தமிழ்ப் பூங்கா > காலக்கண்ணாடி

சே குவேரா பொன் மொழிகள்

(1/1)

எஸ்கே:



சே குவேரா பொன் மொழிகள்


1. விதைத்துக்கொண்டே இரு. முளைத்தால் மரம், இல்லையேல் உரம்

2. நான் சாகடிக்கப் படலாம், ஆனால் ஒரு போதும் தோற்கடிக்கப் படமாட்டேன்

3. நீ ஊமையாய் இருக்கும் வரை உலகம் செவிடாய் தான் இருக்கும்

4. ஒருவரின் காலடியில் வாழ்வதை விட.. எழுந்து நின்று உயிரை விடுவது எவ்வளவோ மேல்

5. நான் தோற்றுப்போகலாம் அதன் பொருள் வெற்றி சாத்தியமற்றது என்பதல்ல

6. போருக்கு செல்லும் போது கையில் ஆயுதம் கொண்டு செல்ல வேண்டும் என்பது அவசியம் இல்லை.

7. ஒவ்வொரு அநீதியையும் கண்டு ஆத்திரத்தால் அதிர்ந்து போவாயானால் நீ எனது தோழன்

8. விதைத்தவன் உறங்கினாலும் விதை உறங்குவதில்லை

9. எங்கெல்லாம் ஒடுக்கப்பட்டவர்களின் இதயத் துடிப்புகள் கேட்கிறதோ அங்கெல்லாம் என் கால்கள் பயணிக்கும்.

10. நமது ஒவ்வொரு நடவடிக்கையும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போர்க்குரலாக, மனித சமூகத்தின் நன்மைக்காக மக்களை ஒன்றுபடுத்தும் அறைகூவலாக இருக்கட்டும்.

11. நமது போர்க்குரல் இன்னொரு மனிதனின் காதில் விழுமானால்… நமது ஆயுதங்களை இன்னொரு கை எடுத்துக்கொள்ளுமானால்… நமது இறுதிச்சடங்கில் துப்பாக்கியின் உறுமல்களோடும், புதிய போர்க்குரல்களோடும் இன்னும் பலர் கலந்து கொள்வார்களேயானால் மரணத்தை நாம் அன்புடன் வரவேற்கலாம்.

12. மண்டியிட்டு வாழ்வதைவிட நிமிர்ந்து நின்று சாவதே மேல்.

13. எனக்கு வேர்கள் கிடையாது! கால்கள் மட்டுமே உண்டு.

14. புரட்சி தானாக உண்டாவதில்லை, நாம்தான் அதை உருவாக்க வேண்டும்.

15. நான் இறந்த பிறகு எனது கைத்துப்பாக்கியைத் தோழர்கள் எடுத்துக் கொள்வார்கள். அதிலிருந்து தோட்டாக்கள் சீறிப் பாயும்!

16. எல்லா மனிதர்களுக்கும் அன்பும், மனிதமும் சரிசமமாக கிடைக்கும் வரை நாம் போராடிக்கொண்டே இருக்க வேண்டும்.

17. எதிரிகள் இல்லாத வாழ்க்கையை வாழ்ந்தவன், முழுமையாக வாழவில்லை என்றே அர்த்தம்.

18. நீ உண்மையான வீரன் என்றால் உனக்கான ஆயுதத்தை நீ செல்லும் போர்க்களத்திலேயே உன்னால் சம்பாதித்துக்கொள்ள முடியும்.

Navigation

[0] Message Index

Go to full version