Author Topic: Chef Damodaran Recipes  (Read 36943 times)

Offline kanmani

Re: Chef Damodaran Recipes
« Reply #30 on: October 18, 2013, 09:58:30 AM »
பொள்ளாச்சி சிக்கன் மசாலா – செப். தாமோதரன் வீடியோ
http://www.youtube.com/v/QTUq0R7z0dQ
« Last Edit: October 18, 2013, 10:00:06 AM by kanmani »

Offline kanmani

Re: Chef Damodaran Recipes
« Reply #31 on: October 18, 2013, 10:02:03 AM »
தவா கோழி வறுவல் / சிக்கன் ரோஸ்ட் – செப். தாமோதரன் வீடியோ

http://www.youtube.com/v/WtW7DvflPfM

Offline kanmani

Re: Chef Damodaran Recipes
« Reply #32 on: October 18, 2013, 10:03:59 AM »
அதிரசம் – செப். தாமோதரன் வீடியோ

http://www.youtube.com/v/bR8_qfEJ03U

Offline kanmani

Re: Chef Damodaran Recipes
« Reply #33 on: October 18, 2013, 10:05:29 AM »
உருளைக்கிழங்கு ரோல்

சுவையான உருளைக்கிழங்கு ரோல் செய்வதற்கான எளிய செய்முறை குறிப்பு. இந்த குறிப்பு திரு. தாமோதரன் (செப். தாமு) அவர்களின் செய்முறை குறிப்பை தழுவியது.

தேவையான பொருட்கள்

கோதுமை – 1 கப்
மெல்லிய ரவை – 1/2 கப்
எண்ணெய் – 1/4 தேக்கரண்டி
உப்பு – 1/2 தேக்கரண்டி

மசாலா செய்வதற்கு

உருளைக்கிழங்கு – 1/4 கிலோ
வெங்காயம்(பொடியாக நறுக்கியது) – 3 மேசைக்கரண்டி
மல்லித்தழை (பொடியாக நறுக்கியது) – 2 தேக்கரண்டி
இஞ்சி,

பச்சைமிளகாய் விழுது – 2 தேக்கரண்டி
உலர்ந்த மாங்காய்த்தூள் – 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் – 1/2 தேக்கரண்டி
மிளகாய்ப்பொடி – 1/2 தேக்கரண்டி
கறிமசாலாத்தூள் – 3/4 தேக்கரண்டி
எண்ணெய் – பொரிப்பதற்கு
உப்பு – தேவையான அளவு

மைதா பசை செய்வதற்கு

தண்ணீர் – 2 பங்கு
மைதா – 3 பங்கு

செய்முறை

கோதுமை, ரவை, எண்ணெய், உப்பு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொண்டு ஈரத்துணி கொண்டு மூடி வைக்கவும்.
உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
இதனுடன் வெங்காயம், மல்லித்தழை, இஞ்சி,பச்சை மிளகாய் விழுது, மாங்காய்த்தூள், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கறிமசாலாதூள், சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்கி வைத்துக் கொள்ளவும்.
இக்கலவையை எலுமிச்சை அளவு உருண்டைகளாக செய்து பிறகு நீளவாக்கில் உருட்டிக் கொள்ளவும்.
பிசைந்த சப்பாத்தி மாவிலிருந்து சிறிய

உருண்டைகள் செய்து சப்பாத்தி போல இடவும்.
தேய்த்த சப்பாத்தியின் ஒரு மூலையில் மசாலா உருட்டியதை வைத்துப் பாய் போல் சுருட்டவும்.
குழல் போல் சுருட்டியதும் ஓரங்களை உள்ளே மடித்து மைதா பசை கொண்டு ஒட்டவும். பிரிந்து வராமல் எல்லா பக்கங்களையும் சரியாக ஒட்டவும்.
இதே போல மாவு முழுவதையும் செய்து கொண்டு ஈரத்துணி கொண்டு மூடி வைக்கவும்.
ஒரு தடவைக்கு 4 அல்லது 5 சுருள்களை மிதமான சூட்டில் எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.
மூன்று அல்லது நான்கு துண்டுகளாக வெட்டி தக்காளி சாஸ் உடன் பரிமாறவும்.

Offline kanmani

Re: Chef Damodaran Recipes
« Reply #34 on: October 18, 2013, 10:09:38 AM »
நவதானிய சிக்கன் குழம்பு – செப். தாமோதரன் வீடியோ

http://www.youtube.com/v/fMdQ0DwUJ5E

Offline kanmani

Re: Chef Damodaran Recipes
« Reply #35 on: October 18, 2013, 10:14:18 AM »
பரங்கிக்காய் – பயத்தம் பருப்பு கூட்டு – செப். தாமோதரன் வீடியோ

http://www.youtube.com/v/emhXRFnJnLY

Offline kanmani

Re: Chef Damodaran Recipes
« Reply #36 on: October 18, 2013, 10:15:51 AM »
நெத்திலி குருமா – செப். தாமோதரன் வீடியோ
http://www.youtube.com/v/jAQUA0ZQXd0

Offline kanmani

Re: Chef Damodaran Recipes
« Reply #37 on: October 18, 2013, 10:17:57 AM »
புளி சாதம் – செப். தாமோதரன் வீடியோ சமையல் குறிப்பு

http://www.youtube.com/v/B1PRvnqA3BY

Offline kanmani

Re: Chef Damodaran Recipes
« Reply #38 on: October 18, 2013, 10:22:15 AM »
இறால் இகுரு / ஆந்திரா இறால் குழம்பு

ஆந்திரா முறையில் சுவையான  இறால் குழம்பு செய்வதற்கான எளிய செய்முறை

குறிப்பு. இந்த குறிப்பு திரு.தாமோதரன்(செப்.தாமு) அவர்களின் சமையல் குறிப்பைத் தழுவியது

தேவையான பொருட்கள்

உரித்து, குடல் நீக்கிய இறால் – 1/2 கிலோ
இஞ்சி, பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
வெங்காயம் – 1/4 கிலோ
தக்காளி – 1/4 கிலோ
மஞ்சள்தூள் – 1 /2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி
தனியாத்தூள் – 3 தேக்கரண்டி
சோம்பு – 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 3
தேங்காய் – 1 /2 மூடி
புளி – 1 கோலி குண்டு அளவு
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
கருவேப்பிலை – 2 கொத்து

செய்முறை

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன் நிறமாக வதக்கவும்.
பின் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கிக் கொள்ளவும்.
பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு மசியுமாறு வதக்கிக் கொள்ளவும்.
பின் மஞ்சள்தூள்,மிளகாய்த்தூள், தனியாத்தூள்,சிறிது தண்ணீர் மற்றும் சுத்தம் செய்து வைத்துள்ள இறாலைச் சேர்த்து வேக விடவும்.
இறாலை ஆவியில் வேக வைத்தும் பயன்படுத்தலாம்.
இதனுடன் அரைத்து வைத்துள்ள தேங்காய், விதை நீக்கிய காய்ந்த மிளகாய், தேவையான உப்பு சேர்த்து வேக விடவும்.
நன்கு கொதித்து வந்தவுடன், புளியைச் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும். சுவையான இறால் குழம்பு தயார்.

Offline kanmani

Re: Chef Damodaran Recipes
« Reply #39 on: October 18, 2013, 10:29:34 AM »
செட்டிநாடு மீன் வறுவல்

செட்டிநாடு செய்முறையில் தயாரிக்கப்படும் இந்த மீன் வறுவல் செய்வதற்கான குறிப்பு திரு.தாமோதரன்(செப்.தாமு) அவர்களின் செட்டிநாடு சமையல் குறிப்பைத் தழுவியது.

தேவையான பொருட்கள்

மீன் – 1 /2 கிலோ
மிளகாய்த்தூள் – 4  தேக்கரண்டி
தனியாத்தூள் – 5  தேக்கரண்டி
மஞ்சள்தூள் – 1  தேக்கரண்டி
எலுமிச்சம்பழம் – 1
மிளகு – 2  தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 4
கடுகு – 1  தேக்கரண்டி
கடலைப்பருப்பு – 3  தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு – 3 தேக்கரண்டி
கருவேப்பிலை – 2  கொத்து
எண்ணெய் – 1 1 /2 குழிக்கரண்டி
உப்பு – தேவையான அளவு

செய்முறை

மீனை சுத்தம் செய்து கழுவி வைத்துக் கொள்ளவும்.
மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், உப்பு, எலுமிச்சம்பழச்சாறைப் பிழிந்து பேஸ்ட் போல செய்து கொண்டு, அதில் மீனை நன்கு ஊற வைத்துக் கொள்ளவும். குறைந்தது 1  மணி நேரமாவது ஊற வைக்கவும். இரவு முழுவதும் ஊற வைத்தால் நன்றாக இருக்கும்.
மிளகு, காய்ந்த மிளகாய், கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கருவேப்பிலை ஆகியவற்றை வாணலியில் தீயாமல் வறுத்து, ஆற வைத்து பொடி செய்து கொள்ளவும்.
ஊற வைத்துள்ள மீனை இந்த அரைத்து வைத்துள்ள மசாலாவில் இரண்டு புறமும் பிரட்டி எடுத்து அடுப்பில் உள்ள தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு பொரித்தெடுக்கவும்.
அடுப்பின் தணலைக் குறைவாகப் பயன்படுத்தினால் மசாலா நன்கு சேர்ந்து, மொறு மொறு, மீன் வறுவல் கிடைக்கும்.
இந்த முறையில் தயாரிக்கப்படும் மீன் வறுவல் சாம்பார் சாதம், குருமா, தனியாக சாப்பிடவும் சுவையாக இருக்கும்.

Offline kanmani

Re: Chef Damodaran Recipes
« Reply #40 on: October 18, 2013, 10:31:25 AM »
மசாலா மீன் வறுவல்

சுவையான மசாலா மீன் வறுவல் செய்வதற்கான குறிப்பு.

தேவையான பொருட்கள்

மீன் – 8  துண்டுகள்
இஞ்சி, பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
சிறிய வெங்காயம் – 8
கருவேப்பிலை – 4  கொத்து
மல்லிதழை – 2  அல்லது 4  கொத்து
எலுமிச்சம்பழசாறு – 2  தேக்கரண்டி
மிளகாய்த்தூள் – 2  தேக்கரண்டி
சீரகத்தூள் – 1 தேக்கரண்டி
மல்லித்தூள் – 2  தேக்கரண்டி
மஞ்சள்தூள் – 1 /2 தேக்கரண்டி
மைதா – 4  தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிக்க

rong>செய்முறை

வெங்காயம், கருவேப்பிலை, மல்லிதழை ஆகியவற்றை அரைத்துக் கொள்ளவும்.
எலுமிச்சம்பழசாறு ,மிளகாய்த்தூள்,சீரகத்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு, அரைத்த மசாலா சேர்த்து திக்கான மசாலா செய்து கொள்ளவும்.
மீன் துண்டின் இரு புறங்களிலும் மசாலா கலவையை தடவி விடவும். அதன் மேலே மைதா மாவை தூவி 1  மணி மேரம் வரை ஊற வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் , மிதமான சூட்டில் மீனை இரு புறமும் பொரித்தெடுக்கவும்.

Offline kanmani

Re: Chef Damodaran Recipes
« Reply #41 on: October 18, 2013, 10:32:51 AM »
வெஜிடபிள் சாய் குருமா

சுவையான வெஜிடபிள் சாய் குருமா செய்வதற்கான குறிப்பு. இந்த குறிப்பு செப்.தாமோதரன்(செப்.தாமு) அவர்களின் சமையல் குறிப்பைத் தழுவியது.

தேவையான பொருட்கள்

தயிர் – 100 மில்லி
க்ரீம் – 200  மில்லி
முந்திரிப்பருப்பு – 100 கிராம்
கேரட் – 100  கிராம்
பீன்ஸ் – 100  கிராம்
உருளைக்கிழங்கு – 200  கிராம்
பச்சை பட்டாணி – 200  கிராம்
வெங்காயம் – 200  கிராம்
தக்காளி – 50  கிராம்
பச்சை மிளகாய் – 50  கிராம்
மல்லித்தூள் – 50  கிராம்
கசகசா – 10  கிராம்
ஏலம், பட்டை, லவங்கம் – 5  கிராம்
எண்ணெய் – 200  மில்லி
தேங்காய் – 1
உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை

காய்கறிகளை நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்.
தேங்காய், முந்திரிப்பருப்பு, கசகசா, இஞ்சி, பூண்டு இவற்றை அரைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலம் போட்டு தாளிக்கவும். பின் அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
பின்னர் அரிந்த காய்கறிகள், தக்காளி, பச்சை மிளகாய் ஒவ்வொன்றாகச் சேர்த்து வதக்கவும்.
சிறிது தண்ணீர் சேர்த்து மூடி போட்டு காய்கறிகளை வேக விடவும்.
காய்கறிகள் வெந்ததும் மல்லித்தூள் சேர்த்து பிரட்டி, தேங்காய், கசகசா, முந்திரிபருப்பு சேர்த்து அரைத்த விழுதை சேர்க்கவும்.
பின்பு தேவையான நீர், தயிர் சேர்த்து கொதிக்க விடவும்.
குருமா கொதித்தவுடன், அடுப்பை அணைத்து க்ரீம் சேர்த்து கலக்கவும்.
வெஜிடபிள் சாய் குருமா நாண், சப்பாத்தி அனைத்திற்கும் நன்றாக இருக்கும்.

Offline kanmani

Re: Chef Damodaran Recipes
« Reply #42 on: October 18, 2013, 10:33:38 AM »
இடியாப்பம்

சுவையான இடியாப்பம் செய்வதற்கான எளிய சமையல் குறிப்பு. இந்த குறிப்பு செப்.தாமோதரன் (செப்.தாமு) அவர்களின் சமையல் குறிப்பைத் தழுவியது .

தேவையான பொருட்கள்

புழுங்கலரிசி – 3  கப்
பச்சரிசி – ஒரு கையளவு
உப்பு – 2  1 /2 தேக்கரண்டி
தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை

அரிசியை வெது வெதுப்பான நீரில் 1 1 /2 மணி முதல் 2  மணி நேரம் ஊற வைக்கவும்.
நல்ல விழுதாக அரைத்து கடைசியில் உப்பு சேர்க்கவும்.
சிறிது தண்ணீர் ஊற்றிக் கரைத்து உடனே இட்லி தட்டில் ஊற்றி ஆவியில் வேக வைக்கவும்.
இட்லி சூடாக இருக்கும்பொழுதே இடியாப்ப அச்சில் எண்ணெய் தடவி அழுத்தினால் நூல் நூலாக வரும்.(இட்லியை ஆற வைக்கக் கூடாது).
எல்லா மாவையும் ஊற்றி, அழுத்தி முடித்தவுடன் வெள்ளை இடியாப்பத்தை ஆற விடவும்.
ஒரு அகலமான தட்டில் பரப்பி, கையில் எண்ணெய் தடவிக் கொண்டு கவனமாகப் பிரித்து விடவும்.
இந்த அடிப்படையான இடியாப்பத்தை வைத்து பலவிதமாக தாளித்து இடியாப்ப வகைகள் தயாரிக்கலாம்.
வெள்ளை இடியாப்பத்தை குருமாவுடன் பரிமாறலாம்.
இடியப்பத்திற்கு குருமாவுடன், சர்க்கரை, பால் அல்லது தேங்காய்ப்பால் சேர்த்தும் சாப்பிடலாம். அல்லது தேங்காய் துருவி சேர்த்துக் கொள்ளலாம்.

Offline kanmani

Re: Chef Damodaran Recipes
« Reply #43 on: October 18, 2013, 10:34:29 AM »
சென்னா மசாலா

சுவையான சென்னா மசாலா செய்வதற்கான எளிய சமையல் குறிப்பு. இந்த குறிப்பு செப்.தாமோதரன் (செப்.தாமு) அவர்களின் சமையல் குறிப்பைத் தழுவியது.

தேவையான பொருட்கள்

சென்னா(வெள்ளைக் கொண்டைகடலை) – 50 கிராம்
வெங்காயம் – 75  கிராம்
தக்காளி – 75  கிராம்
இஞ்சி – ஒரு துண்டு
சீரகம் – 1  தேக்கரண்டி
மிளகாய்த்தூள் – 2  தேக்கரண்டி
மல்லித்தூள் – 1  தேக்கரண்டி
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை
சென்னா மசாலா தூள் – 3  தேக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – 100 மில்லி
மல்லித்தழை – ஒரு கொத்து
கறிவேப்பிலை – ஒரு கொத்து
கரம் மசாலாத்தூள் – 1  தேக்கரண்டி

செய்முறை

வெள்ளைக் கொண்டைக்கடலையை 8  மணி நேரம் ஊற வைத்து பின்னர் குக்கரில் ஒரு விசில் விட்டு வேக வைத்து எடுக்கவும்.
தக்காளி, வெங்காயம், இஞ்சி, சீரகம், மல்லித்தழை ஆகியவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடு செய்யவும். சிறிதாக நறுக்கிய வெங்காயம் 1  கப், அரைத்த விழுது ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும்.
பின்னர் மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், உப்பு, வேக வைத்த கொண்டைக்கடலை ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் கரம் மசாலா, சென்னா மசாலா சேர்த்து சிறிது மல்லித்தழை, கறிவேப்பிலை ,சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும்.

Offline kanmani

Re: Chef Damodaran Recipes
« Reply #44 on: October 18, 2013, 10:37:27 AM »
சமோசா

சுவையான சமோசா செய்வதற்கான எளிய குறிப்பு. இந்த குறிப்பு திரு. தாமோதரன்(Chef. Dhamu) அவர்களின் சமையல் குறிப்பை தழுவியது.

தேவையான பொருட்கள்

மைதா – 2  கப்
உப்பு – 1 /2 தேக்கரண்டி
நெய் அல்லது எண்ணெய் – 4 மேசைக்கரண்டி
தண்ணீர் – 4 மேசைக்கரண்டி
உருளைக்கிழங்கு – 4 நடுத்தரமானது( தோலை சீவி ஒரு இன்ச் அளவு வெட்டிக் கொள்ளவும்)
பெரிய வெங்காயம் – 2
பச்சைப் பட்டாணி – 1 /4 கப்
இஞ்சி நறுக்கியது – 1  மேசைக்கரண்டி
மல்லித்தழை – 1  கட்டு (பொடியாக நறுக்கியது)
தண்ணீர் – 3  மேசைக்கரண்டி
மல்லித்தூள் – 1  தேக்கரண்டி
சீரகத்தூள் – 1 /2 தேக்கரண்டி
சாட் மசாலா தூள் – 1  தேக்கரண்டி
அம்ச்சூர் தூள் – 1  தேக்கரண்டி
கரம் மசாலா – 1 /2 தேக்கரண்டி
எலுமிச்சைசாறு – 2  மேசைக்கரண்டி
மாவு தண்ணீர் – 2  தேக்கரண்டி மாவு(இதனுடன் 1 /4 தேக்கரண்டி தண்ணீரை கலக்கவும்)
எண்ணெய் – பொரிக்க

செய்முறை

ஒரு பாத்திரத்தில் மைதா, உப்பு சேர்க்கவும். அதில் 4  மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி பிசறவும்.அது பிரட் தூள் போல இருக்க வேண்டும்.
இதில் கொஞ்சம் கொஞ்சமாக 4  மேசைக்கரண்டி தண்ணீரை சேர்த்து கெட்டியான உருண்டையாக உருட்டவும்.உருண்டை மெதுவாக இருக்கும் வரை அடித்துப் பிசையவும்.
மாவை 30  நிமிடம் அல்லது அதற்கு மேலும் ஊற வைக்கவும்.
ஒரு கடாயில் 5  தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வதக்கவும்.
வதங்கியவுடன் இஞ்சி, பச்சை மிளகாய், பட்டாணி, மல்லித்தழை சேர்த்து வதக்கவும்.
இதனுடன் 2  மேசைக்கரண்டி தண்ணீர் சேர்த்து குறைந்த தீயில் வேக விடவும்.
இதனுடன் உருளைக்கிழங்கு,மல்லித்தூள், சீரகத்தூள், சாட் மசாலா தூள், அம்ச்சூர் தூள், கரம் மசாலா, எலுமிச்சைசாறு இவற்றை சேர்த்து வதக்கி வேக விடவும். பிறகு இந்த கலவையை ஆற விடவும்.
ஊற வைத்துள்ள மாவை 8  உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
ஒவ்வொரு உருண்டையையும் வட்டமாகத் தேய்த்து அதை இரண்டாக வெட்டிக் கொள்ளவும்.
அதை முக்கோண வடிவமாகச் செய்து, அதனுள் மசாலாவை வைத்து மூடவும். ஓரங்களை மாவு தண்ணீரால் ஒட்டி விடவும்.
இவற்றை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.