Author Topic: 2015 ஆங்கிலப் புத்தாண்டு பொதுப் பலன்கள்  (Read 5343 times)

Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
2015 ஆங்கிலப் புத்தாண்டு பொதுப் பலன்கள்

க.ப.வித்யாதரன்




வியாழக்கிழமை வளர்பிறை ஏகாதசி திதி பரணி நட்சத்திரம் மேஷ ராசி கன்னி லக்னத்தில் சித்தி நாம யோகம், பத்தரை நாமகரணத்தில், நவாம்சத்தில் ரிஷப லக்னத்தில், நேத்திரம், ஜீவனம் நிறைந்த சித்தயோகத்தில் நள்ளிரவு 12 மணிக்கு 01.01.2015ம் ஆண்டு பிறக்கிறது. எண் ஜோதிடப்படி இந்த ஆண்டின் கூட்டுத் தொகை (2+0+1+5) எட்டாக வருவதால் உலகெங்கும் இயற்கை சீற்றங்கள் அதிகரிக்கும். எரிமலைகள் வெடிக்கும். கடல் கொந்தளிக்கும், சாலை விபத்துகள் அதிகரிக்கும். மக்களிடையே பழிவாங்கும் குணமும், குறுக்கு வழியில் முன்னேறும் போக்கும் அதிகரிக்கும்.
 
புயல், வெள்ளப் பெருக்கால் விளை நிலங்கள் சேதமடையும். சுரங்கங்கள், காற்றாலைகள், இரும்புத் தொழிற்சாலைகள் பாதிப்படையும். நகரத்தை காட்டிலும் நகரத்தை ஒட்டியிருக்கும் பகுதிகள் நவீனமாகும். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, நிலக்கரி, இரும்பு போன்ற கனிம, கரிம பொருட்களின் விலை குறையும். பாலியல் சம்பந்தமான புதிய நோய்கள் உண்டாகும். மின்வெட்டை சரி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படும். காற்றாலை மற்றும் சோலார் வகைகளால் மின்உற்பத்தி அதிகரிக்கும். அந்தமான், இந்தோனேஷியா, இந்தியாவில் கடல் சீற்றம் காணப்படும்.
 
புதனின் அம்சமான கன்னி லக்னத்தில் இந்த வருடம் பிறப்பதனால் பாலைவனம் சோலவனமாகும். அதேநேர சோலைகள் பாலையாகவும் பாதைகளாகவும் மாறும். லக்னாதிபதி புதன் குருவின் பார்வை பெறுவதால் மக்களின் அடிப்படை வசதிகள் பெருகும். பாலியல் மற்றும் சுகாதார விழிப்புணர்வு அதிகரிக்கும். பள்ளிப் பாடத் திட்டங்கள் மாறும். பாரத நாட்டிற்கு பெருமை சேர்த்தவர்களின் பெருமைகள் பாடத் திட்டங்களில் இடம்பெறும். கணிதம், அறிவியல் பாடங்கள் நவீனமாகும். புதனோடு சுக்கிரன் இருப்பதால் தமிழ் கவிதைகள், அறநெறி நூல்கள், பக்தி இலக்கியங்கள் நாடெங்கும் உலகெங்கும் பல மொழிகளில் மொழிபெயர்ப்பாகி பரவும். வருடம் பிறக்கும் நேரத்தில் சுக்கிரனும், புதனும் ஆடம்பர வீடான மகரத்தில் சேர்ந்திருப்பதால் மக்கள் மனதில் அலங்காரச் சிந்தனை அதிகரிக்கும்.

குறிப்பாக சமையல் அறை, படுக்கை அறை, குளியலறை போன்றவற்றின் உள் அரங்க அலங்காரத்திற்காக அதிகம் செலவழிப்பார்கள். லக்னத்திற்கு மூன்றாம் வீட்டில் சனி வலுத்திருக்கும் நேரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால் நான்கு வழி, ஆறு வழிச் சாலைகள் புதியதாக அமைக்கப்படும். ரயில்வே துறை அனைத்து பாதைகளையும் அகல ரயில் பாதைகளாக மாற்றும். ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படும்.

போலி மருந்துகள் மற்றும் போலி மருத்துவக் கூடங்கள் கண்டறியப்பட்டு அழிக்கப்படும். போலி மருத்துவர்கள் தண்டனைக்குள்ளாவார்கள். பணப் பரிமாற்ற அட்டைகளின் பயன்பாடு அதிகரிக்கும். மக்கள் சிற்றின்பத்தில் அதிக நாட்டம் கொள்வார்கள். ‘வாழ்க்கையை அனுபவிப்பதற்கே! நாளையைப் பற்றி கவலைப்படாதே! இன்று சந்தோஷமாக இரு’ என்கிற மனோநிலை அதிகரிக்கும். 
 
ஜூலை மாதம் முதல் குரு சிம்ம ராசியில் வந்தமர்வதால் சில அரசியல் கட்சிகளுக்கு மதிப்பில்லாமல் போகும். புதிய கட்சிகளும், புதிய கூட்டணிகளும் உதயமாகும். ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள போராட வேண்டிய சூழல் வரும். எதிர்கட்சிகள் ஒன்று சேரும். சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் மக்களிடையே வீடு, மனை, வாகனம் வாங்க வேண்டுமென்ற எண்ணம் வரும். எதிலும் பெண்களின் ஆதிக்கம் பெருகும். கம்ப்யூட்டர், கார், டி.வி., ஃபிரிட்ஜ், ஏ.சி மற்றும் சமையலறை சாதனங்களின் விலை குறையும்.

சினிமாத்துறை செழிக்கும். யதார்த்தமான கதை அமைப்புள்ள படங்கள் விருதுகள் பெறும். உலகத் திரைப்பட துறையில் தமிழ்மொழியின் தரமான படங்கள் அதிகரிக்கும். சிலம்பாட்டம், தற்காப்புக் கலைகள் மீண்டும் பிரபலமடையும். புதுமுகங்கள் பிரபலமடைவார்கள். ஆடியோ, வீடியோ சாதனங்களின் விலை குறையும். பரம்பரை பணக்காரர்களுக்கு சோதனைகள் உண்டாகும். கம்ப்யூட்டர் மற்றும் செல்போன் சேவைகளை பாதிக்கும் நவீன வைரஸ்கள், கதிர்வீச்சுகள் பரவும்.

நவீன வசதிகளுடன் கூடிய அடுக்ககங்கள், வாணிபக் கூடங்கள் அதிகம் எழும்பும். பால் விலை உயரும். வெள்ளி விலை உயரும். அழகு நிலையங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், மனமகிழ் மன்றங்கள் அதிகமாகும். புதிய வானொலி, தொலைக்காட்சி சேவைகள் மற்றும் மொபைல் போன் சேவைகளும் அதிகரிக்கும்.
 
குரு உச்சம் பெற்றிருக்கும்போது இந்த ஆண்டு பிறப்பதால் பைனான்ஸ், சி.ஏ., தேசிய அளவிலான சட்டக் கல்லூரியின் சட்டப் படிப்புகள் பிரபலமடையும். ஃபேஷன் டெக்னாலஜி, கேட்டரிங் டெக்னாலஜி, ஜுவல் டிசைனிங், மாடலிங் துறைகளில் வேலை வாய்ப்பு அதிகரிக்கும். மாணவர்களிடையே எழுத்துத் திறமை, பேச்சுத் திறமை குறையும். மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு சமூகத்தில் பெரிய அங்கீகாரம் கிடைக்கும்.

சிலர் பெரிய பதவிகளிலும் அமர்வார்கள். யோகா, தியானம் போன்றவற்றின் மீது மக்களுக்கு நாட்டம் அதிகரிக்கும். மருந்துகளில் டானிக் போன்றவற்றின் பயன்பாடு குறைந்து கஷாயம், லேகியம், சூரணம் போன்றவற்றின் பயன்பாடுகள் பிரபலமாகும்.
 
இந்தியாவின் மூலிகை மருத்துவத்தின் பக்கம் உலக நாடுகளின் பார்வை திரும்பும். வீடுகளின் விலை குறையும். மலைப் பிரதேசங்களிலுள்ள சுற்றுலா தலங்கள் பிரபலமடையும். சுற்றுலாத்துறையை விரிவுபடுத்த மத்திய மாநில அரசுகள் அதிக நிதியை ஒதுக்கும். 11.2.2015 முதல் 16.7.2015 வரை மற்றும் 5.11.2015 முதல் டிசம்பர் முடிய உள்ள காலகட்டங்களில் வன்முறைகள், தீவிரவாதத் தாக்குதல்கள் மற்றும் இயற்கை சீற்றங்கள் அதிகரிக்கும்.

சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்ட செல்வாக்குமிக்க முக்கியஸ்தர்கள் தண்டனைக்குள்ளாவார்கள். சனி ரிஷபத்தை பார்ப்பதால் உதடு, காது, கண் மற்றும் மூளைக் குறைபாடுள்ள குழந்தைப் பிறப்பு அதிகரிக்கும். மத்திம வயதில் இருப்பவர்கள் வேலையிழப்பார்கள். அதிகம் படித்தவர்களுக்கு உரிய வேலை கிடைக்காமல் போகும். ஆண் குழந்தை பிறப்பு அதிகரிக்கும். தாயகம் திரும்புபவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயரும். 
 
ஊழ்வினை கிரகமான சனியின் ஆதிக்கத்தில் இந்தாண்டு பிறப்பதால் எந்த உணவை சாப்பிடுகிறோமோ அதற்கான தாதுக்கள் நம் உடம்பில் சேருவதைப்போல நாம் என்ன நினைக்கிறோமோ எந்த செயலைச் செய்கிறோமோ அதற்குத் தகுந்தாற்போல் நல்லதும், தீயதும் நம்மை நாடிவரும். இதை உணர்ந்து மனசாட்சியோடு செயல்படுவது நல்லது. காவல் தெய்வங்கள் மற்றும் மகான்களின் ஜீவ சமாதிகளை அடிக்கடி சென்று தரிசிப்பது நல்லது.