Author Topic: பிரபஞ்சம்  (Read 1323 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
பிரபஞ்சம்
« on: November 21, 2011, 05:17:39 AM »
பிரபஞ்சம் உருவாவதற்கு முன் எப்படி இருந்தது?

உலகத்திலேயே விடைகான முடியாத மிகப்பெரிய கேள்விகளுள் ஒன்றாக  கருதப்படுவது பிரபஞ்சம் உருவாவதற்கு முன் எப்படி இருந்தது என்பது.  ஒரு பக்கம் பார்த்தல் இது ஒரு மிக சுலபமான கேள்வியாக தெரிகிறது.

பிரபஞ்சம்  உருவாவதற்கு முன் எந்த நிலையில் இருந்ததோ அந்த நிலைக்கு செல்வது என்பது மிகவும்  சுலபமான ஒன்று.ஒவ்வொரு உயிரினமும் அந்த நிலைக்கு  தினமும் செல்கின்றது என்று சொன்னால்  நம்புவீர்களா?
ஆனால் அதுதான் உண்மையாக இருக்குமோ என்ற அசைக்க முடியாத நம்பிக்கை உருவாகின்றது.

அது என்ன நிலை?
நீங்கள் தினமும் தூங்குகின்றீர்கள் அல்லவா அந்த நிலை தான் பிரபஞ்சம் உருவாவதற்கு முன்பு இருந்தது. (அல்லது இருந்திருக்க வேண்டும்).
அதவாது சிந்தனையற்ற ஒரு நிலை...வெளிச்சமும் அல்லாத இருளும் இல்லாத ஒரு நிலை.
அந்த நிலை எந்த வண்ணத்தில் இருந்தது என்று அறிய வேண்டுமா? இருளான ஒரு அறையில் உங்கள் கண்களை மூடி பாருங்கள் அந்த நிறத்தில் தான் உலகம் உருவாவதற்கு முன்பு இருந்தது.

பிரபஞ்சம்  உருவாவதற்கு முன் எப்படி இருந்தது என்று பார்த்தாயிற்று அடுத்த பதிவில் பிரபஞ்சம் உருவாகும்  பொழுது  எந்த வண்ணத்தில் இருந்தது என்று பார்ப்போம்.


இதனுடன்  தொடர்புடைய  சில  பதிவுகள்  தங்கள்  பார்வைக்கு
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: பிரபஞ்சம்
« Reply #1 on: November 21, 2011, 05:20:58 AM »
பிரபஞ்சத்தில் முதலில் உருவானது எது?


பிரபஞ்சம் எப்படி உருவானது என்பது பற்றி பல கருத்துக்கள் நிலவுகின்றன.
பெருவெடிப்பின் அதாவது "big bang"  மூலம் தான் பிரபஞ்சம் உருவானது என்று பெரும்பாலான அறிவியலாளர்கள் சொல்கின்றனர். இதில் பாதி உண்மையும் பாதி பொய்யும் உள்ளதாகவே நான் கருதுகிறேன்.


இன்றைய பிரபஞ்சம் பெருவெடிப்பின் மூலமாக உருவாகி இருந்தாலும் அதுவே முழு முதல் தொடக்கம் அல்ல. அது ஒரு தொடர்ச்சியான நிகழ்வே.  அதாவது பெருவெடிப்புக்கு முன்பே பிரபஞ்சம் தோன்றியிருக்க வேண்டும்.


அப்படி பெருவெடிப்புக்கு முன்பே பிரபஞ்சம் தோன்றி இருந்தால் முதலில் என்ன தோன்றியிருக்க வேண்டும் என்பதுதான் அடுத்த கேள்வி.


சென்ற பதிவில் பிரபஞ்சம் தோன்றும்பொழுது எந்த வண்ணத்தில் இருந்திருக்கும் என்று கேள்வி எழுப்பினேன். அதற்க்கான பதில் "கருப்புக்கும் நீலத்திற்கும் இடைப்பட்ட ஒரு வண்ணம்" அதை "நீலம்" என்றும் சொல்லலாம். . இப்பொழுது உங்களுக்கு தெரிய வந்திருக்கும் பிரபஞ்சத்தில் முதலில் தோன்றியது எது என்று.
ஆம் அதுதான் வானம்.


இதை நீங்கள் உங்களின் அகத்தாய்வின்  மூலம் "காண" முடியும் ஆமாம் "காண" முடியும் என்றே நான் நினைக்கின்றேன்.  இது என்னுடைய கற்பனையா அல்லது உண்மையா என்பதை நீங்கள் அகத்தாய்வின் மூலம் மட்டுமே உணர முடியும்.


அகத்தாய்வில் இருப்பவர்களில் பலர்  முதன் முதலில் கிளிபச்சை நிறத்தை  காண்பதற்கான  வாய்ப்புகளே அதிகம்.
ஆதலால் சிலருக்கு கிளிப்பச்சை நிறம் தான் பிரபஞ்சத்தில் முதலில்
 தோன்றி இருக்குமோ என்ற எண்ணம் வரலாம். அது சரியா தவறா என்று எனக்கு தெரியவில்லை. வள்ளலாரின் கூற்றுப்படி இந்த கிளிப்பச்சை நிறம் தான் ஆன்மாவை மறைத்திருக்கும் முதல் திரை.