Author Topic: நெஞ்சிலே ஓர் கனல்  (Read 4708 times)

Offline AgNi

  • Full Member
  • *
  • Posts: 141
  • Total likes: 655
  • Karma: +0/-0
  • பெண்மை வெல்க !
Re: நெஞ்சிலே ஓர் கனல்
« Reply #15 on: November 09, 2020, 10:09:23 PM »


கனல் :4


கையில் காபியுடன் அறைக்குள்  வந்த அகிலா பதறி போய் கேட்டாள்."என்ன ஆச்சு மாலினி " என்று மிரண்டு இருந்த மாலினியின் முகத்தை துடைத்து விட்டவாறு  ஏந்தினாள்.
முத்து முத்தாக வியர்வை துளியை துடைத்து சற்று ஆசுவாச படுத்திகொண்டு , " ஒன்னும் இல்லம்மா..என்று முணுமுணுத்து காபியை வாங்கி குடித்தாள்.
        " என்னடி அந்த கத்து கத்தினே? என்று கேக்க , இல்லம்மா ..ஒரு doubtu ..என்று இழுத்தாள். என்ன  என்பது போல அகிலா பார்க்க ...கொஞ்சம் தயங்கியவாறே ," எனக்கு ஏன் மாலினி னு பேரு வெச்சீங்க ? என்று கேட்டாள் .
               அகிலா பெருமூச்சுஎறிந்து ,' அது ஒரு பெரிய  கதை , " என்று ஆரம்பித்தாள் . உடனே எங்கிருந்தோ குதித்தவாறே தாரிணி ," ஐக்...கத ..என்று மாலினியின் படுக்கையில் அமர்ந்தாள் .
அகிலா ,'ஆமாடி நீயும் கேட்டுக்கோ ...இதெல்லாம்  நம்ம பரம்பரை கதை ..உனக்குன்னு தனியா சொல்லமுடியாது .." என்று பீடிகை போட,, லேசாக வியர்த்தாள் மாலினி .
அகிலா சொல்ல ஆரம்பித்தாள் .

" ஒரு முன்னூறு வருஷத்துக்கு முந்தி  நாக கோட்டை ஜமீன்லே ருத்ரஅய்யா னு ஒரு ஜமீன்தார் இருந்தார் .அவர் பொண்ணு பேரு ஸ்வர்ணமாலினி . பேரழகி !அறிவாளி ..இசை , நாட்டியம் , ஓவியம், கத்தி வீச்சு , குதிரை ஏற்றம்னு பல கலைகள் கத்து கிட்டு ஒரு  இளவரசி போல வாழ்ந்து  வந்தா.
           அவளுக்கு கல்யாண வயசு வந்ததும் அவளுக்கு ஏத்த மாப்பிள்ளையை தேடினர்  ஜமீன்தார் . யாரும் அவளுக்கு பொருத்தமா அமையல ..அழகும் குணமும் , திறமையும் உள்ள அவர் பொண்ணுக்கு நிகரா உலகத்தில மாப்பிள்ளையே இல்லனு கர்வமா சொல்லிட்டு இருந்தார் . 
              அப்போது பக்கத்து பாளயம்ல ஒரு பண்டிதர் இருந்தார் ,,அவர் பேரு சிவநேசர் ..அவர் மகன் விக்ரமன் ஒரு படித்த மேதாவி .அப்பாக்கு தப்பாம எல்லா நூல்களை படிச்சு அதைவிட கலைகளிலும் வல்லவனா    இருந்தான் .

           ஒரு நாள் குதிரை ஏற்றம் பயின்று கொண்டிருந்த ஸ்வர்ண மாலினி , அதன் கடிவாளத்தை பிடித்து இழுக்க ,, குதிரைக்கு என்ன ஆயிற்றோ ...வேகமெடுத்து ஓட துவங்கியது .அதன் வேகம் காற்றை போல பறக்க ..முதலில் அதன் வேகத்தில் மகிழ்ந்த  மாலினி வேகம்கூடகூடஆகாயத்தில் பறப்பது போல இருந்தாலும் பேராபத்தில் சிக்கி கொண்டது அப்போதுதான் புரிந்தது ...
               அது ஒரு மலை பகுதி ..குதிரை கண்ணை மூடிக்கொண்டு நாலு கால் பாய்ச்சலில் பறக்க விரைவில் அது அந்த மலைமுகத்தின் நுனியில் வந்து விட ..மிரண்டு போனாள் ஸ்வர்ணா. "காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் " என்று கதறியவாறு கண்ணை மூடி கொள்ள ...மலையின் உச்சியில் இருந்து விழ  போகும் தருணம் யாரோ குதிரையை பிடித்து நிறுத்தினர் போல  சட் என நின்றது ..பயந்து கொண்டே கண்களை மெல்ல திறந்து பார்த்தவள் பிரமித்து போனாள்  என்றுதான் சொல்லவேண்டும் .
               அங்கே  அழகே உருவாய் ஒரு ஆடவன் புன்னகைத்தவாறே , " என்ன அழகியே ..பயந்து விடீர்களா ? ஒன்றுமில்லை ..குதிரை உங்கள் அழகை கண்டு தான் மிரண்டு ஓடி இருக்க வேண்டும் ..உங்களை அப்டியே சொர்க்கத்திற்கு கடத்தி போக திட்டமோ  ? என்னவோ ? " என்று கல கல என சிரித்தவாறு அவள் இறங்க உதவி செய்தான் விக்ரமன் .
              என்று அகிலா தொடர்ந்து கொண்டு இருக்க , " மாலினி பிரம்மை பிடித்தவள் ,போல "விக்ரம் விக்ரம்  "என்று முனகியவாறு  மலங்க மலங்க விழித்தாள் .
சட் என்று  மறுபடியும் , "அம்மா " என்று கத்தியவள் மயங்கி விழுந்தாள்.
அகிலாவும் தாரிணி யம் பதறி தூக்கினர் . "என்னம்மா  ஆச்சு " என்று அகிலா பதட்ட பட ,,,தாரிணி முறைத்தாள் ." இப்போ எதுக்கு எங்களுக்கு பூச்சாண்டி கதை எல்லாம் சொல்லி பயமுறுத்துறே ..? என்க ..அகிலா , " அவள்தாண்டி   கேட்டாள் " என்று தாழ்ந்த குரலில் சொல்ல .."ஆமா அவ கேட்டாளாம் ..இவங்க கத சொல்ராங்களாம்..." என்று தண்ணீர் எடுத்து அவள் முகத்தில் தெளித்து எழுப்ப முயற்சித்தார்கள்   அம்மாவும் தங்கையும் .   


Offline இணையத்தமிழன்

Re: நெஞ்சிலே ஓர் கனல்
« Reply #16 on: November 14, 2020, 12:36:26 PM »
Wow super ma kathai 😅

Unmaiyaana Anbirkku

Yemaattra Theriyaadhu

Yemaara Mattumey

Theriyum….


Offline AgNi

  • Full Member
  • *
  • Posts: 141
  • Total likes: 655
  • Karma: +0/-0
  • பெண்மை வெல்க !
Re: நெஞ்சிலே ஓர் கனல்
« Reply #17 on: December 02, 2020, 08:36:45 AM »



கனல் :5

மாலினி அந்த அறையை சுற்றுமுற்றும் பார்த்தாள். அவளை தூங்க வைத்து விட்டு அகிலாவும் தாரிணியும் சென்று விட்டுருந்தனர்.அன்றைக்கு நடந்ததை முழுதும் மனதில் யோசித்து ஆசை போட்டாள்.அன்று காலைதான் அவனை
அந்த விக்ரமனை சந்தித்தாள் முதல் முதலாக .ஆனால் லிப்ட் அருகில்  அவனை பார்த்தபோது எதோ மூன்றாம் மனிதன் போல நினைக்காமல் ..சரளமாக தெறிந்தவனை போல வம்பு பேசினாள்.
அவனின் அலுவலகத்தில் நுழைந்த போதுகூட எதோ மனதில் ஒரு காட்சி விரிந்தனவே  !..பெரிய ராஜானு நினைப்பு  என்று அவனின் ராஜ நடையை நையாண்டித்தனமாக கேலி செய்தது நினைவில் தோன்றியது !
உள்ளே இன்டெர்வியூவிலும் இருவர் பேச்சும் ஒரு முதலாளி வேலை கொடுப்பது போல இல்லையே .ஏற்கனவே முடிவு செய்தது போல அல்லவே பேசினான் .கடைசியில் அவள் கதவுஅருகே சென்றதும்..அவன் குரல் நன்றாக கேட்டதே  ஸ்வர்ண மாலினியா..? அவள் பேர் மாலினி தானே ? இப்பொது அம்மாவால் அம்மா கூறிய கதையில் அவள் பெயர் ஸ்வர்ணமாலினி என்றுதானே சொன்னாள்.

சிஃனலில் பிச்சைக்காரன் ஏன் அவளை அதே வள்ளல்குணம் என்று சொன்னான் ?
பர பர என்று நெற்றி தேய்த்து கொண்டாள் !தலையை வலிப்பது போல ..எழ முற்படும் போதும் ..அதே குரல் காது அருகில் கேட்டது ..
"என்ன ஸ்வர்ண ..என்னை மறந்து விட்டாயா?" என்று விக்ரமின் குரல் போலவே ஒலித்தது .     
பயந்து குரல் தழுக்க கேட்டால்..."நீங்க யாரு " என்று கேட்டாள்.
"என்ன ஸ்வர்ண ..ஜென்ம ஜென்மாக தொடரும் நம் காதலை நீ இன்னும் அறியாமல் இருக்கிறாயே ?" என்று கிசுகிசுப்பான குரல் கேட்க ..திடுக்கிட்டு போனாள் அவள் ." என்னது ஜென்ம ஜென்மகவா ? இதென்ன புது கதை ? என்று கேட்க .."ஆம் ஸ்வர்ணா ...நம் கதையை  கேட்க ஆவலாக உள்ளதா ? என்று கேட்க, தலை ஆட்டினாள் மாலினி .
"அப்டி என்றால் உன் பூர்விக கதை கேட்க ..நாளை தயாராக இரு ..இப்போது உறக்கம் கொள்" என்று அந்த குரல் நிறுத்தி விட்டது .
அதன் பிறகு அவளுக்கு எப்படி உறக்கம் வரும் ? என்னை சுற்றி என்ன நடக்கிறது என்று குழம்பி   எப்போது அடுத்த நாள் வரும் என்று மாலினி தவித்து போனாள்  .     

Offline இணையத்தமிழன்

Re: நெஞ்சிலே ஓர் கனல்
« Reply #18 on: December 02, 2020, 01:37:06 PM »
aik kathaikula kathaiya super im waiting

Unmaiyaana Anbirkku

Yemaattra Theriyaadhu

Yemaara Mattumey

Theriyum….