவின் 26வது மாநிலமாக இணைக்கப்பட்டது.
 1841 - ஐக்கிய இராச்சியம் ஹொங்கொங்கை அதிகாரபூர்வமாக ஆக்கிரமித்தது.
 1861 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: லூசியானா மாநிலம் ஐக்கிய அமெரிக்காவில் இருந்து விலகியது.

 1870 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: வேர்ஜீனியா அமெரிக்கக் கூட்டணியில் மீண்டும் இணைந்தது.

 1924 - சென் பீட்டர்ஸ்பேர்க் லெனின்கிராட் எனப் பெயர் மாற்றப்பட்டது.
 1926 - ஜோன் லோகி பெயர்ட் தொலைக்காட்சிப் பெட்டியைக் காட்சிப்படுத்தினார்.
 1930 - இந்திய தேசியக் காங்கிரஸ் 26 ஜனவரியை இந்தியாவின் விடுதலை நாளாக (பூரண சுயராஜ்ய நாள்) அறிவித்தது.

 1942 - இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்காவின் படையினர் முதற்தடவையாக ஐரோப்பாவை (வட அயர்லாந்து) அடைந்தனர்.

 1949 - ஆஸ்திரேலியக் குடியுரிமை முதன் முறையாக வழங்கப்பட்டது.
 1950 - இந்தியா குடியரசு நாடானது. ராஜேந்திர பிரசாத் அதன் முதலாவது குடியரசுத் தலைவரானார்.

 1952 - பிரித்தானிய மற்றும் எகிப்திய உயர் வகுப்பு வர்த்தகர்களுக்கெதிராக எகிப்தில் இடம்பெற்ற வன்முறைகளில் கெய்ரோ நகரத்தின் நடுப் பகுதி தீயினால் சேதமாக்கப்பட்டது.

 1958 - ஜப்பானிய பயணிகள் கப்பல் தெற்கு அவாஜி தீவில் மூழ்கியதில் 167 பேர் கொல்லப்பட்டனர்.

 1962 - ரேஞ்சர் 3 விண்கலம் சந்திரனை ஆராய்வதற்காக விண்ணுக்கு ஏவப்பட்டது. ஆனாலும் இத் தளவுளவி 22,000 மைல்களால் சந்திரனைத் தவறவிட்டது.

 1965 - இந்தி இந்தியாவின் அதிகாரபூர்வ மொழியானது.
 1980 - இஸ்ரேலும் எகிப்தும் தூதரக உறவை ஆரம்பித்தன.
 1983 - லோட்டஸ் 1-2-3 வெளியிடப்பட்டது.
 1992 - ரஷ்யாவின் அணுவாயுத ஏவுகணைகள் ஐக்கிய அமெரிக்க நகரங்களை நோக்கி செலுத்தப்படமாட்டா என அதிபர் பொரிஸ் யெல்ட்சின் அறிவித்தார்.

 2001 - குஜராத் நிலநடுக்கத்தில் 20,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
 2006 - வெஸ்டர்ன் யூனியன் நிறுவனம் தொலைத்தந்தி மூலமான தனது சேவைகளை நிறுத்திக் கொண்டது.

 பிறப்புகள்


 1904 - சோன் மக்பிறைட், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1988)
 1911 - பொலிக்காப் கூஷ், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1993)
 1921 - அகியோ மொறிடா, ஜப்பானியத் தொழிலதிபர் (இ. 1999)
 1977 - வின்ஸ் கார்டர், அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்
 
 இறப்புகள்

 1823 - எட்வர்ட் ஜென்னர், ஆங்கிலேய மருத்துவர், அம்மை நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்தவர் (பி. 1749)
 1895 - கெய்லி, கணிதவியலர் (பி. 1821)
 1964 - தோமஸ் அடிகள், யாழ்ப்பாணம் தோலகட்டி ஆசிரம சுவாமிகள் (பி. 1886)
 2008 - ஜோர்ஜ் ஹப்பாஷ், பாலஸ்தீனத் தலைவர் (பி. 1926)
 
 சிறப்பு நாள்

 உலக சுங்கத்துறை தினம்
 ஆஸ்திரேலியா - ஆஸ்திரேலியா நாள் (1788)
 இந்தியா - குடியரசு நாள் (1950)
 உகாண்டா - விடுதலை நாள்
Title: Re: காலம் ஒரு பார்வை
Post by: Global Angel on July 04, 2012, 06:34:52 PM
ஜனவரி 27

ஜனவரி 27 கிரிகோரியன் ஆண்டின் 27வது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 338 (நெட்டாண்டுகளில் 339) நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

 1695 - ஓட்டோமான் பேரரசின் மன்னன் இரண்டாம் அஹமது இறந்ததை அடுத்து இரண்டாம் முஸ்தபா மன்னனானான்.

 1880 - தாமஸ் எடிசன் வெள்ளொளிர்வு விளக்குக்கான காப்புரிமம் பெற்றார்.
 1888 - தேசிய புவியியற் கழகம் (National Geographic Society) வாஷிங்டன் டிசியில் அமைக்கப்பட்டது.

 1915 - ஐக்கிய அமெரிக்க கடற்படையினர் ஹெயிட்டியை ஆக்கிரமித்தனர்.
 1918 - பின்லாந்தில் உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.
 1924 - விளாடிமிர் லெனினின் உடல் மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் மாலை 4:00 மணிக்கு அடக்கம் செய்யப்பட்டது.

 1926 - ஜோன் லோகி பயார்ட் முதல் தொலைக்காட்சி ஒளிபரப்பை நடத்திக் காட்டினார்.
 1938 - நியூ யோர்க்கில் நயாகரா நீர்வீழ்ச்சியில் நயாகரா பாலம் உடைந்து வீழ்ந்தது.
 1944 - இரண்டாம் உலகப் போர்: அச்சு நாடுகளின் இரண்டாண்டு லெனின்கிராட் ஆக்கிரமிப்பு முடிவுக்கு வந்தது.

 1945 - இரண்டாம் உலகப் போர்: லட்சக்கணக்கான யூதர்கள் குரூரமாகக் கொல்லப்பட்ட போலந்தின் அவுஷ்விட்ஸ் சித்திரவதை முகாமில் எஞ்சியிருந்த கைதிகள் 7,600 பேர் சோவியத் செம்படையினாரால் விடுவிக்கப்பட்டனர்.

 1967 - அப்பொலோ 1 விண்வெளி வீரர்கள் மூவர் கென்னடி விண்வெளி மையத்தில் தமது விண்கலத்தைப் பரிசோதிக்கும் போது இடம்பெற்ற தீ விபத்தில் கொல்லப்பட்டனர்.

 1973 - வியட்நாம் போரை முடிவுக்குக் கொண்டு வந்த உடன்பாடு பாரிசில் எட்டப்பட்டது.

 1996 - நைஜரில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் நாட்டின் முதலாவது மக்களால் தெரிவு செய்யப்பட்ட அதிபர் மஹமான் ஊஸ்மன் பதவியிலிருந்து அகற்றப்பட்டு இராணுவத் தளபதி இப்ராகிம் மயினாசரா ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்.

 2002 - நைஜீரியாவின் லாகோஸ் நகரில் இராணுவக் களஞ்சியமொன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் 1,000 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.
 
பிறப்புகள்

 1756 - வொல்ஃப்கேங்க் அமதியுஸ் மோட்ஸார்ட், ஐரோப்பிய செவ்வியல் இசையமைப்பாளர் (இ. 1791)

 1775 - பிரீடரிக் ஷெல்லிங், ஜெர்மனிய மெய்யியல் அறிஞர் (இ. 1854)
 1832 - லூயிஸ் கரோல், ஆங்கில எழுத்தாளர், கணிதவியலாளர், கிறித்துவப் பாதிரியார் (இ. 1898)

 1903 - ஜோன் எக்கில்ஸ், நோபல் பரிசு பெற்ற ஆஸ்திரேலியர் (இ. 1997)
 1936 - சாமுவேல் டிங், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்
 1944 - மைரேயட் கொரிகன், நோபல் பரிசு பெற்றவர்
 1974 - சமிந்த வாஸ், இலங்கைத் துடுப்பாட்ட வீரர்
 
இறப்புகள்

 1814 - ஜொகான் ஃபிக்டே, ஜேர்மனிய மெய்யியல் அறிஞர் (பி. 1762)
 1893- மகா வைத்தியநாத ஐயர், கருநாடக இசைப் பாடகர் (பி. 1844)
 1967 - அப்பொலோ 1 விண்வெளிவீரர்கள்: எட்வர்ட் வைட், (பி. 1930)
 வேர்ஜில் கிறிசம், (பி. 1926)
 றொஜர் காபி, (பி. 1935),
Title: Re: காலம் ஒரு பார்வை
Post by: Global Angel on July 04, 2012, 07:06:14 PM


ஜனவரி 28


ஜனவரி 28 கிரிகோரியன் ஆண்டின் 28வது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 337 (நெட்டாண்டுகளில் 338) நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

 1547 - எட்டாம் ஹென்றியின் இறப்பு. அவனது 9 வயது மகன் ஆறாம் எட்வர்ட் இங்கிலாந்தின் மன்னன் ஆனான்.

 1624 - கரிபியனில் முதலாவது பிரித்தானியக் குடியேற்ற நாடான சென் கிட்ஸ் சர் தொமஸ் வார்னர் என்பவரால் அமைக்கப்பட்டது.

 1679 - சென்னை கோட்டைப் பகுதியில் சிறு நிலநடுக்கம் உணரப்பட்டது.
 1820 - ஃபாபியன் பெலிங்ஷோசென் தலைமையில் ரஷ்யா நாடுகாண் பயணக்குழு அண்டார்ட்டிக்காவை அடைந்தது.

 1846 - அலிவால் என்ற இடத்தில் சீக்கியர்களுடன் இடம்பெற்ற போரில் சர் ஹரி ஸ்மித் தலைமையிலான பிரித்தானியப் படைகள் வெற்றி பெற்றனர்.

 1882 - சென்னையில் முதன்முதலாக தொலைபேசி அறிமுகப்படுத்தப்பட்டது.
 1909 - ஐக்கிய அமெரிக்கப் படைகள் குவாண்டானாமோ விரிகுடாவைத் தவிர்த்து கியூபாவின் மற்றைய பகுதிகளில் இருந்து விலகினர்.

 1918 - பின்லாந்தின் தலைநகர் ஹெல்சிங்கியை புரட்சியாளர்கள் கைப்பற்றினர்.
 1932 - ஜப்பானியப் படைகள் ஷங்காய் நகரைத் தாக்கினர்.
 1935 - ஐஸ்லாந்து கருக்கலைப்பைச் சட்டபூர்வமாக்கிய முதல் நாடானது.
 1986 - சாலஞ்சர் மீள்விண்கலம் புறப்பட்ட 73ஆவது வினாடியில் வானில் வெடித்துச் சிதறியதில் ஏழு விண்வெளிவீரர்கள் கொல்லப்பட்டனர்.

 1987 - மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை கிராமத்தில் இலங்கை இராணுவத்தினரால் 86 தமிழ் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

 2002 - கொலம்பியாவில் போயிங் விமானம் ஒன்று அண்டெஸ் மலையில் மோதியதில் 92 பேர் கொல்லப்பட்டனர்.
 

பிறப்புகள்

 1853, ஹொசே மார்த்தி, கியூபாவின் புரட்சியாளர் (இ. 1895)
 1922 - ரொபேர்ட் ஹோலி, நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (இ. 1993)
 1925 - ராஜா ராமண்ணா, இந்திய அணுவியல் நிபுணர்
 
இறப்புகள்

 1939 - வில்லியம் யீட்ஸ், நோபல் பரிசு பெற்ற ஐரிஸ் எழுத்தாளர் (பி. 1865)
 1996 - ஜோசப் புரொட்ஸ்கி, நோபல் பரிசு பெற்ற ரசியக் கவிஞர் (பி. 1940)
 2007 - ஓ. பி. நாயர், இந்தித் திரைப்பட இசையமைப்பாளர்
 
 சிறப்பு நாள்

 உலக தொழுநோய் நாள்

Title: Re: காலம் ஒரு பார்வை
Post by: Global Angel on July 04, 2012, 07:13:26 PM
ஜனவரி 29



ஜனவரி 29 கிரிகோரியன் ஆண்டின் 29வது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 336 (நெட்டாண்டுகளில் 337) நாட்கள் உள்ளன.


நிகழ்வுகள்

 1595 - ஷேக்ஸ்பியரின் ரோமியோவும் ஜூலியட்டும் நாடகம் முதன் முதலாக அரங்கேறியது.

 1676 - மூன்றாம் பியோதர் ரஷ்யாவின் மன்னனாக முடி சூடினான்.
 1814 - நெப்போலியன் பொனபார்ட்டின் பிரெஞ்சு இராணுவம் பிரியென் நகரில் இடம்பெற்ற சமரில் ரஷ்யாவை வெற்றி பெற்றது.

 1819 - ஸ்டாம்ஃபோர்ட் ராபில்ஸ் சிங்கப்பூரில் தரையிறங்கினார்.
 1861 - கான்சஸ் ஐக்கிய அமெரிக்காவின் 34வது மாநிலமாக இணைந்தது.

 1863 - ஐக்கிய அமெரிக்காவின் இடாகோ மாநிலத்தில் பெயார் ஆற்றருகில் இராணுவத்தினருக்கும் ஷோஷோன் பழங்குடிகளுக்கும் இடையில் இடம்பெற்ற சமரில் பல நூற்றுக்கணக்கான பழங்குடிகள் படுகொலை செய்யப்பட்டனர்.

 1886 – ஜெர்மனியரான கார்ல் பென்ஸ் பெட்ரோலினால் இயங்கும் முதலாவது தானுந்துக்கான காப்புரிமம் பெற்றார்.

 1916 - முதலாம் உலகப் போர்: பாரிஸ் ஜெர்மனியரின் குண்டுத்தாக்குதலுக்கு இலக்கானது.

 1929 - சோவியத் ஒன்றியத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட லியோன் ட்ரொட்ஸ்கி துருக்கியை அடைந்தார்.

 1940 - ஜப்பான், ஒசாக்காவில் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற தொடருந்து ஒன்று வெடித்ததில் 181 பேர் கொல்லப்பட்டனர்.

 1944 - இரண்டாம் உலகப் போர்: போலந்தில் கொனியூச்சி என்ற இடத்தில் சோவியத் துணை இராணுவத்தினரினால் பெண்கள், குழந்தைகள் உட்பட கிட்டத்தட்ட 38 பேர் கொல்லப்பட்டனர்.

 1946 - ஐக்கிய அமெரிக்காவில் CIG எனப்படும் மத்திய உளவுத்துறை குரூப் (Central Intelligence Group) அமைக்கப்பட்டது.

 1996 - இத்தாலியில் வெனிஸ் நகரில் உள்ள ஓப்பரா மாளிகையான லா ஃபெனீஸ் தீயினால் அழிந்தது.

 2005 - சீனாவின் பெருநிலப்பரப்பில் இருந்து 1949ம் ஆண்டிற்குப் பின்னர் முதற்தடவையாக வர்த்தக விமானம் ஒன்று தாய்வானுக்கு வந்து சேர்ந்தது.
 
பிறப்புகள்

 1860 - ஆன்டன் சேகொவ், ரசிய எழுத்தாளர் (இ. 1904)
 1866 - ரொமெயின் ரோலண்ட், நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர் (இ. 1944)
 1926 - அப்துஸ் சலாம், நோபல் பரிசு பெற்ற பாகிஸ்தானிய இயற்பியலாளர் (இ. 1996)
 1970 - ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், இந்திய ஒலிம்பிக் வீரர்
 
இறப்புகள்


 1934 - பிரிட்ஸ் ஹேபர், நோபல் பரிசு பெற்ற ஜெர்மனிய வேதியியலாளர் (பி. 1868)
 1963 - றொபேட் புறொஸ்ட், அமெரிக்கக் கவிஞர் (பி. 1874)
 1981 - பாலகிருஷ்ணன், நாதசுரக் கலைஞர் (பி. 1945)
 1998 - பி. எஸ். பி. பொன்னுசாமி, இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1908)
 
சிறப்பு நாள்

 கிப்ரல்டார் - அரசியலமைப்பு நாள்
Title: Re: காலம் ஒரு பார்வை
Post by: Global Angel on July 04, 2012, 07:17:17 PM
ஜனவரி 30  


ஜனவரி 30 கிரிகோரியன் ஆண்டின் 30வது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 335 (நெட்டாண்டுகளில் 336) நாட்கள் உள்ளன.


நிகழ்வுகள்

 1648 - எண்பதாண்டுப் போர்: நெதர்லாந்துக்கும் ஸ்பெயினுக்கும் இடையில் போர் நிறுத்த ஒப்பந்தம் உடன்பாடாகியது.

 1649 - முதலாம் சார்ல்ஸ் மன்னன் தூக்கிலிடப்பட்டான். அவனது மனைவி ஹென்றியேட்டா மரீயா பிரான்ஸ் சென்றாள்.

 1649 - பொதுநலவாய இங்கிலாந்து என்ற குடியரசு அமைக்கப்பட்டது.
 1649 - இளவரசர் சார்ல்ஸ் ஸ்டுவேர்ட் இரண்டாம் சார்ல்ஸ் தன்னை இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, அயர்லாந்து ஆகியவற்றின் மன்னனாக அறிவித்தான். எனினும் எவரும் அவனை அங்கீகரிக்கவில்லை.

 1820 - எட்வர்ட் பிரான்ஸ்ஃபீல்ட் அண்டார்டிக்காவில் தரையிறங்கினார்.
 1835 - ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஆண்ட்ரூ ஜாக்சன் கொலை முயற்சியில் இருந்து தப்பித்தார்.

 1889 - ஆஸ்திரியாவின் இளவரசர் ருடோல்ஃப் தனது காதலியுடன் இறந்து கிடக்கக் காணப்பட்டார்.

 1930 - உலகின் முதலாவது radiosonde சோவியத் ஒன்றியத்தில் உருவாக்கப்பட்டது.
 1933 - அடொல்ஃப் ஹிட்லர் ஜெர்மனியின் அதிபராக (Chancellor) பதவியேற்றார்.
 1943 - இரண்டாம் உலகப் போர்: உக்ரேனில் லேத்திச்சிவ் என்ற இடத்தில் யூதர்கள் ஆயிரக்கணக்கில் நாசிகளால் கொல்லப்பட்டனர்.

 1945 - இரண்டாம் உலகப் போர்: பால்ட்டிக் கடலில் வில்ஹெல்ம் கூஸ்ட்லொஃப் என்ற பயணிகள் கப்பல் சோவியத் நீர்மூழ்கிக் கப்பலினால் தாக்கப்பட்டதில் அதில் பயணம் செய்த 9,000 பேர் கொல்லப்பட்டனர்.

 1948 - இந்தியத் தலைவர் மகாத்மா காந்தி இந்துத் தீவிரவாதியான நாதுராம் கோட்சேயினால் படுகொலை செய்யப்பட்டார்.

 1964 - ரேஞ்சர் 6 விண்கலம் ஏவப்பட்டது.
 1964 - தென் வியட்நாமில் ஜெனரல் நியுவென் கான் (Nguyen Khanh) இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றினார்.

 1972 - வட அயர்லாந்தில் விடுதலைப் போராட்ட ஊர்வலத்தில் கலந்து கொண்ட 14 பேர் ஐக்கிய இராச்சிய துணை இரானுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

 1972 - பாகிஸ்தான் பொதுநலவாய அமைப்பிலிருந்து விலகியது.
 1976 - தமிழ்நாட்டில் மு. கருணாநிதியின் திமுக ஆட்சி கவிழ்க்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டுவரப்பட்டது.

 1994 - பியோத்தர் லேக்கோ சதுரங்க ஆட்டத்தில் உலகின் முதலாவது வயதில் குறைந்த கிராண்ட் மாஸ்டர் ஆனார்.

 2000 - கென்யாவின் விமானம் ஒன்று அட்லாண்டிக் கடலில் ஐவரி கோஸ்ட் கரையில் வீழ்ந்ததில் 169 பேர் கொல்லப்பட்டனர்.

 2003 - பெல்ஜியம் சமப்பால் திருமணத்தைச் சட்டபூர்வமாக்கியது.
 2006 - தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்கள் 5 பேர் மட்டக்களப்பு, வெலிக்கந்தையில் கடத்தப்பட்டனர்.
 
பிறப்புகள்

 1882 - பிராங்கிளின் ரூஸ்வெல்ட், 32வது ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் (இ. 1945)
 1899 - மாக்ஸ் தெய்லர், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1972)
 1910 - சி. சுப்பிரமணியம், இந்திய அரசியல்வாதி (இ. 2000)
 1941 - டிக் சேனி, அமெரிக்காவின் 46வது துணைத் தலைவர்
 1949 - பீட்டர் ஆகர், நோபல் பரிசு பெற்றவர்.
 1974 - கிரிஸ்டியன் பேல், பிரித்தானிய திரைப்பட நடிகர்
 
இறப்புகள்

 1832 - ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன், கடைசிக் கண்டி அரசன்
 1891 - சார்ல்ஸ் பிராட்லா, ஆங்கில அரசியல் கிளர்ச்சியாளர் (பி. 1833)
 1928 - ஜொஹான்னஸ் ஃபிபிகர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1867)
 1948 - மகாத்மா காந்தி, (பி. 1869)
 1948 - ஓர்வில் ரைட், ஐக்கிய அமெரிக்காவின் வானூர்தி நிபுணர் (பி. 1871]])
 1969 - Georges Pire, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1910)
 1981 - வில்லியம் கொபல்லாவ, இலங்கையின் முதலாவது சனாதிபதி (பி. 1897)
 1991 - ஜோன் பார்டீன், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1908)
 2007 - சிட்னி ஷெல்டன், அமெரிக்க எழுத்தாளர் (பி. 1917)
 

 சிறப்பு நாள்

 இந்தியா - தியாகிகள் நாள்
 உலக தொழுநோய் ஒழிப்பு நாள்
Title: Re: காலம் ஒரு பார்வை
Post by: Global Angel on July 04, 2012, 07:20:25 PM

ஜனவரி 31

ஜனவரி 31 கிரிகோரியன் ஆண்டின் 31வது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 334 (நெட்டாண்டுகளில் 335) நாட்கள் உள்ளன.


நிகழ்வுகள்

 1606 - இங்கிலாந்து மன்னன் முதலாம் ஜேம்சிற்கு எதிராகவும் நாடாளுமன்றத்திற்கெதிராகவும் சதி முயற்சியில் இறங்கியமைக்காக காய் ஃபோக்ஸ் என்பவன் தூக்கிலிடப்பட்டான்.

 1747 - பால்வினை நோய்களுக்கான முதலாவது மருத்துவ நிலையம் லண்டனில் லொக் மருத்துவமனையில் நிறுவப்பட்டது.

 1876 - அனைத்து இந்தியப் பழங்குடிகளும் அவர்களுக்கென அமைக்கப்பட்ட சிறப்பு இடங்களுக்கு செல்லுமாறு ஐக்கிய அமெரிக்க அரசு உத்தரவிட்டது.
 1915 - முதலாம் உலகப் போர்; ஜெர்மனி ரஷ்யாவுக்கெதிராக நச்சு வாயுவைப் பயன்படுத்தியது.

 1928 - லியோன் ட்ரொட்ஸ்கி கசக்ஸ்தானுக்கு நாடுகடத்தப்பட்டார்.

 1937 - சோவியத் ஒன்றியத்தில் 31 த்ரொட்ஸ்கி ஆதரவளர்கள் தூக்கிலிடப்பட்டனர்.
 1944 - இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கப் படைகள் ஜப்பான் வசமிருந்த மார்ஷல் தீவுகளில் தரையிறங்கினார்கள்.

 1946 - யூகொஸ்லாவியாவில் சோவியத் முறையிலான அரசியலமைப்பு கொண்டுவரப்பட்டு நாடு பொசுனியா எர்செகோவினா, குரொவேஷியா, மக்கெடோனியா, மொண்டெனேகுரோ, சேர்பியா மற்றும் சிலவேனியா என ஆறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது.

 1953 - வட கடல் பெருக்கெடுத்தன் விளைவாக நெதர்லாந்தில் 1,800 பேர் கொல்லப்பட்டனர்.

 1958 - ஐக்கிய அமெரிக்காவின் வெற்றிகரமான முதலாவது செய்மதி எக்ஸ்புளோரர் 1 விண்ணுக்கு ஏவப்பட்டது.

 1961 - நாசாவின் மேர்க்குரி-ரெட்ஸ்டோன் 2 விண்கலம் ஹாம் என்ற சிம்பன்சி ஒன்றை விண்ணுக்குக் கொண்டு சென்றது.

 1968 - வியட்நாம் போர்: வியட் கொங் படைகள் சாய்கொன் நகரில் அமெரிக்க தூதராலயத்தைத் தாக்கினர்.

 1968 - நவூறு (Nauru) ஆஸ்திரேலியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
 1980 - குவாத்தமாலாவில் ஸ்பெயின் தூதராலய முற்றுகையில் 39 பேர் உயிருடன் தீயிட்டுக் கொல்லப்பட்டனர்.

 1990 - சோவியத் ஒன்றியத்தில் முதலாவது மாக்டொனால்ட் உணவகம் மாஸ்கோவில் திறக்கப்பட்டது.

 1996 - கொழும்பு மத்திய வங்கியின் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 86 பேர் கொல்லப்பட்டு 1,400 பேர் வரை படுகாயமடைந்தனர்.
 2003 - ஆஸ்திரேலியா, நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் வோட்டர்ஃபோல் என்ற இடத்தில் தொடருந்து ஒன்று தடம்புரண்டதில் சாரதி உட்பட 7 பேர் கொல்லப்பட்டனர்.
 
 பிறப்புகள்

 1762 - லக்லான் மக்குவாரி, காலனித்துவ நிர்வாகி (இ. 1824)
 1797 - பிராண்ஸ் சூபேர்ட், ஆஸ்திரிய இசையமைப்பாளர் (இ. 1828)
 1881 - ஏர்விங் லாங்முயர், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (இ. 1957)
 1902 - ஆல்வா மீர்டல், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1986)
 1929 - ருடொல்ஃப் மொஸ்பாவர், நோபல் பரிசு பெற்ற ஜெர்மனியர்.
 1935 - கென்சாபுரோ ஓயீ, நோபல் பரிசு பெற்ற ஜப்பானிய எழுத்தாளர்
 
 இறப்புகள்

 1580 - கர்தினால் ஹென்றி, போர்த்துக்கல், இலங்கை மன்னன் (பி. 1512)
 1933 - ஜோன் கல்ஸ்வோதி, நோபல் பரிசு பெற்ற ஆங்கில எழுத்தாளர் (பி. 1867)
 1955 - ஜோன் மொட், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1865)
 1973 - ராக்னர் ஆண்டன் ஃபிரீஷ், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1895)
 1987 - எம். பக்தவத்சலம், தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சர் (பி. 1897)
 2009 -- நாகேஷ், நகைச்சுவை நடிகர் (பி. 1933)
 
 சிறப்பு நாள்
 நவூறு - விடுதலை நாள் (1968)
Title: Re: காலம் ஒரு பார்வை
Post by: Global Angel on July 26, 2012, 06:47:52 PM

பெப்ரவரி 1

பெப்ரவரி 1 கிரிகோரியன் ஆண்டின் 32வது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 333 (நெட்டாண்டுகளில் 334) நாட்கள் உள்ளன


நிகழ்வுகள்

 1662 - ஒன்பது மாத முற்றுகையின் பின்னர் சீனாவின் இராணுவத் தளபதி கொக்சிங்கா தாய்வான் தீவைக் கைப்பற்றினார்.

 1788 - ஐசாக் பிறிக்ஸ் மற்றும் வில்லியம் லோங்ஸ்ட்ரீட் ஆகியோர் நீராவிப்படகுக்கான காப்புரிமம் பெற்றனர்.

 1793 - ஐக்கிய இராச்சியம் மற்றும் நெதர்லாந்து மீது பிரான்ஸ் போரை அறிவித்தது.
 1814 - பிலிப்பீன்சில் மயோன் எரிமலை வெடித்ததில் 1,200 பேர் கொல்லப்பட்டனர்.
 1832 - ஆசியாவின் முதலாவது அஞ்சல் (தபால்) வண்டி சேவை(mail-coach) கண்டியில் ஆரம்பமாகியது.

 1864 - டென்மார்க்-புரூசியா போர் ஆரம்பமானது.
 1880 - யாழ்ப்பாணத்திற்கும் பருத்தித்துறைக்கும் இடையில் முதலாவது தபால் வண்டி (mail coach) சேவையை ஆரம்பித்தது.

 1884 - ஒக்ஸ்ஃபோர்ட் ஆங்கில அகராதியின் முதற் பதிப்பு வெளியானது.
 1893 - தொமஸ் எடிசன் தனது முதலாவது அசையும் படத்துக்கான படப்பிடிப்பகத்தை நியூ ஜேர்சியில் கட்டி முடித்தார்.

 1908 - போர்த்துக்கல் மன்னன் முதலாம் கார்லொஸ் மற்றும் அவனது மகன், இளவரசர் லூயிஸ் பிலிப் லிஸ்பன் நகரில் கொல்லப்பட்டனர்.

 1913 - உலகின் மிகப்பெரிய தொடருந்து நிலையம் Grand Central Terminal நியூயோர்க் நகரில் திறக்கப்பட்டது.

 1918 - ரஷ்யா ஜூலியன் நாட்காட்டியில் இருந்து கிரிகோரியன் நாட்காட்டிக்கு மாறியது.
 1924 - சோவியத் ஒன்றியத்தை ஐக்கிய இராச்சியம் அங்கீகரித்தது.
 1946 - நோர்வேயின் ட்றிகிவா லீ ஐக்கிய நாடுகள் சபையின் முதலாவது செயலாளர் நாயகமாகத் தெரிவு செய்யப்பட்டார்.

 1958 - எகிப்து மற்றும் சிரியா ஆகியன இணைந்து 1961 வரையில் ஐக்கிய அரபுக் குடியரசு என ஒரு நாடாக இயங்கின.

 1974 - பிரேசிலில் 25-மாடிக் கட்டடம் ஒன்றில் தீப்பற்றியதில் 189 பேர் கொல்லப்பட்டனர்.

 1979 - 15 ஆண்டுகள் நாடு கடந்த நிலையில் வாழ்ந்த ஈரானின் மதத்தலைவர் அயத்தொல்லா கொமெய்னி டெஹ்ரான் திரும்பினார்.

 1998 - கிளிநொச்சிநகர் மீதான தாக்குதல் - 1998: கிளிநொச்சி நகரம் மீதான விடுதலைப் புலிகளின் தாக்குதல் ஆரம்பமாகியது.

 2003 - கொலம்பியா விண்ணோடம் பூமியின் வளிமண்டலத்தினுள் வெடித்துச் சிதறியதில் இந்திய விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா உட்பட ஏழு பேர் கொல்லப்பட்டனர்.

 2004 - சவுதி அரேபியாவில் ஹஜ் பயணத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 251 பேர் கொல்லப்பட்டனர்.

 2005 - நேபாள மன்னர் ஞானேந்திரா நாடாளுமன்றத்தைக் கலைத்து நாட்டைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.

 2005 - கனடா சமப்பால் திருமணத்தை சட்டபூர்வமாக்கிய நான்காவது நாடானது.
 2007 - மட்டக்களப்பு வந்தாறுமூலையில் இடம்பெற்ற கிளைமோர் குண்டுத் தாக்குதலில் பேருந்து ஒன்று சிக்கியதில் 2 அதிரடிப்படையினர் 6 காவற்துறையினர் உட்பட 11 பேர் கொல்லப்பட்டனர்.
 
பிறப்புகள்

 1905 - எமிலியோ செக்ரே, நோபல் பரிசு பெற்றவர் (இ. 1989)
 1931 - போரிஸ் யெல்ட்சின், ரஷ்ய முன்னாள் அதிபர் (இ. 2007)
 
இறப்புகள்

 1958 - கிளிண்டன் டேவிசன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1888)
 1964 - பம்மல் சம்பந்த முதலியார், தமிழ் நாடகத்துறையின் முன்னோடி (பி. 1873)
 1976 - வேர்னர் ஐசன்பேர்க், நோபல் பரிசு பெற்ற ஜேர்மானிய இயற்பியலாளர் (பி. 1901)
 1976 - ஜோர்ஜ் விப்பிள், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க அறிவியலாளர் (பி. 1878)
 1986 - அல்வா மீர்டல், நோபல் பரிசு பெற்ற சுவீடன் எழுத்தாளர் (பி. 1902)
 1999 - வானம்பாடி யோகராஜ், வில்லிசை கலைஞர், நாடக ஆசிரியர், நடிகர், மேடைப்பாடகர் (பி.1948)
 2003 - கல்பனா சாவ்லா, விண்வெளி வீராங்கனை (பி. 1961)
 
 சிறப்பு நாள்
 ஐக்கிய அமெரிக்கா - கறுப்பின வரலாறு மாதம் ஆரம்பம்
Title: Re: காலம் ஒரு பார்வை
Post by: Global Angel on July 26, 2012, 06:52:31 PM
பெப்ரவரி 2



 கிரிகோரியன் ஆண்டின் 33 ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 332 (நெட்டாண்டுகளில் 333) நாட்கள் உள்ளன
.

நிகழ்வுகள்
 1509 - போர்த்துக்கலுக்கும் துருக்கிக்கும் இடையில் இந்தியாவின் தியூ என்ற இடத்தில் கடற்சமர் மூண்டது.

 1790 - வீரபாண்டிய கட்டபொம்மன் 47 வது பாளையக்காரராகப் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.

 1812 - கலிபோர்னியாவின் கரையோரங்களில் ஃபோர்ட் ரொஸ் என்ற இடத்தில் தோல் வர்த்தக குடியேற்றமொன்றை ரஷ்யா அமைத்தது.

 1822 - இலங்கையின் ஆளுநராக சேர் எட்வேர்ட் பஜெட் நியமிக்கப்பட்டார்.
 1848 - மெக்சிக்கோவுக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையில் போர் நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டது.

 1848 - கலிபோர்னியாவில் தங்கம் தேடுவதற்காக சீனர்கள் கப்பலில் சான் பிரான்சிஸ்கோ வந்திறங்கினார்கள்.

 1878 - துருக்கியின் மீது கிரேக்கம் போரை அறிவித்தது.
 1880 - முதலாவது மின்சார வீதி விளக்குகள் இந்தியானாவில் நிறுவப்பட்டன.
 1897 - பென்சில்வேனியாவின் தலைநகர் ஹரிஸ்பேர்க் தீயினால் அழிந்தது.
 1899 - ஆஸ்திரேலியாவின் தலைநகரை சிட்னிக்கும் மெல்பேர்னிற்கும் இடையில் கன்பராவில் அமைப்பதென முதலமைச்சர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

 1901 - விக்டோரியா மகாராணியின் இறுதி நிகழ்வுகள் இடம்பெற்றன.
 1908 - 60 ஆண்டுகளுக்கு ஒரு தடவை இடம்பெறும் இந்துக்களின் சிறப்பு நாளான அருத்தோதயம் நிகழ்வு.

 1920 - எஸ்தோனியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது.

 1933 - ஜெர்மனியின் நாடாளுமன்றத்தை ஹிட்லர் கலைத்தார்.
 1943 - இரண்டாம் உலகப் போர்: ஸ்டாலின்கிராட் போரின் பின்னர் கடைசி ஜேர்மனியப் படைகள் சோவியத் ஒன்றியத்திடம் சரணடைந்தன. 91,000 பேர் உயிருடன் பிடிக்கப்பட்டனர்.

 1946 - ஹங்கேரியக் குடியரசு அமைக்கப்பட்டது.
 1971 - உகாண்டாவில் ஒரு வாரத்தின் முன்னர் இடம்பெற்ற புரட்சியின் பின்னர் இடி அமீன் உகாண்டாவின் அதிபராகத் தன்னை அறிவித்தார்.

 1972 - டப்ளினில் பிரித்தானிய தூதரகம் தேசியவாதிகளால் தாக்கி அழிக்கப்பட்டது.
 1982 - சிரியாவின் ஹமா நகரில் சிரிய அரசு மேற்கொண்ட தாக்குதல்களில் கிட்டத்தட்ட 10,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.

 1989 - ஒன்பது ஆண்டு கால முற்றுகையின் பின்னர் கடைசி ரஷ்யத் துருப்புக்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறின.

 1989 - செய்மதித் தொலைக்காட்சிச் சேவை ஸ்கை தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட்டது.
 1998 - பிலிப்பீன்சில் விமானம் ஒன்று மலை ஒன்றுடன் மோதியதில் 104 பேர் கொல்லப்பட்டனர்.
 
பிறப்புகள்
 1522] - லியூஜி ஃபெறாரி, இத்தாலியக் கணித ஆய்வாளர் (இ. 1565)
 1871 - பா. வே. மாணிக்க நாயக்கர், அறிவியல் தமிழ் வளர்த்த தமிழிஞர் (இ. 1931)
 1882 - ஜேம்ஸ் ஜோய்ஸ், ஐரிய எழுத்தாளர் (இ. 1941)
 1924 - வி. வி. வைரமுத்து, ஈழத்து நாடகத்துறையின் முன்னோடி, நடிகமணி (இ. 1989)
 1977 - ஷக்கீரா, கொலம்பியப் பாடகி
 1985 - உபுல் தரங்க, இலங்கை துடுப்பாட்ட வீரர்
 
இ றப்புகள்

 1907 - திமீத்ரி மென்டெலீவ், ரஷ்ய வேதியியலாளர் (பி. 1834)
 1970 - பேட்ரண்ட் ரசல், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1872)
 1980 - வில்லியம் ஸ்டெயின், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1911)
 1987 - அலிஸ்ரர் மக்லீன், ஆங்கில எழுத்தாளர் (பி. 1922)
 
 சிறப்பு நாள்

 உலக சதுப்பு நில நாள்

Title: Re: காலம் ஒரு பார்வை
Post by: Global Angel on July 26, 2012, 06:58:14 PM
பெப்ரவரி 3



கிரிகோரியன் ஆண்டின் 34 ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 331 (நெட்டாண்டுகளில் 332) நாட்கள் உள்ளன


நிகழ்வுகள்

 301 - சீனாவில் சீமா லுன் ஜின் ஆட்சியைக் கைப்பற்றினான்.
 1377 - இத்தாலியின் செசெனா நகரத்தில் பாப்பரசரின் படைகளினால் 2,000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

 1509 - போர்த்துக்கலுக்கும் துருக்கிக்கும் இடையில் இந்தியாவின் தியூ என்ற இடத்தில் கடற்சமர் மூண்டது.

 1690 - ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது காகித நாணயம் மசாசூசெட்ஸில் அறிமுகப்படுத்தப்பட்டது.

 1876 - பராகுவே ஆர்ஜெண்டீனாவுடன் அமைதி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது.
 1783 - ஐக்கிய அமெரிக்காவின் விடுதலையை ஸ்பெயின் அங்கீகரித்தது.
 1807 - பிரித்தானியப் படைகள் சர் சாமுவேல் ஓஷ்முட்டி தலைமையில் உருகுவேயின் தலைநகர் மொண்டெவிடியோவைக் கைப்பற்றினர்.

 1894 - யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
 1916 - கனடாவில் ஓட்டாவாவில் நாடாளுமன்றக் கட்டடம் தீயினால் அழிந்தது.
 1919 - சோவியத் படையினர் உக்ரேனைப் பிடித்தன.
 1930 - வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்டது.

 1931 - நியூசிலாந்தில் நேப்பியர் என்ற இடத்தில் இடம்பெற்ற 7.9 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தினால் 258 பேர் கொல்லப்பட்டனர்.

 1944 - இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்கா மார்ஷல் தீவுகளைக் கைப்பற்றியது.
 1945 - இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்காவின் 1,000 விமானங்கள் பெர்லின் மீது குண்டுகளை வீசின.
 1966 - சோவியத் விண்கலம் லூனா 9 சந்திரனில் தரையிறங்கிய முதலாவது விண்கலம் என்ற பெருமையைப் பெற்றது.
 1969 - யாசர் அரபாத் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவராகத் தெரிவானார்.

 1984 - சாலஞ்சர் விண்ணோடத்தில் சென்ற விண்வெளி வீரர்கள் புரூஸ் மக்காண்ட்லெஸ், ராபர்ட் ஸ்டுவேர்ட் ஆகியோர் முதன் முதலாக விண்வெளியில் சுயாதீனமான நிலையில் நடந்து சாதனை படைத்தார்கள்.

 1989 - பராகுவேயில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து 1954 இலிருந்து ஆட்சியிலிருந்த சர்வாதிகாரி அல்பிரெடோ ஸ்ட்ரோயெஸ்னர் பதவியிழந்தார்.

 2006 - அல் சலாம் 98 என்ற எகிப்திய பயணிகள் கப்பலொன்று செங்கடலில் 1,721 பேருடன் மூழ்கியதில் 435 பேர் மட்டும் மீட்கப்பட்டனர்.
 
 பிறப்புகள்
 1898 - அல்வார் ஆல்ட்டோ, கட்டிடக் கலைஞர் (இ. 1976)
 1948 - கார்லொஸ் பெலோ, நோபல் பரிசு பெற்ற கிழக்கு திமோர் அரசியல்வாதி
 1976 - ஜெ. ராம்கி, எழுத்தாளர்
 
இறப்புகள்

 1855 - டானியல் புவர், அமெரிக்க இலங்கை மிஷனின் மூத்த முதல்வர்
 1915 - யோன் சிலம்புவே, ஆபிரிக்க விடுதலைப் போராளி (பி. 1871)
 1924 - வூட்ரோ வில்சன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க அதிபர் (பி. 1856)
 1969 - சி. என். அண்ணாதுரை, தமிழ் நாட்டின் ஆறாவது முதலமைச்சர் (பி. 1909)
 2005 - எர்ணஸ்ட் மாயர், உயிரியலாளர் (பி. 1904)
Title: Re: காலம் ஒரு பார்வை
Post by: Global Angel on July 26, 2012, 07:01:10 PM
பெப்ரவரி 4

 கிரிகோரியன் ஆண்டின் 35 ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 330 (நெட்டாண்டுகளில் 331) நாட்கள் உள்ளன.


நிகழ்வுகள்

 1783 - ஐக்கிய அமெரிக்கா மீது தனது அனைத்துத் தாக்குதல்களையும் நிறுத்துவதாக ஐக்கிய இராச்சியம் அறிவித்தது.

 1789 - ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது அதிபராக ஜார்ஜ் வாஷிங்டன் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார்.

 1794 - பிரெஞ்சுக் குடியரசு முழுவதும் அடிமைத் தொழில் சட்டவிரோதமாக்கப்பட்டது.
 1810 - கரிபியன் தீவுகளான குவாட்லூப் (Guadeloupe) பிரித்தானியக் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

 1834 - இலங்கையின் ஆங்கிலப் பத்திரிகை சிலோன் ஒப்சேர்வர் முதன் முதலாக வெளியிடப்பட்டது.

 1859 - கிரேக்க பைபிளின் 4ம் நூற்றாண்டுக் கையெழுத்துப்படி ஒன்று எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

 1899 - பிலிப்பீன்ஸ்-அமெரிக்கப் போர் ஆரம்பமானது.
 1932 - இரண்டாம் உலகப் போர்: சீனாவின் ஹார்பின் நகரை ஜப்பான் பிடித்தது.
 1936 - முதற்தடவையாக ரேடியம் E என்ற செயற்கைக் கதிரியக்க மூலகம் உருவாக்கப்பட்டது.

 1943 - இரண்டாம் உலகப் போர்: ஸ்டாலின்கிராட் போர் முடிவுக்கு வந்தது.
 1945 - இரண்டாம் உலகப் போர்: அமெரிக்க அதிபர் பிராங்கிளின் ரூஸ்வெல்ட், பிரித்தானிய பிரதமர் வின்ஸ்டன் சேர்ச்சில், ரஷ்யத் தலைவர் ஜோசப் ஸ்டாலின் ஆகியோர் உக்ரேனில் யால்ட்டா மாநாட்டில் சந்தித்தனர்.

 1948 - இலங்கை ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
 1957 - திருகோணமலையில் கறுப்புக் கொடியைக் கட்ட முயன்ற திருமலை நடராசன் போலீசாரினால் சுட்டுக் கொலைசெய்யப்பட்டார்.

 1966 - ஜப்பான் போயிங் விமானம் டோக்கியோவில் வீழ்ந்ததில் 133 பேர் கொல்லப்பட்டனர்.

 1969 - பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவராக யாசர் அரபாத் பதவியேற்றார்.
 1976 - குவாத்தமாலா மற்றும் ஹொண்டுராஸ் நிலநடுக்கத்தில் 22,000 பேர் இறந்தனர்.
 1978 - இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிபராக ஜே. ஆர். ஜெயவர்த்தனா பதவியேற்றார்.

 1997 - இஸ்ரேலில் இரண்டு உலங்குவானூர்திகள் வானில் மோதியதில் 73 பேர் கொல்லப்பட்டனர்.

 1998 - ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற 6.1 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் 5,000 பேர் கொல்லப்பட்டனர்.

 2003 - யூகொஸ்லாவியா அதிகாரபூர்வமாக "சேர்பியா மற்றும் மொண்டெனேகுரோ" எனப் பெயர் மாற்றம் பெற்றது.

 2007 - ஒலியை மிஞ்சிய வேகத்தில் செல்லும் ரஷ்ய-இந்திய "பிரமாஸ்" ஏவுகணை ஒரிசா ஏவு தளத்தில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது.

 2007 - வங்காள தேசத்தில் இடம்பெற்ற உலகின் மிகப் பெரிய கூட்டுப் பிரார்த்தனையில் 3 மில்லியனுக்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.
 
பிறப்புகள்

 1913 - றோசா பாக்ஸ், ஒர் ஆபிரிக்க அமெரிக்க குடியுரிமைகள் செயற்பாட்டாளர் (இ. 2005)
 1921 - கே. ஆர். நாராயணன், இந்தியாவின் ஜனாதிபதி (இ. 2005)
 
இறப்புகள்

 1747 - வீரமாமுனிவர், இத்தாலியத் தமிழறிஞர் (பி. 1680)
 1928 - ஹெண்ட்ரிக் லோரெண்ட்ஸ், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1853)
 1974 - சத்தியேந்திரா போஸ், இந்திய இயற்பியலாளர் (பி. 1894)
 
சிறப்பு நாள்

 இலங்கை - விடுதலை நாள் (1948)
Title: Re: காலம் ஒரு பார்வை
Post by: Global Angel on July 26, 2012, 07:06:16 PM
பெப்ரவரி 5  


கிரிகோரியன் ஆண்டின் 36 ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 329 (நெட்டாண்டுகளில் 330) நாட்கள் உள்ளன.
 

 நிகழ்வுகள்

 62 – இத்தாலியின் பொம்பெய் நகரில் நிலநடுக்கம் இடம்பெற்றது.
 1597 - ஜப்பானின் ஆரம்பகால கிறிஸ்தவர்கள் பலர் ஜப்பானின் புதிய அரசால் ஜப்பானிய சமுகத்திற்குக் கெடுதலாக இருப்பதாகக் குற்றஞ்ச்சாட்டப்பட்டுக் கொல்லப்பட்டனர்.

 1649 - ஸ்கொட்லாந்து இரண்டாம் சார்ல்சை அந்நாட்டின் மன்னனாக நாட்டில் இல்லாத நிலையில் அங்கீகரித்தது.

 1778 – தென் கரொலைனா அமெரிக்க கூட்டமைப்பு அரசியலமைப்பை ஏற்றுக்கொண்ட முதலாவது மாநிலமானது.

 1782 - ஸ்பானியர் பிரித்தானியப் படைகளைத் தோற்கடித்து மினோர்க்கா தீவைக் கைப்பற்றினர்.

 1782 - ஒகைய்யோவில் பெண்கள், குழந்தைகள் உட்பட 90 அமெரிக்கப் பழங்குடிகள் வெள்ளை இனத்தவரால் படுகொலை செய்யப்பட்டனர்.

 1852 – உருசியாவின் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரில் ஏர்மிட்டேச் அருங்காட்சியகம் பொது மக்களுக்குத் திறந்து விடப்பட்டது.

 1885 - பெல்ஜிய மன்னன் இரண்டாம் லியோபோல்ட் கொங்கோவைத் தனது தனிப்பட்ட பிரதேசமாக ஆக்கினான்.

 1900 - பனாமா கால்வாய் தொடர்பாக ஐக்கிய அமெரிக்காவுக்கும் ஐக்கிய இராச்சியத்துக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது.

 1917 – மெக்சிக்கோவின் தற்போதைய கூட்டாட்சி அரசியலமைப்பு எற்றுக்கொள்ளப்பட்டது.

 1922 - றீடர்ஸ் டைஜஸ்ட் மாதிகை முதலாவது இதழ் வெளியிடப்பட்டது.
 1958 - ஐக்கிய அமெரிக்காவின் ஜோர்ஜியாவில் சவான்னா கரைகளில் அமெரிக்க வான் படையினரால் ஐதரசன் குண்டு ஒன்று காணாமல் போனது. இதுவரையில் இது கண்டுபிடிக்கப்படவில்லை.

 1958 – ஐக்கிய அரபுக் குடியரசின் முதலாவது அரசுத்தலைவராக கமல் அப்துல் நாசர் நியமிக்கப்பட்டார்.

 1960 - ரஷ்ய மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகம் மாஸ்கோவில் ஆரம்பிக்கப்பட்டது.
 1971 - அப்பல்லோ 14 விண்கலம் அலன் ஷெப்பர்ட், எட்கார் மிட்ச்செல் ஆகியோருடன் சந்திரனில் தரையிறங்கியது.
 
பிறப்புகள்


 1914 - அலன் ஹொட்ஜ்கீன், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1998)
 1915 - ராபர்ட் ஹொஃப்ஸ்டாட்டர், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1990)
 1976 - அபிஷேக் பச்சன், இந்தி நடிகர்
 
இறப்புகள்

 1898 - எம். சி. சித்திலெப்பை, ஈழத்துத் தமிழ் அறிஞர் (பி. 1838)
 1999 - வசீலி லியோன்டியெஃப், நோபல் பரிசு பெற்ற ரசியப் பொருளியலாளர் (பி. 1906)
 2008 - மகேஷ் யோகி, இந்திய ஆன்மிகக் குரு ((பி. 1917)
 

சிறப்பு நாள்

 பாகிஸ்தான் - காஷ்மீர் நாள்
Title: Re: காலம் ஒரு பார்வை
Post by: Global Angel on July 26, 2012, 07:09:01 PM
பெப்ரவரி 6  


கிரிகோரியன் ஆண்டின் 37 ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 328 (நெட்டாண்டுகளில் 329) நாட்கள் உள்ளன.




நிகழ்வுகள்

 1658 - சுவீடன் மன்னன் பத்தாம் குஸ்டாவின் படைகள் உறைந்த கடலைத் தாண்டி டென்மார்க்கை அடைந்தனர்.

 1819 - ஸ்டாம்ஃபோர்ட் ராஃபில்ஸ் என்பவரால் சிங்கப்பூர் அமைக்கப்பட்டது.
 1840 - நியூசிலாந்தில் வைதாங்கி ஒப்பந்தம் பிரித்தானிய அரச பிரதிநிதியாலும், மவோரி தலைவர்களாலும் எட்டப்பட்டது.

 1863 - சிலோன் பேட்ரியட் (The Ceylon Patriot) இதழ் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டது.

 1938 - அவுஸ்திரேலியா, சிட்னியில் பொண்டாய் கடற்கரையில் எழுந்த கடல் அலைகள் 300 பேர்களைக் கொன்றது.

 1951 - நியூ ஜேர்சியில் பயணிகள் தொடருந்து ஒன்று தடம் புரண்டதில் 85 பேர் கொல்லப்பட்டனர். 500 பேருக்கு மேல் காயமடைந்தனர்.

 1952 - இரண்டாம் ஜோர்ஜின் இறப்பை அடுத்து இரண்டாம் எலிசபெத் ஐக்கிய இராச்சியம் உட்பட 7 நாடுகளுக்கு அரசியானார்.

 1958 - ஜெர்மனி, மியூனிக்கில் இடம்பெற்ற விமான விபத்தில் மான்செஸ்டர் யுனைட்டட் உதைபந்தாட்ட அணியின் 8 பேர் கொல்லப்பட்டனர்.

 1959 - டெக்சாஸ் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஜாக் கில்பி integrated circuit க்கான முதலாவது காப்புரிமத்தைப் பெற்றார்.

 1959 - கண்டம் விட்டுக் கண்டம் பாயும் முதலாவது டைட்டான் ஏவுகணை புளோரிடாவில் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது.

 1996 - அட்லாண்டிக் பெருங்கடலில் டொமினிக்கன் குடியரசுக் கரைகளில் போயிங் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 189 பேர் கொல்லப்பட்டனர்.

 2000 - டார்ஜா ஹலோனென் பின்லாந்தின் முதல் பெண் அதிபரானார்.
 2004 - மாஸ்கோவில் சுரங்க தொடருந்து நிலையம் ஒன்றில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டனர்.
 
 பிறப்புகள்

 1465 - டெல் ஃபெர்ரோ, இத்தாலியக் கணிதவியலாளர் (இ. 1526)
 1892 - வில்லியம் மேர்ஃபி, நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (இ. 1987)
 1911 - ரோனால்டு ரேகன், ஐக்கிய அமெரிக்காவின் 40வது குடியரசுத் தலைவர் (இ. 2004)
 1912 - இவா பிரான், இட்லரின் மனைவி (இ. 1945)
 1945 - பாப் மார்லி, யமேக்கா பாடகர் (இ. 1981)
 1983 - ஸ்ரீசாந்த், இந்திய கிரிக்கெட் வீரர்
 
இறப்புகள்

 1827 - சியாமா சாஸ்திரிகள், கருநாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவர் (பி. 1762)
 1931 - மோதிலால் நேரு, இந்திய அரசியற் தலைவர் பி. 1861)
 1952 - ஆறாம் ஜார்ஜ், இங்கிலாந்தின் மன்னன் (பி. 1895)
 1985 - ஜேம்ஸ் சேஸ், ஆங்கில எழுத்தாளர் (பி. 1906)
 1991 - சல்வடோர் லூரியா, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1912)
 2002 - மாக்ஸ் புருட்ஸ், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1914)
Title: Re: காலம் ஒரு பார்வை
Post by: Global Angel on July 26, 2012, 07:11:49 PM
பெப்ரவரி 7  


கிரிகோரியன் ஆண்டின் 38 ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 327 (நெட்டாண்டுகளில் 328) நாட்கள் உள்ளன.
 


 நிகழ்வுகள்
 1238 - மங்கோலியர்கள் ரஷ்யாவின் விளாடிமிர் நகரைத் தீயிட்டுக் கொளுத்தினர்.
 1807 - நெப்போலியனின் பிரெஞ்சுப் படைகள் ரஷ்யா, மற்றும் புரூசியாப் படைகளின் மீது போலந்தில் தாக்குதலைத் தொடங்கினர்.

 1812 - மிசூரி மாநிலத்தில் நியூ மாட்ரிட் என்ற இடத்தில் பெரும் நிலநடுக்கம் தாக்கியது.
 1819 - ஸ்டாம்ஃபோர்ட் ராஃபில்ஸ் சிங்கப்பூரை வில்லியம் ஃபார்க்கூஹார் என்பவரிடம் ஒப்படைத்து விட்டு சிங்கப்பூரில் இருந்து புறப்பட்டார்.

 1845 - Royal Asiatic Society இன் இலங்கைக் கிளை ஆரம்பிக்கப்பட்டது.
 1863 - நியூசிலாந்து, ஆக்லாந்து நகர்க் கரையில் ஓர்ஃபியஸ் என்ற கப்பல் மூழ்கியதில் 189 பேர் கொல்லப்பட்டனர்.

 1904 - மேரிலாந்தில் பால்ட்டிமோர் என்ற இடத்தில் பரவிய தீயினால் 1,500 கட்டடங்கள் 30 மணி நேரத்தில் தீக்கிரையாகின.

 1914 - சார்லி சாப்ளினின் முதல் திரைப்படம் Kid Auto Races at Venice வெளியானது.
 1962 - கியூபாவுடனான ஏற்றுமதி, மற்றும் இறக்குமதி தடைகளை ஐக்கிய அமெரிக்கா கொண்டு வந்தாது.

 1967 - அலபாமாவில் உணவகம் ஒன்றில் பரவிய தீயினால் 25 பேர் கொல்லப்பட்டனர்.
 1967 - தாஸ்மேனியாவில் இடம்பெற்ற காட்டுத்தீயினால் 62 பேர் கொல்லப்பட்டனர்.
 1971 - சுவிட்சர்லாந்தில் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தது.
 1974 - ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து கிரனாடா விடுதலை பெற்றது.

 1977 - சோவியத் ஒன்றியம் சோயுஸ் 24 விண்கலத்தை இரண்டு விண்வெளி வீரர்களுடன் விண்ணுக்கு ஏவியது.

 1979 - புளூட்டோ நெப்டியூனின் சுற்றுப் பாதைக்குள் நுழைந்தது.
 1986 - எயிட்டியில் 28 ஆண்டுகள் குடும்ப ஆட்சி நடத்திய அதிபர் ஜீன்-குளோட் டுவாலியர் கரிபியன் நாட்டிலிருந்து வெளியேறினார்.

 1990 - சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு தனி ஆதிக்கத்தை கைவிட இணங்கியது.

 1991 - எயிட்டியின் முதலாவது மாக்களாட்சித் தலைவராக ஜீன்-பேட்ரண்ட் ஆர்ட்டிஸ்டே பதவியேற்றார்.

 1991 - ஐரிஷ் குடியரசு இராணுவம் லண்டனில் 10 டவுனிங் வீதியில் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்ற போது அங்கு குண்டுத் தாக்குதலை நடத்தியது.
 1992 - ஐரோப்பிய ஒன்றியம் அமைப்பதற்கான மாஸ்ட்ரிக்ட் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

 1999 - உலகத்தமிழிணைய மாநாடு சென்னையில் ஆரம்பமானது.
 2005 - விடுதலைப் புலிகளின் மட்டு - அம்பாறை அரசியற்துறைப் பொறுப்பாளர் கௌசல்யன் உட்பட 4 விடுதலைப் புலிகள் இலங்கை இராணுவத்தினரின் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
 
பிறப்புகள்

 1812 - சார்ள்ஸ் டிக்கன்ஸ், ஆங்கில நாவலாசிரியர் (இ. 1870)
 1902 - தேவநேயப் பாவாணர், தமிழறிஞர் (இ. 1981)
 1905 - ஊல்ஃப் வொன் இயூலர், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1983)
 1965 - கிரிஸ் ராக், அமெரிக்க மேடைச் சிரிப்புரையாளர், நடிகர்
 1974 - ஸ்டீவ் நேஷ், கூடைப்பந்து ஆட்டக்காரர்
 
இறப்புகள்

 1919 - ஹென்றி யூலன், யாழ்ப்பாண ஆயர்.
 1937 - எலிஹூ ரூட், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1845)
 2008 - குணால், திரைப்பட நடிகர்
 
சிறப்பு நாள்

 கிரனாடா - விடுதலை நாள் (1974)
Title: Re: காலம் ஒரு பார்வை
Post by: Global Angel on July 26, 2012, 07:16:16 PM
பெப்ரவரி 8

கிரிகோரியன் ஆண்டின் 39 ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 326 (நெட்டாண்டுகளில் 327) நாட்கள் உள்ளன.
 
நிகழ்வுகள்


 1587 - இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத்தை கொலை செய்ய முயற்சித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு ஸ்கொட்லாந்து அரசி முதலாம் மேரி தூக்கிலிடப்பட்டாள்.

 1622 - இங்கிலாந்தின் முதலாம் ஜேம்ஸ் மன்னன் இங்கிலாந்தின் நாடாளுமன்றத்தைக் கலைத்தான்.

 1761 - லண்டனில் நிலநடுக்கம் பதியப்பட்டது.
 1849 - புதிய ரோமன் குடியரசு அமைக்கப்பட்டது.
 1900 - போவர் போர்: தென்னாபிரிக்காவில் லேடிஸ்மித் என்ற இடத்தில் பிரித்தானியப் படைகள் போவர்களினால் தோற்கடிக்கப்பட்டனர்.

 1904 - சீனாவின் லூஷென்கோ (முன்னர் போர்ட் ஆர்தர்) நகரை ஜப்பான் தாக்கியது.
 1924 - ஐக்கிய அமெரிக்காவில் மரண தண்டனைகளுக்கு முதற் தடவையாக நச்சு வாயுவை பயன்படுத்தும் முறை நெவாடாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

 1942 - ஜெர்மன் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றில் நேதாஜி ஜெர்மனியை விட்டுத் தெற்காசியாவுக்குப் புறப்பட்டார்.

 1956 - இலங்கையில் சிங்களம் மட்டும் சட்டம் களனி மாநாட்டில் அறிவிக்கப்பட்டது.
 1963 - கியூபாவுடனான போக்குவரத்து, பொருளாதார மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் ஐக்கிய அமெரிக்க மக்களுக்கு தடை செய்யப்பட்டதாக அதிபர் ஜோன் எஃப். கென்னடி அறிவித்தார்.

 1971 - நாஸ்டாக் பங்குச்சந்தைக் குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டது.
 1974 - 84 நாட்கள் விண்ணில் சஞ்சரித்த பின்னர் முதலாவது அமெரிக்க விண்வெளி ஆய்வுகூட ஸ்கைலாப் 4 வீரர்கள் பூமி திரும்பினர்.

 1974 - அப்பர் வோல்ட்டாவில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது.
 1989 - போர்த்துக்கலில் போயிங் 707 விமானம் ஒன்று சாண்டா மரியா மலையில் மோதியதில் 144 பேர் கொல்லப்பட்டனர்.

 2005 - இஸ்ரேலும் பாலஸ்தீனமும் போர்நிறுத்தத்திற்கு உடன்பட்டன.


பிறப்புகள்


 1700 - டானியல் பேர்னோலி, கணிதவியலாளர் (இ. 1782)
 1828 - ஜூல்ஸ் வேர்ன், பிரெஞ்சு எழுத்தாளர் (இ. 1905)
 1834 - திமீத்ரி மெண்டெலீவ், இரசிய வேதியியலாளர் (இ. 1907)
 1897 - ஜாகீர் உசேன், இந்தியாவின் மூன்றாவது குடியரசுத் தலைவர் (இ. 1969)
 1963 - மொகமட் அசாருதீன், இந்திய அணியின் முன்னாள் துடுப்பாளர்
 


இறப்புகள்

 1804 - ஜோசப் பிரீஸ்ட்லி, ஆங்கிலேய வேதியியல் அறிஞர் (பி. 1733)
 1889 - சொலமன் ஜோன்பிள்ளை, எழுத்தாளர், சிலோன் பேட்ரியட் பத்திரிகையின் ஆசிரியர்
 1975 - ரொபர்ட் ரொபின்சன், நோபல் பரிசு பெற்ற பிரித்தானிய வேதியியலாளர் (பி. 1886)
 1993 - நா. சண்முகதாசன், ஈழத்தமிழ்த் தொழிற்சங்கவாதி, அரசியல்வாதி (பி. 1920)
 2005 - அரியநாயகம் சந்திரநேரு, அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், மனித உரிமை ஆர்வலர்.
 

சிறப்பு நாள்

 பரிநிர்வாண நாள் - பௌத்த வழிபாட்டு நாள்
Title: Re: காலம் ஒரு பார்வை
Post by: Global Angel on July 26, 2012, 07:20:50 PM
பெப்ரவரி 9


 கிரிகோரியன் ஆண்டின் 40 ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 325 (நெட்டாண்டுகளில் 326) நாட்கள் உள்ளன.
 

 நிகழ்வுகள்


 1822 - ஹெயிட்டி புதிதாக அமைக்கப்பட்ட டொமினிக்கன் குடியரசை முற்றுகையிட்டது.
 1885 - முதலாவது ஜப்பானியர் ஹவாய் தீவை வந்தடைந்தனர்.
 1895 - வில்லியம் மோர்கன் volleyball ஐக் கண்டுபிடித்தார்.
 1897 - பெனின் மீது பிரித்தானியர் தாக்குதலை ஆரம்பித்தனர்.
 1900 - இலங்கையிலும், இந்தியாவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
 1900 - டேவிஸ் கோப்பை டென்னிஸ் பந்தயம் ஆரம்பிக்கப்பட்டது.
 1904 - போர்ட் ஆர்தர் சமர் ஆரம்பித்தது.
 1942 - ஐக்கிய அமெரிக்காவில் பகலொளி சேமிப்பு நேரம் அறிமுகப்படுத்தப்பட்டது.
 1962 - பொதுநலவாய அமைப்பினுள் ஜமெய்க்கா விடுதலை பெற்றது.

 1965 - வியட்நாம் போர்: ஐக்கிய அமெரிக்க தாக்குதல் படைப்பிரிவு முதற்தடவையாக தென் வியட்நாமிற்கு அனுப்பப்பட்டது.

 1969 - போயிங் 747 விமானத்தின் முதற் சோதனைப் பறப்பு மேற்கொள்ளப்பட்டது.
 1971 - கலிபோர்னியாவில் 6.4 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டது.
 1971 - அப்பல்லோ 14 விண்கலம் மூன்று அமெரிக்கர்களுடன் பூமி திரும்பியது.
 1975 - சோயூஸ் 17 விண்கலம் பூமி திரும்பியது.
 1986 - ஹேலியின் வால்மீன் சூரியனுக்கு அண்மையில் எட்டரைக் கோடி கிமீ தூரத்தில் வந்தது.

 1991 - லித்துவேனியாவில் விடுதலைக்கு ஆதரவாக மக்கள் வாக்களித்தார்கள்.
 1996 - ஐரிஷ் குடியரசு இராணுவம் தனது 18 மாத யுத்த நிறுத்த உடன்பாட்டினை முறித்துக்கொண்ட சில மணி நேரத்தில் லண்டனில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இருவர் கொல்லப்பட்டனர்.
 
பிறப்புகள்

 1773 - வில்லியம் ஹென்றி ஹாரிசன், ஐக்கிய அமெரிக்காவின் 9வது குடியரசுத் தலைவர் (இ. 1841)
 1910 - ஜாக் மொனோட், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1976)
 1940 - ஜே. எம். கோட்ஸி, நோபல் பரிசு பெற்ற தென்னாபிரிக்க எழுத்தாளர்
 1943 - ஜோசப் ஸ்டிக்லிட்ஸ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர்
 1970 - கிளென் மெக்ரா, அவுஸ்திரேலியத் துடுப்பாட்டக்காரர்
 1979 - சாங் சீயீ, சீனத் திரைப்பட நடிகை
 
இறப்புகள்

 1881 - பியோதர் தஸ்தயெவ்ஸ்கி, இரசிய நாவலாசிரியர் (பி. 1821)
 1977 - ஜி. ஜி. பொன்னம்பலம், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவர் (பி. 1901)
 1979 - டெனிஸ் காபோர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1900)
 1984 - யூரி அந்திரோபொவ், சோவியத் அதிபர் (பி. 1914)
 1994 - ஹ்வார்ட் டெமின், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1934)
 2001 - ஹேர்பேர்ட் சைமன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர் (பி. 1916)
Title: Re: காலம் ஒரு பார்வை
Post by: Global Angel on July 26, 2012, 07:25:23 PM
பெப்ரவரி 10

 கிரிகோரியன் ஆண்டின் 41 ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 324 (நெட்டாண்டுகளில் 325) நாட்கள் உள்ளன.
 


நிகழ்வுகள்

 1355 - இங்கிலாந்து, ஒக்ஸ்போர்டில் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் உள்ளூர் மக்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலவரத்தில் 63 மாணவர்களும், 30 பொது மக்களும் கொல்லப்பட்டனர்.

 1763 - பிரான்ஸ் கியூபெக் மாநிலத்தை ஐக்கிய இராச்சியத்திற்கு அளித்தது.

 1798 - லூயி அலெக்சாண்டர் பேர்த்தியர் ரோமைக் கைப்பற்றி அதனை பெப்ரவரி 15 இல் ரோமன் குடியரசாக அறிவித்தான்.

 1815 - கண்டி இராச்சியத்தைக் கைப்பற்றும் நோக்கில் பிரித்தானியர் கண்டியினுள் நுழைந்தனர்.

 1846 - பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கும் பஞ்சாபின் சீக்கியருக்கும் இடையில் இடம்பெற்ற போரில் பிரித்தானியர் வெற்றி பெற்றனர்.

 1863 - அலன்சன் கிரென் தீயணைக்கும் கருவியின் காப்புரிமம் பெற்றார்.
 1870 - கிறிஸ்தவப் பெண்கள் இளையோர் அமைப்பு (YWCA) அமைக்கப்பட்டது (நியூயோர்க் நகரம்).

 1897 - மடகஸ்காரில் மதச் சுதந்திரம் அறிவிக்கப்பட்டது.
 1914 - யாழ்ப்பாணத்தின் அரச அதிபராக சார்ள்ஸ் கம்பர்லாண்ட் நியமிக்கப்பட்டார்.
 1931 - புது டில்லி இந்தியாவின் தலைநகராக்கப்பட்டது.

 1954 - வியட்நாம் போர்: அமெரிக்க அதிபர் டுவைட் ஐசன்ஹோவர் வியட்நாம் மீது ஐக்கிய அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என எச்சரித்தார்.

 1964 - ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் கரையில் HMAS மெல்பேர்ன் என்ற விமானந்தாங்கிக் கப்பலும் HMAS வொயேஜர் என்ற காடற்படைக் கப்பலும் மோதிக் கொண்டதில் 82 பேர் கொல்லப்பட்டனர்.

 1969 - தமிழ் நாட்டின் முதலமைச்சராக மு. கருணாநிதி தெரிவு செய்யப்பட்டார்.
 1991 - வன்னி மீதான இலங்கை இராணுவத்தினரின் வன்னி விக்கிரம படையெடுப்பு விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டதுடன் உலங்குவானூர்தி ஒன்றும் சுட்டு வீழ்த்தப்பட்டது.

 1996 - சதுரங்கக் கணினி "டீப் புளூ" உலக முதற்தரவீரர் காரி காஸ்பரோவை வென்றது.
 
பிறப்புகள்
 1887 - ஜோன் என்டேர்ஸ், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1985)
 1890 - போரிஸ் பாஸ்டர்நாக், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1960)
 1902 - வால்ட்டர் பிராட்டன், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1987)
 1910 - ஜோர்ஜஸ் பயர், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1969)
 
இறப்புகள்

 1837 - அலெக்சான்டர் புஷ்கின், ரஷ்ய எழுத்தாளர், கவிஞர் (பி. 1799)
 1912 - ஜோசப் லிஸ்டர், பிரித்தானிய அறிவியலாளர் (பி. 1827)
 1918 - ஏர்னெஸ்டோ மொனெட்டா, நோபல் பரிசு பெற்ற இத்தாலியர் (பி. 1833)
 1923 - வில்ஹெம் ரொண்ட்ஜென், நோபல் பரிசு பெற்ற ஜேர்மானியர் (பி. 1845)