Author Topic: புதையலாக இல்லாமல்  (Read 837 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
புதையலாக இல்லாமல்
« on: August 12, 2011, 03:13:45 PM »


நீ இல்லாததால்
வாழ்க்கையும்
நீ இருப்பதால்
நிம்மதியும்
தொலைத்து
உன்னையே தேடி
திரிகிறோம் தினமும்...

உனக்கு பிடித்த இடம் எதுவோ??
பஞ்சனைக்கு கீழும்
பட்டுவஸ்த்தர போர்வையுமா??
ஏழையின் சுருக்கு பையில்
என்றாவது போகும்
திருநாளாய்
வந்து போகிறாய்...

உன்னை பதுக்க
நினைக்க வில்லை
எங்களை பாதுகாக்க வா
இருக்கும் இடத்தில்
புதையலாக இல்லாமல்
இல்லாத இடத்தில
தீபமாய் ஒளியேற்ற வா...

கருப்பாய் மாறி
குப்பைக்கு செல்லாமல்
உழைத்து சிவந்த கைகளுக்கு
உன்னதமாய்..
ஒரு வேலை உணவேனும்
உன் தயவால் உண்ணும்
வரம் தந்து
துயர் நீக்க வா...

ஏழை குடிசைகளிலும்
உனக்காக இரும்பு பெட்டி
துயரத்தோடு துருபிடித்து
துடித்து கொண்டிருக்கிறது


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: புதையலாக இல்லாமல்
« Reply #1 on: August 12, 2011, 03:17:10 PM »
ஏழை குடிசைகளிலும்
உனக்காக இரும்பு பெட்டி
துயரத்தோடு துருபிடித்து
துடித்து கொண்டிருக்கிறது
Quote

காசு இல்லாதவன் வாழ்வு கஷ்டம் ... நல்ல கவிதை  ;)

                    

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: புதையலாக இல்லாமல்
« Reply #2 on: August 12, 2011, 03:23:09 PM »
நன்றிகள்  ;) ;) ;)


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்