FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Forum on October 09, 2023, 02:10:20 PM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 324
Post by: Forum on October 09, 2023, 02:10:20 PM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 324

இந்த களத்தின்இந்த  நிழல் படம்  FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

(http://friendstamilchat.org/Forummedia/forumimages/OU/324.jpg)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 324
Post by: Mani KL on October 09, 2023, 04:00:21 PM
,பணத்தால் கிடைக்காத  பந்தம் உறவு

குழந்தை பருவம்
குடும்பத்தில் துன்பத்தை
மறக்க வைக்கும் மழலை பருவம்

சந்தாஷத்தை அள்ளி கொடுக்கும் அன்னை
வறுமையில்
தன் வயறு வாடினாலும்
என் வயிற்றை வாடாமல் வைக்கும் அன்னை
 
நல்ல அறிவை புகட்டும் தந்தை
திறமையை கற்று கொடுக்கும் சிற்பி தந்தை
என் பாரத்தை சுமக்கும் தூண் தந்தை

ஆதரவை கொடுக்கும் அண்ணன்
எந்த நிலை வந்தாலும்
சங்கிலியின் பிணைப்பு  போல்
என்னுடன் இணைத்திருக்கும்
இணை பிரியா தோழன் என் அண்ணன்

தனிமையை மறக்க வைக்கும் தங்கை
துன்பத்திலும் என்னை சிரிக்க வைக்கும் மங்கை

அண்ணி
என் குடும்பத்தில் ஒரு பிறவி
என் தாயின் மறு பிறவி

உறவுகளை சிதறாமல் கூட்டி வைப்பது தாத்தா
அந்த உறவுவுகளை அலங்கரித்து  வைப்பது பாட்டி

தனிமையில் கிடைக்கும் சந்தோசம் தற்காலிகம்
உறவுகளால்  கிடைக்கும் சந்தோசம் நிரந்தரம்


கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
ஒரு கை தட்டும் ஓசை சிந்திக்க வைக்கும்
பல கைகள்  தட்டும் ஓசை சிலிர்க்க வைக்கும்


Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 324
Post by: IniYa on October 09, 2023, 04:29:25 PM
சந்தோஷ வாழ்வில் ஒன்றாக பயணிக்கும் கூட்டில் நாம் என்றும் உறவே !!

நொடியில் நம் எண்ணத்தை அறிந்தார் போல் மகிழ்விப்போர் உறவே!

ஒவ்வொரு நிகழ்வுகளை பற்றி கதை வசனம் திரித்து பகிர்வது உறவே!!

முதிர் பருவத்திரை வைத்து முன்னொகி  நடந்ததை அடையள படுத்துவதும் உறவே!

எத்தனை எத்தனை குடும்பபோரின் வியுகம் வகுத்தாலும் அதன் நுணுக்கத்தை புரிய வைப்பது உறவே!

தனிமை சொல்லிற்கு முற்புள்ளி வைத்து யோசிக்க விடாமல் ஆளும்
தன்மை உறவே!

கேலி பேச்சு, சிரிப்பு, பாராட்டு, பரிசு ஒன்றாக கூடி உணர உறவே!

ஒற்றுமை ,விட்டு கொடுப்பது, சகிப்பு தன்மை என நம்மை கையாளும் அழுமை உறவே!!

சண்டை, சடங்கு, நல்லது, கெட்டது இவற்றை ஒன்றொடு அணைத்து போவது உறவே!!

பாதையற்ற பயணத்தில நமக்கு அனுபவ நிழலை பாடங்களாக எடுத்துரைப் போர் உறவே!!

மன அழுத்த நிலையில்லா வாய்ப்பை யோசிக்க இடம் குடுக்கா
உறவே!!

நீ நான் வாய் மொழியை நாமாக மாற்ற முற்படுவோர் உறவே!!

வட்டத்தில் வாழ வழி வகுக்கும் நம்மை பொறுமை எனும் படகில் ஏற்றி நிறுத்துவது நம் உறவே!!
பின்வரும் காலத்தினர்க்கு நாம் கொடுக்கும் பரிசு உறவுகளின் பெயர் மற்றும் அதன் புரிதலும்

என்றும் உறவை உயிராக நினைக்க ஊன்றுகோள் குடும்பமே!!!


Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 324
Post by: VenMaThI on October 09, 2023, 06:25:06 PM

ஆசையாய் சோரூட்டும் தாயும்
அதட்டினாலும் என்றும் அன்பாய் அணைக்கும் தந்தையும்
மெத்தையாய் தன் மடி கொடுத்த அத்தையும்
நண்பனாக என்றும் தோள் கொடுத்த மாமாவும்
ஆயிரம் கதைகள் சொல்லும் அப்பத்தாவும்
அறிவுரையால் வாழ்கை பாடம் கற்று தரும் தாத்தவும்
ஆடிப்பாடி ஆட்டம் போடும் அக்காவும்
தேடி வந்து சண்டையிடும் தம்பியும்
அப்பாவின் மறு உருவாய் வந்த அண்ணனும்
வீட்டின் கடைக்குட்டியாய் செல்லம் கொஞ்சும் தங்கையும் ...என

ஆலமரமாய் ஒரு வீடு
அதுவே அன்பால் ஆன ஒரு தேறு
கட்டி இழுத்ததென்னவோ அன்பும் பாசமும் தான் .. இன்று
அதெல்லாம் தொலைஞ்சதென்னவோ தொழில்நுட்ப வளர்ச்சியால தான்

அப்பாவின் மடிக்கணினி வந்த நாள் முதல்
அப்பத்தாவின் மடி கொடுத்த சுகம் தெரியல .
கைபேசி வந்த நேரமோ என்னவோ
அம்மாவின் கைபக்குவ சோறு கூட பிடிக்கல ...

தூக்கம் வந்தது கூட தெரியல
அப்பாவை பெத்தவ மடில கதை கேட்டு படுத்தப்ப
தூக்கம் வராம தவிக்கிறேன்
இந்த கைபேசிக்கு அடிமையான காலம் முதல் ...

தொலைவுல இருந்தாலும் அள்ளி அணைத்த உறவு
இங்க அருகில் இருந்தாலும் அந்நியமாய் போனது ..
பாட்டி தாத்தாவின் பார்வையில பாசமா வளந்த புள்ள
பாசாங்க நம்பி பாழாத்தான் போகுது ...

இணையதளம் தான் வந்தது
இணைக்கும் தளமா இருக்கும்னு நெனச்சோம்
இடைவெளி கொடுக்கும் தளமாதான் போச்சு...
இன்னும்  இணையாம  கெடக்குது இன்றைய தலைமுறை

இந்த அவசர உலகத்துல
குடும்பத்துக்காக ஓடினாலும்
குடும்பத்தோட  ஒய்யாரமா உக்காந்து
ஒரு வேல சோறு திங்க முடியல....

கடல் கடந்து போன பிள்ளையின் மனசுக்கு
கத்தி கதறும் தாயின் அலறல் கேக்கல ..
மொழியும் வழியும் அறியா ஊரில் பிள்ளை படும் பாடு
பெத்த மனசால சகிக்க முடியல ...

காலத்தால் அழிந்தது என்னவோ
கூட்டு குடும்பங்கள் மட்டுமல்ல
கூட சேர்ந்து தொலசஞ்சதென்னவோ
நம்ம நிம்மதியும் மகிழ்ச்சியும் தான் ...

கோடி கோடியா கொட்டி குடுத்தாலும் கிடைக்காதைய்யா
அந்த உண்மையான பாசமும் நேசமும் ...

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 324
Post by: Minaaz on October 09, 2023, 09:16:05 PM
வார்த்தைகள் இல்லை வசந்தங்கள் பாடிட்டு வாசல் வந்திட்ட தென்றலின் ஓசையென குலாவிட்ட குடும்பமதின் அன்பினை எழுதிட.........

அழுத பிள்ளையை அரவணைத்திட ஓடிவரும் தாயின் ஆர்வத்தை சுமந்திட்டன.......,
 கூட்டுக் குடும்பத்தின் பக்குவம்......

பசிக்கிறது என்ற வார்த்தையை உச்சரிக்கும் முதல் ஊட்டிவிட பக்கமாய் சாய்ந்திடும் பலரது கைகள்........

கதைகள் பல காதோரமாய் தவழ்ந்தோடிட தலை சாய்ந்திட கிடைத்திடும் பாட்டியின் மடி.....

'பேரா'  என்ற வார்த்தையை பேர் ஆனந்தத்துடன் உச்சரித்த படி ஊர்வலமாய் ஊர் செல்ல உசுப்பேற்றிடும் தாத்தாவின் குழந்தைத்தனம்.....


தவறுகளை திருத்திட கையோங்கிடும் தந்தையின் முடிவுகளை முடிச்சிட்டு, முத்தத்தால் தவறுகளை துடைத்தெறிந்திடும் சித்தி சித்தப்பாக்கள்.....

கொஞ்சி குலாவிட கிண்டல் கேலியென சுமத்திட வரமாய் அமைந்திட்ட  அண்ணாக்கள்....


'டேய்' என்று அதட்டலாய் மிரட்டிட கிடைத்திட்ட உடன் பிறவா உயிர் தோழிகள் என அக்காக்கள்....


வாழ்வின் முடிவுகளைக் கூட முன்னுதாரணமாய் மிகை மிஞ்சிடும் நபர்களில் பறை சாற்றிட்டு பதராமல் தனித்துவமாய் கேட்டு நடந்திடும் மனோநிலை......


இமையோரம் எட்டிக் கடந்திடும் கண்ணீரைக் கூட முத்திலும் பெறுமதியாய் அணுகிடும் கலைகள்...


எத்துனை இன்பங்கள் எத்துனை கனாக்கள் ஒருவரின் வலியை ஒவ்வொருத்தராய் அனுபவிக்கும் உண்ணதம் மிக்க அழகான கவியாய் கூட்டுக் குடும்பம்.......

கல்விட்டெறிந்து சிதறியோடிட்ட தேனீகளாய் ஆங்காங்கே சிதறலாகிற்று கருக்குடும்பமாய்....
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 324
Post by: Arjun_here on October 09, 2023, 10:37:45 PM
கூடு


குவியலினுள்ளே கிடைத்த ஓர் படம்
அப்படத்தினுள்ளே நிலைத்த என் மனம்
கருந்துளையாய் நினைவுகள் இழுக்க
கண் விசும்பில் காட்சிகள் திறக்க..

கூடிவரும் சொந்தங்கள்
இனிப்பான பண்டங்கள்
நினைவழிந்த சண்டைகள்
நிறுத்தாத கிண்டல்கள்

கூச்சலிடும் கால் அடிகள்
கொக்கரிக்கும் பேச்சொலிகள்
காத்திருக்கும் புது உடைகள்
கார் குழலில் துளிர் மலர்கள்

மண் அறியா பறவைகளாய்
மகிழ்ச்சியில் திளைத்திருந்தோம்
கூடென்பது பொதுவாக
கூட்டமாய் அலங்கரித்தோம்..

சோகங்கள் அன்றில்லை
சோர்வுக்கும் இடமில்லை
நேரத்தின் நினைவில்லை
நேசிப்பிற்கு அளவில்லை

காலங்கள் தான் நகர
கடமைகளும் சேர்ந்துயர
கூடென்பது துண்டாக
கூட்டங்களும் இடம்மாற..

நாமெங்கோ நகர்ந்தாலும்
நினைவென்பது விலகாது
நேசத்தின் பெரும்வலிமை
நேரம் கூட உடைக்காது..

கால வழி பயணம் முடித்து கண் திறந்தேன்..
கைபேசியை எடுத்தேன் , அழைத்தேன், இணைத்தேன் அனைவரையும்..
ஒன்று கூடுவோம் மீண்டும் நம் கூட்டில்..!
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 324
Post by: PreaM on October 09, 2023, 10:59:16 PM
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
கூட்டுக் குடும்பம் ஒரு பல்கழைக்கழகம்
குடும்பத் தலைவன் வீட்டின் அரசன்
குடும்பத் தலைவி  அரசி  ஆவார்
பிள்ளைச் செல்வம் அவர்தம் மக்கள்

உறவின் உன்னதம் மகிழ்ச்சியின் மகிமை
தாயின் பாசம் தந்தையின் நேசம்
கணவனின் பண்பு மனைவியின் அன்பு
மூத்தோரின் அறிவுரையே  இளையோரின் வழிமுறை
பிள்ளையின்  சாதனை பெற்றோரின் போதனை

கூச்சல் குழப்பம் இரண்டும் உண்டு
குடும்பம் நடத்த வரைமுறை உண்டு
உறவுகள் வெறும் உறவுகள் அல்ல
உறவுகள் நம் உள்ளத்தின் உணர்வுகள்
உறவால் நாம் ஒன்றுபடுவோம்

வாழ்க்கையை வாழ்வது ஆனந்தம்
கூடி வாழ்வது வாழ்க்கையில் பேரானந்தம்
உறவால் இணைந்திரு மகிழ்ச்சியில் மனசு நிறைந்திரு
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
கூட்டுக் குடும்பமே குதூகலமான வாழ்வு
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 324
Post by: Sun FloweR on October 10, 2023, 12:14:33 AM
அன்பின் அட்சயபாத்திரம் அது...
அக்கறையின் முகவரி அது..
பாசப் பறவைகளின் செல்லக்கூடு அது..
உறவு தேனீக்களின் தேன் கூடு அது..

இன்பத்தின் இருப்பிடமாம் அது..
நிம்மதியின் வாழ்விடமாம் அது..
நம்பிக்கையின் பாட்டாம் அது...
உவகையின் ஊற்றாம் அது..

தந்தையின் அதிகாரத்தில்
ஒளிந்திருக்கும் அன்பு..
தாயின் அரவணைப்பில்
அடங்கியிருக்கும் அதிகாரம்..
தாத்தாவின் கண்டிப்பில்
பதுங்கியிருக்கும் பாசம்..
பாட்டியின் நேசத்தில்
மறைந்திருக்கும் கண்டிப்பு..
அண்ணனின் அடாவடியில் ஒடுங்கியிருக்கும் அக்கறை...
தங்கையின் விளையாட்டில்
புதைந்திருக்கும் அடாவடி...

ஒற்றுமை எனும் பெயரில் வாழ்ந்து வரும் இமாலயம் அது..
உடலுக்குள் ஒளிந்திருக்கும் ஆத்மா போல் பிரிக்க முடியாதது..
அதன் பெயரே நம்பிக்கை,
அதன் பெயரே மகிழ்ச்சி,
அதன் பெயரே பாதுகாப்பு,
அதன் பெயரே கூட்டுக் குடும்பம் ..

கூட்டுக்குடும்பம் என்ற பாதுகாப்பு அரணை  உணர்வுகளால் பாதுகாப்போம்.,
கூட்டுக் குடும்பம் என்ற
சமூக பண்பாட்டை ஒற்றுமையால் பலப்படுத்துவோம் ...

21ம் நூற்றாண்டு கடந்து,
201வது நூற்றாண்டு ஆயினும்
நம் முன்னோர் வழியில்
தனிக் குடும்பம் ஒதுக்கி
கூட்டுக் குடும்பம் பெருக்கி வாழ்ந்திடுவோம் வையம் போற்ற !!!
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 324
Post by: Ishaa on October 10, 2023, 12:43:15 AM
கருவறையில் தொடங்கியது பெற்றோர் அன்பு!
கல்லைரை தாண்டியும் இதே அன்பு நிலைக்கும்!

மகளாய் வந்தேன் இவ்வுலகில்.
அப்பா என் தோழனாக.
நீ உன் ஆயிரம் கனவை எங்களுக்காக
இழந்தாலும் எம் ஆசைகளுக்கும்
தேவைகளுக்கும் ஒரு போதும் குறை வைத்தது
இல்லை.

நீ என்னை பசியில்
தூங்க விட்டதும் இல்லை .
நான் வீடு வராமல் நீ
தூங்குனதும் இல்லை


அம்மா என் உயிராக.
கருவரையில் 9 மாசம் சுமந்தாய்.
வாழ்நாள் தோறும் உன் மனதில் சுமக்கிறாய்.

என் கண்ணில் நீர் வந்தால் ஒரு போதும் தாங்க மாட்டாய்.
உனக்காகவே நான் தைரியமாக இருக்கிறேன் .
அப்பா விட்டு சென்ற நாட்கள் அதிகம் ஆக
உன் மனவலிமை கண்டு வியக்கிறேன் .


அக்கா என் இரண்டாம் தாயாக
ஒன்று அல்ல இரண்டு அல்ல மூணு சகோதரிகள்
எனக்கு கிடைத்தது.

சிறு வயதில் ஒரு போதும் என் கால் தரையில் படவில்லை
நம் குறும்பு தனத்துக்கும் ஒரு எல்லை இல்லை
வீடு எப்போதும் கல கலவென்று இருக்கும்
நம் வீட்டில் புது வரவு
வரும் வரைக்கும்
மூணு புது மாப்பிள்ளைகள்
வந்தாங்க
மணம் முடித்து புகுந்த வீட்டுக்கு சென்றார்கள் .
என்னை மச்சாள் என்று
பார்த்ததை விட என்னை
அவங்க மூத்த குழந்தையாய்
ஏற்று கொன்றனர்
மூணு அத்தான்களும்


சித்தி என்ற உறவு ஓர் அழகிய உறவு
என் முதல் மகளை கையில் ஏந்தி கொள்ளும் போது
தாய் ஆகாமல் தாய் சேவை செய்தேன்

தாய் தந்தைக்கும்
சொல்ல முடியா ரகசியங்கள்
சித்தி என்னிடம் வந்து
கூறுவார்கள்
தோழி ஆக சில சமையம்
சின்னம்மா ஆக சில சமையம்.

அப்பாவின் தோளில் சாய்ந்து
தைரியம் கொள்வதும் …

அம்மாவின் மடி சாய்ந்து ,
ஆறுதல் கிடைப்பதும் …

அக்காமாரோடு 3 மணிநேரம்
தொலைபேசியில் பேசி
மனபாரத்தை குறைப்பதும் …

பெறா மகளோடும் மகனோடும் ,
ஒரு மிட்டாய்க்கு செல்ல
சண்டை பிடிப்பதும் …

வாழ்வின் ஒரு வகை
சுகம் தான் .

வாழ்க்கையை முடிக்க வாழ்வு
ஆயிரம் காரணங்கள் தந்தாலும்
நான் வாழ்வதற்கு ஒரே
காரணம்

என் குடும்பம்
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 324
Post by: joker on October 10, 2023, 11:52:01 AM
எத்தனை முறை முயன்றும்
முடியாமல்
வார்த்தை வெளிவர
தயங்கி நின்றிருக்கிறேன்
உன்னிடம் சொல்ல

தெரியவில்லை
இன்று எப்படி சரளமாய் சொன்னேன்
உன்னிடம் என் காதலை
கனவே கலையாதே

அன்புக்கும் ஆசைக்குமாக
ஓர் ஆண் ஓர் பெண் குழந்தையென
மிகிழ்ச்சியின் வெளிச்சத்தில்
என் குடும்பம்
கனவே கலையாதே

மாமியாரும் மருமகளும்
அம்மாவும் மகளுமான
பாசத்தின் மிச்சம் பகிர்ந்து
திளைத்திருக்க
கனவே கலையாதே

வாழ்வில் சேமித்துவைத்த
மொத்த பேரன்பையும்
பேர பிள்ளைகளிடம்
கொட்டும் தாத்தா பாட்டிகள்
சூழ் உறவு சொர்கமே
கனவே கலையாதே

தனிமையின் கவலை
மறந்திருக்க
தொலைபேசியும்,
இணையமுமின்றி
வீட்டில் உறவுகள்
நிறைந்திருக்க
கூட்டு குடும்பத்தின்
இன்பத்தில் நான் திளைத்திருக்க
கனவே கலையாதே

அழைக்காமல் வந்து
என்னை மகிழ்ச்சியில்
ஆழ்த்தும் என் மனதின் ஆசை
அறிந்த என்
கனவே கலையாதே
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 324
Post by: JenifeR on October 11, 2023, 03:48:39 AM
டோப்பமின்,  செரோட்டின்
அளவிற்கு  பஞ்சமில்லை
என்  உடல்  முழுவதும்  சந்தோச  ஹார்மோன்கள். ...
காரணம்  அழகான  குடும்பம்
கோவிலுக்கு  ஏனோ  செல்ல மறுத்தேன்
உங்களை  தெய்வமாய்  ஏற்று  கொண்டதால்
உன் உயிரில்  உயிர் கொடுத்த
உனக்காக
நான்  என்ன  கொடுப்பேன் ?
என் அன்பை  தவிர
சுக  பிரசவத்தில் சுகத்தை  தவிர
எல்லாம்  அனுபவித்த
என் அன்னையே
உனக்காக  நான் ஒன்றும்
கொடுத்ததில்லையே
வயது  வந்த பின்னும்
என் ரத்த  கரை  படிந்த  ஆடைகளை
முகம்    சுளிக்காமல் துவைப்பாய்
உனக்கு  எப்படி நன்றி  சொல்லுவேன்
எத்தனை  வயது  ஆனாலும்
ஒரு  குழந்தையை போல 
உணருகிறேன்
உன் முன்னே
வாழ்க்கையில்  தோல்விகள்  பல
கண்டபோதும்
தோள் கொடுத்த  என்  இளையவனே
இன்று  வரை  என்  சுமைகளை
நீயும்  சுமக்கிறாய்
என்னோடு  நீ பிறக்க
எத்தனை  தவம்  செய்தேனோ?
என் தம்பி
சொர்க்கமே  வேண்டாம்
என் பாட்டி  மடி  போதும்  என 
அழுத  காலம்
நீ  காட்டிய  அன்பை
நான் இதுவரை 
யாரிடமும்  கண்டதில்லை
கண்ணீர்  எட்டி  பார்க்கிறது
உன்னை  நினைக்கும் போது
இத்தனை அன்பையும்  பிரித்தே 
வைத்திருக்கிறது
பணம்  என்னும்  காகிதம்