Author Topic: மல்லிகா பத்ரிநாத் சமையல் குறிப்புகள்  (Read 3107 times)

Offline kanmani

கை முறுக்கு 

திருமதி. மல்லிகா பத்ரிநாத் அவர்களின் சமையல் குறிப்பைத் தழுவியது.

தேவையான பொருட்கள்

    அரிசி மாவு – 4 கப்
    உளுத்தம் மாவு – 1/2  கப்
    மிளகுத்தூள் – 1/2 தேக்கரண்டி
    சீரகத்தூள் – 1/2 தேக்கரண்டி
    வெண்ணெய் / நெய் – 200 கிராம்
    உப்பு – தேவையான அளவு

செய்முறை

    உளுத்தம்பருப்பை வெறும் வாணலியில் வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும். வறுத்த உளுத்தம்பருப்பை மிக்ஸ்யில் நன்கு அரைத்து, சலித்துக் கொள்ளவும்.
    இதனுடன் அரிசி மாவு, உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
    நெய்யை ஒரு பாத்திரத்தில் சேர்த்து கையால் நன்கு தேய்த்துக் கொள்ளவும். இதனுடன் மாவு கலவையை சேர்த்து நன்கு பிசறிக் கொள்ளவும்.
    மாவை 3 அல்லது 4 பகுதிகளாக பிரித்துக் கொள்ளவும்.
    முதலில் ஒரு பகுதி மாவை மட்டும் எடுத்து திக்காக பிசைந்து கொள்ளவும்.
    ஒரு ஈரத் துணியின் நடுவில் ஒரு பாட்டில் மூடியை வைத்துக் கொள்ளவும். ஒரு எலுமிச்சம்பழ அளவு உருண்டையை எடுத்துக் கொள்ளவும்.
    கட்டை விரல், ஆள்காட்டி விரல் மற்றும் நடுவிரல் ஆகிய மூன்று விரல்களைக் கலந்து முறுக்கினை சுற்றவும்.
    கட்டை விரலாலும், ஆள்காட்டி விரலாலும் மாவினை சிறிது அழுத்திவிட்டு, பிறகு அதனைத் திருகி திருக்கி பாட்டில் மூடியைச் சுற்றிலும் சுற்றி விடவும்.
    இந்த வகை முறுக்கினை மிகவும் மெல்லியதாக சுற்றக் கூடாது. தேவையான அளவிற்கு சுற்றுகளின் எண்ணிக்கையை கூடவோ, குறைத்தோ சுற்றிக் கொள்ளலாம்.
    கடாயில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் சுற்றி வைத்துள்ள முறுக்கை கவனமாக

    எடுத்து, எண்ணெயில் இட்டு பொரித்தெடுக்கவும்.
    இதே போல் அடுத்த பகுதி மாவை எடுத்து பிசைந்து, சுற்றி, பொரித்து எடுக்கவும்.
    சுவையான கை முறுக்கு தயார்.


Offline kanmani

சதுர்த்தி சமையல் – மல்லிகா பத்ரிநாத் வீடியோ சமையல் குறிப்பு

<a href="http://www.youtube.com/v/99yE0e_o4UA" target="_blank" rel="noopener noreferrer" class="bbc_link bbc_flash_disabled new_win">http://www.youtube.com/v/99yE0e_o4UA</a>

Offline kanmani

காளான் பனீர் கறி

சுவையான காளான் பனீர் கறி செய்வதற்கான எளிய செய்முறை குறிப்பு. இந்த குறிப்பு திருமதி. மல்லிகா பத்ரிநாத் அவர்களின் சமையல்  குறிப்பிளிரிந்து எடுக்கப்பட்டது

தேவையான பொருட்கள்

    மொட்டுக் காளான் – 3 பாக்கெட்
    பெரிய வெங்காயம் – 2
    தக்காளி – 3
    இஞ்சி, பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
    பச்சை மிளகாய் – 3
    பனீர் – 2 லிட்டர் பாலில் தயார் செய்தது
    மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
    சீரகத்தூள் – 1 தேக்கரண்டி
    கரம்மசாலாத்தூள் – 1 /2 தேக்கரண்டி
    கட்டித்தயிர் – 1 1/2 கப்
    முந்திரிப்பருப்பு – 10
    எண்ணெய்

வதக்கி அரைக்க

    பொடியாக அரிந்த வெங்காயம் – 1 கப்
    அரிந்த தக்காளி

    – 1 1/2 கப்
    முந்திரிப் பருப்பு – 10

செய்முறை

    வெங்காயம், தக்காளியை பொடியாகவும், பச்சை மிளகாயை நீளமாகவும் அரிந்து கொள்ளவும்.
    காளான்களை நன்கு கழுவி ஈரம்போக துடைத்து அரியவும். பனீரை சதுரத் துண்டுகளாக்கவும்.
    ஒரு பெரிய வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, அதில் முந்திரிப் பருப்பு, பச்சை, வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது இவற்றைப் போட்டு பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.
    பின்பு தக்காளியையும், காளான்களையும் சேர்த்து சில நிமிடங்கள் கிளறிவிடவும்.
    இத்துடன் அரைத்த மசாலாவையும் சேர்த்து மேலும் சில நிமிடங்கள் வதக்கவும்.
    இக்கலவையுடன் மிளகாய்த்தூள், சீரகத்தூள், கரம் மசாலா, உப்பு, சர்க்கரை சேர்த்து கலக்கவும்.
    கட்டித் தயிரை கடைந்து அதில் ஊற்றி, எண்ணெய் தனியே பிரிந்து வரும்வரை வதக்கவும்.
    கடைசியாக பனீர் கட்டிகளை மெதுவாக அதில் போட்டு மேலும் இரண்டு நிமிடங்கள் கழித்து இறக்கவும்.
    கொத்தமல்லித்தழையை மேலே தூவி சூடாகப் பூரி, நான் அல்லது குல்ச்சாவுடன் பரிமாறவும்.

Offline kanmani

வெந்தயக் கீரை கோப்தா கறி

சுவையான வெந்தயக் கீரை கோப்தா கறி செய்வதற்கான செய்முறை குறிப்பு. இந்த குறிப்பு திருமதி. மல்லிகா பத்ரிநாத் அவர்களின் சமையல் குறிப்பைத் தழுவியது.

தேவையான பொருட்கள்

கோப்தா செய்வதற்கு

    வெந்தயக் கீரை – 2  – 3 கட்டு
    கட்டித் தயிர் – 3/4 கப்
    மஞ்சள்தூள் – 1/4 தேக்கரண்டி
    மிளகாய்த்தூள் – 1/2 தேக்கரண்டி
    கரம் மசாலாத்தூள் – 1/2 தேக்கரண்டி
    கடலை மாவு – 1 கப்
    ஓமம் – 1/4 தேக்கரண்டி
    கடைந்த பாலேடு – 2 மேசைக்கரண்டி (அலங்கரிக்க)
    எண்ணெய் – பொரிப்பதற்கு
    உப்பு – தேவைக்கேற்ப

அரைத்துக் கொள்ளவும்

    வெங்காயம் – 2
    தக்காளி – 3
    இஞ்சி – ஒரு அங்குலத்துண்டு
    பச்சை மிளகாய் – 2
    சர்க்கரை – 1 தேக்கரண்டி
    மஞ்சள்தூள் – 1/4 தேக்கரண்டி
    தனியாப் பொடி – 1 மேசைக்கரண்டி
    மிளகாய்த்தூள் – 3/4 தேக்கரண்டி
    கரம் மசாலாத்தூள் – 1/2 தேக்கரண்டி
    உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை

    மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கடலை மாவு, உப்பு

    இவற்றை தயிருடன் கலந்து கொள்ளவும்.
    வாணலியில் எண்ணெய் விட்டு அதில் ஓமம், வெந்தயக்கீரை இவற்றைப் போட்டு வதக்கவும்.
    சிறிது வதங்கிய பிறகு கரைத்த மாவை அதனுடன் சேர்க்கவும். கிரேவி  கெட்டியாகும் வரை குறைந்த தீயில் வைக்கவும். பின்பு இறக்கவும்.
    சூடு ஆறிய பின் கரம் மசாலாத்தூளைச் சேர்த்து சிறிய உருண்டைகளாக்கவும்.
    சூடான எண்ணெயில் பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும்.
    கறி செய்யும் முறை
    ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி அரைத்த விழுதைச் சேர்த்து எண்ணெய் தனியே பிரியும் வரை வதக்கவும்.
    நன்றாக வதங்கியதும் தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவும்.
    கோப்தாவை தட்டில் வைத்து  அதன் மேல் குழம்பை ஊற்றவும். துருவிய சீஸ், கொத்தமல்லித்தழை, கடைந்த பாலேடு, ஆகியவற்றை மேலே அலங்கரித்து சூடாக பரோட்டா அல்லது சப்பாத்தியுடன் பரிமாறவும்.

Offline kanmani

பேல் பூரி

பேல் பூரி செய்வதற்கான எளிய சமையல் குறிப்பு. இந்த குறிப்பு திருமதி. மல்லிகா பத்ரிநாத் அவர்களின் சமையல் குறிப்பை தழுவியது.

தேவையான பொருட்கள்

    பூரி துண்டுகள் நொறுக்கியது  – 1  கப்
    சிப்ஸ் நொறுக்கியது  – 1 /2 கப்
    பொரி – 2  கப்
    கேரட் துருவியது – 2  மேசைக்கரண்டி
    வெங்காயம் பொடியாக நறுக்கியது – 1 1 /2 மேசைக்கரண்டி
    மாங்காய், வெள்ளரிக்காய் துருவியது -  1 1 /2 மேசைக்கரண்டி
    மல்லிதழை நறுக்கியது – 1  மேசைக்கரண்டி
    தக்காளி பொடியாக நறுக்கியது -  1  மேசைக்கரண்டி
    சேவ்( ஓமப்பொடி) – 1 /2 கப்
    தூள் உப்பு – 1 /2 தேக்கரண்டி
    மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
    வேக வைத்த பட்டாணி அல்லது வேக வைத்து நறுக்கிய உருளைக்கிழங்கு  – 1 1 /2 மேசைக்கரண்டி
    இனிப்பு சட்னி – 3  மேசைக்கரண்டி
    புதினா – 3  மேசைக்கரண்டி
    பூண்டு சட்னி – 2  மேசைக்கரண்டி
    உலர் மாங்காய் தூள்  – 1 /4 தேக்கரண்டி

பூண்டு சட்னி

    பூண்டு – 15  பல்
    புளி – சிறிது
    சீரகம் – 1 /2 தேக்கரண்டி
    மிளகாய்த்தூள் – 1  தேக்கரண்டி
    உப்பு – 1  தேக்கரண்டி

இவை அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
சேவ்(ஓமப்பொடி) செய்வதற்கு

    கடலை மாவுடன் உப்பு மற்றும் தண்ணீர் கலந்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.
    சேவ்(ஓமப்பொடி) அச்சைப் பயன்படுத்தி மாவைப் பிழிந்து சூடான எண்ணெயில் போட்டு மொறு மொறுப்பாகும் வரை பொரித்தெடுக்கவும்.

செய்முறை

    ஒரு அகலமான பாத்திரத்தில் நொறுக்கி வைத்துள்ள பூரி, சிப்ஸ், பொரி மற்றும் பாதி சேவ்(ஓமப்பொடி) ஆகியவற்றை ஒன்றாகக் கலக்கவும்.
    தயாராக வைத்துள்ள காய்கறிகள், தூள்கள் மற்றும் சட்னி அனைத்தையும் ஒன்றாகக் கலக்கவும்.
    மீதமுள்ள சேவ்(ஓமப்பொடி), பொடியாக நறுக்கிய வெங்காயம், மல்லித்தழை தூவி உடனடியாகப் பரிமாறவும்.


Offline kanmani

கடாய் வெஜிடபிள்ஸ்

இந்த சமையல் குறிப்பு திருமதி. மல்லிகா பத்ரிநாத் அவர்களின் சமையல் குறிப்பை தழுவியது.

தேவையான பொருட்கள்

    தக்காளி – 1
    குட மிளகாய் – 2
    சிறிய மக்காச்சோளம் – 200  கிராம்
    காரட் – 2
    பீன்ஸ் – 10
    உருளைக் கிழங்கு – 2
    அரிந்த பனீர் துண்டங்கள் – 1 /4 கப்
    மிளகாய்த்தூள் – 1  தேக்கரண்டி
    தனியாத்தூள் – 1  மேசைக்கரண்டி
    கரம்மசாலா தூள் – 1 /2 தேக்கரண்டி
    உலர்ந்த வெந்தய இலை – 1  1 /2 தேக்கரண்டி
    உப்பு – தேவைக்கேற்ப
    வெண்ணெய் – வதக்க

எண்ணெயில் வதக்கி அரைக்கவும்

    பெரிய வெங்காயம் – 3
    தக்காளி – 4

இரண்டையும் நறுக்கி வதக்கவும். பின் முந்திரி பருப்புடன் சேர்த்து அரைக்கவும்.

    முந்திரிபருப்பு – 10

செய்முறை

    குடமிளகாய், தக்காளி இரண்டையும் 1 1 /2 அங்குல சதுரத் துடுகளாக அரிந்து கொள்ளவும்.
    பச்சை மிளகாயை நீளவாக்கில் இரண்டாக அரிந்து கொள்ளவும்.
    உருளைக்கிழங்கு, மக்காச்சோளம், கேரட், பீன்ஸ், இவைகளை 1 1 /2  அங்குல நீளத்தில் விரல் பருமனில் அரிந்து வேக வைக்கவும்.
    ஒரு வாணலியில் சிறிது வெண்ணெய் ஊற்றி சூடானதும் பச்சை மிளகாய், குடமிளகாய், தக்காளி இவற்றைப் போடவும்.
    இரண்டு நிமிடங்கள் நல்ல தணலில் வதக்கி பனீர் துண்டங்கள், வேக வைத்த காய்கறிகளைச் சேர்த்து மேலும் 3  நிமிடங்கள் வதக்கவும்.
    குறிப்பிட்டுள்ள பொடிகளையும் போட்டு உப்பு, அரைத்த மசாலா சேர்த்து கிளறவும்.
    குறைந்த தீயில் வைத்து தேவையானால் சிறிது தண்ணீர் ஊற்றி குழம்பு திக்காகும் வரை கொதிக்க விடவும்.
    உலர்ந்த வெந்தய இலையை மிதமான நீரில் அலசி இறக்குவதற்கு முன்பு போடவும்.

Offline kanmani

கொண்டைக்கடலை சாதம்

கொண்டைக்கடலையில்  ப்ரோடீன் சத்து நிறைந்துள்ளது. பைபர் அதிகம் நிறைந்துள்ளது மற்றும் கொழுப்பு சத்தை குறைக்கிறது. கொண்டைக்கடலையுடன், காய்கறிகளையும் சேர்த்துக் கொள்ளலாம். கொண்டைக்கடலை சாதம் செய்வதற்கான குறிப்பு இங்கே வழங்கப்பட்டுள்ளது .

தேவையான பொருட்கள்

    கொண்டக்கடலை – ௧/2   கப்
    பாஸ்மதி அரிசி -  1  கப்
    பெரிய தக்காளி – 3
    சிறிய தேங்காய் – 1 /2
    சின்ன வெங்காயம் தோல் உரித்தது – 1 /2 கப்
    பூண்டு சிறியது – 8  பல்
    மல்லிதழை – 1 /2 கட்டு
    பச்சை மிளகாய் – 2
    வெந்தய இலை காய்ந்தது – 1  மேசைக்கரண்டி
    கரம் மசாலா தூள் – 1 /2 தேக்கரண்டி
    பட்டை – 1 ” துண்டு
    ஏலக்காய் – 2
    கிராம்பு – 3
    பிரியாணி இலை – 1
    நெய் – 2  தேக்கரண்டி
    எண்ணெய் – 3  1 /2 மேசைக்கரண்டி

அரைக்க

    சின்ன வெங்காயம் – 10
    காய்ந்த மிளகாய் – 4 (விருப்பத்திற்கேற்ப)
    சீரகம் – 1  தேக்கரண்டி
    பூண்டு சிறியது – 5  பல்
    தேங்காய் துருவியது – 2  மேசைக்கரண்டி

தேங்காய் தவிர மீதமுள்ள பொருட்களை 1  தேக்கரண்டி எண்ணெயில் வறுத்து தேங்காயுடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

செய்முறை

    அரிசியை 10  நிமிடங்கள் ஊற வைத்து, பின் தண்ணீரை வடித்து விடவும்.
    கடாயில் 1  தேக்கரண்டி நெய் ஊற்றி சூடு செய்யவும். அரிசியை அதில் சேர்த்து தண்ணீர் வற்

Offline kanmani

செட்டிநாடு வெஜிடபிள் கறி

செட்டிநாடு செய்முறையில் வெஜிடபிள் கறி செய்வதற்கான குறிப்பு.இந்த சமையல் குறிப்பு திருமதி. மல்லிகா பத்ரிநாத் அவர்களின் சமையல் குறிப்பை தழுவியது.

தேவையான பொருட்கள்

    பச்சை நிற கத்திரிக்காய்  – 200  கிராம்
    உருளைக்கிழங்கு – 200  கிராம்
    பெரிய வெங்காயம்  -  2
    பீன்ஸ்  – 100 கிராம்
    முட்டைக்கோஸ்  – 150 கிராம்
    பட்டாணி  – 150 கிராம்
    எண்ணெய்  – வதக்க
    உப்பு  – தேவைக்கேற்ப
    கடுகு  – 1 /4 தேக்கரண்டி
    கருவேப்பிலை – சிறிதளவு

அரைத்துக் கொள்ளவும்

    கசகசா  -  1 1 /2 மேசைக்கரண்டி
    பச்சை மிளகாய் அல்லது காய்ந்த மிளகாய்  – 8
    மிளகு  – 1 /4  தேக்கரண்டி
    இஞ்சி  -  1 /2 அங்குலத்துண்டு
    பூண்டு  – 8 பல்லு
    சின்ன வெங்காயம்  – 1  கப்
    சீரகம்  – 1  தேக்கரண்டி
    சோம்பு  – 1 / 4 தேக்கரண்டி

செய்முறை

    பச்சை நிற கத்திரிக்காய், உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம் , பீன்ஸ், முட்டைக்கோஸ் எல்லாவற்றையும் நீளவாக்கில் அரியவும்.
    பட்டாணி, பீன்ஸ், உருளைக்கிழங்கு, கோஸ் இவற்றை குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும்.
    கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதங்கியதும், கத்திரிக்காய் சேர்க்கவும்.
    நன்றாக வதக்கிய பிறகு, அரைத்த மசாலா உப்பு சேர்க்கவும். நல்ல வாசனை வரும்வரை வதக்கவும்.
    பிறகு வேக வைத்த காய்கறிகளைச் சேர்த்து மிதமான தீயில் குழம்பு திக்காக வரும்வரை கொதிக்கவிடவும்.

குறிப்பு

செட்டிநாடு வெஜிடபிள் கறி இட்லி, தோசைக்கு நன்றாக இருக்கும்.

Offline kanmani

முளைபயறு குருமா/முளை விட்ட பச்சைபயறு குருமா


முளைபயறு கொழுப்பு சத்தை குறைக்க பெரிதும் பயன்படுகிறது. பழங்களுக்கு இணையாக  பைபர் மற்றும் வைட்டமின்கள் இதில் நிறைந்துள்ளன. முளைபயறு குருமா செய்வதற்கான எளிய குறிப்பு இங்கே வழங்கப்பட்டுள்ளது.

இந்த சமையல் குறிப்பு திருமதி. மல்லிகா பத்ரிநாத் அவர்களின் சமையல் குறிப்பை தழுவியது.

தேவையான பொருட்கள்

    முளைவிட்ட பச்சைபயறு  – 3 கப்
    சின்ன வெங்காயம்  – 12
    தக்காளி  – 1
    பூண்டு  – 7 பல்
    புளி -  சிறிது
    துருவிய தேங்காய்  – 3 மேசைக்கரண்டி
    உப்பு  – தேவையான அளவு

வறுத்து அரைக்க

    வர மிளகாய்  -  6
    வர கொத்தமல்லி  – 1 மேசைக்கரண்டி
    கடலை பருப்பு  – 1 மேசைக்கரண்டி
    கசகசா  – 1  தேக்கரண்டி ( தனியாக வறுத்து அரைக்கவும்)

செய்முறை

    குக்கரில் முளை விட்ட பச்சைபயறு சேர்த்து குக்கரில் ஆவி வந்த பிறகு 3 நிமிடங்கள் வேக வைக்கவும்.
    தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
    புளியை ஊற வைத்து, கரைத்து எடுத்துக் கொள்ளவும்.
    கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி வறுக்க கொடுத்துள்ள பொருட்களை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
    கசகசாவை மட்டும் எண்ணெய் இல்லாமல் தனியாக வறுத்து எடுத்து, தேங்காய் மற்றும் மீதமுள்ள பொருட்களுடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
    கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், பூண்டு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கிக் கொள்ளவும்.
    பின் அரைத்த மசாலாவை ஊற்றி, உப்பு சேர்த்து, வாசனை வரும் வரை வதக்கிக் கொள்ளவும்.
    கரைத்த புளி மற்றும் வேக வைத்த முளைபயிரைச் சேர்த்து குருமா திக்காகும் வரை வேக விடவும்.

குறிப்பு
முளைபயறு குருமா சப்பாத்தி மற்றும் ரவா இட்லிக்கு நன்றாக இருக்கும்

Offline kanmani

முள்ளங்கி சட்னி

தேவையான பொருட்கள்

    வெள்ளை முள்ளங்கி துண்டுகள்   -  1 கப்
    வர மிளகாய்   -  12
    சின்ன வெங்காயம்  – 12
    துருவிய தேங்காய்  -  1 /4 கப்
    பூண்டு  -  2  பல்
    பெருங்காயத்தூள் -  சிறிது
    உப்பு  -  தேவையான அளவு
    எண்ணெய்
    கடுகு  -  1 /2 தேக்கரண்டி

செய்முறை

    கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி முள்ளங்கி, வரமிளகாய், வெங்காயம் ஆகியவற்றை பொன்னிறமாகும் வரை வதக்கிக் கொள்ளவும்.
    கடைசியாக தேங்காய் சேர்த்து மேலும் 2  நிமிடங்கள் வதக்கவும்.
    வதக்கியவற்றுடன் பூண்டு, பெருங்காயத்தூள், புளி, உப்பு சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.
    கடுகு தாளித்து சட்னியில் கொட்டவும்.
    அதே கடாயில் காரட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
    வதக்கிய பொருட்களுடன் துருவிய தேங்காய், பூண்டு , வறுத்த வேர்க்கடலை, உப்பு சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
    கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து, சட்னியில் கொட்டவும்.

Offline kanmani

கேரட் சட்னி

கேரட் சட்னி செய்வதற்கான சமையல் குறிப்பு.

தேவையான பொருட்கள்

    துருவிய கேரட்  -  1 கப்
    வர மிளகாய்   -  5
    துருவிய தேங்காய்  -  1 /2 கப்
    பூண்டு  -  1   பல்
    வர கொத்தமல்லி  – 2  தேக்கரண்டி
    வறுத்த வேர்க்கடலை  – 1  தேக்கரண்டி
    உப்பு  -  தேவையான அளவு
    எண்ணெய்
    கடுகு  -  1 /2 தேக்கரண்டி

செய்முறை

    கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி வரமிளகாய், கொத்தமல்லி இரண்டையும் வறுத்துக் கொள்ளவும்.
    அதே கடாயில் காரட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
    வதக்கிய பொருட்களுடன் துருவிய தேங்காய், பூண்டு , வறுத்த வேர்க்கடலை, உப்பு சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
    கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து, சட்னியில் கொட்டவும்.

Offline kanmani

மாங்காய் சட்னி

தேவையான பொருட்கள்

    பச்சை மாங்காய்  -  1
    பச்சை மிளகாய்   -  5
    துருவிய தேங்காய்  -  1 /2 கப்
    பூண்டு  -  3  பல்
    பெருங்காயத்தூள்  – சிறிது
    உப்பு  -  தேவையான அளவு
    வெல்லம்  – சிறிதளவு(தேவையெனில்)

செய்முறை

    மாங்காயை சுத்தம் செய்து தோல் நீக்கி, சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
    நறுக்கிய துண்டுகளுடன் மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களைச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.