Author Topic: முட்டாள்கள் தினம் ஸ்பெஷல்!  (Read 2592 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
முட்டாள் யார்? முட்டாள்கள் தினம் ஸ்பெஷல்!

அது என்னவோ இந்த முட்டாள்கள் தினத்தில் APRIL FOOL செய்வதில் நமக்கெல்லாம் அவ்வளவு ஆனந்தம்! கீழே உள்ளவற்றைப் படித்துவிட்டு பின்னர் கூறவும் யார் முட்டாளென்று!

ஆளுர அரசாங்கம் மோசமமென்று கூறி, பேய் வேண்டாமென்று பிசாசைத் தேர்ந்தெடுப்போம், பின் ஐந்து வருடம் கழித்து, பிசாசு வேண்டாமென்று பேயைத் தேர்ந்தெடுப்போம். பின்னர் மறுபடியும் அதான்!

யார் வந்தாலும் ஒன்றும் நமக்கு செய்யப்போவதில்லை என்று தெரிந்தும் ஐந்து வருடத்திற்கு ஒருமுறை முட்டாள் என்று மை வைத்துவிட்டு வருவோம்! இருக்கும் MLA, MPக்களில் எவ்வளவு பேர் படித்தவர், எவ்வளவு பேர் கோடீஸ்வரர், எவ்வளவு பேர் ரவுடி என்று பாருங்கள், வித்தியாசம் புரியும்!

நாட்டுக்கு எவன் நல்லது செய்வான் என்று ஓட்டுபோடுவதெல்லாம் பல நூற்றாண்டுகளுக்கு முன், இப்பவெல்லாம் எவ்வளவு இலவசம், குவாட்டர், கோழி பிரியாணி! அல்லது என் சாதி, மதம், இனம்!


எவ்வளவுதான் ஊழல் செய்தாலும், கற்பழிப்பே செய்தாலும், ஏன் கொலையே செய்தாலும் கூட, வழக்கு அவனின் வாழ்நாள் முழுவதும் நடக்கும்! தீர்ப்பு வருவதற்கு முன் அவன் செத்துவிடுவான்! அப்புறம் யாருக்கையா தண்டனை கொடுப்பீங்க?

எவ்வளவு குற்றம் செய்தாலும் ஜாமீனில் வந்து விடலாம்! பிறகென்ன அடுத்த குற்றத்தை எப்படி பண்ணுவது என்று யோசிக்க வேண்டியதுதானே? - எல்லா சட்டங்களும் குற்றவாளிகளுக்கே சாதகமாய் எழுதப்பட்டது ஏனோ?

அரசாங்கம் என்னதான் கெஞ்சினாலும் சரி, கால்ல விழுந்து கதறினாலும் சரி - பைக்ல ஹெல்மெட் போடுற பழக்கமே கிடையாது (நானும்தேன்!). பக்கத்திலதானே போகிறேன் என்று விளக்கம் வேறு! - விபத்து சொல்லிக்கிட்டு வராதுடா வென்றுகளா!

ஒவ்வொரு நடிகருக்கும் பால் அபிசேகம், பன்னீர் அபிசேகம், அவர்தான் என் வாழ்நாள் ஹீரோ என்று சொல்லிக்கிட்டு அலையிறோம்! ஒரு நாள் கூட ஓட தகுதியில்லாத படத்தையெல்லாம் 50 நாட்கள் ஓட வைக்கிறோம்! மேக்-அப் போட்டா கழுதையும் குதிரை ஆகும்! இது நமக்கேன் தெரிவதில்லை?

தன் வாழ்நாளையே நமக்காச் செலவிடும் பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் விடும் பிள்ளைகள் எத்தனை பேர்? இவர்களுக்கெல்லாம் ஏன் தெரிவதில்லை – குருத்தும் பழுக்கும்!

வாழ்க்கைல பாதிநாள் பணம் தேடிவதிலும், மீதி நாள் தூங்குவதிலுமே போய்விடுகிறது! அப்புறம் நமக்கெதுக்கு வாழ்க்கை? கிடைச்ச ஒரு வாழ்க்கைய சந்தோசமா ஏத்துக்கறமா? சந்தோசங்களை அனுபவிக்கறமா?

இப்ப சொல்லுங்க நீங்க APRIL FOOL பண்ணியவர் முட்டாளா? இல்லை வருடம் முழுவதும் APRIL FOOL ஆகுற நாம முட்டாளா?


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Yousuf

நல்ல தகவல் சகோதரி ஸ்ருதி!

சிந்திக்க வேண்டிய விடயங்கள்!

நாமும் சிந்திப்போம்! பிறரையும் சிந்திக்க வைப்போம்!

நன்றி!