தமிழ்ப் பூங்கா > காலக்கண்ணாடி

மாவீரன் பகத் சிங்கின் பொன் மொழிகள்

(1/1)

எஸ்கே:
 

 
மாவீரன் பகத் சிங்கின் பொன் மொழிகள்


1.தனிநபர்களை கொல்வது எளிது ஆனால்.. உங்களால் கருத்துக்களை கொல்ல முடியாது.

2. கேளாத காதுகளை கேட்க செய்வதற்கு உரத்த குரல்கள் தேவைப்படுகிறது.

3. கவலைகளை நினைத்து கண்ணீர் சிந்துவதை விட.. இலட்சியத்தை நினைத்து உத்திரம் சிந்துவது மேலானது.

4. தொழிலார்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள்.

5. நான் என் அகங்காரத்தினால் அல்ல.. எனது ஆழ்ந்த சிந்தனையின் மூலமே கடவுளை மறுக்கிறேன்.

6. மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ள வரை தான் சட்டம் அதன் புனித தன்மையை பெற்றிருக்கும்.

7. கடுமையான விமர்சனம் மற்றும் சுதந்திரமான சிந்தனை இந்த இரண்டும் தான் புரட்சியின் தேவைகள்.

8. மிக ஆபத்தான ஒன்று குருட்டு நம்பிக்கை.. இது மனிதனின் மூளையை முடமாக்கி மனிதனை பிற்போக்கில் தள்ளிவிடும்.

9. நாளை காலை மெழுகுவர்த்தி ஒளி மங்குவது போன்று நானும் மறைந்து விடுவேன். ஆனால் நம்முடைய நம்பிக்கைகள் குறிக்கோள்கள் இந்த உலகத்தை பிரகாசிக்க செய்யும்.

10. அம்மா எனது நாடு ஒருநாள் சுதந்திரம் அடைந்து விடும் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை.. ஆனால் கொள்ளைக்கார துரைமார்கள் விட்டு சென்ற நாட்காலியில் மாநிற துரைமார்கள் வந்து உட்கார்ந்து விடுவார்கள் என்று எனக்கு பயமாக இருக்கிறது.

11. அனைவருக்கும் விடுதலையை கொண்டு வரக் கூடியதும் மனிதனை மனிதன் சுரண்டும் கொடுமையை சாத்தியமற்றதாக மாற்றக்கூடிய புரட்சியின் பலி பீடத்தில் தனி நபர்களின் உயிர் பலிகள் தவிர்க்க முடியாதவை.

12. புரட்சியாளர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் கொள்கைகள் தியாகத்தின் மூலம்தான் வலுவடையும். நீதிமன்றத்தின் மேல் முறையீடுகள் மூலம் அல்ல.

13. அநீதிக்கு எதிரான இந்தப்போர் எங்களோடு தொடங்கவும் இல்லை. எங்கள் வாழ்நாளோடு முடியப்போவதுமில்லை.

14. புரட்சி என்பது ஒரு செயல்.. திட்டமிட்ட நடவடிக்கைகள் மூலம் மாற்றங்களை கொண்டு வருவது தான் புரட்சியாகும்.. திட்டமிடாத எதுவும் நடந்து விடாது.

15. புரட்சி என்பது ரத்த வெறி கொண்ட மோதலாக தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.. அது வெடிகுண்டுகள் துப்பாக்கிகள் மீதான வழிபாடல்ல. புரட்சியின் மூலம் அநீதியான சமூகம் மாற்றி அமைக்கப்பட வேண்டும்.

16. உலகப் புரட்சியின் நோக்கம் முதலாளித்துவத்தை தூக்கி எறிவது.

Navigation

[0] Message Index

Go to full version