FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: சாக்ரடீஸ் on March 11, 2024, 12:40:34 AM

Title: பேரன்பின் கூழாங்கல் !
Post by: சாக்ரடீஸ் on March 11, 2024, 12:40:34 AM

மீண்டும்
கிறுக்க தொடங்கி உள்ளேன்
நதியின் முழு குளிரை
ஒளித்து வைத்து
இருக்கும் கூழாங்கல் போல்
என் முழு அன்பை
ஒளித்து வைத்து
இருக்கும் உன்னை
தக்க வைக்க தெரியாமல்
பரிதவிக்கிறேன்
என்ன செய்ய
என் பேரன்பின் சிறந்த முரண் நீ