Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 321  (Read 2363 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 321

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


Offline IniYa

 • Full Member
 • *
 • Posts: 172
 • Total likes: 388
 • Karma: +0/-0
 • Gender: Female
 • hi i am Just New to this forum
விளையாட வினையின்றி நடந்த நம்
வழிநடை துரத்தில் காயம் சோகம் ஏமாற்றம்
வித்தாகும் வாழ்வின் நறுமணம் என் அன்பே!


நேசிக்க நேரம் இருந்த நொடி
பொழுதை அணு அணுவாக ரசித்தேன்
புலரியில் உன் மோனை என் அன்பே!


நம்மை மறந்த சந்தோஷ காலகட்டத்திலும்
நீ தொடர்ந்தாய்  கண் முன்னே நீ விழும்
பார்வையில் நான் எழிலானேன் என் அன்பே!


வட்டத்தின் அளவை சரிப்பார்க்கும் கணக்கெடுப்பு
வாழ்வின் மூன்று காலங்களை உருக்கி
வளைவு பாதைக்கு பழகிச் செல்வோம் என் அன்பே!


வேண்டாமென்று தள்ளிய நெருக்கம்
வேண்டுமென்றே நம்மை பிணைத்து உருக்குலைய
செய்யும் நம் உடலின் அணுக்கள் என் அன்பே!


அணைப்பின் குணமென்பது எத்தனை கடலின்
ஆழத்தை காட்டிலும் வலிமையாக
நம்மோடு பயணித்து உள்ளடங்கிய உறவு என் அன்பே!


விதியின் பிடியில் இருந்து
தத்தளிக்கும் உயிரில் தித்திக்கும் உறவாக
நீங்கா என் நினைவில் சீரஞ்சீவியே என் அன்பே!
« Last Edit: September 18, 2023, 04:46:31 PM by IniYa »

Offline Lakshya

பார்த்தநொடியே கண்களுக்குள் ஓவியமானாய் காத்திருக்கும் விழிகளும் உன்னுடன் சேர்ந்து காவியம் பாட!!!

வேண்டாமல் கிடைத்த வரம் நீ.
இனிமேல் வேண்டினாலும்
கிடைப்பதில்லை, உன் போல் ஒரு வரம்....

தொலைதூரம்
நீ போனால்
உன்னை தேடி
வெகுதூரம் பயணிக்குறது
உள்ளம்...😍😍மனதோடு
நீ
மழையோடு
நான்
நனைகின்றது
நம் காதல்...!

கற்பனையிலிருந்தவன்
கண்ணெதிரே
தோன்றவும்
வியந்து போனது மனம்!!!
நாம் நேசிப்பவர்களோடு பேசிக்கொண்டிருக்க
காரணம் தேவை இல்லை
காதல் இருந்தால் போதும் என்பதை நீ உணர வேண்டும்...!!

நொடிக்கு ஒரு முறை தான் இதயம் துடிக்கும்.
அந்த நொடிக்குள் பல முறை துடித்தாள் காதல் நிச்சயம்
இரு இதயம் ஒன்றாக பயணிப்பது தானே காதல் என்று நாம் அறிந்தும்...

ஒரு நாள் உன்னை பார்க்க வருடம் முழுவதும் காத்திருப்பேன் நான்...!!!💞💞
« Last Edit: September 18, 2023, 10:45:25 PM by Lakshya »

Offline Madhurangi

 • Full Member
 • *
 • Posts: 172
 • Total likes: 461
 • Karma: +0/-0
 • Gender: Female
 • hi i am Just New to this forum
இரக்கமற்று காதல் கணை தொடுக்க காத்திருக்கும் காதல் தேவனுக்கு ஒரு கடிதம்...

நீயும் பல நாள் காத்திருக்கிறாய் ..
காதலன் என்றொருவனை நான் கரம் பிடிப்பேன்..
என் சுதந்திரத்தை திருமணம் எனும் பெயரில் சிறை அடைப்பேன்..
என் எதிர்கால கனவு பட்சிகளின் சிறகொடிப்பேன்..
என்று

பார்த்ததும் கண்களால் திருமண செய்யும் கந்தர்வ திருமண  முறையும் வேண்டாம்..
வரதட்சணை எனும் ஏலமிட்டு உறவினர் முன் கரம் பிடிக்கும் நிச்சயிக்கப்பட்ட திருமணமும் வேண்டாம்..
தொலைபேசி வழி காதல் வளர்த்து பதிவு பணிமனையில்  முடியும் பதிவு திருமணமும் வேண்டாம்..
கட்டுப்பாடுகள் எதுவுமற்று நினைத்தவுடன் கூடி நினைத்தவுடன் பிரியும் லிவிங் டுகெதர் முறைமைகளும் வேண்டாம்..

நானாக சிக்கி கொள்ளவும் மாட்டேன்..
பொன் விலங்காயினும் என் கரங்களுக்கு நானாக பூட்டி கொள்ளவும் மாட்டேன்..
புரிதலின்றிய காதல் முறைகளுக்கு உடன் படவும் மாட்டேன்..
தனித்திருத்தலின் இனபதை சுவைத்தபின் அதை விட்டுக்கொடுக்கவும் மாட்டேன்..


இப்படிக்கு
சம்பிரதாயங்களுக்காக கனவுகளை கை விட விரும்பாத ஒரு சுதந்திர பிரியை..


பின் குறிப்பு :
யாவும் கற்பனை மாத்திரமே
« Last Edit: September 18, 2023, 05:24:49 PM by Madhurangi »

Offline Sun FloweR

 • Full Member
 • *
 • Posts: 139
 • Total likes: 841
 • Karma: +0/-0
 • hi i am Just New to this forum
காதல் பண்ணாதீங்க
காதலே பண்ணாதீங்க..
ஆசையை தூண்டிவிட்டு
ஆபத்தில் சிக்கவைக்கும்
பொல்லாத யெளவன காலம் இது..

காதல் வேண்டாமுங்க
காதலே வேண்டாமுங்க...
நிம்மதியை தொலைக்க வைத்து
பைத்தியமாய் மாற வைக்கும்
துள்ளல் நிறைந்த பால்ய காலம் இது..

காதல் தேவையில்லை
காதலே தேவையில்லை...
காதல் என்ற பெயரில் ஆரம்பித்து காமத்தில் முடிய வைக்கும் கள்ளம் நிறைந்த வசீகர காலம் இது..

காதல் போய்த்தொலை..
காதலே போய்த் தொலை..
இமயத்தை வளைக்கும் இளமைபருவம் இது..
வானளாவ வாகை சூடும் வாலிப காலம் இது...

தன்னைத் தானே குழிக்குள் தள்ளிவிடும் தகாத காதல் எதற்கு?
சாதனைகள் படைத்திடும் காலத்தில் வேதனைகள் சுமக்க வைக்கும் கண்ணீர் காதல் எதற்கு?

வாழ்வில் வெற்றி பெறும் வழி அறிந்தவர்கள் நாங்கள் ..
உலகம் வியக்கும்படி முன்னேற்ற பாதையில் முன்னேறும் 21ம் நூற்றாண்டு இளைஞர்கள் நாங்கள் ..
வையகமே அன்னாந்து பார்க்கும் நவயுக யுவதிகள் நாங்கள் ..

Offline mandakasayam

 • Full Member
 • *
 • Posts: 205
 • Total likes: 425
 • Karma: +0/-0
 • hi i am Just New to this forum
இயற்கையமைத்த இதய கதவுகள் இணைய நினைக்கிறது இன்னல்கள் பல சந்தித்தாலும் அந்த இமயம் போல நம் காதல் வானுயரும்

அளவில்லா மகிழ்ச்சி  என் மனதில் ஏதோ மாற்றம் உன்னுடன் பகிர்ந்த அன்பு வார்த்தைகளை கண்டு செல்ல சண்டைகள் இட்டு குழந்தைகளாகவே மாறினோம் காதலின் தொடக்கம் அது தானோ!!!!

உன்னுடன் செலவிடும் நேரம் சில நிமிடங்கள் என்றாலும் உன் அன்பு எனக்கு பலயுகம்
நீ பார்க்கும் தூரத்தில்  இல்லையெனில் நொடிக்கு ஒரு முறை நெடிந்து போகிறேன்!!!

இருளிலும் துளிர்த்துவிடும் உனதுவிழிகள்
அதை என்நேரமும் காண துடிக்கும் எனது விழி
இதன் கோர்வையாக விவரிக்கும்  முக பாவனைகளும் புன்னைகைகளும் மிளிரும் பிரபஞ்சம்!!!!!

விடைபெற நினக்கிறேன் அதை நினைத்தும் பார்க்கமுடியாமல் நம் நினைவுகள் தொடர் கதையாக தொடர்கிறது  காதல் தேவதையின் கரங்களால் கைதிகிவிடுவோம்!!!!
ஆளும் அன்புக்கு ஆயுள் அதிகம்

 

இவண்: மண்டகசாயம்

Offline TiNu

 • FTC Team
 • Hero Member
 • ***
 • Posts: 675
 • Total likes: 1864
 • Karma: +0/-0
 • hi i am Just New to this forum
நின்று பேச காலம் போதவில்லை..
மென்னு தின்ன நேரம் இல்லை...
அவசரமான இந்த உலகிலே..

பொன்னாத்தாவின்.. பொன்மடியில்
தன் மகளின் பச்சிளம் இளம் தளிர்கள்
தவழ்ந்து விளையாட நேரமில்லை..
 
அப்பத்தாவின் கைமருந்தினை ..
 தன் மகனின் சின்னசிறு சிசுவிற்கு 
 புகட்டி வளர்த்திட நேரமில்லை...

காதல் கணவனுக்கு கனிவுடன்
அன்போடு ஆக்கிய சோற்றை
பாசத்தோடு பரிமாற நேரமில்லை..

கட்டிய மனைவியை கைபிடித்து..
அவள் மனம் மகிழ்ந்திட காதல்
மொழி பேசிட நேரமில்லை..

உறவுகள் எல்லாம்.. காலத்தின்
கைப்பிடியில் சிக்கி சிறைப்பட..
யாருக்கும்.. எதற்கும்.. நேரமில்லை..

அன்பெனும் அழகு தேவதையோ..
தன் காதல், அம்புகளை தொடுக்க..
ஆளின்றி அனாதையாய் நின்றாள்..

Offline VenMaThI

 • FTC Team
 • Full Member
 • ***
 • Posts: 208
 • Total likes: 903
 • Karma: +0/-0
 • Gender: Female
 • hi i am Just New to this forum


மன்மதன்

பல போர் வென்ற வீரர்களையும்
தன் அம்பால் வீழ செய்யும் கள்வன்
அன்பை கூட அம்பாய் எய்து
காதல் வலை வீசுவதில் கைதேர்ந்தவன்

காதல் பாடம் கற்பிற்கும்
கை தேர்ந்த ஆசானும் நீ
காதல் விலங்கை பூட்டும்
கண்டிப்பான காவலனும் நீ

காதல் என்னும் மொழி அறியாதார் கூட
காதலில் விழாமல் இருந்ததில்லை
தனக்கே தெரியாமல் - தன்னுள்
காதலை விதைக்கும் வித்தைக்காரன் நீ

நீ விட்ட அம்பு என்னை தாக்கவில்லை என்று
அவன் கண்களின் வழியாய் கணை தொடுத்தாய்

உன் பேச்சு என் காதில் விழவில்லை என்று
அவன் வாய்மொழியால் என்னை வசியம் செய்தாய்

உன் அழகை நான் ரசிக்கவில்லை என்று
என்னை கவர்ந்திழுக்கும் கள்வனாய் அவனை கொடுத்தாய்

நொடி நொடியாய் நெருங்கி நெஞ்சமதில் நங்கூரமிட்டு
நினைவும் அவனே வாழ்வும் அவனே
என்று என்னுள் அவனை .. அவன் நினைவுகளை
ஆலமரமாய் வளர செய்தாய்

மரத்தடி நிழலில் கண்ணயர்ந்த நேரம்
மாயமாய் மறைந்தது அவன் மட்டுமல்ல
அவனை அம்பாய் தொடுத்த நீயும் தான்

காதலால் வாழ்ந்தவர் பலரும்
காதலால் வீழ்ந்தவர் பலரும்
காதலால் மாண்டவர் பலரும்
என காலங்கலமாய் நடதேற

காதல் கணை தொடுப்பதை மட்டுமே
கடமையாய் கழிக்கும் உனக்கும்
காதல் கணை தொடுக்க ஒருத்தி வரவேண்டும்
காதலின் அவஸ்தை என்னவென்று நீயும் உணரவேண்டும்
இது என் சாபமல்ல மன்மதனே
உன் மீது நான் கொண்ட காதல் 😂😂😂.....


Offline சாக்ரடீஸ்

 • Hero Member
 • *
 • Posts: 866
 • Total likes: 2454
 • Karma: +0/-0
 • Gender: Male
 • Self-respect is a Priority & Luxury to Urself
இன்றைய தலைப்பு என்ன ?

என் வரிகளில்
உங்களுக்கு ஏதும் மென்மை தென்படுகின்றதா?
இந்த தலைப்பு தான் என்றதும் என் வரிகளில்
ஒரு மயக்கம், மென்மை, மிதப்பு, சிரிப்பு, வெட்கம்
கொஞ்சம் கண்ணீர் மற்றும் அளவில்லா காதல்

எல்லாரும் வாங்க ஸ்கூலுக்கு போவோம்

ஸ்கூல் : லவ்வாங்கி ஹையர் செகண்டரி ஸ்கூல்
டீச்சர் : மன்மதன்
வகுப்பு : FTC - L(SECTION)
பாடம் : மன்மதன் அம்பு
ஸ்டூடென்ட்ஸ் : FTC Users

Chapter 1: காதல்

காதல்
இந்த ஒரு சொல்
எத்தனை விதமான உணர்வு…
கூட்டத்தின் நடுவில் சிறு பார்வை
நீ இன்னிக்கு ரொம்ப அழகா இருக்க
சாப்டியா?
எங்க போன இவ்ளோ நேரம் ?
நீ திரும்ப எப்ப போன் பண்ணுவ?
நீ ஏன் இப்படி சலிக்கவே மாட்டேங்குற ?
இப்படி பலவிதமாக அன்பை வெளிப்படுத்துவதில்
அத்தனை அழகியல் கொண்டது காதல் !

கனவுலகில் மிதப்பதும்
நிஜவுலகில் சிரிப்பதும்
எல்லாமுமாய் இருப்பதும்
எதுவுமே இல்லாமல் போவதும் காதல் தான்

Chapter 2: பெண் காதல்

பெண் மனம் காதல் வயப்பட்டால் என்ன ஆகும்?
கூட்டத்தில் தனிமையை தேடும்
பகலில் எதிர்கால கனவுகள் கூடும்
தலைவன் முகத்தை நாடும்
தினமும் பேச தூண்டும்
சிலிர்ப்புகள் மனதில் ஓடும்
இன்மைகள் உணரப்படும்
பெண் காதல்
ஹே பொறுக்கியில் ஆரம்பித்து ச்சீய் பொறுக்கியில் முடியும் !

Chapter 3: ஆண் காதல்

ஆண்கள் காதல் கொண்டால் ?
அழும்புகள்  கூடி போகும்
பேசாவிட்டால் முகம் வாடி போகும்
சிரிப்புகள் அழகாகும்
எண்ணங்கள் நேர்மையாகும்
கோபம் நீர்த்து போகும்
கம்பீரம் கரைந்து போகும்
ஆண் காதல்
ஹே இந்தாம்மாவில் ஆரம்பித்து நீ சொன்னா சரிதாம்மாவில் முடியும் !


விழுவதால் அழகு ரெண்டு !!
ஒன்று அருவி !!
மற்றொன்று காதல் !!
காதலில் விழுவோம் !!

கிளாஸ் ஓவர் ஸ்டூடென்ட்ஸ் அடுத்தடுத்த சாப்டர்ஸ் நெக்ஸ்ட் கிளாஸ்ல பாக்கலாம்
 
மன்மதன் (க்யூபிட்): இப்ப சொல்லுங்க யார் யாருக்கு எப்டி லவ் வேணும்னு அவங்களுக்கு அம்பு விடறேன்…

FTC Users : நாங்க கேக்கற மாதிரி பொண்ணோ பையனோ குடுத்தா மட்டும் அம்பு விடு இல்லனா ஆள விடு டா சாமீய்ய்ய்…

மன்மதன் (க்யூபிட்): அடேய் ஓடுனா மட்டும் சும்மா விட்ருவேனா? மாட்டுன டா பம்பர கட்ட மண்டையா…
« Last Edit: September 18, 2023, 10:14:13 PM by சாக்ரடீஸ் »

Offline Minaaz

 • Newbie
 • *
 • Posts: 42
 • Total likes: 254
 • Karma: +0/-0
 • Gender: Female
 • hi i am Just New to this forum
காதல் தெய்வத்தின் வில்லம்பில் காதல் எனும் முத்திரையை பொதித்து குறி பார்த்து எய்த தருணமதில் விழியோரத் தசைகளை கருவிழிகள் உரசிட கார் குழலாய் மலரினங்கள் சூடி வளைந்து நெளிந்து நடந்து சென்ற மங்கையவளில் பூத்துக் குலுங்கியது காதல் எனும் மலர்..

மலர்தோட்டத்தில் குதித்தாடும் வண்ண நிறப் பூச்சியைப் போல் ஆயிற்று ஆரம்ப நிலையது..

நீங்க மாட்டாள் காதல் தேனும் ஓயாத ஊற்றாய் என்றும் வடிந்தோடும் என்று எண்ணிய மனது சிறுதும் கூட சந்தேகிக்க மறுத்து விட்டது

மயில் தோகையில் பொதிந்திட்ட வண்ணமென அவளின் அருகில் இருந்த நொடிகள்..

நோகாமல் நகர்ந்த வாழ்வுதெனில் நோகடிக்கவே நொடிகளை செதுக்கிச் சென்றாள் என் கண்ணகி

எண்ணங்களில் என்ன ஆகிற்றோ எத்தனையோ சந்தேகங்கள் பெருக்கெடுத்தது அவளின் பேச்சில்..

உன்னை விட்டுச் செல்லமாட்டேன் என்ற வார்த்தை சற்று விதிவிலக்காய் என்னை விட்டுச் சென்று விடு என்று மாறலாகிற்று..

சொல்ல முடியவில்லை அவளிடம் முடங்கிக் கிடந்த என் நொடிகளை..

வாய்ப்பேச்சாய் நின்று விடும் என்று எண்ணிய போது விட்டுச் சென்றாய் விடுதலை வேண்டுமென்றெண்ணி

சிறைவாசாலாய் நான் ஆகிற்றோ என்ற பதைதைப்பு என்ன காரணம் என்று வினவிய போதே காலாவதியானது அவள் பொய் சொல்லும் திறனின் அழகில்

இத்துனை பட்டும் மீண்டெழுந்த எனக்கு மற்றுமோர் மங்கையின் வாசனையை நுகர்ந்திட மனம் மறுத்தொதுக்குவது காதல் என்பதே கண்கட்டி வித்தை என்பது பதியப்பட்டதால் தானோ..

அதில்தான் காதல் தெய்வத்தின் வில்லம்பின் குறி பிழைத்து விட்டது போலும்.. அதில் ஓர் உச்ச களிப்பு எனக்கு...!!

Offline joker

 • Hero Member
 • *
 • Posts: 931
 • Total likes: 2993
 • Karma: +0/-0
 • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
பதின்மவயது
மன்மதன் காதல் அம்பு  எய்ய
பெண்களின் கொலுசு சத்தத்துக்கும்
கொஞ்சும் பேச்சுக்கும்
ஏங்கும் மனம்

அவளின் புன்முறுவல் போதும்
உணர்வு துணுக்குகளின்
பிரவாகம் பொங்கி வரும்

உன்னை பார்க்க ,
தொட , அணைக்க ,முத்தமிட  என
காலங்கள் கடந்தன
இன்று
அது கடந்த காலங்கள் ஆகின

எல்லா துயரும்
உன் மடி சாய்ந்தால்
மறைந்துவிடும்
உன்னை பிரிந்த துயர் மறைய
என்ன செய்வேனோ

உயிரே என்றவள்
பிரிந்த பின்
உயிர் பிரித்தெடுத்த வலி தந்ததை 
அனுபவித்தவருன்டா?
இல்லையெனில்

மன்மதன் 
காதல் அம்பு எய்ய வரலாம்
ஓடி விடாதீர்
அனுபவித்துப்பார்
காதல் ஓர்
ரணமான வரம்


****JOKER***
« Last Edit: September 21, 2023, 04:55:59 PM by joker »

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "