Special Category > ஜோதிடம்

2015 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்

(1/3) > >>

Maran:

2015 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்

2015 ஆம் ஆண்டிற்கான ஆங்கில புத்தாண்டு ராசி பலன்களை தொகுத்து வழங்கியுள்ளார்,
ஜோதிட ரத்னா க.ப.வித்யாதரன்.


வியாழக்கிழமை வளர்பிறை ஏகாதசி திதி பரணி நட்சத்திரம் மேஷ ராசி கன்னி லக்னத்தில் சித்தி நாம யோகம், பத்தரை நாமகரணத்தில், நவாம்சத்தில் ரிஷப லக்னத்தில், நேத்திரம், ஜீவனம் நிறைந்த சித்தயோகத்தில் நள்ளிரவு 12 மணிக்கு 01.01.2015ம் ஆண்டு பிறக்கிறது.


Maran:

மேஷம் - 2015 ஆங்கில புத்தாண்டு பலன்கள்

அதிர்ஷ்டத்தை அதிகம் நம்பாதவர்களே! உங்கள் தனாதிபதி சுக்ரன் வலுவாக நிற்பதால் எல்லாவகையிலும் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். வீடு கட்டுவதற்கு ப்ளான் அப்ரூவலாகி வரும். வங்கிக் கடன் உதவியும் கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. பழுதாகிக் கிடந்த வாகனத்தை தந்து புது வண்டி வாங்குவீர்கள். உங்களுடைய ராசிக்கு சாதகமாக புதன் நிற்பதால் நட்பு வட்டம் விரிவடையும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். பழைய கடனை பைசல் செய்வதற்கான வழி, வகைப் பிறக்கும். உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் ராகு நிற்பதால் சில ராஜ தந்திரங்களைக் கற்றுக் கொள்வீர்கள்.
 
ஷேர் மூலமாகவும் பணம் வரும். எதிர்ப்புகள் அடங்கும். வழக்குகள் சாதகமாகும். வேற்றுமொழி, வேற்றுமதத்தை சார்ந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். சிலருக்கு அயல்நாட்டில் வேலைக் கிடைக்கும். 12-வது வீட்டில் கேது நிற்பதால் புகழ் பெற்ற புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். குலதெய்வக் கோவிலை புதுப்பிக்க உதவுவீர்கள். உங்கள் ராசிநாதன் செவ்வாய் உச்சம் பெற்று வலுவாக அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் தைரியம் கூடும். குழப்பங்கள் நீங்கும். தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மாறுபட்ட அணுகுமுறை மூலமாக பழைய சிக்கல்களுக்கு தீர்வு காண்பீர்கள்.
 
 உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை உணருவீர்கள். தன் கையே தனக்குதவி என்பதையும் அறிவீர்கள். உதவி செய்து உபத்திரவத்தில் சிக்கிக் கொள்வதை நினைத்து அவ்வப்போது பெருமூச்சு விடுவீர்கள். சகோதரங்களுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். வீடு, மனை விற்பது, வாங்குவதில் இருந்து வந்த தேக்க நிலை, மந்த நிலை மாறும். நீங்கள் எதிர்பார்த்த விலைக்கு வீடு விற்கும். அதேப் போல உங்கள் ரசனைக் கேற்ப வீடு, மனை அமையும்.
 
உங்களின் பாக்யாதிபதியான குருபகவான் ஜீன் மாதம் வரை 4-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் அலைச்சல் இருக்கும். செலவினங்களும் அதிகமாகும். சிறுசிறு வாகன விபத்துகளும் வரக்கூடும். தாயாரின் உடல் நிலை பாதிக்கும். தாய்வழி உறவினர்களுடன் கருத்துவேறுபாடுகள் வந்துப் போகும். முன்கோபத்தை தவிர்க்கப்பாருங்கள். கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். பிள்ளைகளால் அலைச்சல் உண்டாகும். அவர்களின் படிப்பு, ஆரோக்யத்தில் அதிருப்தியான சூழ்நிலை உருவாகும். ஆனால் ஜீலை மாதம் முதல் குருபகவான் உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் வந்தமர்வதால் அதுமுதல் மனநிம்மதி உண்டாகும். அடிப்படை வசதி, வாய்ப்புகள் உயரும். குழப்பிக் கொண்டிருந்த நீங்கள், இனி தெளிவடைவீர்கள்.
 
நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். கையை விட்டுப் போன, ஏமாந்த தொகையும் கைக்கு வந்து சேரும். அரசு காரியங்களும் நல்ல விதத்தில் முடிவடையும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் பலிதமாகும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். எங்குச் சென்றாலும் முதல் மரியாதைக் கிடைக்கும். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். கண்டும், காணாமல் சென்றுக் கொண்டிருந்த உறவினர், நண்பர்கள் வலிய வந்துப் பேசத் தொடங்குவார்கள். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். 
 
உங்களுக்கு வருடம் பிறக்கும் போது அஷ்டமத்துச் சனி நடைபெற்றுக் கொண்டிருப்பதால் சின்ன சின்ன காரியங்கள் கூட தடைப்பட்டு முடிவடையும். புதியவர்கள், திடீரென்று அறிமுகமாகுபவர்களை நம்பி வீட்டிற்கு அழைத்து வர வேண்டாம். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவுகளும் இருக்கும். பணப்பற்றாக்குறையும் இருக்கும். மற்றவர்களுக்கு ஜாமீன், கேரண்டர் கையப்பமிட வேண்டாம். தூக்கம் குறையும். சொன்ன சொல்லை நிறைவேற்ற முடியாமல் போகும். தவறு செய்யாமலேயே உங்களை சிலர் குற்றவாளியாக்க முயற்சி செய்வார்கள். கூடாப்பழக்க வழக்கங்களை தவிர்ப்பது நல்லது.
 
வெளிவட்டாரத்தில் யாரையும் தாக்கியும் பேச வேண்டாம், தூக்கியும் பேச வேண்டாம். பணம் வாங்கித் தருவதிலும், கல்யாண விஷயத்திலும் குறுக்கே நிற்காதீர்கள். கடந்த காலத்தில் கிடைத்த நல்ல வாய்ப்புகளையெல்லாம் சரியாக பயன்படுத்தாமல் விட்டு விட்டோமே என அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள். அநாவசியமாக மற்றவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். சிலர் உங்கள் முன் புகழ்ந்து பேசிவிட்டு பின்னாடி இகழ்ந்து பேசுவார்கள்.   
 
வியாபாரத்தில் சில நேரங்கள் வியாபாரத்தில் ஆர்வமில்லாமலும் போகும். ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் ஓரளவு லாபம் கிடைக்கும். ஜீலை முதல் டிசம்பர் வரை உள்ள காலக்கட்டமும் உங்களுக்கு ஆதாயம் தரக்கூடியதாக இருக்கும். உணவு, மருந்து, கெமிக்கல், கட்டுமானப் பொருட்களாலும் லாபமடைவீர்கள். அஷ்டமத்துச் சனி நடைபெறுவதால் கூட்டுத் தொழிலில் பிரச்னைகள் வெடிக்கும். பங்குதாரர்களால் சிக்கல்கள் வரும். வேலையாட்களும் உங்களுடைய கஷ்ட, நஷ்டங்களைப் புரிந்துக் கொள்ளாமல் பொறுப்பற்று நடந்துக் கொள்வார்கள். வியாபார ரகசியங்களை வெளியில் சொல்ல வேண்டாம். பழைய பாக்கிகளை போராடி வசூலிக்க வேண்டி வரும். ஜீலை மாதத்திலிருந்து தொழிலில் நிம்மதியும், லாபமும் கிட்டும்.
 
உத்யோகத்தில் உயரதிகாரிகளுடன் மோதல்கள் வரும். சக ஊழியர்களுடனும் சின்ன சின்ன சண்டை, சச்சரவுகள் வந்து நீங்கும். ஜீன் மாதம் வரை உத்யோகத்தில் பிரச்னைகளும், நிம்மதியற்றப் போக்கும், மரியாதைக் குறைவான சம்பவங்களும் இருக்கும். ஜீலை மாதத்திலிருந்து உங்களுடைய உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். உதாசீனப்படுத்தப்பட்ட உங்களுக்கு மரியாதைக் கூடும். ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நல்ல திருப்பு முனை உண்டாகும்.
 
மாணவ-மாணவிகளே! அஷ்டமத்துச் சனி நடைபெறுவதால் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். விடைகளை எழுதிப்பாருங்கள். விளையாடும் போது சின்ன சின்ன காயங்கள் ஏற்படக்கூடும். வகுப்பறையில் வீண் அரட்டைப் பேச்சை தவிர்க்கப்பாருங்கள். கன்னிப் பெண்களே! வருடத்தின் முற்பகுதியில் காதலில் ஏமாற்றமும், உயர்கல்வியில் தேக்கமும், மந்தமும் ஏற்படும். ஜீலை மாதத்திலிருந்து கல்வியில் ஆர்வம் பிறக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். வேலைக் கிடைக்கும். வருடத்தின் இறுதிப் பகுதியில் திருமணம் கூடி வரும். இந்தப் புத்தாண்டு முற்பகுதி பாகற்காயாக இருந்தாலும் பிற்பகுதி பணங்கற்கண்டாக இனிக்கும்.

Maran:

ரிஷபம் - 2015 ஆங்கில புத்தாண்டு பலன்கள்

கஷ்ட, நஷ்டங்களைக் கண்டு கலங்காதவர்களே! உங்கள் ராசிநாதன் சுக்ரனும், தன-பூர்வ புண்யாதிபதியான புதனும் சாதகமாக இருப்பதால் எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும் எதிர்கொள்ளக் கூடிய சக்தி கிடைக்கும். முன்னேற்றம் உண்டு. சாதுர்யமாகப் பேசி சில முக்கிய காரியங்களை முடிப்பீர்கள். மனஇறுக்கம் ஒருபக்கம் இருந்தாலும் தைரியமும் பிறக்கும். செவ்வாயும் சாதகமாக இருப்பதால் சகோதர வகையில் உதவிகள் உண்டு. எதிர்ப்புகள் குறையும். வீடு வாங்கும் போது தாய் பத்திரத்தை சரி பார்த்துக் கொள்வது நல்லது.

அரசிடமிருந்து முறையான கட்டிட வரைப்பட அனுமதிப் பெறாமல் கட்ட வேண்டாம். விதிகளை மீறி கூடுதல் தளம் அமைப்பது, கூடுதல் அறை அமைப்பதை தவிர்ப்பது நல்லது. கௌரவப் பதவிகள் தேடி வரும். பிரபலங்கள் அறிமுகமாவார். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வி.ஐ.பிகளின் அறிமுகம் இருந்தும், நட்பிருந்தும் அவர்களை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லையே என ஆதங்கப்படுவீர்கள்.
 
5-ம் இடத்தில் ராகு நிற்பதால் இனந்தெரியாத மனக்கவலை வந்துப் போகும். உங்களின் திறமைகள் குறைந்து விட்டதாக நீங்கள் நினைத்துக் கொள்வீர்கள். உறவினர்களில் சிலர் உங்களை அவமதிக்க வாய்ப்பிருக்கிறது. பிள்ளைகளிடம் உங்களுடைய கோபத்தை காட்டாதீர்கள். பூர்வீக சொத்துப் பிரச்னையில் தலையிட்டு அதை சீர்த்திருத்தம் செய்வதாக நினைத்து அதில் செலவு செய்து சிக்கிக் கொள்ளாதீர்கள். பூர்வீகத்தை நோக்கி இடம் பெயர்வதும் நல்லதல்ல. சிலர் சொந்த ஊரை விட்டு விலகி வேறு இடத்திற்கு மாற வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
 
உங்களுடைய 12-வது ராசியில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் விரையச் செலவுகள் அதிகமாகும். பயணங்களும் இருக்கும். தூக்கமும் குறையும். காலமெல்லாம் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்க வேண்டியது தானா, மகிழ்ச்சியே வாழ்க்கையில் இருக்காதா என்றெல்லாம் புலம்புவீர்கள். உங்கள் ராசியை சனிபகவான் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் நீங்கள் ஆரோக்யத்தில் அக்கறை காட்டுவது நல்லது. காரம், கொழுப்புச் சத்துள்ள உணவுகளை தவிர்க்கப்பாருங்கள். முடிந்த வரை வெளி உணவுகளையும் தவிர்க்கப்பாருங்கள். வழக்கம் போல மனதில் தோன்றுவதையெல்லாம் வெளிப்படையாகப் பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள். அடுத்தடுத்த வீண் பழிகள் வர வாய்ப்பிருக்கிறது. சிலர் நன்றி மறந்துப் பேசுவார்கள். உங்களிடம் உழைப்பை வாங்கிக் கொண்டு உங்களை கறிவேப்பில்லையாக தூக்கி எறிவார்கள்.
 
அதையெல்லாம் நினைத்து அவ்வப்போது கண் கலங்குவீர்கள். பண விஷயத்தில் கறாராக இருங்கள். உங்களுடைய இரக்க சிந்தனையால் தான் நீங்கள் அவ்வப்போது ஏமாந்துப் போகிறீர்கள். கண்டகச் சனி நடைபெற்றுக் கொண்டிருப்பதால் கணவன்-மனைவிக்குள் அடிக்கடி சண்டை, சச்சரவுகள் வரும். கடந்த கால தவறுகள், குற்றங்கள், ஏச்சுப் பேச்சுகளையெல்லாம் இப்போது நினைவுக்கூர்ந்து புதிய பிரச்னைகளை உருவாக்காதீர்கள். மறப்போம், மன்னிப்போம் என்றிருப்பது நல்லது. இலவசமாக சில கெட்ட பழக்க வழக்கங்கள் உங்களை தொற்றிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. கூடாநட்பையெல்லாம் தவிர்ப்பது நல்லது.
 
உங்களுடைய ராசிக்கு 3-ம் வீட்டில் குரு மறைந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் திட்டமிட்டு எதையும் செய்யப்பாருங்கள். புதிய முயற்சிகளில் கவனம் தேவை. விவாதங்களையும் தவிர்ப்பது நல்லது. வழக்குகளில் வழக்கறிஞரின் போக்கு சரியாக இருக்கிறதா என்பதை அவ்வப்போது நீங்கள் ஆராய்வது நல்லது. வங்கிக் கடனை நினைத்தும் கலங்குவீர்கள். வெளியில் தைரியசாலியாக உங்களைக் காட்டிக் கொண்டாலும், உள்மனதில் ஒருவித பயம் பரவும்.
 
வியாபாரத்தில் பெரிய முதலீடுகள் வேண்டாம். புதிய பங்குதாரர்களையும் சேர்த்துக் கொள்ளாதீர்கள். இந்த வருடத்தில் நீங்கள் இருப்பதை வைத்து வியாபாரம் செய்வது நல்லது. வேலையாட்களால் ஏமாற்றங்களும், பிரச்னைகளும் வரக்கூடும். முன்பணம் யாருக்கும் தர வேண்டாம். கமிஷன், புரோக்கரேஜ், ஸ்டேஷனரி வகைகளால் லாபம் வரும். கேது 11-ல் நிற்பதால் சந்தை நிலவரத்தை அறிந்து, விளம்பர யுக்திகளை கையாண்டு ஓரளவு லாபம் ஈட்டுவீர்கள்.

உத்யோகத்தில் சின்ன சின்ன பழிகள் வந்து சேரும். கடினமாக உழைத்தும் அங்கீகாரம் இல்லையே என்று கலங்குவீர்கள். சக ஊழியர்களிடம் மேலதிகாரிகளைப் பற்றி எதுவும் தெரிவித்துக் கொண்டிருக்க வேண்டாம். மேலதிகாரியின் வற்பூர்த்தலின் பேரில் சில தவறுகளை செய்து விடாதீர்கள். இடமாற்றம் இருக்கும். சிறுசிறு அவமானங்களை சந்திக்க வேண்டி வரும். குடும்பத்தை விட்டு பிரிந்து வெளிமாநிலம் அல்லது வெளிநாட்டில் வேலைக்கு செல்ல வேண்டி வரும்.
 
மாணவ-மாணவிகளே! கணிதப் பாடத்தில் அதிக அக்கறை காட்டுங்கள். டி.வி. பார்க்கும் நேரத்தை குறையுங்கள். விளையாடுங்கள் ஆனால் கிரிக்கெட் போன்ற கடினமான பந்துகளைக் கொண்ட விளையாட்டுகளை தவிர்ப்பது நல்லது. கெட்ட நண்பர்களின் சகவாசத்தை தவிர்க்கப்பாருங்கள். கன்னிப் பெண்களே! காதல் விவகாரத்தை தள்ளி வைத்து விட்டு உயர்கல்வியில் உங்கள் கவனத்தை முழுமையாக திருப்புவது நல்லது. பெற்றோருடனும் கருத்து மோதல் வரும். கோபத்தை குறையுங்கள். இன்பெக்ஷன், அலர்ஜி, மாதவிடாய்க் கோளாறு வந்து நீங்கும். கல்யாண விஷயத்தில் அவசரம் காட்ட வேண்டாம். இந்தப் புத்தாண்டு உங்களை பல வகையிலும் அலைக்கழிக்க வைப்பதாக இருந்தாலும் தன்னம்பிக்கையாலும், கடின உழைப்பாலும் ஓரளவு முன்னேற்றத்தை தரும்.

Maran:

மிதுனம் - 2015 ஆங்கில புத்தாண்டு பலன்கள்

சமூக அவலங்களை தட்டிக் கேட்க தயங்காதவர்களே! உங்களுடைய ராசிக்கு தனஸ்தானமான 2-ம் வீட்டில் குரு நிற்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் குடும்ப வருமானம் உயரும். குடும்பத்திலும் மகிழ்ச்சி தங்கும். கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். மனம் விட்டு பேசி சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உறவினர், நண்பர்கள் மத்தியில் மரியாதைக் கூடும். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும்.

பிள்ளைகள் உயர்கல்வி, உத்யோகத்தின் பொருட்டு அயல்நாடு செல்வார்கள். ஷேர் மூலமாகவும் பணம் வரும். முன்கோபம் குறையும். சாதுர்யமாகவும், இங்கிதமாகவும் பேசி எல்லா வேலைகளையும் முடித்துக் காட்டுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரும் மதிப்பார்கள். முகம் மலரும். அழகு, இளமைக் கூடும். அரசால் ஆதாயம் உண்டாகும். அரசு காரியங்கள் விரைந்து முடிவடையும்.
 
சனிபகவான் உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் நிற்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் வழக்குகள் சாதகமாகும். இழுபறியாக இருந்த தள்ளிப் போன காரியங்கள் உடனடியாக முடிவடையும். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். இரு சக்கர வாகனத்தை தந்து விட்டு நான்கு சக்கர வாகனம் அமைப்பு உண்டாகும். வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டிற்கு மாறுவீர்கள். திடீர் அதிர்ஷ்டங்கள் கூடி வரும். ஹிந்தி, மலையாளம் பேசுபவர்களால் ஆதாயமடைவீர்கள். சிலர் உத்யோகத்தை விட்டு விட்டு சொந்த தொழில் தொடங்குவீர்கள். உங்கள் ரசனைக் கேற்ப வீடு, மனை அமையும். புது டிசைனில் நகை வாங்குவீர்கள்.
 
உங்களுடைய ராசியை சூரியன் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்த வருடம் பிறப்பதால் உடல் உஷ்ணம் அதிகமாகும். கனவுத் தொல்லையும் வந்துப் போகும். சில நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டு பேசுவீர்கள். மற்றவர்களை திருத்துவதற்கு முயற்சி செய்து உங்கள் பெயரை நீங்கள் கெடுத்துக் கொள்ள வேண்டாம். ராசிக்கு 8-ல் செவ்வாய் மறைந்திருக்கும் போது இந்தாண்டு பிறப்பதால் உடன்பிறந்தவர்களால் அலைச்சல், டென்ஷன் இருக்கும்.

ங்கையின் திருமணத்தை முன்னின்று நடத்துவீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து விலகும். உங்கள் யோகாதிபதிகளான புதனும், சுக்ரனும் ராசிக்கு 8-ல் நிற்கும் போது இந்தாண்டு பிறப்பதால் திடீர் பயணங்கள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த வெளி மாநில புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். வீடு கட்டுவீர்கள். வங்கிக் கடன் உதவி கிடைக்கும். மின்னணு, மின்சார சாதனங்கள் நவீனமாக வாங்குவீர்கள். மனைவிவழியில் உதவிகள் உண்டு. மனைவிக்கு வேலைக் கிட்டும்.
 
4-ம் வீட்டில் ராகு நிற்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் தாயாருடன் கருத்து மோதல் வரும். அவரின் உடல் நிலை பாதிக்கும். வாகனம் அடிக்கடி பழுதாகி சரியாகும். கூடாப்பழக்க வழக்கங்களை தவிர்க்கப்பாருங்கள். லாகிரி, வஸ்துக்களையும் தவிர்ப்பது நல்லது. வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். லயன்ஸ் கிளப், ரோட்டரி கிளப்பில் மதிக்கப்படுவீர்கள். திடீர் பதவிகள், பெரிய பொறுப்புகள் தேடி வரும்.வியாபாரத்தில் சில மாற்றங்களை கொண்டு வருவீர்கள். சிலர் புது ஏஜென்சியும் எடுப்பீர்கள். சந்தை நிலவரத்தையும், வாடிக்கையாளர்களின் ரசனைகளையும் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப தொழிலை மாற்றுவீர்கள். எலக்ட்ரானிக்ஸ், உணவு, போடிங், லாஜிங், துணி வகைகளால் லாபம் அதிகரிக்கும். பாக்கிகளும் வசூலாகும். புதிதாக பங்குதாரரை சேர்ப்பீர்கள். பழைய பங்குதாரர்கள் விலகுவார்கள். நல்ல அனுபவமிக்க வேலையாட்கள் வந்தமைவார்கள்.
 
உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகமாகும். உங்கள் ராசிக்கு 10-வது வீட்டில் கேது நிற்பதால் உழைப்பிற்கேற்ற அங்கீகாரம் இல்லையே என அவ்வப்போது வருத்தப்படுவீர்கள். ஆனாலும் மூத்த அதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். ஒரு அதிகாரி உங்களுக்கு எதிராக இருந்தாலும் மற்றொரு அதிகாரி உங்களுக்கு சாதகமாக இருப்பார். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். அதிக சம்பளத்துடன் வேறு நல்ல நிறுவனத்திலிருந்தும் அழைப்பு வரும். சம்பள பாக்கி கைக்கு வரும். பதவி உயர்வையும் நீங்கள் எதிர்பார்க்கலாம்.
 
மாணவ-மாணவிகளே! மாநில அளவில் நீங்கள் அதிக மதிப்பெண்களை பெற்று பரிசு, பாராட்டுகள் பெறுமளவிற்கு யோகம் உள்ளது. இருந்தாலும் அலட்சியம் இருந்துவிடாதீர்கள். இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்திப் படித்தால் அரசின் உதவித் தொகையுடன் நீங்கள் உயர்கல்வி தொடரும் வாய்ப்பு யோகம் உண்டாகும். எதிர்பார்த்த கல்வி பிரிவு, கல்வி நிறுவனத்தில் சேருவீர்கள்.
 
கன்னிப் பெண்களே! காதலும் இனிக்கும், கல்வியும் இனிக்கும். வேலையும் கிடைக்கும். நீண்ட நாள் ஆசை நிறைவேறும். பெற்றோரின் கனவுகளை நனவாக்குவீர்கள். திருமணம் நீங்கள் எதிர்பார்த்தபடி அமையும். சொந்தமாக வீடு, மனை வாங்குவீர்கள். உத்யோகத்தில் செல்வாக்குக் கூடும். இந்த 2015ம் ஆண்டு உங்களுக்கு லாப ஸ்தானத்தில் பிறப்பதால் எங்கும், எதிலும் வெற்றி வாகை சூடும் வருடமாக உங்களுக்கு அமையும்.

Maran:

கடகம் - 2015 ஆங்கில புத்தாண்டு பலன்கள்

இனப்பற்றும், மொழிப்பற்றும் உள்ளவர்களே! உங்களுடைய ராசிக்கு 3-ம் வீட்டிலேயே இந்தாண்டு முழுக்க ராகு தொடர்வதால் தைரியம் பிறக்கும். பெரிய பொறுப்புகள், பதவிகள் தேடி வரும். தோல்விமனப்பான்மை நீங்கும். உங்களைப் பற்றிய அவதூறுப் பேச்சுகளும் விலகும். இளைய சகோதர வகையில் செலவுகள் இருக்கும். சகோதரனின் திருமணத்தை முன்னின்று நடத்துவீர்கள். அரசு பதவிகள் கிடைக்கும். ஷேர் மூலமாகவும் பணம் வரும். உங்களுடைய ராசிக்கு 7-ம் வீட்டில் செவ்வாய், சுக்ரன், புதன் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தாண்டு பிறப்பதால் பொது அறிவு, மொழி அறிவுத் திறனையெல்லாம் வளர்த்துக் கொள்வீர்கள்.
 
வி.ஐ.பிகளின் தொடர்பு கிடைக்கும். கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வரும். முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. திருமணத் தடை நீங்கும். பிள்ளை பாக்யம் கிடைக்கும். விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். சூரியன் வலுவடைந்திருக்கும் நேரத்தில் இந்தாண்டு பிறப்பதால் நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். போட்டி, விவாதங்களில் வெற்றி கிட்டும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். அரசாங்க விஷயங்கள் சுலபமாக முடியும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். 
 
உங்களுடைய ராசியிலேயே குருபகவான் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் கொஞ்சம் வேலைச்சுமையும், படபடப்பும் இருந்துக் கொண்டேயிருக்கும். இரண்டு, மூன்று முறை முயன்று சில காரியங்களை முடிக்க வேண்டி வரும். தலைச்சுற்றல், வயிற்று வலி, வாயுக் கோளாறால் நெஞ்சு வலி வரும். பெரிய நோய்கள் இருப்பதற்கான அறிகுறிகள் சில நேரங்களில் தென்படும். ஆனால் மருத்துவ பரிசோதனை செய்துப் பார்க்கும் போது பெரிய ஆபத்து இல்லை என்பதை உணருவீர்கள். இருந்தாலும் நீங்கள் ஆரோக்யத்தில் அக்கறை காட்டுவது நல்லது. எளிதில் செரிமானமாகும் உணவுகளை உட்கொள்ளுங்கள். பண விஷயத்தில் கொஞ்சம் கறாராக இருங்கள். சமய, சந்தர்ப்ப, சூழ்நிலைகளை பயன்படுத்திக் கொண்டு சிலர் உங்களை ஏமாற்ற முனைவார்கள்.
 
 உறவினர், நண்பர்களும் உங்களைப் பார்த்தால் ஒரு பேச்சு, பார்க்காவிட்டால் ஒரு பேச்சு என்றிருப்பார்கள். ஆனால் ஜீலை மாதம் முதல் உங்கள் ராசியை விட்டு குரு விலகுவதால் ஆரோக்யம், அழகுக் கூடும். நோய் பற்றிய பயம் விலகும். செப்டம்பர் மாதம் முதல் உங்களுக்கு பணவரவு அதிகரிக்கும். பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேருவீர்கள். எதிர்ப்புகள் அடங்கும். வழக்குகள் சாதகமாகும். செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் வாகனம் வாங்கும் அமைப்பு உண்டாகும். சிலர் நல்ல காற்றோட்டம், தண்ணீர் வசதியுள்ள வீட்டிற்கு மாறுவீர்கள். சிலர் சொந்த வீடு வாங்கும் அமைப்பும் உண்டாகும்.
 
சனிபகவான் உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் சனிபகவான் நிற்கும் போது இந்த 2015ம் ஆண்டு பிறப்பதால் பூர்வீக சொத்துப் பிரச்னை தலைத்தூக்கும். தாய்வழி உறவினர்களுடன் சின்ன சின்ன மோதல்கள் வரும். பிள்ளைகளிடம் அளவாகப் பேசுங்கள். உங்களுடைய பழங்கதைகளையெல்லாம் அவர்களிடம் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். ஜென்ரேஷன் கேப் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். தூக்கம் குறையும். குலதெய்வக் கோவிலுக்கு மறவாமல் சென்று வாருங்கள். இந்தாண்டு முழுக்க கேது 9-ம் வீட்டில் நீடிப்பதால் தந்தையாருடன் பிணக்குகள் வரும். அவரின் ஆரோக்யத்தில் அக்கறை காட்டுங்கள். வருடத்தின் முற்பகுதியில் செலவுகள் அடுத்தடுத்து வரும். திடீர் பயணங்களும் அதிகரிக்கும். பிற்பகுதியில் ஓரளவு சேமிப்பீர்கள். வீடு, மனை வாங்குவதற்கு வங்கிக் கடன் உதவி கிட்டும். வாகனம் வாங்குவீர்கள்.
 
வியாபாரத்தில் புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். புது ஏஜென்சி கையெழுத்தாகும். பழைய பங்குதாரரை மாற்றுவீர்கள். வருடத்தின் முற்பகுதியில் லாபம் மந்தமாக இருந்தாலும், பிற்பகுதியில் லாபம் அதிகரிக்கும். ஏப்ரல், மே மாதங்களில் கடையை விரிவுப்படுத்தி, அழகுப்படுத்துவீர்கள். ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். தள்ளிப் போன வாய்ப்புகளும் கூடி வரும். உத்யோகத்தில் ஜனவரி, பிப்ரவரி அலைச்சலும், சின்ன சின்ன மரியாதைக் குறைவான சம்பவங்களும் நிகழும். ஏப்ரல், மே மாதங்களில் உத்யோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். வருடத்தின் பிற்பகுதியில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அதிகாரியின் மனசு மாறும். சக ஊழியர்களால் இருந்து வந்த இடையூறுகள் நீங்கும்.
 
மாணவ-மாணவிகளே! டி.வி. பார்த்துக் கொண்டேயிருக்காதீர்கள். நேரம் கிடைக்கும் நீச்சல், சைக்கிளிங் செய்வது நல்லது. அறிவியில் பாடத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். பெற்றோரின் உங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வார்கள்.கன்னிப் பெண்களே! பெற்றோருடன் மோதிக் கொண்டிருக்க வேண்டாம். உங்களுடைய எண்ணங்களையும், கருத்துக்களையும் பொறுமையாக எடுத்துச் சொல்லுங்கள். வருடத்தின் பிற்பகுதியில் உங்களுக்கு வேலைக் கிடைக்கும். திருமணமும் கூடி வரும். காதலும் கனிந்து வரும். இந்தப் புத்தாண்டு கடந்த வருடத்தில் இருந்த கஷ்ட, நஷ்டங்களையெல்லாம் தீர்ப்பதாகவும், முற்பகுதியில் சின்ன சின்ன இடையூறுகளை தரக் கூடியதாகவும், மையப்பகுதியில் ஓரளவு மகிழ்ச்சியையும், இறுதிப் பகுதியில் எதிர்பாராத திடீர் முன்னேற்றங்களையும் தருவதாகவும் அமையும்.

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version