Author Topic: எல்லா மொழியின் முதல் எழுத்தும் அ என்பது உங்களுக்கு தெரியுமா?  (Read 1005 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
எல்லா மொழியின் முதல் எழுத்தும் அ என்பது உங்களுக்கு தெரியுமா?


உலகில் உள்ள அனைத்து மொழிகளின் முதல் எழுத்தும் அ தான் என்பது  உங்களுக்கு  தெரியுமா?   ( மாற்று கருத்து இருந்தால் தெரிவிக்கலாம்).  அது தமிழானாலும் சரி... ஆங்கிலம் ஆனாலும் சரி...அரபியானாலும்  சரி. இது ஏன்? எப்படி சாத்தியம் என்று கேட்டால் எனக்கு பதில் தெரியாது. தெரிந்தவற்றை சொல்ல முயல்கிறேன்.


 நமது வள்ளுவரின் முதல் குறள் என்ன சொல்கிறது
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
இதற்கு பொருள்

'' மு.வ : எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.


சாலமன் பாப்பையா : எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது.
நன்றி:தினமலர் "

ஆனால் இந்த குறளுக்கு உண்மையான பொருள் எப்படி இருக்க வேண்டும் எனில்


 "எப்படி  அனைத்து மொழிகளின் எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றதோ அதுபோல் உலகமானது கடவுளிலிருந்தே தொடங்கியது".

அதாவது மற்ற அறிஞர்கள்  கூறியது போல் அல்லாமல் எழுத்துக்களுக்கு பதில் மொழி என்று இருக்க வேண்டும் எனபதே என் கருத்து.

(வள்ளுவர் தமிழ் எழுத்துக்களுக்கு மற்றும் இதை சொல்லி இருக்க வாய்ப்பு  இல்லை என்றே எனக்கு தோன்றுகிறது அவர் அனைத்து மொழிகளுக்கும் தான் இதை கூறி இருக்க வேண்டும்)
எனக்கு தெரிந்து அனைத்து மொழிகளின் முதல் எழுத்தும் அகரத்தில் தான் ஆரம்பிக்கின்றது.

ஏன் அனைத்து மொழிகளும்  அகரத்தில் ஆரம்பிக்க வேண்டும்? தெரியவில்லை....ஒரு வேலை இதுவும் கடவுளின் செயலா?

ஒருவேளை வள்ளுவர் மொழியைக் காட்டி கடவுளை நிரூபிக்கின்றாரா?
வள்ளுவர் கடவுள் என்று எதை குறிப்பிடுகிறார்  என்பது ஆய்வுக்குரிய ஒன்று ஆனால் கடவுளிலிருந்தே உலகம் தோன்றியது என்ற கூற்றில் அவர் உறுதியாக உள்ளார்.

உலகத்தில் முதலில் ஒரு வார்த்தை தோன்றியது  என்று வேதங்களும் கூறகிறது பைபிளும்  கூறுகிறது...
அது என்ன எழுத்து?
ஓம் எனும் எழுத்துதான் அது.

சரி அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?
இருக்கின்றது...உண்மையில் அது ஓம் அல்ல
அது "அ உ ம்"  என்ற வார்த்தை தான்.அதாவது அகரம் உகரம் மகரம் என்பார்கள் இதை.
அடிக்கடி சொல்ல சொல்ல அது "ஓம்" என  மாறும்.

ஆக உலகில் முதலில் எழுந்த  ஒலி  அகரம் ஆதலால் தான் அனைத்து மொழிகளின் முதல் எழுத்தும் அகரத்தில் ஆரம்பிக்கின்றது.


இவ்வுலகில் பிறந்த அனைவரும் ஓம் என்ற வார்த்தையை உபயோகிக்கிறார்கள்  என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா?
ஆனால் அதுதான் உண்மை.

ஒவ்வொரு மனிதனின்  மூச்சு காற்றும்  ஓம்  என்று தான் சொல்லும்....உன்னித்து கவனித்து பாருங்கள். ஓம் நின்றால் உயிர் இல்லை உலகும்  இல்லை.



ஆக உலகில் முதலில் எழுந்த  ஒலி  அகரம் ஆதலால் தான் அனைத்து மொழிகளின் முதல் எழுத்தும் அகரத்தில் ஆரம்பிக்கின்றது. அது மட்டுமல்ல அந்த அ உ ம - ஓம் ஒலியினால் தான் இவ்வுலகமே இயங்குகின்றது.