தமிழ்ப் பூங்கா > காலக்கண்ணாடி

"ஆய கலைகள் அறுபத்து நான்கு"

(1/3) > >>

Global Angel:
அபிநயம்

அபிநயம் என்பது கதாபாத்திரத்திற்கேற்ப கருத்துக்களையும், உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தும் கலை. அதாவது ஒரு கதையிலோ அல்லது பாடலிலோ வரும் ஒவ்வொரு வார்த்தையினது கருத்தையும் வாயினாற் சொல்லாது கையினாலும், தலை, கண், கழுத்து முதலிய அங்கங்களினாலும் பார்ப்பவர் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் செய்யப்படும் செய்கையே அபிநயம் ஆகும். அபிநயம் இரண்டு வழிகளால் சித்தரிக்கப்படுகிறது. ஒன்று உலக வழக்கு. இது லோக தர்மி எனப்படும். மற்றொன்று நாடகவழக்கு. இது உலக வழக்கிற்கு சற்று அப்பாற்பட்டு கலைவடிவத்திற்கு முதலிடம் அளிக்கும். இது நாடக தர்மி எனப்படும். உலக வழக்கிற்கு எடுத்துக்காட்டு உண்மையான கண்ணீர். கண்ணீர் சிந்துவது போல் நடிப்பது நாடக வழக்காகும். அபிநயத்தில் நடிப்பு, பாவம் பல்வேறு அங்க நிலைகள் போன்றவை ஆடுபவரின் மன எழுச்சிகளை உணர்த்தப் பயன்படுகின்றன.

வகைகள்

பரத நாட்டியத்தில் நான்கு விதமான அபிநயங்கள் அபிநயிக்கப்படுகின்றன. அவையாவன:

    ஆகார்ய அபிநயம்
    வாசிக அபிநயம்
    ஆங்கிக அபிநயம்
    சாத்விக அபிநயம்

ஆகார்ய அபிநயம்

அலங்காரம் மூலம் அபிநயித்தல் ஆகார்ய அபிநயம் எனப்படும். முக ஒப்பனை, உடை, அணி அலங்காரம், மேடை அமைப்பு முதலியவை பரத நாட்டியத்தில் முக்கிய இடம் பெறுகின்றன. சிவனாக ஒருவர் ஆட வேண்டுமென்றால் அவர், சடாமுடி, பிறைச்சந்திரன், பாம்பு, புலித்தோல், நெற்றியில் திருநீறு முதலான ஒப்பனைகளைச் செய்துகொள்ள வேண்டும். இந்த ஒப்பனைகள் அவரைச் சிவனாக உணர்த்தும். இவ்வாறு அபிநயம் செய்வது ஆகார்ய அபிநயம் எனப்படும்.
வாசிக அபிநயம்

பாடலுக்கேற்ப அபிநயிப்பது வாசிக அபிநயம் எனப்படும். இந்த அபிநயத்திற்குப் பாடல் முக்கியம். பாடற்பொருள் அபிநயிக்கப்படும். ஆடுபவரே பாடலைப் பாடி அபிநயிப்பார். தற்காலத்தில் வேறொருவர் பக்க இசை பாட ஆடுபவர் அதற்கேற்ப அபிநயம் செய்து ஆடும் பழக்கமும் நடைமுறைக்கு வந்துள்ளது.

ஆங்கிக அபிநயம்

உடல் உறுப்புகளால் உள்ளக் கருத்தை வெளிப்படுத்துவது ஆங்கிக அபிநயம் எனப்படும். உடல் உறுப்புகளுக்குத் தனித்தனிச் செய்கைகள் உண்டு. இவற்றில் கைமுத்திரைகள் முதன்மையானவைகளாகவும், சிறப்பானவைகளாகவும் கொள்ளப்படுகின்றன. கைமுத்திரை என்பது விரல்களின் செய்கைகளாகும். பரத நாட்டியத்தில் ஒற்றைக்கை முத்திரைகளும், இரட்டைக்கை முத்திரைகளும் உள்ளன. ஒற்றைக்கை முத்திரை தமிழில் பிண்டி எனவும், சமஸ்கிருதத்தில் அசம்யுதஹஸ்தம் எனவும் குறிப்பிடப்படுகிறது. இரட்டைக்கை முத்திரை தமிழில் பிணையல் எனவும், சமஸ்கிருதத்தில் சம்யுதஹஸ்தம் எனவும் குறிப்பிடப்படுகிறது. பாடலின் பொருளைக் கைமுத்திரைகள் காட்டுகின்றன. கை முத்திரைகள் வழி கண் செல்லும். கண்கள் செல்லும் வழி மனம் செல்லும். மனம் செல்லும் வழி உள்ளத்தின் உணர்வு செல்லும்.


அபிநயதர்ப்பணம் என்னும் நூலில் நந்திகேஸ்வரர் இந்த அபிநயம் பற்றி இப்படிக் குறிப்பிடுகிறார்.
'யதோ ஹஸ்தஸ், ததோத்ருஷ்டி
யதோ த்ருஷ்டிஸ், ததோ மன
யதோ மனஸ், ததோ பாவோ
யதோ பாவ ஸ்ததோ ரஸ

(அபிநயதர்ப்பணம்) கம்பராமாயணத்தில் மிதிலைக் காட்சிப் படலத்தில் கம்பரும் இதையே சொல்கிறார்.

கைவழி நயனஞ் செல்லக்
கண்வழி மனமும் செல்ல
மனம் வழி பாவமும்
பாவ வழி ரசமும் சேர

    (பாடல் எண் : 572)

சாத்விக அபிநயம்

நவரசம் எனப்படும் ஒன்பது சுவைகளாகிய பயம், வீரம், இழிப்பு, அற்புதம், இன்பம், அவலம், நகை, கோபம், நடுநிலை ஆகிய உணர்வுகளை கை முத்திரைகள், முக பாவம் போன்ற உடல் மெய்பாடுகளால் அபிநயித்தல் சாத்விக அபிநயம் எனப்படும்.
பாவங்கள்

அபிநயத்தில் குறிப்பிடப்படும் பாவங்கள் ஒன்பது வகைப்படும். அவையாவன:

    ஸ்ருங்காரம் (வெட்கம்)
    வீரம்
    கருணை
    அற்புதம்
    ஹாஸ்யம்(சிரிப்பு)
    பயானகம் (பயம்)
    பீபல்சம் (அருவருப்பு)
    ரெளத்ரம் (கோபம்)
    சாந்தம் (அமைதி)

Global Angel:
தாளம் (இசை)

தாளம் இசையில் கால அளவுகளை ஒழுங்கு முறையில் அமைப்பதற்கு பயன்படுவது ஆகும். கர்நாடக இசையில் தாளங்கள் ஏழு வகைகளாக உள்ளன. இவற்றை சப்த தாளங்கள் என்றும் கூறுவர். சப்தம் என்பது வடமொழியில் ஏழு என்று பொருள்படும்.

"பாட்டின் கால அளவை சேர்த்து கையினாலாவது, வேறு கருவிகளினாலாவது தட்டுவது தாளமெனப்படும். இத்தாளத்தின் உற்பத்தியானது காலம், செய்கை, அளவு என்ற மூன்று முக்கியமான அம்சங்கள் இருக்கின்றன. இம்மூன்றும் ஒன்று சேர்ந்து இருக்கும்போதுதான் தாளத்தின் உற்பத்தி உண்டாகின்றது. காலம் என்பது கணம், இலம் முதலியன. செய்கை என்பது அடிக்கப்படும் இரண்டு பொருள்களின் சேர்க்கை. அளவென்பது செய்கைக்கு நடுவிலிருக்கும் இடைவெளியாகும்

ஏழு தாளங்கள்

    துருவ தாளம்
    மட்டிய தாளம்
    ரூபக தாளம்
    ஜம்பை தாளம்
    திரிபுடை தாளம்
    அட தாளம்
    ஏக தாளம்

நாடிகள்

தாளங்களின் அமைப்பு நாடிகள் அல்லது பிராணன் என்று சொல்லப்படும் 10 கூறுகளினால் தீர்மானிக்கப்படுகின்றன. இந்த பத்து நாடிகள் பின்வருமாறு:

    காலம்
    மார்க்கம்
    கிரியை
    உறுப்பு
    எடுப்பு
    ஜாதி
    களை
    லயம்
    யதி
    பிரஸ்தாரம்

தாள உறுப்புக்கள்

தாளத்துக்கு ஆறு அங்கங்கள் அல்லது உறுப்புக்கள் உண்டு. அவையாவன:

    லகு (|)
    அனுதிருதம் (U)
    திருதம் (O)
    குரு (8)
    புளுதம் (1/8)
    காகபாதம் (+)

தாள உறுப்புகளின் விவரங்கள்

லகு என்பது ஒரு தட்டும், அதை தொடர்ந்து வரும் விரல் எண்ணிக்கைகளும் சேர்ந்ததாகும். உள்ளங்கை கீழே பார்த்திருக்க வலது கையால் தொடையில் அல்லது மற்றக் கையில் ஒரு தட்டுத் தட்டி அதே கையின் சுட்டு விரலிலிருந்து தொடங்கி எண்ணப்படும். இந்த எண்ணிக்கை மாறுபடலாம். இங்கே ஒரு தட்டும், ஒவ்வொரு விரலெண்ணிக்கையும் சம கால அளவுகளைக் கொண்டன. இக் கால அளவு ஒரு அட்சரம் எனப்படும். வெவ்வேறான விரலெண்ணிக்கைகளின் அடிப்படையில் ஐந்து வகையான "லகு"க்கள் உள்ளன. இவை,

    திச்ர லகு - ஒரு தட்டும், இரண்டு விரலெண்ணிக்கைகளும் - 3 அட்சரங்கள்
    சதுச்ர லகு - ஒரு தட்டும், மூன்று விரலெண்ணிக்கைகளும் - 4 அட்சரங்கள்
    கண்ட லகு - ஒரு தட்டும், நான்கு விரலெண்ணிக்கைகளும் - 5 அட்சரங்கள்
    மிச்ர லகு - ஒரு தட்டும், ஆறு விரலெண்ணிக்கைகளும் - 7 அட்சரங்கள்
    சங்கீர்ண லகு - ஒரு தட்டும், எட்டு விரலெண்ணிக்கைகளும் - 9 அட்சரங்கள்

அனுத்திருதம் ஒரு தட்டை மட்டும் கொண்டது. லகுவில் உள்ள முதல் அட்சரம் இதுவே. எனவே லகுவில் முதல் தட்டைப் போடும் விதமாகவே இதையும் போடவேண்டும்.

திருதம், இரண்டு அட்சர காலம் கொண்ட தாள உறுப்பு. ஒரு தட்டும், ஒரு வீச்சும் கொண்டது. வீச்சு என்பது தட்டிய பின் கையைத் தட்டிய இடத்திலிருந்து தூக்கி உள்ளங்கை மேல் நோக்கும் படி வீசுவதாகும். கையைத் திருப்பிப் புறங்கையால் தொடையில் அல்லது மற்றொருக் கைகையில் தட்டுவதும் உண்டு.

Global Angel:
மோகனம்

மோகனம் 28வது மேளகர்த்தா இராகமாகிய, "பாண" என்றழைக்கப்படும் 5வது சக்கரத்தின் 4 வது இராகமாகிய ஹரிகாம்போஜியின் ஜன்னிய இராகம் ஆகும். எப்போதும் பாடக் கூடிய இவ்விராகம் சர்வ ஸ்வர கமக வரிக ரத்தி இராகம் ஆகும். சுபகரமான இவ்விராகம் விரிவான ஆலாபனைக்கு இடம் கொடுக்கும்.


இலக்கணம்
ஆரோகணம்:    ஸ ரி2 க3 ப த2 ஸ்
அவரோகணம்:    ஸ் த2 ப க3 ரி2 ஸ

மோகனம் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்

சிறப்பு அம்சங்கள்

    மத்திமம், நிஷாதம் வர்ஜம் என்பதனால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும்.
    இது உபாங்க இராகம் ஆகும்.
    ரி, க, த என்பன ராகச்சாயா ஸ்வரங்கள். இதில் வரும் ஜண்டை ஸ்வரங்களும், தாடுப் பிரயோகங்களும் ராக ரஞ்சகமானவை.
    இது திரிஸ்தாயி இராகம் ஆகும். மேலும் இரவில் பாட இரு மிக ரஞ்சகமாக இருக்கும்.
    இது ஒரு புராதன இராகம் ஆகும். எல்லா உருப்படி வகைகளையும் இந்த இராகத்தில் காணலாம். சுலோகங்களும், விருத்தங்களும் பாடுவதற்கேற்ற இராகம் ஆகும். இது ஒரு வர்ணனைக்குரிய இராகம் ஆகும். இசை நாடகங்களிலும், நிருத்திய நாடகங்களிலும் காணப்படும் பிரசித்த இராகங்களில் இதுவும் ஒன்றாகும்.

    மனிதவர்க்கத்துக்கு தெரிந்த மிகப் பழைய இராகம் இது ஆகும். இந்த இராகத்தில் வரும் ஸ்வரங்கள் ஸட்ஜ - பஞ்சம முறையில் முதன் முதலில் தோன்றும் ஸ்வரங்களாகும். இந்த விடயத்தை ஆதி காலத்திலேயே எல்லா நாட்டு இசைக் கலைஞர்களாலும் கையாளப்பட்டு வந்தது. ஆதிவாசிகளின் இசையிலும் பாமரமக்கள் இசையிலும் கூட இவ்விராகம் வழக்கத்தில் இருந்து வருகிறது.

    இந்துஸ்தானி இசையில் பூப் என்பது இவ்விராகமே. சர்வ ஸ்வர மூர்ச்சனாகர ஜன்ய இராகம்.

    இவ்விராகத்தின் ரிஷப, காந்தார, பஞ்சம, தைவத, மூர்ச்சனைகளே முறையே மத்தியமாவதி, இந்தோளம், சுத்தசாவேரி, உதயரவிச்சந்திரிக்கா ஆகிய இராகங்களாக ஒலிக்கின்றன. முல்லைப்பண் எனக் குறிக்கப்படுவது மோகன இராகமே ஆகும்.

    " திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்" எனச் சிறப்புப் பெற்ற மாணிக்கவாசகரின் திருவாசகங் கூட தொன்று தொட்டு இந்த இராகத்தில் பாடப்பட்டு வருவது இவ்விராகத்தின் சிறப்பை உணர்த்துகின்றது.

உருப்படிகள்

    வர்ணம் : "நின்னுக்கோரி" - ஆதி - பூச்சி ஐயங்கார்.
    கீர்த்தனை : "ஏன் பள்ளி" - ஆதி - அருணாசலக் கவிராயர்.
    கிருதி : "ஸதாபாலய" - ஆதி - ஜி. என். பாலசுப்பிரமணியம்.
    கிருதி ]]: "ராராராஜீவ" - ஆதி - மைசூர் வாசுதேவச்சாரியார்.
    கிருதி : "நன்னுபாலிம்ப" - ஆதி - தியாகராஜர்.

மோகன இராகத்தில் அமைந்த திரையிசைப் பாடல்கள்

    நின்னுகோரி வர்ணம் :- அக்னி நட்சத்திரம்
    அண்ணாமலை அண்ணாமலை :- அண்ணாமலை

Global Angel:
கணிதம்

அறிவியல்கள்
இயற்பியல்
உயிரியல்
சமூக விஞ்ஞானம்
பயன்பாட்டு அறிவியல்கள்
பல்துறைமை
தத்துவவியலும் அறிவியலின் வரலாறும்
கணிதம் (Mathematics) என்பது வணிகத்தில், எண்களுக்கு இடையான தொடர்பை அறிவதில், நிலத்தை அளப்பதில், அண்டவியல் நிகழ்வுகளை வருவதுரைப்பதில் மனிதனுக்கு இருந்த கணித்தலின் தேவைகள் காரணமாக எழுந்த ஓர் அறிவியல் பிரிவாகும். இந்த நான்கு தேவைகளும் பின்வரும் நான்கு பெரிய கணிதப் பிரிவுகளை பிரதிபடுத்துகின்றன:

    அளவு (quantity) - எண்கணிதம்
    அமைப்பு (structure) - இயற்கணிதம்
    வெளி (space) - வடிவவியல்
    மாற்றம் (change) - பகுவியல் (analysis) - நுண்கணிதம்

வரையறை

கணிதம் (Math அல்லது Maths) இலக்கங்களும், அதன் செய்முறைகளும் (கூட்டல், கழித்தல், பெருக்கல், பிரித்தல்), அத்துடன் உருவ அமைப்புக்களும் (shapes) மட்டுமல்லாது விஞ்ஞான ஆராய்ச்சிகளுடனும், அதன் பிரயோகங்களுடனும் தொடர்ச்சியாக வளர்ந்து வரும் ஒரு அறிவியல் சாதனமாகும். கணிதத்தின் தேவை எமது அறிவியல் வளர்ச்சிக்கு ஒரு முக்கிய காரணியாகும். கலிலியோ "கணிதத்தின் உதவியால் நாம் இவ்வுலகத்தையே அறியலாம்" என்று கூறினார்.

எண்களை வைத்துக்கொண்டு உண்டாக்கப்பட்ட கணிப்பியலோ (arithmetic) வடிவங்களை வைத்துக்கொண்டு உண்டாக்கப்பட்ட வடிவியலோ இவைதான் கணிதவியல் என்று நினைப்போர் பலர். இன்னும் சிலர் எண்களுக்குப் பதிலாக குறிப்பீடுகளை வழங்கி அவைகளையும் எண்கள்போல் கணிப்புகள் செய்யும் இயற்கணிதம் தான் கணிதத்தின் முக்கிய பாகம் என்பர். மற்றும் சிலர் வடிவங்களை அலசி ஆராயும் வடிவியல் வளர்ச்சி தான் கணிதத்தின் இயல்பு என்று கூறுவர். ஆனால் கணிதம் இதையெல்லாம் தாண்டிய ஒன்று.


தென் அமெரிக்காவில் இருந்த பழம் மாயா மக்களின் எண்முறை
கணிதக்கட்டுரை விமரிசனங்கள்
Add caption here

கணித விமரிசனங்கள் (Mathematical Reviews) என்ற ஒரு பத்திரிகை 1940 இல் ஒரு சில பக்கங்களுடன் தொடங்கி ஒவ்வொருமாதமும் கணிதத்தில் எழுதப்படும் புது ஆய்வுக்கட்டுரைகளை விமரிசிக்கவென்றே ஏற்படுத்தப்பட்டது. அது இன்று மாதத்திற்கு 2000 பக்கங்கள் கொண்டதாக வளர்ந்து, ஆயிரக்கணக்கான ஆய்வுப்பத்திரிகைகளிலிருந்து ஏறக்குறைய இருபது லட்சம் கட்டுரைகளின் விமரிசனத்தை கணிதப் பொக்கிஷமாகக் காத்து வருகிறது.
இந்தியக்கணித வரலாறு

எண்ணும் எழுத்தும் இரண்டு கண்கள் போல என வள்ளுவர் கூறுகிறார். திருக்குறளில் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, "அறு", "எழு", "எண்", பத்து, "கோடி" ஆகிய எண்கள் அல்லது தொகையீடுகள் அங்காங்கே பயன்படுத்தப்பட்டுள்ளன. எனினும் "தொண்டு" அல்லது "தொன்பது" பயன்படுத்தப்படவில்லை


கணிதத்தில் பல்வகை நுட்பம் செறிந்த வடிவங்களைத் துல்லியமாக விளக்கலாம், அலசலாம். இப்படத்தைக் வரைபடமாகத் தரும் சார்பு: cos(y arccos sin|x| + x arcsin cos|y|)மிழ் எண்ணுருக்கள், தமிழில் பூச்சியத்துக்கு குறியீடு இல்லை
எண்களை எழுதுவதில் இடமதிப்புத் திட்டத்தையும் பூச்சியம் என்ற கருத்தையும் உருவாக்கி வருங்காலக் கணிதக்குறியீட்டுமுறைக்கு அடிகோலிட்டது பழையகால இந்தியா. இதைத்தவிர இந்தியக் கணிதவியலர்கள் (ஆரியபட்டர், பிரம்மகுப்தர், பாஸ்கராச்சாரியர், இன்னும் பலர்) மேற்கத்தியநாடுகள் மறுமலர்ச்சியடைந்து அறிவியலில் வளர்வதற்கு முன்னமேயே பலதுறைகளில் முன்னேற்றம் கண்டிருந்தனர்.

    வேதகாலத்துக்கணிதத்தின் கணிப்பு முறைகள்
    சுல்வசூத்திரங்களின் வடிவியல்
    சூனியமும் இடமதிப்புத் திட்டமும்
    எண்களின் அடிப்படைகளைப்பற்றி ஜைனர்கள்
    பாக்சாலி கையெழுத்துப்பிரதிகளின் சமன்பாடுகள்
    வானவியல்

இவையெல்லாம் இந்தியக்கணிதத்தின் சிறப்புகள்.
தற்காலத்திய கணிதத்தின் வரலாறு

14 வது நூற்றாண்டில் தொடங்கி, சென்ற ஆறு நூற்றாண்டுகளில் கணிதத்தின் வளர்ச்சியைத் தெரிந்துகொள்ள கணிதவியலாளர்கள் பலரின் வரலாறுகளே தக்க சான்றுகள். ஃபெர்மா, நியூட்டன், ஆய்லர், காஸ், கால்வா, ரீமான், கோஷி, ஏபல், வியர்ஸ்ட்ராஸ், கெய்லி, கேன்ட்டர், ஹில்பர்ட், இப்படி இன்னும் நூற்றுக்கணக்கானவர்கள் பங்கு கொண்டு உருவாக்கப்பட்ட கணிதம் இன்றைய கணிதம்.

கணிதம் சம்பந்தமான பல்வேறு துணப் பிரிவுகள்

கணிதத்தின் தற்காலப் பிரிவுகளைப் பற்றி பட்டியலிடவேண்டுமானால் அப்பட்டியலில் 100 தாய்ப்பிரிவுகளாவது இருக்கும். இப்பிரிவுகளுக்குள் மிகவும் வியப்பு தரும் உறவுகள் உண்டு. இவைகளிலெல்லாம் கணிதத்திற்கென்றே தனித்துவம் வாய்ந்த மரபும் குறிப்பிடத்தக்கது. இம்மரபுதான் கணிதத்தை மற்ற அறிவியல் துறைகளிலிருந்து பிரித்துக் காட்டுகிறது.இவைதவிர, கணிதத்தின் அடிப்படைகளுக்கும் மற்ற துறைகளுக்குமான தொடர்பை தருக்கவியலும் ஆய்கின்றது. மேலும் புள்ளியியல் போன்ற நேரடியாகப் பயன்படும் கணிதத் துறைகளும் உண்டு.

Global Angel:
நாடகம்நாடகம்
நாடகக் கலைகள்
தமிழர் நாடகக் கலை
ஈழத்தமிழ் நாடகங்கள்
நாடக வகைகள்
நாடகப்படம்
நாடக வரலாறுகள்
தமிழ் நாடக வரலாறு
கிரேக்க நாடக வரலாறு
ரோமானிய நாடக வரலாறு
எகிப்திய நாடக வரலாறு
மராட்டிய நாடக வரலாறு
இங்கிலாந்து நாடக வரலாறு
சோவியத் நாடக வரலாறு
சீன நாடக வரலாறு
அமெரிக்க நாடக வரலாறு
ஜெர்மன் நாடக வரலாறு
பிரெஞ்சு நாடக வரலாறு
சமஸ்கிருத நாடக வரலாறு

நாடகம் என்பது ஒரு கலை அல்லது பலவகைக் கலைகளின் கூட்டுச் சேர்க்கையாகும். நாட்டு + அகம் = நாடகம். அதாவது, நாட்டு மக்களின் அகத்தை பிரதிபலிக்கும் கலை. கதை ஒன்றை அரங்கிலே நடிப்பு, ஒப்பனை, இசை, ஓவியம், அரங்கமைப்பு, இலக்கியம், ஒலி, ஒளி முதலான கலைகளின் ஒன்றிணைப்பால் படைத்துக் காட்டுவதை நாடகம் எனலாம். இவற்றை எழுதுபவர்கள் நாடகாசிரியர் என அறியப்படுவார்.

விளக்கமும் செயல்பாடுகளும்

    'இயல்' என்பது சொல் வடிவம்,
    'இசை ' என்பது சொற்களோடு, இசையும் சேர்ந்த வடிவம்,
    'நாடகம்' என்பது, 'இயல்', 'இசை' மற்றும் உடல் அசைவுகளை அடிப்படையாகக் கொண்ட வடிவம்.

"உலகமே ஒரு நாடக மேடை" என்றார் ஒரு கிரேக்க அறிஞர். உலகில் நாடகங்கள் பலவகைகளாக நடத்தப்படுகின்றன. தமிழை தமிழகத்தினை பொருத்தமட்டில் நாடகம் என்பது தெருக்கூத்து மற்றும் பாவை நாடகங்களாக நடத்தப்படுகின்றன.

அருஞ்சொற் பொருள்

    கதைக்கோப்பு - Plot
    கதாப் பாத்திரம் - Character
    உரையாடல் - Dialogue
    பின்னணி - Setting
    வாழ்க்கையின் பேருண்மைகள் - Universal truths
    உத்திகள் - Techniques
    மேடையமைப்பு, மேடைநெறியாள்கை - Stage setting

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version